வியாழன், செப்டம்பர் 6

சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?

 

ஸ்பைடர் மேன்: ஹாய் மச்சி. எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?

சூப்பர் மேன்:  நல்லா இருக்கேன் இருக்கேன் மச்சி. இப்ப முன்ன மாதிரி வெளில வர முடியலை.

ஸ்பைடர் மேன்: ஏண்டா?

சூப்பர் மேன்: என்னடா பண்றது? பொண்ணுங்க கூட அரைகுறை டிரஸ்ல வெளில சுத்த முடியுது. பசங்களால முடியலை. நான் பேண்ட்டுக்கு மேல ஜட்டி போட்டு சுத்துரதால கலாச்சாரம் பாதிக்குதுன்னு ஆளாளுக்கு போராட்டம் பண்றாங்க மச்சி. அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம். நல்லவேளை அப்போ நான் திரும்பி நின்னுக்கிட்டு இருந்தேன். இல்லைன்னா என்ன ஆயிருக்கும்?

ஸ்பைடர் மேன்: பன்னாடை அந்த ஜட்டியத்தான் உள்ள போட்டு தொலைஞ்சா என்னடா?

சூப்பர் மேன்: பரம்பரை பரம்பரையா இப்படித்தான மச்சி போட்டிக்கிட்டு வர்றோம். இப்போ திடீர்ன்னு என்னை மாத்த சொன்னா நான் என்ன செய்யுறது?

ஸ்பைடர் மேன்: கஷ்டம்டா சாமி.  உன் நிலைமை பரவாயில்லை மச்சி. என் நிலைமையை கேட்டா ரொம்ப கஷ்டம். இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. என் பொண்டாட்டி துணி காயபோடுறதுக்கு வலை கட்டியே என் உயிரு போகுது மச்சி. எவ்ளோ நேரம்தான் கையை நீட்டி வலை உருவாக்கி அப்புறம் துணி காயபோடுற வரைக்கும் நிக்கவேண்டிதிருக்கு. அதை வேற போட்டோ எடுத்து Facebook ல போட்டு என் மானத்தை வாங்கிட்டாங்க. அப்புறம் அது கிராபிக்ஸ்ன்னு சொல்லி சமாளிச்சேன்.

சூப்பர் மேன்: அதெல்லாம் விடு மச்சி டெரர் கும்மில Hunt For Hint-2 அடுத்த வாரம் ரிலீசாம். நீ விளையாட போறியா?

ஸ்பைடர் மேன்: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம்.  நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு.

சூப்பர் மேன்: போடா பரதேசி. நேத்து ஒரு சின்ன பையன் என்னை பார்த்து ஜட்டி வெளில போட்டிருக்கிறாரே இந்த அங்கிள் முகமூடியான்னு கேக்குறான் மச்சி. அப்படியே விஷம் குடிச்சு சாகலாம் போல இருந்துச்சு.

ஸ்பைடர் மேன்: இத விட உன்னை யாரும் அசிங்கப்படுத்த முடியாது மச்சி. சரி எப்படி நம்ம ரெண்டு பேரும் இதை விளையாடுறது. என்னால வர முடியாதே.

சூப்பர் மேன்: இப்ப என்கிட்டே வர்றதெல்லாம் பழைய வலைதான். NIIT ல .net ன்னு புதுசா ஒரு கோர்ஸ் இருக்கு. அதை போய் படிச்சா என்கிட்டே இதைவிட அட்வான்சா நெட் கிடைக்கும். நான் போயி படிச்சிட்டு வரேன்னு உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு வா மச்சி. நாம ரெண்டு பேரும் விளையாடலாம்.
ஸ்பைடர் மேன்: சூப்பர் ஐடியா. எங்க இந்த வருஷம் விளையாட முடியாம போயிடுமோன்னு நினைச்சேன். தேங்க்ஸ் மச்சி.

சூப்பர் மேன்: சரி மச்சி. இதுல பரிசு ஜெயிச்சா என்ன மச்சி செய்வ?

ஸ்பைடர் மேன்: முதல்ல உனக்கு பேண்ட்டுக்குள்ள போடுற மாதிரி ஜட்டி எடுத்து தருவண்டா.

சூப்பர் மேன்: !!!!

For more information please click http://www.terrorkummi.com/2012/09/hunt-for-hint-2-10000.html link


13 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///"சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?"/////

இனிமே பண்ணிடுவார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம்.////

ஜட்டி போட்டா ஆபாசமா? என்ன கொடும சார் இது?

வெறும்பய சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///"சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?"/////

இனிமே பண்ணிடுவார்.......///

இனி தற்கொலை பண்ணி தான் ஆகணும்

வெறும்பய சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம்.////

ஜட்டி போட்டா ஆபாசமா? என்ன கொடும சார் இது?//

அதனால தான் ரமேஷ் அந்த கர்மத்தை போடுறதே இல்லையாம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ஸ்பைடர் மேன்: பன்னாடை அந்த ஜட்டியத்தான் உள்ள போட்டு தொலைஞ்சா என்னடா?//////

அப்புறம் ஜட்டியே போடலைன்னு சொல்லி தார் பூசிட போறானுங்க.....!

நாய் நக்ஸ் சொன்னது…

ரமேஷ்::::::: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம். நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு. /////


ஒப்புதல் வாக்குமூலம்??????????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஸ்பைடர் மேன்: கஷ்டம்டா சாமி. உன் நிலைமை பரவாயில்லை மச்சி. என் நிலைமையை கேட்டா ரொம்ப கஷ்டம். இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. என் பொண்டாட்டி துணி காயபோடுறதுக்கு வலை கட்டியே என் உயிரு போகுது மச்சி. ///////

இதெல்லாம் பரவால்ல, இவனாது கொடிதான் கட்டி இருக்கான், நம்ம சிரிப்பு அவரே ஊற வெச்சி, துவச்சி, காயப்போட்டு, அயனும் பண்றாராம்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////நாய் நக்ஸ் கூறியது...
ரமேஷ்::::::: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம். நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு. /////


ஒப்புதல் வாக்குமூலம்??????????/////////

அவர் சொல்லலேன்னா மட்டும் இது யாருக்கும் தெரியாதாக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சூப்பர் மேன்: போடா பரதேசி. நேத்து ஒரு சின்ன பையன் என்னை பார்த்து ஜட்டி வெளில போட்டிருக்கிறாரே இந்த அங்கிள் முகமூடியான்னு கேக்குறான் மச்சி. அப்படியே விஷம் குடிச்சு சாகலாம் போல இருந்துச்சு.///////

மிஷ்கின் இன்னேரம் குடிச்சிருப்பாரு.....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

மிசுக்கினோட முகமூடி படம் ரிலீசான அன்னிக்கி.. இந்த ஸ்பைடர்மேன்,சூப்பர்மேன்,பேட்மேன்,டேஞ்சர் டயபாலிக் மேன்..... லிருந்து.... இரும்புக்கைமாயாவி வரையிலும் அத்தனைபேலும் பாலிடாயில் குடிச்சி செத்துப்பொய்ட்டதா கேள்விபட்டேன்.

நீ என்னாடான்னா.... இன்னும் சூப்பர்மேன் பேன்டுக்கு வெளில ஜட்டி போட்ருக்கான், ஸ்பைடர்மேன் துணிகாயப்போட நூல் விடுரானு சொல்றே....

டேமேஜர் இதுல எதுடா உண்மை...கொழப்புராய்ங்களே.....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

// சூப்பர் மேன்: பரம்பரை பரம்பரையா இப்படித்தான மச்சி போட்டிக்கிட்டு வர்றோம். இப்போ திடீர்ன்னு என்னை மாத்த சொன்னா நான் என்ன செய்யுறது? //

ஏன்டா சூப்பர்மேனு... எங்க பரம்பரைகூடதான் ஆரம்பத்துல கோவனம் கட்டிகிட்டு திரிஞ்சாங்க நாங்க இப்ப பேன்டு சட்டை போடுரதஇல்லையா......, திருந்துங்க மச்சிகளா...

பட்டிகாட்டான் Jey சொன்னது…

// அதெல்லாம் விடு மச்சி டெரர் கும்மில Hunt For Hint-2 அடுத்த வாரம் ரிலீசாம். நீ விளையாட போறியா? //

க்கும்... நீங்களெல்லாம் நூல் விடுறதுக்கும், இளவட்டக்கல்ட தூக்குறதுக்கும்தான் லாயக்கு... இதுக்கு சரிபட்டுவருவீங்களா?... பாப்போம் உங்க சமத்த....

Madhavan Srinivasagopalan சொன்னது…

// இதுக்கு சரிபட்டுவருவீங்களா? //
சரி பட்டு வரமாட்டாரு......

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது