Horoscope

வெள்ளி, டிசம்பர் 16

மார்கழி 1 : மலரும் நினைவுகள்


இன்று மார்கழி மாதம் ஆரமிக்கிறது. மார்கழி மாதம் என்றாலே மெல்லிய குளிர், சுப்ரபாதம், கோலங்கள் எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது.

சின்ன வயதில் ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் முதல் நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் போடணும்ன்னு கூடி பேசுவாங்க. அம்மா,அக்கா ரெண்டு பேர் கிட்டயும் இந்த கோலம் போடுங்க நான்தான் கலர் கொடுப்பேன்னு அடம் பிடித்த கதையெல்லாம் நியாபகத்திற்கு வருகிறது.

விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம். காதில் ஒரு மப்ளரை கட்டிக்கொண்டு வீட்டு வாசலில் உற்கார்ந்து கொண்டு அம்மா, அக்காவுக்கு கோலபொடி எடுத்து கொடுக்கிறது, கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.

காலை நாலு மணிக்கெல்லாம் எங்க ஊர் கோவில்ல சுப்ரபாதம் போட்டிடுவாங்க. மார்கழி மாதம் தவிர மத்த மாதம் கோவில்ல பாட்டு போடுறதில்லை. அந்த அதிகாலை குளிரில் சுப்ரபாதத்துக்கேர்ப்ப எங்கள் பல்லும் குளிரில் தாளம் போடும், டைப்படிக்கும். அதிகாலை சுப்ரபாதம் கேட்கும் பீலிங்கே தனி.

சில நேரம் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அந்த குளிரிலும் எல்லோர் வீட்டு வாசலுக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஒவ்வொரு வீட்டு கோலத்தையும் கலாய்த்து பக்கத்து வீட்டு அக்காக்களிடம் திட்டு வாங்கி வந்த அனுபவமும் உண்டு.

கோலம் போட்டு முடிந்ததும் மாட்டு சாணியை பிள்ளையார் போல பிடித்து அதை கோலத்துக்கு நடுவில் வைத்து அதில் பூசணிப்பூ சொருவி வைப்போம். மாட்டுச்சாணியில் விதவிதமான பிள்ளையார்கள் செய்து வைப்போம். கோலத்துக்கு கலர் பண்ணுவது நான்தான்.

பொங்கலுக்கு கோல போட்டி எல்லாம் நடக்கும். அப்போ எல்லாம் விடிய விடிய கோலம் போடுவாங்க. யாருக்கும் போரடிக்க கூடாதுன்னு ஒவ்வொரு தெருவிலும் டிவி, டெக் வச்சு படம் போட்டு விட்டிடுவாங்க. எப்படியும் நாலு மணி நேரம் கோலம் ஓடும். பக்கத்து வீட்டுக்காரங்க வந்து உங்க வீட்ல கோலம் நல்லா இருக்குன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. முதநாள் இரவே கோலம் போட்டுட்டு படுத்து தூங்கிடுராங்க. காலைல குளிருதாம், கோலம் போட முடியலையாம். சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.

டிஸ்கி: இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில் சுப்ரபாதம் போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்.

52 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

மார்கழி மாத காலை வணக்கம்... :-)

Unknown சொன்னது…

அவ்வ வடை போச்சே

Unknown சொன்னது…

மார்கழி
முதல் நாள்
சனி அல்லவா

Unknown சொன்னது…

அடிவாங்கின கதையை தனியாக போடவும்

மாணவன் சொன்னது…

//ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. முதநாள் இரவே கோலம் போட்டுட்டு படுத்து தூங்கிடுராங்க. காலைல குளிருதாம், கோலம் போட முடியலையாம். சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.//

உண்மைதான்... இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்டிக்கர் பொட்டு மாதிரி ஸ்டிக்கர் கோலமும் வரப்போகுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

siva சொன்னது…

அடிவாங்கின கதையை தனியாக போடவும்
//

Same 2 u :))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மார்கழி மாத காலை வணக்கம்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் அவனா நீ ..??.
இதில் இருந்து என்ன தெரியுது அடுத்த வருஷத்தில் ..டெரர் சீ .ச்சே மாட்டு சாணி எடுத்து வீட்டம்மா கூட கோலம போட ரெடி ஆகிட்டான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப வெவரமப்பு, உன்னைய மாதிரி பன்னாடைக சைக்கிளை எடுத்துட்டு சைட்டடிக்க கெளம்பிடுதுன்னு எல்லாரும் நைட்டே கோலத்த போட்டு வெச்சிடுறாங்க......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மார்கழி 1 : மலரும் நினைவுகள்":

இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப வெவரமப்பு, உன்னைய மாதிரி பன்னாடைக சைக்கிளை எடுத்துட்டு சைட்டடிக்க கெளம்பிடுதுன்னு எல்லாரும் நைட்டே கோலத்த போட்டு வெச்சிடுறாங்க...... //

கருத்து சொல்ல விருப்பமில்லை :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மார்கழி 1 : மலரும் நினைவுகள்":

இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப வெவரமப்பு, உன்னைய மாதிரி பன்னாடைக சைக்கிளை எடுத்துட்டு சைட்டடிக்க கெளம்பிடுதுன்னு எல்லாரும் நைட்டே கோலத்த போட்டு வெச்சிடுறாங்க...... //

கருத்து சொல்ல விருப்பமில்லை :))////

பதில் சொல்ல விருப்பமில்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க உடுப்பியும் ப்ளாக்கு படிக்கிறாங்க போல...... வசமா சிக்கிட்டான்யா.....

தினேஷ்குமார் சொன்னது…

ஃபாளோ அப்

நாய் நக்ஸ் சொன்னது…

நீங்க அப்பவே இப்படியா ?????

அருண் பிரசாத் சொன்னது…

காலை பஜனையும் சுண்டலும் சக்கரை பொங்கலும் மறக்கமுடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// NAAI-NAKKS கூறியது...
நீங்க அப்பவே இப்படியா ?????///

இப்பவும் அப்படித்தான்....

நாய் நக்ஸ் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/// NAAI-NAKKS கூறியது...
நீங்க அப்பவே இப்படியா ?????///

இப்பவும் அப்படித்தான்....////

இனிமேல் என்ன ஆவார்???

நாய் நக்ஸ் சொன்னது…

இனி அந்த ---- இடம் யாருக்கு???

பெம்மு குட்டி சொன்னது…

ஒரு பொண்ணு நிச்சியமாகி இன்னும் பத்து நாள் முடியல.... அதுக்குள்ளே மார்கழி பிடிக்கும், கோலம் பிடிக்கும் ன்னு ஆரம்பிச்சாச்சி .... இருடீயேய் ... அடுத்த வருஷம் இதே மார்கழியில தலையில மப்ளர் கட்டிக்கிட்டு ரோடுரோடா பால் பாக்கெட் வாங்க அலையும் போது புத்தி வரும் ...:-))))))))

நாய் நக்ஸ் சொன்னது…

பெருமாள் கோயில் பிரசாதத்தை எப்படி
அழகாக சொல்லுறார் பாருங்கள் மக்களே....

நீதி:-

உண்டசோறு...கொண்டவனுக்கு அழகு....

மொக்கராசா சொன்னது…

அப்பறம் மார்கழி மாசம் கோவிலில் காலையில் நெய்/டால்டா ஒழுக சக்கரை பொங்கல் தருவாங்களே ....


அத மறந்துட்டேங்க.......

மொக்கராசா சொன்னது…

//இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில் சுப்ரபாதம் போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன்.//

அதான் உங்க ஆபிசு இருக்கு அங்க போய் நல்லா தூங்கலாம் .....நீங்க நைட்டு 2 மணிக்கு கூட எந்திரிக்கலாம்......

வெளங்காதவன்™ சொன்னது…

மார்கழி மாசம்.


-

-

-

-

-

-

சனிக்கிழமை

-

-

-

-

-

ஆஞ்சநேயர் கோயில்

-

-

-

-

-

-

உண்டக்கட்டி அனுபவம்....

எஸ்.கே சொன்னது…

follow up...

வெளங்காதவன்™ சொன்னது…

///பிளாகர் எஸ்.கே கூறியது...

follow up...////

யோவ்... எப்பூடி இருக்கீரு?

எஸ்.கே சொன்னது…

//வெளங்காதவன் கூறியது...

///பிளாகர் எஸ்.கே கூறியது...

follow up...////

யோவ்... எப்பூடி இருக்கீரு?//
Nicely...:-)

NaSo சொன்னது…

// கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.//

கோலத்துக்கு என்ன கருத்து சொல்லுவே மச்சி?

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ரமேஷ்!பால்ய வயசு நினைவுகள் மறக்க முடியாதவை. நல்ல வேளை நீங்கள் கோலம் போடுகிறேன் பேர்வழியென்று,பக்கத்து வீட்டு பிகரை வரையாமல்,அக்காவுக்கு உதவியாக கலர் மட்டும் கொடுத்தீர்களே?(கோலத்துக்கு!)

Yoga.S. சொன்னது…

NAAI-NAKKS கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/// NAAI-NAKKS கூறியது...
நீங்க அப்பவே இப்படியா ?????///

இப்பவும் அப்படித்தான்....////

இனிமேல் என்ன ஆவார்???///அப்படி,இப்படி ஆவார்!!!!!

Yoga.S. சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

// கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.//

கோலத்துக்கு என்ன கருத்து சொல்லுவே மச்சி?///தேவயானி மேடம் பத்தி சொல்லுவாராயிருக்கும்!

செல்வா சொன்னது…

Follow Down!

செல்வா சொன்னது…

// கோலத்துக்கு என்ன கருத்து சொல்லுவே மச்சி?//

நல்ல பதிவுனு சொல்லுவாராம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் அவனா நீ ..??.
இதில் இருந்து என்ன தெரியுது அடுத்த வருஷத்தில் ..டெரர் சீ .ச்சே மாட்டு சாணி எடுத்து வீட்டம்மா கூட கோலம போட ரெடி ஆகிட்டான்///

நான் மானஸ்தண்டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப வெவரமப்பு, உன்னைய மாதிரி பன்னாடைக சைக்கிளை எடுத்துட்டு சைட்டடிக்க கெளம்பிடுதுன்னு எல்லாரும் நைட்டே கோலத்த போட்டு வெச்சிடுறாங்க......//

அப்போ இனிமே நைட்டு வாக்கிங் போகணும் போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க உடுப்பியும் ப்ளாக்கு படிக்கிறாங்க போல...... வசமா சிக்கிட்டான்யா.....///

நான் ஒரு பிரபல பதிவர் என்றும், எனக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், 18 அடிமைகளும் இருக்கிறார்கள் என்றும் இன்னும் சொல்லவில்லை :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது…

காலை பஜனையும் சுண்டலும் சக்கரை பொங்கலும் மறக்கமுடியுமா?//

பக்கி திங்கிரதுலையே இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெம்மு குட்டி சொன்னது…

ஒரு பொண்ணு நிச்சியமாகி இன்னும் பத்து நாள் முடியல.... அதுக்குள்ளே மார்கழி பிடிக்கும், கோலம் பிடிக்கும் ன்னு ஆரம்பிச்சாச்சி .... இருடீயேய் ... அடுத்த வருஷம் இதே மார்கழியில தலையில மப்ளர் கட்டிக்கிட்டு ரோடுரோடா பால் பாக்கெட் வாங்க அலையும் போது புத்தி வரும் ...:-))))))))//

பால் பாக்கெட் வாங்க போனா புத்தி வருமா? அப்புறம் ஏன் ஸ்கூல், காலேஜ் போயி படிக்கணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS சொன்னது…

பெருமாள் கோயில் பிரசாதத்தை எப்படி
அழகாக சொல்லுறார் பாருங்கள் மக்களே....

நீதி:-

உண்டசோறு...கொண்டவனுக்கு அழகு....
//

:))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது…

//இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில் சுப்ரபாதம் போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன்.//

அதான் உங்க ஆபிசு இருக்கு அங்க போய் நல்லா தூங்கலாம் .....நீங்க நைட்டு 2 மணிக்கு கூட எந்திரிக்கலாம்......
//

nonsense im a sincere worker in the world :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…

// கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.//

கோலத்துக்கு என்ன கருத்து சொல்லுவே மச்சி?//

உன்கிட்ட ஏன் சொல்லணும். கோலத்துகிட்டதான் சொல்லுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR சொன்னது…

வணக்கம்,ரமேஷ்!பால்ய வயசு நினைவுகள் மறக்க முடியாதவை. நல்ல வேளை நீங்கள் கோலம் போடுகிறேன் பேர்வழியென்று,பக்கத்து வீட்டு பிகரை வரையாமல்,அக்காவுக்கு உதவியாக கலர் மட்டும் கொடுத்தீர்களே?(கோலத்துக்கு!)
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

// கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.//

கோலத்துக்கு என்ன கருத்து சொல்லுவே மச்சி?///தேவயானி மேடம் பத்தி சொல்லுவாராயிருக்கும்!//

அறிவு கொழுந்து

வெளங்காதவன்™ சொன்னது…

ஆபீசர்.....

மார்கழி மாசமும், உண்டக்கட்டி நேசமும்-னு ஒண்ணு எடுத்து விடேன்... இத நீ மட்டும்தான் போட முடியும்...

:-)

sakthi சொன்னது…

மார்கழி :::))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது…

ஆபீசர்.....

மார்கழி மாசமும், உண்டக்கட்டி நேசமும்-னு ஒண்ணு எடுத்து விடேன்... இத நீ மட்டும்தான் போட முடியும்...

:-)
//

podaang

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sakthi கூறியது...

மார்கழி :::))))//

thanks for coming

Unknown சொன்னது…

கால மாற்றத்தில் மாறி போனதில் இதுவும் ஒன்று, மீண்டும் பழைய அனுபவங்களை நினைக்க வைத்து விட்டீர்கள், நல்ல பகிர்வு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் கூறியது...

கால மாற்றத்தில் மாறி போனதில் இதுவும் ஒன்று, மீண்டும் பழைய அனுபவங்களை நினைக்க வைத்து விட்டீர்கள், நல்ல பகிர்வு//

thanks

ராஜி சொன்னது…

கோலம் போடும் சாக்கில் சைட் அடிச்சுட்டு இப்போ அந்த சான்ஸ் கிடைக்கலைன்னு ஃபீல் பண்றதை பாரு

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

நல்லா எழுதறீங்க. :)
இவ்ளோ ரிப்ளைக்கு பதில் போட்டா மிச்ச வேலை எப்ப பார்ப்பீங்களா?!

உணவு உலகம் சொன்னது…

மலரும் நினைவுகள். மனம் ஏங்க வைக்கும் கனவுகள்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது