வியாழன், டிசம்பர் 20

பவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்

பவர் ஸ்டார் நடிச்ச படத்துல அவர் பேரையே போடாம  விளம்பரமான்னு பார்த்தா இவரு அவர விட பெரிய விளம்பர பிரியர் ச்சீ வெறியர். இரவு பாடகன்னு ஒரு படம் வந்துச்சு அதுல எல்லா பாட்டும் ஹிட் ஆனா படம் பப்படம் ஆகிடுச்சு. இப்படித்தான் திடீர் திடீர்ன்னு படம் எடுப்பாரு. ரிலீஸ் ஆகிரதுக்குள்ள படபொட்டி திரும்பி வந்திடும். இதுக்காத்தான் இவருக்கு கின்னஸ் புத்தகத்துல இடம் கொடுத்திருப்பாங்க போல.

அந்த கின்னஸ் சாதனை புகழ் வேற யாருமில்லை புதிய மன்னர்கள் படத்துல மோகினியோட "நீ கட்டும் சேலை இடுப்புல நான் மயங்கிப் போனேனே" ன்னு பாடி ஆடினவர். TR மாதிரி இயக்கம் ,வசனம்,ஒளிப்பதிவு,அந்த படத்தை பார்க்கும் ரசிகன் என எல்லா விசயத்தையும் இவரே எடுத்துக் கொள்வது சிறப்பு.

இவர் இப்போ ஹீரோவா நடிச்சு "நானே வருவேன்" அப்படின்னு ஒரு பயங்கர படம் ரிலீஸ் ஆகிருக்கு. அந்த படத்தோட போஸ்டர்ல நம்ம பவர் ஸ்டார் எதோ பாபு கணேஷ்க்கு அல்லக்கையா இருக்குற மாதிரி நம்ம பவர் படத்தை சின்னதா போட்டிருக்கார். என்ன தைரியம்? ஷங்கரே அவர் படத்துலையே பவர் ஸ்டார் நடிக்கும் அப்படின்னுதான் போட போறாராம். ஆனா கின்னஸ் புகழ் பாபு கணேஷ் பவர் ஸ்டார் படத்தை இத்துனூண்டு போட்டதுக்கு நம்ம பவர் ஸ்டார் ரசிகர்கள் பொங்கி எழ வேண்டாமா?

சரி இந்த படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு சத்யம்,ஐநாக்ஸ்,AGS இதிலெல்லாம் பார்த்தா அப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனா மாதிரியே தெரியலை . பவர் ஸ்டார் படத்துக்கே இந்த நிலைமையா? இதுக்குத்தான் பவர் ஸ்டார் அவர்களை முன்னிலை படுத்தி விளம்பர படுத்தனும். ம் ன்னு சொன்னா பவரே விளம்பரம் பண்ணிருப்பாரு. பொழைக்க தெரியாத புள்ளையா நீங்க.

சரி சென்னைலையே ஒரே ஒரு தியேட்டர்லதான் ஓடுது. நெட்ல பார்க்கலாம்ன்னா "நானே வருவேன்" அப்படின்னு சர்ச் பண்ணினா ரகுமான்,கவுதமி,ராதிகா நடிச்ச எதோ பழைய படம் வருது. சரி தியேட்டர்ல போயி பார்க்கலாம்ன்னு தியேட்டர்காரனுக்கு போன் பண்ணி "நானே வருவேன்" அப்படின்னு சொன்னேன்.

அவ்ளோதான் தியேட்டர் ஓனர் "சார் சீக்கிரம் வாங்க சார். ரொம்ப பயமா இருக்கு. இந்த படம் போட்ட பின்னாடி ஆப்பரேட்டர்ல இருந்து, கேண்டின்காரன் கக்கூஸ் கழுவுறவன் எவனும் தியேட்டர்க்கு வரமாட்டேன்றான். நீங்களாவது வாங்கன்னு கெஞ்சினாரு". சரி போய்த்தான் பார்ப்போமேன்னு படத்துக்கு போனேன். அதுக்கு முன்னாடி LIC ல ரெண்டு கோடிக்கு இன்ஷூர் பண்ணிட்டு போனேன்.

படம் ஆரமிச்சு இண்டர்வல் முடிஞ்சு முறுக்கு,பாப்கார்ன் எல்லாம் வாங்கியாச்சு. ஆனா "நானே வருவேன்" அப்டின்னு சொல்லிட்டு பவர் ஸ்டார் வந்து ஜங்குன்னு குதிப்பாருன்னு  பார்த்தா படம் முடிஞ்சு வெளில வர்ற வரைக்கும் பவர் ஸ்டார் வரலை. ஒரு வேளை  படத்துல ஒளிஞ்சு நின்னுக்கிட்டு இருந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்.

ஆக மொத்தம் பவர் ஸ்டார் படத்தை போட்டு மக்களை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு நினைச்ச பாபு கணேஷ் அவர்களை அகில உலக, அகில செவ்வாய் கிரக  பவர் ஸ்டார் வெறியர்கள் பேரவையிலிருந்து வன்மையாக கண்டிக்கிறேன். இப்ப தெரியுதா ஏன் நாளைக்கு உலகம் அழியப் போகுதுன்னு?

வெள்ளி, நவம்பர் 9

நந்தினி - பாகம் 2

நந்தினி - பாகம் 1

நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.

சைரன் சத்தத்தோடு போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது. வாழவந்தானை பத்திரிகை காரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். போலீஸ் அதிகாரி வந்து எல்லோரையும் ஒதுங்கு ஒதுங்கு என கத்திகொண்டிருந்தார். வாழவந்தானின் மனைவி டெரர்  பிளாக்கை படித்தது போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்

என்னம்மா என்ன நடந்தது என போலீஸ் கேட்டார். மன்மோகன் சிங் மாதிரி பதிலே பேசாமல் இருந்தார் வாழவந்தானின் மனைவி. அவர் வீட்டு வேலைக்காரி வந்து திடீர்ன்னு ஐயோ ன்னு சத்தம் கேட்டது. நான் கூட அய்யா குருவி படம்தான் பார்க்கிரார்ந்னு நினைச்சேன். அப்புறம் யாரோ ஓடுறது தெரிஞ்சது. போயி பார்த்தேன் அய்யா செத்து கிடக்கார்.

அந்த ஆள் அடையாளம் காட்ட முடியுமா?

இல்லைங்க. மூஞ்சிய பார்க்கல ..

வேற அடையாளம் ஏதாச்சும்?

உடம்பு முழுவதும் சால்வை சுத்தி இருந்தான். ஆள் கொஞ்சம் உயரம். பால்கனி வழியா வெளில ஓடிட்டான்.

யோவ் 501, வேற ஏதாச்சும் தடயம் இருக்கான்னு பாரு..

சரிங்கய்யா...

போலீஸ் வீட்டை சுற்றி நோட்டம் விட்டனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்க ஆரமித்தார்

அப்போதுதான் போலீஸ் கண்ணில் அந்த தடயம் தட்டுப்பட்டது. அது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் மாத்திரைக்கான கவர்.
 

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். பட்டொளி வீசி உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கட்டும். நாளை  தீபாவளியை ஓசியில் கொண்டாட மாமனார் வீட்டிற்கு செல்வதால் இன்றே அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். 


பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி...

தீபாவளி தல தீபாவளி 
தினம் தினம் தினம் தீபவாளி 
உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி 

நான் சிரித்தால் தீபாவளி
நாளும் இங்கே ஏகாதசி தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான 
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா..


வியாழன், அக்டோபர் 11

மாற்றான்-விமர்சனம்விஜய்- மூஞ்சிய கேவலமா வச்சிக்கிட்டு டயலாக் பேசுறதை மாற்றான்

விக்ரம் - கேவலமா கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதை மாற்றான்

இயக்குனர் விஜய்-அடுத்தவங்க கதையை சுட்டுட்டு நானே ரூம் போட்டு யோசிச்சேன்னு சொல்றதை மாற்றான்

தங்கர்பச்சான் - தமிழர்களை திட்டுவதை மாற்றான்

மிஸ்கின் - கருப்பு கண்ணாடியை போட்டு அலைவதை மாற்றான்.

மிஸ்கின்- காலுக்கு மட்டும் க்ளோசப் வைப்பதை மாற்றான்

மங்குனி மைச்சர்- facebook ல மொக்கை status போடுறதை மாற்றான்

பன்னிக்குட்டி - கக்கா/கக்கூஸ் பத்தி பேசுறதை மாற்றான்

வெங்கட்- ஒரு வரிக்கு கீழ ஒரு வரி எழுதி பதிவு போடுறதை மாற்றான்

டிஸ்கி: இது மாற்றான் விமர்சனம் அல்ல எத்தனை விமர்சனம் வந்தாலும் காதில் வாங்காமல் தான் செய்வதையே மாற்றாமல் அதையே செய்யும் சிலரை பற்றின சிறு விமர்சனம். மாற்றான் படம் நாளைக்குத்தான் இந்தியாவுல ரிலீஸ். அதுக்குள்ளே விமர்சனம் போட்டுட்டான்னு வந்து ஏன் பார்க்கிறீங்க?


சனி, அக்டோபர் 6

ஆயிரத்தில் ஒருவன் மணி

பதிவுலகில் அனைவருக்கும் பிடித்த நண்பர். பதிவுலகில் உள்ள பல க்ரூப் பதிவர்களிடம் நெருங்கி பழக கூடியவர். விபூதி,சந்தனம் பூசிய முகம், புன்சிரிப்பு ஆள் பார்க்கவே அவ்ளோ வசீகரமாகவே இருப்பார்.

மற்ற பதிவர்களை விட எனக்கு இவரிடம் நெருங்கிய நட்பு உண்டு. நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் சந்தித்த முதல் பதிவர் இவர்தான். அப்போது பேச்சிலராக இருந்த சமயம், ஏன் கடையில் சாப்பிடுறீங்க. வாரத்துல சண்டே ஒருநாளாவது என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள் என அன்பு மிரட்டல் விடுவார்.

அவரது பையன்கள், மற்றும் மகள் அண்ணா அண்ணா என பாசமாக இருப்பார்கள். ஒரு மாசம் அவர் வீட்டுக்கு போகவில்லை என்றால் போன் செய்து கேப்பாங்க. இவரும் குழந்தைகளிடம் அன்பான தந்தையாக, நெருங்கிய நண்பனாக இருப்பார். இவரும் இவரது குழந்தைகளும் பிரண்ட்ஸ் மாதிரித்தான் பேசிப்பாங்க.

பதிவுலகில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவருடனும் சண்டை போட்டதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதர். நேற்று அவர் இறந்த செய்தி கேட்டு நீண்ட நேரம் ஒன்றுமே தோணவில்லை. நம்பவும் முடியவில்லை. என் கல்யாணத்துக்கு வராததால் என் மனைவியை வீட்டிற்கு கூட்டி வர சொல்லி ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தார். எங்களை ஆசிர்வாதம் பண்ணாமலையே கிளம்பிட்டீங்களே மணி சார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசும்போது பொண்ணும்,மருமகளும் கன்சீவா இருக்காங்க நான் தாத்தாவாக போகிறேன்னு சந்தோசமா சொன்னார். சீக்கிரமே அவர்களுக்கு குழந்தையாக மணி சார் பிறப்பார். நீங்கள் என்றுமே எங்களுடன் இருப்பீர்கள் சார்.

இன்று அன்னாரின் அஞ்சலிக்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவரது மனைவி "உங்க பிளாக் நண்பர்கள் எல்லோரும் வந்திருக்காகாங்க எந்திரிங்க. அவருக்கு மாலை எல்லாம் வேண்டாம். எந்திரிச்சு வர சொல்லுங்க போதும்" ன்னு எங்களிடம்  சொன்னதும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

வியாழன், அக்டோபர் 4

தொ(ல்)லைக்காட்சி


டெரர் கும்மி நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு டிவி வாங்கினாங்க. இருக்கிறது அத்தன பேரு. ஆனா பாருங்க டிவிகாரன் ஒரே ஒரு ரிமோட் தான் கொடுத்தான். அதனால எல்லாரும் சண்டை போட்டு ஆளாளுக்கு ஒரு சேனல் மாத்திட்டு இருந்தாங்க.

அருண் பிரசாத் வாங்க பழகலாம்(விருந்தாளிகளை வரவேற்கும்) நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி பன்னிக்குட்டி தோட்டக்கலை நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி ரமேஷ் சமையல் நிகழ்ச்சி பார்க்கிறார்.

அவரிடம் இருந்த ரிமோட்டை பிடிங்கி டெரர் வயலும் வாழ்வும் பார்க்கிறார்.

அப்படின்னா அங்க என்ன நடந்திருக்கும்?

உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன்(வாங்க பழகலாம்)

முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள்,நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். (தோட்டக்கலை)

வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில்...(சமையல்)

வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அதில் கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். (வயலும் வாழ்வும்)

டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை(சமையல்)

நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். (தோட்டக்கலை)

இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். (சமையல்)

விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு...(தோட்டக்கலை)

ஒரு பெரிய குழி தோண்டவும்.  (வயலும் வாழ்வும்)

வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் (வாங்க பழகலாம்)

குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும்.(வயலும் வாழ்வும்)

நன்றி வணக்கம்.

இவங்க எல்லோரும் இப்படி சேனலை அடிக்கடி மாத்திக்கிட்டு இருந்ததை பக்கத்து வீட்டு தாத்தா கேட்டுக்கிட்டு இருந்தார். அவர் காதில் இப்படித்தான் விழுந்தது.

உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா. நல்லா கவனிச்சுக்கனுமா? அது எப்படின்னு நான் சொல்லித்தாரேன். முதல்ல உங்க வீட்டுத் தோட்டத்தை நல்லா அழகு படுத்துங்க. தோட்டம் அழகா இருந்தாத்தான பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரர்கள், நண்பர்களுக்கு உங்க வீட்டை பார்த்தவுடனே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு நீங்க எவ்வளவோ டீ செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் நான் சொல்லித்தர போவது ஒரு வித்தியாசமான டீ. அதற்க்கு முதலில் பாலைக் காய்ச்சவும். அதன்பிறகு அதில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை கலக்கவும். சும்மா ரெண்டு சொட்டு விடாமல் டோஸ் அதிகமாக இருக்குமாறு கலக்கவும். அப்பத்தான் பூச்சி மருந்து நன்றாக வேலை செய்யும். டீ கொதிக்க இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆகலாம். அதுவரை நண்பர்களுக்கு நீங்கள் அழகாக உருவாக்கிய தோட்டத்தினை சுற்றிக்காட்டவும். மனதுக்கு இதமாக இருக்கும். இப்போது உங்களுக்கு சூடான டீ ரெடி. ரெடியான டீயை விருந்தாளிகளுக்கு கொடுக்கவும். விருந்தாளிகள் தோட்டத்தை ரசித்துகொண்டிருக்கும்போது அங்கு ஒரு பெரிய குழி தோண்டவும். வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் கூட்டி கொண்டு போய் குழியில் தள்ளி மேலே ஒரு செடி வைத்து மண்ணைப் போட்டு மூடவும். நன்றி வணக்கம்.

இதை கேட்டுக்கொண்டிருந்த பக்கத்துவீட்டு தாத்தா பாட்டியை கூட்டி கொண்டு ஓடி போனவர்தான். இன்னும் வரலை.


ஞாயிறு, செப்டம்பர் 23

சமையல் சமையல் சமையல்

சமையல் சமையல் சமையல். கல்யாணம் ஆனாலும் ஆச்சு இந்த சமையல் பண்றதே பெரிய வேலையா போச்சு. டிவில சினிமா புரோக்ராம் பார்க்கறத விட்டுட்டு இப்ப வெறும் சமையல் புரோக்ராம் மட்டுமே பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு. சரி பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி சமைக்கணுமே. சமையல்ல நமக்கு தெரியாத டவுட்டை கேட்டு கிளியர் பண்ணி மனைவிக்கு பிடிச்சத செய்யலாம்ன்னு  நினைச்சா அதுக்கு போயி அடிக்கிறாங்க பாஸ். நல்லதுக்கு காலம் இல்லை. அப்படி என்ன கேட்டேன்னா கேக்குறீங்க. சொல்றேன்.
                        

- இட்லி மாவுன்னு சொல்லிட்டு அதுல தோசை சுடுரீங்களே ஏன்?

- தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? தோசைக்கல்லு மாதிரி சப்பாத்திக்கல்லு ஏன் இல்லை?

- வடை சட்டின்னு சொல்லிட்டு அதுல வடைய தவிர எல்லாத்தையும் பொறிக்கிரீங்களே ஏன்?

- இட்லிக்கு வெள்ளை துணி சுத்தி அதுல மாவு ஊத்துறீங்க. ஏன் தோசைக்கு மட்டும் அப்படி பண்றதில்லை? அப்படி சுட்டா தோசையும் வெள்ளையா இருக்கும்ல?

- உப்புமா ஏன் உப்பலா இல்லை?

- உப்புமால உப்பு போடலன்னா மான்னு சொல்லனுமா?

- போண்டாவின் பெண்பால் போண்டியா?

- டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?

- ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?

- இட்லி அரிசின்னு ஒண்ணு இருக்கும்போது சட்னி அரிசின்னு ஒண்ணு ஏன் இல்லை? அட்லீஸ்ட் சாம்பார் அரிசியாவது வச்சிருக்கலாம்ல?

- பச்சரிசி ஏன் பச்சையா இல்லை?

- சப்பாத்திகல்லு இருக்கு ஏன் பூரிகல்லு இல்லை?

- பிஸ்தா பருப்பு சாப்பிட்டா பெரிய பிஸ்தா ஆகிடலாமா?

- பாயாசத்துக்கு ஏலம் போடனும்னு சொன்னதும் பாயாசம் ஒருதரம், பாயாசம் ரெண்டு தரம்ன்னு ஏலம் போட்டா ஏன் திட்டுறீங்க? ஏலக்காய்ன்னு தெளிவா சொல்ல மாட்டீங்களா?

- மைசூர் போண்டா மாதிரி தாம்பரம் போண்டா செய்றது எப்படி?

- ஆமை வடை அசைவம்தான? அப்புறம் ஏன் நாம அத சாப்பிடனும்?

- பேப்பர் ரோஸ்ட்ல நியூஸ் எதுவுமே போடலை. ஏன்?


இப்படி கேள்வி கேட்டு எங்க நான் புத்திசாலி ஆயிடுவனொன்னு நினைச்சு அடிச்சா என்ன பண்றது சொல்லுங்க? பெண்ணாதிக்கவாதிகளை வன்மையாக கண்டித்து,கோவப்பட்டு
.
.
.
.
.
துணி துவைக்க போறேன். அட்லீஸ்ட் துணியாவது துவைக்கலாம். ஹிஹி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது