Horoscope

ஞாயிறு, ஏப்ரல் 24

இது எந்த ஊர்..சிங்கப்பூர்!!!

மேகம் மாலை சூட
மின்னல் ஒளி வீச
இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க

பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

போலீஸ் வந்த சந்தோஷத்தில் மிகவும் மகிழ்ச்சியாக லிட்டில் இந்தியா வந்து போலீஸ் மற்றும் அவரது நண்பர் குடும்பத்திற்கும் ஓசி சோறு வாங்கி கொடுத்தார் பிரபல பதிவர் வைகை. 

இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.

மறுநாள் வைகை, வெறும்பய ஜெயந்த், மாணவன் சிம்பு, அன்புடன் நான் கருணாகரசு, ஜெயந்தின் நண்பர், போலிசின் நண்பன் விஜய், தேவாவின் தம்பி பிரேம் மற்றும் போலீஸ் லிட்டில் இந்தியாவில் ஒரு வரலாறு, புவியியல், சமூகவியல்,அறிவியியல் காணாத சந்திப்பு நடத்தினர். இதுவரை இப்படி ஒரு பதிவர் சந்திப்பு நடந்ததில்லை என்று பதிவுலக வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,கருணாகரசு..
 
 போலிசின் நண்பர் விஜய்,தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,வெறும்பய ஜெயந்த்..

 தேவாவின் தம்பி பிரேம்,போலீஸ்,ஜெயந்தின் நண்பர்,மாணவன்,ஜெயந்த்..

தேவாவின் தம்பி டீ வாங்கி கொடுத்தாரு. சாப்டு போகலாம்னு சொன்னாரு. வெயிட் பண்ணலாம்னு போலீஸ் நினைத்தார். மாணவனும், வைகையும் கூப்பிட்டு போயிட்டாங்க. சாப்பாடும் வாங்கி தரலை(எல்லோரும் ஹோட்டல் போன நேரம் ஹோட்டல்ல சாப்பாடு காலி. அவ்வ்வ்வ்வ்)
சாப்பாடு காலியான ஹோட்டல் வாசலில் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்... 
 காபியுடன் வரும் சர்வரை பார்த்த மகிழ்ச்சியில்..

அன்று மாலை சிங்கப்பூரில் வெறும்பய ஜெயந்த் செலவில் நடத்தப்படும் டாஸ்மாக் ஒயின்ஸ்க்கு அண்ணன் வைகை தலைமையில் போனோம். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வரும்போது மாணவனை மட்டும் காணவில்லை. பார்த்தால் தனியாக போய் அந்த ஒயின் ஷாப்பில் உள்ள பிகரிடம் போன் நம்பரை அந்த பிகரின் காலில் விழுந்து கெஞ்சி வாங்கி வந்தார். இப்போது தினமும்  ரெண்டு மணிநேரம் கடலை போடுவதாக தகவல் கிடைக்கிறது. 

 அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..
பின் இரவு சாப்பாடுக்கு போகும்போது வைகை திடீர்னு ஒரு அதிர்ச்சியான செய்தி சொன்னார். அது என்னன்னா "நான் என் பர்சை மறந்து வச்சிட்டு வந்திட்டேன்". நல்லவேளை மாணவனும்,ஜெயந்தும் பில் பே பண்ணிட்டாங்க. இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!!!

எங்கே வைகை போட்டோ என்று கேக்குறீங்களா. எவ்ளோ பிரைட்டா லைட் போட்டு போட்டோ பிடிச்சாலும் அவர் டார்க்காத்தான் தெரியுறாரு. என்ன பண்றது. ஹிஹி.

....





 

36 கருத்துகள்:

dheva சொன்னது…

//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.// ROFL

dheva சொன்னது…

ஏண்டா இங்க இருந்து பட்டினி கிடந்தே போனியாடா ..இப்புடி இளைச்சு போயிருக்க?

dheva சொன்னது…

//இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.//

எம்புட்டு கொழுப்பு...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dheva கூறியது...

ஏண்டா இங்க இருந்து பட்டினி கிடந்தே போனியாடா ..இப்புடி இளைச்சு போயிருக்க?//

பின்ன அங்க போய் ஓசி சாப்பாடு சாப்பிட வேணாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dheva கூறியது...

//இடையில் பதிவர் தேவாவின் தம்பி பிரேம் போன் செய்து அவரது கம்பனிக்கு வர சொன்னார். எனக்கு கொஞ்சம் பயம். தேவா தம்பியாச்சே தமிழ்ல பேசுவாரான்னு. நல்ல வேளை தமிழ்லதான் பேசினார்.//

எம்புட்டு கொழுப்பு...?//

:))

dheva சொன்னது…

//தேவாவின் தம்பி டீ வாங்கி கொடுத்தாரு. சாப்டு போகலாம்னு சொன்னாரு. வெயிட் பண்ணலாம்னு போலீஸ் நினைத்தார். மாணவனும், வைகையும் கூப்பிட்டு போயிட்டாங்க. சாப்பாடும் வாங்கி தரலை(//

குடும்பம் தப்பிச்சுடுச்சுன்னு சொல்லு!

பெசொவி சொன்னது…

//பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ்//

பொய், பொய்!

// பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.//

ஊரில எவன் வூட்டுலயாவது பூந்து லூட் பண்ணிட்டு பின்பக்க வாசல் வழியா போற பழக்கம் சிங்கப்பூர் போயும் விடலையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ் இந்தியா திரும்பியதுக்கும் சாய்பாபா மரணத்துக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை ஹி ஹி

Unknown சொன்னது…

ஹிஹி!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//ரமேஷ் இந்தியா திரும்பியதுக்கும் சாய்பாபா மரணத்துக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை ஹி ஹி //

ROFL..

ராஜி சொன்னது…

அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.
>>

போனமுறை சிங்கை போயிருக்கும்போது பண்ண சேட்டையெல்லாம் கொஞ்சமா என்ன? அதுக்குதான் உன்னைவெளுத்துக் கட்ட வந்திருப்பாங்க.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க//

அது மாணவன் மாடில இருந்து உச்சா போனது ..அத போய் பன்னிருன்னு ..சொல்லுரான் பாரு

காந்திமதி சொன்னது…

மறுநாள் வைகை, வெறும்பய ஜெயந்த், மாணவன் சிம்பு, அன்புடன் நான் கருணாகரசு, ஜெயந்தின் நண்பர், போலிசின் நண்பன் விஜய், தேவாவின் தம்பி பிரேம் மற்றும் போலீஸ் லிட்டில் இந்தியாவில் ஒரு வரலாறு, புவியியல், சமூகவியல்,அறிவியியல் காணாத சந்திப்பு நடத்தினர். இதுவரை இப்படி ஒரு பதிவர் சந்திப்பு நடந்ததில்லை என்று பதிவுலக வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
>>


பின்ன நல்லப் புள்ளைங்களைக் கெடுக்கனுமின்னே நீதான் சிங்கைக்கு போயிருக்கியே. இது வரலாறுக் கணாத பதிவர் சந்திப்புதான்

Sivakumar சொன்னது…

சிங்கப்பூர்லயும் டாஸ்மாக் இருக்கா? ரைட்டு!

Unknown சொன்னது…

//பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.//

ஏன் டிக்கெட் வாங்காம போய்டீங்களா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

/பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் 19-ம் தேதி சிங்கப்பூர் போய் சேர்ந்தார். அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.//

ஏன் டிக்கெட் வாங்காம போய்டீங்களா?

மாலுமி சொன்னது…

///////பின் இரவு சாப்பாடுக்கு போகும்போது வைகை திடீர்னு ஒரு அதிர்ச்சியான செய்தி சொன்னார். அது என்னன்னா "நான் என் பர்சை மறந்து வச்சிட்டு வந்திட்டேன்". நல்லவேளை மாணவனும்,ஜெயந்தும் பில் பே பண்ணிட்டாங்க. இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!!!////

மச்சி நீ சிங்கப்பூர்ல நைட் கிளப் முன்னாடி பிச்ச எடுத்தது பத்தி போடல ஏன்??????????????

செல்வா சொன்னது…

சிங்கப்பூர் சென்று திரும்பிய எங்கள் அண்ணன் போலீஸ் வாழ்க

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மேகம் மாலை சூட
மின்னல் ஒளி வீச
இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க//
சிங்கப்பூர் சென்ற சிரிப்பு போலீஸ்க்குப் பாராட்டுக்கள்.

மொக்கராசா சொன்னது…

//காபியுடன் வரும் சர்வரை பார்த்த மகிழ்ச்சியில்..

சிரிப்பி போலிஸ் ஓசி காப்பிகே 32 பல்லும் தெரிய இவ்வளவு மகிழ்ச்சின்னா.... சிக்கன் லெக் பீஸ் போட்ட ஓசி பிரியாணியை பார்த்தா என்ன ஆட்டம் ஆடுவயோ......

கடவுளே, ஏன் சில பேர இந்த மாதிரி படைக்குற????

ஷர்புதீன் சொன்னது…

:)

மொக்கராசா சொன்னது…

///அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர். பொண்ணை பார்த்தால் மண்ணை பார்க்கும் நல்ல மனது படைத்த போலீஸ் பின் பக்க கேட் வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.


இனிமே இந்த மாதிரி எழுதுன பிரபல பதிவர் :) கூட பாக்காம கெட்ட வார்த்தயில் அசிங்க,அசிங்கமா திட்டுவேன்....

Mohamed Faaique சொன்னது…

இடி மேளதாளம் வாசிக்க
வருணபகவான் பன்னீர் தெளிக்க//

அது மாணவன் மாடில இருந்து உச்சா போனது ..அத போய் பன்னிருன்னு ..சொல்லுரான் பாரு ///

rippeetu

//அவரை வரவேற்க சீன பெண்களும், பிலிப்பைன் பொண்ணுங்களும் ஏர்போர்ட் வாசலிலையே காத்திருந்தனர்//

மாமா.. மாமா.... மாமா.....

Mohamed Faaique சொன்னது…

வைத்தியதுக்காக போன இடத்துல இப்படியெல்லாம் பண்ண கூடாது.. வெங்கட் சொன்ன Address'ஐ கண்டு பிடிச்சுடீங்களா???

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே,
கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்....

பனித்துளி சங்கர் சொன்னது…

////////அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..
///////////

இப்ப நாங்க எதுவுமே சொல்லவே இல்லையே . எதற்கு மக்கா இந்த அவசர அலார்ட்!???
புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல்

பெயரில்லா சொன்னது…

பின்ன அங்க போய் ஓசி சாப்பாடு சாப்பிட வேணாமா?
thirundhadha jenmangal irundhenna laabam ;)

//ரமேஷ் இந்தியா திரும்பியதுக்கும் சாய்பாபா மரணத்துக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை ஹி ஹி//
india vandha shockla dhaan poi serndhutara? ;)

அன்புடன் நான் சொன்னது…

நான் கிளம்பிய பிறகு குளிர்பானம் குடிச்சிங்களா?

அன்புடன் நான் சொன்னது…

சிரிப்பு போலீச பத்திரமா அனுப்பி வைத்திவிட்டோம்.... இனி உங்க பொறுப்பு!

மாணவன் சொன்னது…

சிங்கை வந்தும் எங்கள் சிங்கையின் சிங்கம் மதிப்பிற்குரிய பட்டாபட்டி அவர்களை சந்திக்காமல் போன சிரிப்புபோலீஸ் ஒழிக ஒழிக... :))

மாணவன் சொன்னது…

//அது பீர் இல்லை. டெரர் மீது சத்தியமா அது கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே..//

இல்லண்ணே அது டைகர் டீ சிங்கப்பூர்ல அதானே டீ :))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏர்போர்ட் நாறி போயிருக்குமே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உச்சா போனதைஎல்லாம் பன்னீர் தெளிச்சதா சொல்லுது பாரு ஹே ஹே ஹே ஹே ஹே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//. பார்த்தால் தனியாக போய் அந்த ஒயின் ஷாப்பில் உள்ள பிகரிடம் போன் நம்பரை அந்த பிகரின் காலில் விழுந்து கெஞ்சி வாங்கி வந்தார்///

என்னதான் இருந்தாலும் நம்மாளுங்க காரியத்துல கண்ணா இருக்காயிங்கய்யா...

செங்கோவி சொன்னது…

எப்படியோ ஊர்ஸ், நம்ம ஊர்ப் பெருமையைக் காப்பாத்துனா சரி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அய்.. வடை எனக்கு..!!

:-)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது