Horoscope

ஞாயிறு, நவம்பர் 13

தோசையம்மா தோசை



சின்ன வயசுல இருந்து தோசைன்னாலே அலர்ஜி. அதனால வீட்டில் தோசை சுட்டாலும் எனக்காக தனியா ஏதாச்சும் சாப்பாடு செஞ்சிடுவாங்க. ஹோட்டல்க்கு போனா கூட அம்மா,அப்பா,அக்கா ரவா தோசை,ஆனியன் தோசை ஆர்டர் செஞ்சாலும் என்னோட சாய்ஸ் பூரி,மசால்தான். ஆனா அந்த தோசையே ஒருநாள் என்னை பழி வாங்கிடுச்சு.

காலேஜ் போயிட்டு வந்துக்கிட்டு இருந்த சமயம் ஒருநாள் சனிக்கிழமை லீவுன்னு வீட்டில் இருந்தேன். அம்மா இட்லிக்கு மாவாட்டி வச்சிருந்தாங்க. மாவு சரியா வரலைன்னு வேற வழியில்லாம தோசை சுட்டுட்டாங்க. எனக்குதான் தோசை பிடிக்காதே. வீட்டில் சண்டை போட நீ போயி சித்தி வீட்டுல சாப்பிட்டுக்கோன்னு சொல்லிடாங்க. ரெண்டு வீடு தள்ளிதான் சித்தி வீடு. அங்க போனா அவங்க வீட்டுலையும் அன்னிக்கு தோசைதான்.

பசி வேற. சைக்கிளை எடுத்துக்கிட்டு நேரா அக்கா வீட்டுக்கு போனேன். அக்கா வீட்டில் எடுத்தவுடனே எப்படி சாப்பாடு வேணும்ன்னு கேக்குறது. கொஞ்ச நேரம் வெயிட் பண்ண அக்கா சாப்பாடு எடுத்துட்டே வந்திட்டாங்க. நான் சாப்பிடலைன்னு போன் பண்ணி சொல்லிருக்காங்க. தட்டை எட்டி பார்த்தா தட்டில் தோசை. அவ். இல்லைக்கா நான் பிரண்டு வீட்டுல சாப்பிட்டேன் நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பி "கிங் மெட்ரோ" ஹோட்டல் வந்தேன். அப்போ மணி 10.30.

இந்த "கிங் மெட்ரோ" ஹோட்டல்க்கு ஒரு பெருமை உண்டு. இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் இரண்டு பேர் சந்தித்த பெருமை கொண்டது அந்த ஹோட்டல். அதனாலையே அந்த ஹோட்டல் சரித்திர புகழ் பெற்றது(தரித்திர புகழ்ன்னு கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன் ராஸ்கல்).

சரி விசயத்துக்கு வரேன். நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட வந்தா என்ன இருக்கும். ஹோட்டல்காரனும் அதே தோசைதான் இருக்குன்னு சொல்லிட்டான். வந்ததே கோவம். ஒரு லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு வெயிட் பண்ணினேன். வேற என்னத்தப் பண்றது? ஹிஹி....


மிக முக்கிய குறிப்பு: இப்போதெல்லாம் நான் தோசை சாப்பிட பழகி கொண்டேன். எனக்கு ஓசி சாப்பாடு வாங்கித்தர தோசா கார்னர் அழைத்து சென்று பழி வாங்க நினைத்து பல்பு வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

59 கருத்துகள்:

வெளங்காதவன்™ சொன்னது…

//தரித்திர புகழ்ன்னு கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன் ராஸ்கல்///

ஹி ஹி ஹி...
க.க.க.போ....

மாணவன் சொன்னது…

முதல் தோசை...

இந்திரா சொன்னது…

//இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் இரண்டு பேர் சந்தித்த பெருமை கொண்டது அந்த ஹோட்டல்//


ஹிஹிஹி..

சரி அந்த இன்னொருத்தர் யாரு???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் கூறியது...

//தரித்திர புகழ்ன்னு கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன் ராஸ்கல்///

ஹி ஹி ஹி...
க.க.க.போ....//

:))

மாணவன் சொன்னது…

//
வெளங்காதவன் கூறியது...
//தரித்திர புகழ்ன்னு கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன் ராஸ்கல்///

ஹி ஹி ஹி...
க.க.க.போ....///

அடப்பாவி.... யோவ் மாமு நாந்தான் பர்ஸ்ட்டுன்னு நெனைச்சு முதல் தோசை கமெண்ட் போட்டேன்... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் கூறியது...

முதல் தோசை...//

தோசை போச்சே

இந்திரா சொன்னது…

//மாணவன் கூறியது...

முதல் தோசை...//


வௌங்காதவன் ஏமாத்திட்டாரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் இரண்டு பேர் சந்தித்த பெருமை கொண்டது அந்த ஹோட்டல்//


ஹிஹிஹி..

சரி அந்த இன்னொருத்தர் யாரு???//

இம்சை அரசன் பாபு

இந்திரா சொன்னது…

//இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் //


போங்க ரமேஷ்..
எப்பவுமே உங்களுக்கு கிண்டல் தான்..

வெளங்காதவன்™ சொன்னது…

//மிக முக்கிய குறிப்பு: இப்போதெல்லாம் நான் தோசை சாப்பிட பழகி கொண்டேன். எனக்கு ஓசி சாப்பாடு வாங்கித்தர தோசா கார்னர் அழைத்து சென்று பழி வாங்க நினைத்து பல்பு வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.////

:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

போங்க ரமேஷ்..
எப்பவுமே உங்களுக்கு கிண்டல் தான்..//

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் வெல்லும்

வெளங்காதவன்™ சொன்னது…

//மாணவன் கூறியது...

முதல் தோசை...///

ஹி ஹி ஹி...
வடை போச்சு மச்சி...

பெயரில்லா சொன்னது…

திஸ் பேப்பர் ரோஸ்ட்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

திஸ் பேப்பர் ரோஸ்ட்?//

யோவ் பேப்பர் திங்க நான் என்ன கழுதையா?

வெளங்காதவன்™ சொன்னது…

யோவ் போலீசு... பன்னி சென்னை வந்து என்னமோ கில்மா பண்ணிட்டு போயிருக்கு..
பிரபாகரன்& அஞ்சா சிங்கமெல்லாம் போஸ்ட் போட்டு இருக்காங்க... உடனடியா "கவனிக்கவும்"...

#நீ சொன்ன மாதிரியே கமண்ட் போட்டுட்டேன்...
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் கூறியது...

யோவ் போலீசு... பன்னி சென்னை வந்து என்னமோ கில்மா பண்ணிட்டு போயிருக்கு..
பிரபாகரன்& அஞ்சா சிங்கமெல்லாம் போஸ்ட் போட்டு இருக்காங்க... உடனடியா "கவனிக்கவும்"...

#நீ சொன்ன மாதிரியே கமண்ட் போட்டுட்டேன்...
:)//

கருமம் கருமம்

குறையொன்றுமில்லை. சொன்னது…

தோசை பிடிக்காதுன்னு சொல்ரவரை இப்பதான் பாக்குரேன்.

வெளங்காதவன்™ சொன்னது…

அந்தக் கருமத்தத்தான் சொன்னேன் மை லார்ட்....

வைகை சொன்னது…

ரெண்டு வீடு தள்ளிதான் சித்தி வீடு. அங்க போனா அவங்க வீட்டுலையும் அன்னிக்கு தோசைதான்//

பிச்சைஎடுக்க போனேன்னு ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே? :)

வைகை சொன்னது…

பசி வேற. சைக்கிளை எடுத்துக்கிட்டு நேரா அக்கா வீட்டுக்கு போனேன்///

சைக்கிள அடகு வச்சு திங்கத்தானே போன? :)

வைகை சொன்னது…

அக்கா வீட்டில் எடுத்தவுடனே எப்படி சாப்பாடு வேணும்ன்னு கேக்குறது.///

உன்கிட்ட உள்ள கெட்ட பழக்கமே இதுதான்... நாலு வீட்ல பிச்சை எடுக்கும்போது வராத கூச்சம் அக்கா வீட்ல மட்டும் ஏன்? :))

வைகை சொன்னது…

தட்டை எட்டி பார்த்தா தட்டில் தோசை. அவ்//

அவங்க தட்டுதானே கொண்டுவந்தாங்க? அண்டாவா கொண்டுவந்தாங்க.. எட்டி பார்க்கிறதுக்கு? :))

வைகை சொன்னது…

ஹோட்டல்காரனும் அதே தோசைதான் இருக்குன்னு சொல்லிட்டான்.///

உன் அக்கா வீட்ல சுட்ட அதே தோசை ஹோட்டலுக்கு எப்பிடி வந்துச்சு? :))

வைகை சொன்னது…

ஒரு லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு வெயிட் பண்ணினேன். வேற என்னத்தப் பண்றது? ஹிஹி....///


நம்பிட்டோம் :)))

வைகை சொன்னது…

25

முத்தரசு சொன்னது…

தோசைக்கே இப்படியா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பதிவு அருமை. சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை சொல்லி அசத்தி இருக்கிறீர்கள். தொடரவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஒரு லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு வெயிட் பண்ணினேன். /////

சார், அது என்ன பிராண்டு தண்ணீர் என்று குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல? அடுத்த முறை அதையும் எழுதவும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Lakshmi சொன்னது…

தோசை பிடிக்காதுன்னு சொல்ரவரை இப்பதான் பாக்குரேன்.//

பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னுதான சொல்லனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நேத்து அடிச்ச சரக்கை வந்தி எடுத்து சென்ற வைகையை கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மனசாட்சி சொன்னது…

தோசைக்கே இப்படியா
//

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தாங்கள் தலைப்பு வைத்தவிதம் அருமை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பதிவு அருமை. சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை சொல்லி அசத்தி இருக்கிறீர்கள். தொடரவும்!//

வாழும் நமீதா அவர்களின் கருத்துக்கு நன்றி :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஒரு லிட்டர் தண்ணிய குடிச்சிட்டு மதிய சாப்பாட்டுக்கு வெயிட் பண்ணினேன். /////

சார், அது என்ன பிராண்டு தண்ணீர் என்று குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல? அடுத்த முறை அதையும் எழுதவும்!//

அது சிங்கப்பூர் நியூ வாட்டர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தாங்கள் தலைப்பு வைத்தவிதம் அருமை!//

இதற்காக நான் ரூம் போட்டு யோசித்தேன். நான்கு நாட்கள்ளக குளிக்கவில்லை. பல் தேய்க்கவில்லை. தலை கீழாக கூட நின்று யோசித்தேன். எங்கள் டீம் ரெண்டு மாதம் கஷ்டப்பட்டோம்(தேங்க்ஸ் டு தமிழ் பட இயக்குனர்ஸ்)

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அட தோசைக்கு ஒரு பதிவா? நீங்க மதுரையா? ஏன்னா கோரிப்பாளையதிலும் ஒரு கிங் மெட்ரோ இருக்கு.


நம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...

பெசொவி சொன்னது…

//இதற்காக நான் ரூம் போட்டு யோசித்தேன். நான்கு நாட்கள்ளக குளிக்கவில்லை. பல் தேய்க்கவில்லை. //

இப்படி சொன்னா மட்டும் மத்த நாள்ல நீ குளிப்பே, பல் தேய்ப்பே அப்படின்னு நாங்க நம்பிடுவோமா?

செல்வா சொன்னது…

எனக்கு தோசைனா ரொம்ப பிடிக்கும் :)) பெரும்பாலும் எங்க வீட்ல அதிகமா தோசை சாப்பிடறது நான்தான்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// அக்கா வீட்டில் எடுத்தவுடனே எப்படி சாப்பாடு வேணும்ன்னு கேக்குறது. //

இப்படி பம்முற வேலை இங்க வேணாம்டி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது...

அட தோசைக்கு ஒரு பதிவா? நீங்க மதுரையா? ஏன்னா கோரிப்பாளையதிலும் ஒரு கிங் மெட்ரோ இருக்கு.


நம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...//

இல்லை கோவில்பட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெசொவி சொன்னது…

//இதற்காக நான் ரூம் போட்டு யோசித்தேன். நான்கு நாட்கள்ளக குளிக்கவில்லை. பல் தேய்க்கவில்லை. //

இப்படி சொன்னா மட்டும் மத்த நாள்ல நீ குளிப்பே, பல் தேய்ப்பே அப்படின்னு நாங்க நம்பிடுவோமா?//

நம்பித்தான் ஆகணும். பாபு மேல சத்தியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது…

எனக்கு தோசைனா ரொம்ப பிடிக்கும் :)) பெரும்பாலும் எங்க வீட்ல அதிகமா தோசை சாப்பிடறது நான்தான்!//

அதிகமான்னா ஒரு அஞ்சு கிலோ சாப்பிடுவியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது…

// அக்கா வீட்டில் எடுத்தவுடனே எப்படி சாப்பாடு வேணும்ன்னு கேக்குறது. //

இப்படி பம்முற வேலை இங்க வேணாம்டி..
//

:))

எஸ்.கே சொன்னது…

ஒரு தோசையின் மறுபக்கம்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மறுபக்கம் கருகிடுச்சு எஸ்.கே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இப்போதெல்லாம் நான் தோசை சாப்பிட பழகி கொண்டேன். எனக்கு ஓசி சாப்பாடு வாங்கித்தர தோசா கார்னர் அழைத்து சென்று பழி வாங்க நினைத்து பல்பு வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.//

ஹா ஹா ஹா ஹா உன் நேர்மை என்ற எருமை எனக்கு பிடிச்சிருக்குய்யா.....!!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

அண்ணனுக்கு ரெண்டு தோஷ பார்சல்...

செங்கோவி சொன்னது…

பாஸ், நம்ம ஊரு ஹோட்டலா அது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவிNov 14, 2011 09:17 PM

பாஸ், நம்ம ஊரு ஹோட்டலா அது?//

s boss. its near railway station. now not there

FOOD சொன்னது…

//இந்த "கிங் மெட்ரோ" ஹோட்டல்க்கு ஒரு பெருமை உண்டு. இரு மாபெரும் அறிவாளிகள்,புத்திசாலிகள், பிரபல பதிவர்கள் இரண்டு பேர் சந்தித்த பெருமை கொண்டது அந்த ஹோட்டல்//
பதிவர்கள் சந்தித்து கொண்டாலே, அந்த ஹோட்டல் பிரபலமாயிடும்ல.

FOOD சொன்னது…

இந்த பக்கம் வரும்போது சொல்லுங்க. சந்திப்போம்.

ADMIN சொன்னது…

நல்ல வேடிக்கையான பதிவு..

ADMIN சொன்னது…

எனது வலையில்

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Yoga.S. சொன்னது…

சனி?!வணக்கம்!GOOD AFTERNOON!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

சந்தானம் as பார்த்தா சொன்னது…

வாங்க... சாப்பிட போகலாமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பதிவை விட ராம்சாமியின் நக்கல்களையும் , உங்க ரிப்ளையயும் மிக ரசித்தேன் கலக்கல்

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

ஒரு தோசை உங்கள
பேய் ரேஞ்சுக்கு தொரத்தி பழி வாங்கிடுச்சு. :))))))))

ரமேஷ் நல்லவன்!!தோசை
பிடிக்காதவங்க நல்லவங்களா இருக்க சான்ஸே இல்ல...

சத்தியமான்னு வேற சொல்றீங்க....நம்பமாட்டொம்னு பயமா :))))))))

உங்க பதிவுகள் மனசை லேசாக்குது :)) நன்றி :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// இப்போதெல்லாம் நான் தோசை சாப்பிட பழகி கொண்டேன். //////

க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர் த்தூ..........................

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது