Horoscope

செவ்வாய், ஜூலை 17

கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல என்ன-பல்பு

போன வாரம் ஊர்க்கு போயிருந்தேன். இப்போ போனாத்தான மாமியார் வீட்டுல ஆடி மாச சீர் எல்லாம் கிடைக்கும். ஹி ஹி. சுதந்தின தினத்தை ஒட்டி அக்கா பசங்களுக்கு ஸ்கூல்ல காம்படிசன் எல்லாம் நடக்குது. ரெண்டாவது படிக்கும் என் அக்கா பொண்ணை கூப்பிட்டு நீ எதுல கலந்துக்கிறேன்னு கேட்டேன். கதை சொல்லும் போட்டி அப்புறம் தமிழ் டு இங்கிலீஷ் வோர்ட்ஸ் சொல்லப்போறேன்னு சொன்னா.

எங்க கதை சொல்லுன்னு சொன்னதும் எலி சிங்கம் வலைல மாட்டின கதை சொன்னா. சிங்கம் வலைல மாட்டுச்சுன்னு சொலதுக்கு பதில் சிங்கம் வளையல்ல மாட்டிருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா. என்ன இருந்தாலும் குழந்தை ஆக்ஷனோட கதை சொல்ற அழகே சரிதான்.

அப்புறம் தமிழ் டு இங்கிலீஷ். நான் கேட்டது.

யானை- Elephant
பூனை- cat
மல்லிகை- Jasmin
கோவில்- temple

அப்புறம் நான் கேட்டகேள்விக்கு பதில் சொன்னா பாருங்க. சத்தியமா சிரிச்சு முடியலை. கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல என்னன்னு கேட்டேன். இது கூட தெரியாதா கோபிகாவுக்கு இங்கிலீஷ்ல ஸ்ரீதர்ஷினி அப்டின்னு சொன்னா. வீட்ல கூப்பிடுற பேரு கோபிகா ஸ்கூல் செர்டிபிகேட் பேரு ஸ்ரீதர்ஷினி.

இல்லடா ரெண்டுமே பேருதான். கோபிகாவுக்கு இங்கிலிஷ்ல ஸ்ரீதர்ஷினி அப்படியெல்லாம் கிடையாதுன்னு எவ்ளவோ எடுத்து சொன்னேன். என்னை ஒரு முறை முறைச்சிட்டு நீதான் லூசு உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிட்டு விளையாட ஓடிட்டா.

#எனக்கு இது தேவையா!!

இவளிடம் வாங்கிய பல்புகள்:



குழந்தையும் பல்பும்!!!

இன்னொன்னுதான அது

 

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது