ஞாயிறு, செப்டம்பர் 23

சமையல் சமையல் சமையல்

சமையல் சமையல் சமையல். கல்யாணம் ஆனாலும் ஆச்சு இந்த சமையல் பண்றதே பெரிய வேலையா போச்சு. டிவில சினிமா புரோக்ராம் பார்க்கறத விட்டுட்டு இப்ப வெறும் சமையல் புரோக்ராம் மட்டுமே பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு. சரி பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி சமைக்கணுமே. சமையல்ல நமக்கு தெரியாத டவுட்டை கேட்டு கிளியர் பண்ணி மனைவிக்கு பிடிச்சத செய்யலாம்ன்னு  நினைச்சா அதுக்கு போயி அடிக்கிறாங்க பாஸ். நல்லதுக்கு காலம் இல்லை. அப்படி என்ன கேட்டேன்னா கேக்குறீங்க. சொல்றேன்.
                        

- இட்லி மாவுன்னு சொல்லிட்டு அதுல தோசை சுடுரீங்களே ஏன்?

- தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? தோசைக்கல்லு மாதிரி சப்பாத்திக்கல்லு ஏன் இல்லை?

- வடை சட்டின்னு சொல்லிட்டு அதுல வடைய தவிர எல்லாத்தையும் பொறிக்கிரீங்களே ஏன்?

- இட்லிக்கு வெள்ளை துணி சுத்தி அதுல மாவு ஊத்துறீங்க. ஏன் தோசைக்கு மட்டும் அப்படி பண்றதில்லை? அப்படி சுட்டா தோசையும் வெள்ளையா இருக்கும்ல?

- உப்புமா ஏன் உப்பலா இல்லை?

- உப்புமால உப்பு போடலன்னா மான்னு சொல்லனுமா?

- போண்டாவின் பெண்பால் போண்டியா?

- டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?

- ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?

- இட்லி அரிசின்னு ஒண்ணு இருக்கும்போது சட்னி அரிசின்னு ஒண்ணு ஏன் இல்லை? அட்லீஸ்ட் சாம்பார் அரிசியாவது வச்சிருக்கலாம்ல?

- பச்சரிசி ஏன் பச்சையா இல்லை?

- சப்பாத்திகல்லு இருக்கு ஏன் பூரிகல்லு இல்லை?

- பிஸ்தா பருப்பு சாப்பிட்டா பெரிய பிஸ்தா ஆகிடலாமா?

- பாயாசத்துக்கு ஏலம் போடனும்னு சொன்னதும் பாயாசம் ஒருதரம், பாயாசம் ரெண்டு தரம்ன்னு ஏலம் போட்டா ஏன் திட்டுறீங்க? ஏலக்காய்ன்னு தெளிவா சொல்ல மாட்டீங்களா?

- மைசூர் போண்டா மாதிரி தாம்பரம் போண்டா செய்றது எப்படி?

- ஆமை வடை அசைவம்தான? அப்புறம் ஏன் நாம அத சாப்பிடனும்?

- பேப்பர் ரோஸ்ட்ல நியூஸ் எதுவுமே போடலை. ஏன்?


இப்படி கேள்வி கேட்டு எங்க நான் புத்திசாலி ஆயிடுவனொன்னு நினைச்சு அடிச்சா என்ன பண்றது சொல்லுங்க? பெண்ணாதிக்கவாதிகளை வன்மையாக கண்டித்து,கோவப்பட்டு
.
.
.
.
.
துணி துவைக்க போறேன். அட்லீஸ்ட் துணியாவது துவைக்கலாம். ஹிஹி

68 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

போஸ்ட்ல டேஸ்ட்டே இல்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எஸ்.கே கூறியது...
போஸ்ட்ல டேஸ்ட்டே இல்ல...///////

இன்னும் சமைக்கவே இல்லியாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////டிவில சினிமா புரோக்ராம் பார்க்கறத விட்டுட்டு இப்ப வெறும் சமையல் புரோக்ராம் மட்டுமே பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு. ////////

அப்படியாவது நாலு புரோகிராம பாத்து ஒழுங்கா சமைக்கிற வழிய பாரு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

போஸ்ட்ல டேஸ்ட்டே இல்ல...///

eat salt separately

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எஸ்.கே கூறியது...
போஸ்ட்ல டேஸ்ட்டே இல்ல...///////

இன்னும் சமைக்கவே இல்லியாம்.....//

im not a cooker :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////டிவில சினிமா புரோக்ராம் பார்க்கறத விட்டுட்டு இப்ப வெறும் சமையல் புரோக்ராம் மட்டுமே பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு. ////////

அப்படியாவது நாலு புரோகிராம பாத்து ஒழுங்கா சமைக்கிற வழிய பாரு......//

அஞ்சாவதா ஒரு புரோக்ராம் பார்த்தா என்னாகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சரி பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி சமைக்கணுமே. /////

அதெல்லாம் என்னிக்கும் நடக்க போறதில்ல...... பேசாம உனக்கு தெரிஞ்ச மாதிரி சமைச்சிட்டு போ....

Madhavan Srinivasagopalan சொன்னது…

எங்க வீட்டுலே இன்டர்நெட் மொடம்ல அடாப்டர் ஏன் சரியா வொர்க் பண்ணல அத மொதல்ல கண்டு பிடிங்க..... அத வெச்சு இங்க இருக்குற எல்லா கேள்விக்கும் பதில் கண்டு பிடிச்சிடலாம்..

பட்டிகாட்டான் Jey சொன்னது…

//
துணி துவைக்க போறேன்.
//

துணி துவைக்க என்ன ”துவை”யல் பயன் படுத்துறே பரதேசி...

இப்படிக்கு,
பாபு

ஆங்க் மறந்துட்டேன்...கர்ர்ர்ர் த்தூ...

இப்படிக்கு
மறுபடியும்
அதே பாபு

எஸ்.கே சொன்னது…

//im not a cooker :)//

பின்னே கிரைண்டரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இட்லி மாவுன்னு சொல்லிட்டு அதுல தோசை சுடுரீங்களே ஏன்?//////

ராங் கொஸ்டின்.... இட்லி மாவுலயா தோச சுடுறாங்க, தோசைக்கல்லுலதானே சுடுறாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? தோசைக்கல்லு மாதிரி சப்பாத்திக்கல்லு ஏன் இல்லை?///////

மொதல்ல அது கல்லே இல்லடா வெண்ண...... அது இரும்பு......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வடை சட்டின்னு சொல்லிட்டு அதுல வடைய தவிர எல்லாத்தையும் பொறிக்கிரீங்களே ஏன்?/////

முதல் கமெண்ட்டு போட்டா வடை மாதிரி, முதல்ல வாங்குற பாத்திரம் வடை சட்டி...... இத தெரிஞ்சுக்க முதல்ல........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சரி பொண்டாட்டிக்கு பிடிச்ச மாதிரி சமைக்கணுமே. /////

அதெல்லாம் என்னிக்கும் நடக்க போறதில்ல...... பேசாம உனக்கு தெரிஞ்ச மாதிரி சமைச்சிட்டு போ....//

என் சமையலை சாப்பிட்டவங்க எல்லாம் எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? வேணும்னா நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இட்லிக்கு வெள்ளை துணி சுத்தி அதுல மாவு ஊத்துறீங்க. ஏன் தோசைக்கு மட்டும் அப்படி பண்றதில்லை? அப்படி சுட்டா தோசையும் வெள்ளையா இருக்கும்ல?//////

இட்டலிய அடக்கம் பண்றோம்.. தோசைய எரிக்கிறோம்...... அதான் அப்படி.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது…

எங்க வீட்டுலே இன்டர்நெட் மொடம்ல அடாப்டர் ஏன் சரியா வொர்க் பண்ணல அத மொதல்ல கண்டு பிடிங்க..... அத வெச்சு இங்க இருக்குற எல்லா கேள்விக்கும் பதில் கண்டு பிடிச்சிடலாம்..//

மோடமை சர்ப் எக்சலில் ஓர வைத்து உபயோக்கிக்கவும். அழுக்காய் இருந்தால் வேலை செய்யாது

பட்டிகாட்டான் Jey சொன்னது…

//

- தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? //

சப்பாத்தி மேக்கர்னு ஒன்னு இருக்கு ராசா...,

புது சமையல்காரன், என்னை போல அனுபவம் வ்அந்தா தெரிஞ்சி போகும்..

இப்படிக்கு,
மங்குனி அமைச்சர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey சொன்னது… //
துணி துவைக்க போறேன்.
//

துணி துவைக்க என்ன ”துவை”யல் பயன் படுத்துறே பரதேசி...//

சர்ப் துவையல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது…

//im not a cooker :)//

பின்னே கிரைண்டரா?//

இல்ல மிக்சி :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////உப்புமா ஏன் உப்பலா இல்லை?/////

ஒரு அன்லிமிட்டட் உப்புமா சாப்புட்டு பாரு........ கழுத்துல இருந்து அடிவயிறு வரை உப்பலா ஆகிடும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இட்லி மாவுன்னு சொல்லிட்டு அதுல தோசை சுடுரீங்களே ஏன்?//////

ராங் கொஸ்டின்.... இட்லி மாவுலயா தோச சுடுறாங்க, தோசைக்கல்லுலதானே சுடுறாங்க?//

தோசை கல்லுல இட்லி மாவை ஊத்தாம சட்னி மாவியா ஊத்துவாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////போண்டாவின் பெண்பால் போண்டியா?//////

அப்போ மரியாதையான்னா போன்ங்கவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? தோசைக்கல்லு மாதிரி சப்பாத்திக்கல்லு ஏன் இல்லை?///////

மொதல்ல அது கல்லே இல்லடா வெண்ண...... அது இரும்பு......////

அதுவும் பொய்யா? அடபாவிகளா. இப்படி பொய் பொய்யா சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வடை சட்டின்னு சொல்லிட்டு அதுல வடைய தவிர எல்லாத்தையும் பொறிக்கிரீங்களே ஏன்?/////

முதல் கமெண்ட்டு போட்டா வடை மாதிரி, முதல்ல வாங்குற பாத்திரம் வடை சட்டி...... இத தெரிஞ்சுக்க முதல்ல........//

னீங்க ஒரு நடமாடும் சமையல் ராஜா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

- தோசைக்கல்லுல சப்பாத்தி சுடுரீங்களே ஏன்? //

சப்பாத்தி மேக்கர்னு ஒன்னு இருக்கு ராசா...,

புது சமையல்காரன், என்னை போல அனுபவம் வ்அந்தா தெரிஞ்சி போகும்..

இப்படிக்கு,
மங்குனி அமைச்சர்///

சப்பாத்தி மேக்கர் சப்பாத்திய CM ஆக்குவாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////இட்லிக்கு வெள்ளை துணி சுத்தி அதுல மாவு ஊத்துறீங்க. ஏன் தோசைக்கு மட்டும் அப்படி பண்றதில்லை? அப்படி சுட்டா தோசையும் வெள்ளையா இருக்கும்ல?//////

இட்டலிய அடக்கம் பண்றோம்.. தோசைய எரிக்கிறோம்...... அதான் அப்படி.....! ///

எப்படி? நீங்கள் பிறக்கும்போதே இவ்ளோ அறிவா? இல்லை திடீர்ன்னு இந்த ஞானம் வந்ததா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?/////

காபி பண்ணனும்னா மொதல்ல செலக்ட் பண்ணனும்..... அப்புறம்தான் காபி ஆகும்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?/////

விட்டா அதுவே புளிச்சிடும்னுதான்.........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இட்லி அரிசின்னு ஒண்ணு இருக்கும்போது சட்னி அரிசின்னு ஒண்ணு ஏன் இல்லை? அட்லீஸ்ட் சாம்பார் அரிசியாவது வச்சிருக்கலாம்ல?//////

இட்லி அரிசில இட்லி சுடலாம்னா அப்போ பொன்னி அரிசில என்ன பண்ணுவீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பச்சரிசி ஏன் பச்சையா இல்லை?///

கழுவி இருப்பானுங்க......

Madhavan Srinivasagopalan சொன்னது…

// எக்சலில் ஓர வைத்து உபயோக்கிக்கவும். //

பாவம் இம்சை பாபு..
இப்போ துப்பி துப்பியே 'டி-ஹைட்ரேட்' ஆகப் போறாரு..

Madhavan Srinivasagopalan சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?/////

விட்டா அதுவே புளிச்சிடும்னுதான்.........//

ROFL..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சப்பாத்திகல்லு இருக்கு ஏன் பூரிகல்லு இல்லை?//////

பூரிக்கட்டைல அடிவாங்குனாலே தாங்க மாட்டே...... நல்ல வேள பூரிக்கல்லு இல்லியேன்னு நெனச்சு சந்தோசப்படு...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

//////போண்டாவின் பெண்பால் போண்டியா?//////

அப்போ மரியாதையான்னா போன்ங்கவா?//

நானே தெரியாமத்தான கேக்குறேன். என்கிட்டையே மறுபடியும் கேக்குற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?/////

காபி பண்ணனும்னா மொதல்ல செலக்ட் பண்ணனும்..... அப்புறம்தான் காபி ஆகும்...//

சிபி பிளாக் மாதிரி பிளாக் பண்ணிருந்தா எப்படி காப்பி பண்ண முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////டீ போட டிகாசன் தேவை அப்ப காபி போட காபிக்சன் தேவையா?/////

காபி பண்ணனும்னா மொதல்ல செலக்ட் பண்ணனும்..... அப்புறம்தான் காபி ஆகும்...//

சிபி பிளாக் மாதிரி பிளாக் பண்ணிருந்தா எப்படி காப்பி பண்ண முடியும்?////////

அப்போ டீ பண்ணு.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பிஸ்தா பருப்பு சாப்பிட்டா பெரிய பிஸ்தா ஆகிடலாமா?//////

அப்போ இட்டிலி சாப்புட்டா பெரிய இட்டிலி ஆகிடுவியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாயாசத்துக்கு ஏலம் போடனும்னு சொன்னதும் பாயாசம் ஒருதரம், பாயாசம் ரெண்டு தரம்ன்னு ஏலம் போட்டா ஏன் திட்டுறீங்க? ஏலக்காய்ன்னு தெளிவா சொல்ல மாட்டீங்களா?///////

அப்புறம் ஏலக்காய் ஏன் போடனும், ஏலப்பழம் போடக்கூடாதான்னு கேப்பியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

////ரசத்துக்கு புளி சேர்க்கும்போது அதிரசத்துக்கு ஏன் புளி சேர்ப்பதில்லை?/////

விட்டா அதுவே புளிச்சிடும்னுதான்.......//

எங்க விடணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மைசூர் போண்டா மாதிரி தாம்பரம் போண்டா செய்றது எப்படி?//////

அத தாம்பரத்துல போய் கேட்காம இங்க வந்து ஏண்டா கேக்குறே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

////இட்லி அரிசின்னு ஒண்ணு இருக்கும்போது சட்னி அரிசின்னு ஒண்ணு ஏன் இல்லை? அட்லீஸ்ட் சாம்பார் அரிசியாவது வச்சிருக்கலாம்ல?//////

இட்லி அரிசில இட்லி சுடலாம்னா அப்போ பொன்னி அரிசில என்ன பண்ணுவீங்க?//

உன்னை மாதிரி பன்னிக்கு கொடுப்போம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆமை வடை அசைவம்தான? அப்புறம் ஏன் நாம அத சாப்பிடனும்?/////

ஃப்ரீயா கெடைக்குது சாப்புடுறோம்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////பச்சரிசி ஏன் பச்சையா இல்லை?///

கழுவி இருப்பானுங்க...... //

அப்போ பச்சமுத்து குளிச்சா முத்துவாயிடுவாரா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

////சப்பாத்திகல்லு இருக்கு ஏன் பூரிகல்லு இல்லை?//////

பூரிக்கட்டைல அடிவாங்குனாலே தாங்க மாட்டே...... நல்ல வேள பூரிக்கல்லு இல்லியேன்னு நெனச்சு சந்தோசப்படு...!//

என்னையவா? என்னை யாராச்சும் அடிக்க முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பேப்பர் ரோஸ்ட்ல நியூஸ் எதுவுமே போடலை. ஏன்? //////

அது ஏ4 பேப்பர் ரோஸ்ட்டா இருக்கும்....... அதுல எதுவும் இருக்காது......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

//////பிஸ்தா பருப்பு சாப்பிட்டா பெரிய பிஸ்தா ஆகிடலாமா?//////

அப்போ இட்டிலி சாப்புட்டா பெரிய இட்டிலி ஆகிடுவியா?

இன்டலி ல பத்து ஓட்டு வாங்குவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்படி கேள்வி கேட்டு எங்க நான் புத்திசாலி ஆயிடுவனொன்னு நினைச்சு அடிச்சா என்ன பண்றது ////////

நீதான் ஏற்கனவே புத்திசாலியாச்சே...... மறுபடி எதுக்கு ஆகனும்னு அடிச்சிருப்பாங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பெண்ணாதிக்கவாதிகளை வன்மையாக கண்டித்து,கோவப்பட்டு
.
.
.
.
.
துணி துவைக்க போறேன். அட்லீஸ்ட் துணியாவது துவைக்கலாம். ஹிஹி///////

கோவத்துல துணி துவைச்சேன்னா.... அப்புறம் நீதான் புதுத்துணி வாங்கி கொடுக்கோனும்..... பாத்துக்க.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////மைசூர் போண்டா மாதிரி தாம்பரம் போண்டா செய்றது எப்படி?//////

அத தாம்பரத்துல போய் கேட்காம இங்க வந்து ஏண்டா கேக்குறே?//

நான் தாம்பரத்துல உக்காந்துதான போஸ்ட் போட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////ஆமை வடை அசைவம்தான? அப்புறம் ஏன் நாம அத சாப்பிடனும்?/////

ஃப்ரீயா கெடைக்குது சாப்புடுறோம்......//

யோவ் விளக்கெண்ணை. இது நான் என் மனைவிகிட்ட கேட்டது. ஏன்னா நாங்க சைவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////பேப்பர் ரோஸ்ட்ல நியூஸ் எதுவுமே போடலை. ஏன்? //////

அது ஏ4 பேப்பர் ரோஸ்ட்டா இருக்கும்....... அதுல எதுவும் இருக்காது....../
எங்க ஆபீஸ் A4 பப்பேர்ல ட்ட இருக்குமே?

பட்டிகாட்டான் Jey சொன்னது…

@ பன்னி
@ரமேஷ்

வரைசையா வாங்கடா.....

கர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ....

இப்படிக்கு
கொசக்சி தனது ஆருயிர் நண்பன்
டெர்ரருடன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////இப்படி கேள்வி கேட்டு எங்க நான் புத்திசாலி ஆயிடுவனொன்னு நினைச்சு அடிச்சா என்ன பண்றது ////////

நீதான் ஏற்கனவே புத்திசாலியாச்சே...... மறுபடி எதுக்கு ஆகனும்னு அடிச்சிருப்பாங்க......!//

நான் புத்திசாலின்னு ஏன் சன் டிவில சொல்லல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

/////பெண்ணாதிக்கவாதிகளை வன்மையாக கண்டித்து,கோவப்பட்டு
.
.
.
.
.
துணி துவைக்க போறேன். அட்லீஸ்ட் துணியாவது துவைக்கலாம். ஹிஹி///////

கோவத்துல துணி துவைச்சேன்னா.... அப்புறம் நீதான் புதுத்துணி வாங்கி கொடுக்கோனும்..... பாத்துக்க.....!//

மாமனார் இருக்க பயமேன்?

எஸ்.கே சொன்னது…

விரைவில் நள பாகன் ஆக வாழ்த்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சமையல் சமையல் சமையல்":

விரைவில் நள பாகன் ஆக வாழ்த்துகள்!///

பாகன்னா ஸ்ரீகாந்த் நடிச்ச படமா?

எஸ்.கே சொன்னது…

//பாகன்னா ஸ்ரீகாந்த் நடிச்ச படமா? //
ஆமா நீங்களும் நள பாகனோ யானை பாகனோ ஆகிடுங்க...

எஸ்.கே உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்... பத்திரமாக பார்த்துக் கொல்லவும்.

மொக்கராசா சொன்னது…

///இறால் மசாலா////

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மொக்கராசா சொன்னது…

////முட்டை சாண்விட்ச் /////

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பிரட் - 4 துண்டுகள்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பைப் போட்டு வதக்கவும்.
அதற்குள் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, பாலையும் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகுத் தூள், போட்டு, கலந்து கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி, கிளறவும். அவ்வாறு கிளறும் போது தீயை சற்று குறைவில் வைத்து, சிறிது நேரம் வேக விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
இப்போது ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அதில் வெண்ணெயை தடவி, முட்டையில் பாதியை வைத்து, மற்றொரு பிரட்டிலும் வெண்ணெயை தடவி, மூட வேண்டும். இதேப் போல் மற்ற இரண்டு பிரட்களையும் செய்ய வேண்டும்.
இப்போது ஈஸியான முட்டை சாண்விட்ச் ரெடி!!! இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

மொக்கராசா சொன்னது…

///செட்டிநாடு இறால் குழம்பு ////


தேவையான பொருட்கள்:
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (அரைத்தது)
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.
பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மொக்கராசா சொன்னது…

////காரமான...மட்டன் சில்லி /////

தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 12
தக்காளி - 1
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை நறுக்காமல், உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அதில் உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும், கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை அதில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் தண்ணீரை விட்டு மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரில் இருக்கும் மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும். ஆகவே அந்த குக்கரை மறுபடியும் அடுப்பில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை நன்கு சுருளக் கிளறவும்.
இப்போது சுவையான காரமான மட்டன் சில்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.

மொக்கராசா சொன்னது…

/// ஓட்ஸ் தயிர் பாத் ///

தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 200 கிராம்
தயிர் - 200 கிராம்
கேரட் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
கறிவேப்பிலை - 7
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு வதக்கவும்.
பின் அதில் தயிர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் ரெடி!!!

மொக்கராசா சொன்னது…

////சூப்பரான... சன்னா உசல்////

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 50 கிராம்
பூண்டு - 4 பல் (அரைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை கழுவி, குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். பின் அதில் உள்ள நீரை வடித்து, கடலையை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, அரைத்த பூண்டு, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
அதற்குள் மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து, அந்த மசாலா கலவையில் ஊற்றி, ஒரு முறை பிரட்டி இறக்கவும்.
இப்போது சுவையான சன்னா உசல் ரெடி!!! இதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சாஸை விட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

மொக்கராசா சொன்னது…

///வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா/////

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/2 கிலோ (நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சற்று அதிகமான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, வெண்டைக்காயை போட்டு, நன்கு வதக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வெந்தது போல் தெரியும் போது, அதில் குடைமிளகாயை போட்டு நன்கு பிரட்டவும். பின்னர் அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மல்லித் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
பச்சை வாசனை போனதும் அதனை இறக்கி, அதில் மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி, எலுமிச்சை சாற்றை விட்டு, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
இப்போது சுவையான வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா ரெடி!!!

மொக்கராசா சொன்னது…

///சத்தான...முருங்கைக்கீரை துவையல்/////


தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அ