Horoscope

சனி, ஜூலை 31

கடவுள் என்னும் தொழிலாளி

ஒரு வாரம் கொஞ்சம் ஆணி அதிகம்ன்னு லீவ் லெட்டர் கொடுத்துட்டு போனாலும் அருண் என்னடான்னா Biodata போடுறேன்னு மிரட்டுறார். நம்ம ஜெய் அண்ணன் அரச மரத்தடில பூக்குழி இறங்குவேன்னு மிரட்டுறார். வெங்கட் VAS சங்கத்தை கலைச்சிடுவேன்னு அடம் பிடிக்கிறார். சரி இவ்ளோ பேர் கூப்பிட்டும் வரலைன்னா என்ன ஆகுறது அப்டின்னு முடிவு பண்ணி வந்து சேந்துட்டேன்.

போன வாரம் முழுவதும் டாக்ஸி பயணம்தான். நிறைய மனிதர்களை சந்திக்க நேரிட்டது. நான் இன்று சந்தித்த டாக்ஸி டிரைவரை வாழ்க்கைல என்னால் மறக்க முடியாது. இன்னிக்கு காலைல ஏழு மணிக்கு டாக்ஸி புக் பண்ணி இருந்தோம். அந்த டிரைவருக்கு 74 வயது ஆகிறதாம்.

இந்த வயதிலும் உழைக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட். ஆனால் பயணத்தின் போது அவருடன் பேசும்பொழுது மனதுக்கு சந்தோசம் இல்லை என்பதுதான் உண்மை.

அந்த டிரைவரிடம் எப்படி இந்த வயசில் உழைக்க முடிகிறது எத்தனை குழந்தைகள் என்று கேட்ட போது அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இருவரும் இறந்து விட்டதாகவும் தன மனைவியுடன் தனியாக வாடகை வீட்டில் இருப்பதாகவும் கூறினார். அதற்க்கப்புறம் சில நிமிடங்களுக்கு அவருடன் எதுவும் பேச முடியவில்லை.

அவருக்கு குழந்தை பிறந்த புதிதில் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து நிறையா சம்பாதித்ததாகவும் கூறினார். அப்புறம் என்ன வாடைகை வீட்டில் இருக்குறீர்கள் சொந்தமா ஒரு வீடு வாங்கிருக்கலாமே என்று கேட்டோம். அதற்க்கு அவரிடம் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் தான் பதில். அதற்க்கு அப்புறம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

அதற்க்கு அப்புறம் அவரே பேச ஆரமித்தார். வெளிநாட்டில் சம்பாதித்த  பணத்தில் அவரது பொண்ணையும்,பையனையும் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து நல்ல வீடு கட்டி ஆளுக்கு ஒன்னும் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த நன்றி கேட்ட ஜென்மங்கள் சொந்த அப்பா அம்மா என்று கூட பாக்காமல் அவர்களிடம் இருந்த எல்லாத்தையும் பிடிங்கி விட்டு அவரை சரமாரியாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டுருக்கிறார்கள். சொந்த அப்பாவை அடிக்கிற அளவுக்கு அவர்களுக்கு இந்த மனநிலை எப்படி வந்தது?

ஆனாலும் வேற எந்த வழியிலும் போகாமல் இந்த 74 வயதில் மனம் தளராமல் தனக்காகவும், தன மனைவிக்காகவும் உழைக்கும் இந்த கடவுள் என்னும் தொழிலாளியை நாம் வாழ்த்தி வணங்குவோம்.

இரவு ஏழு மணிக்கி பயணம் முடிந்து எங்களை இறக்கி விட்டு விட்டார். பயணத்தில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அவர் கொடுத்த பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை.

செவ்வாய், ஜூலை 27

மிக மிக சந்தோஷமான செய்தி


 As I suffering from lot of "AAAAANEEEEEEEEEEEEEES". So I am unable to read/write blog next one more week(என்ன ஒரு சந்தோஷம்). So enjoy one more week. I think i will get 100 votes for this post.
அய்யோ அய்யோ ..

வெள்ளி, ஜூலை 23

தியேட்டர் நொறுக்ஸ்-1

Title-க்கு ஜெட்லி மன்னிக்கணும்

இப்பெல்லாம் நினைச்ச உடனே online -ல டிக்கெட் புக் பண்ணி ஈசியா போய் படம் பாத்துட்டு வந்துடுறோம். அதுல நமக்கு ஒரு நிம்மதி இருக்கா அப்டின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன்(வாரத்துக்கு நாலு மொக்கை படம் பார்த்தா அப்படித்தான் இருக்கும்). அந்த காலத்துல தியேட்டர்ல படம் பாக்குறப்ப படத்தோட சேர்த்து சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இருக்கும்.  இப்பெல்லாம் அது இல்லை. தியேட்டருக்கு போனமா வந்தமான்னு தான் இருக்கோம்(பின்ன அங்க என்ன ரூம் போட்டு சாப்பிடவா முடியும்).

கவுண்டர்:

முன்னெல்லாம் அப்படி இல்லை. முதல்ல கவுண்டர்ல உள்ள queue ல போய் நிக்கணும். அப்புறம் டிக்கெட் எடுக்கணும்(என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு). கவுண்டர் பாத்தீங்கன்னா பெரிய சுரங்கப்பாதை மாதிரி புல் இருட்டாவும் வளைஞ்சு வளைஞ்சு நாலைஞ்சு row  வாகவும் இருக்கும். இரும்பு கம்பி போட்டிருப்பாங்க.

கவுண்டர் ஆரமிச்சு டிக்கெட் கொடுக்குற இடம் வரைக்கும் ஒரு அரை கிலோ மீட்டராவது இருக்கும். கூட்டமா இருந்தா டிக்கெட் கொடுக்குறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே இந்த கவுண்டருக்குள்ள போய் நின்னுடுவோம். டிக்கெட் எடுத்து வெளில வர்றதுக்குள்ள மன்னன் பட ரஜினி மாதிரி ஆயிடுவோம்.

கவுண்டருக்குள்ள ஒரே ஒரு மஞ்ச லைட்தான் எரியும். அத்தனை row க்கும் சேர்த்து ஒரே லைட்தான். இரவு காட்சி போனோம்னா டிக்கெட் எடுக்குற வரைக்கும் ஒரே திக் திக் தான். பேன் வேற இருக்காது(ஆமா நீ எடுக்குற அஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு A/C போடுவாங்க).

இதுல சில பேரு நம்ம தலைல ஏறி முன்னேறி போவாங்க(நம்மளால சில பேரு முன்னேறி போறாங்கன்னு மனச தேத்திகிட வேண்டியதுதான்). பெரிய சண்டையே நடக்கும். அந்த இருட்டுல நம்ம மேல ஏறிப் போறது யார்ன்னு கூடத் தெரியாது. சில நேரம் நம்ம நெருங்கின சொந்தகாரனா கூட இருக்கும்.

தரை டிக்கெட்(நான் இல்லைங்கோ)

அப்புறம் டிக்கெட்ல மூணு வகை உண்டு. chair ,பெஞ்ச்,தரை. Chair டிக்கெட் எல்லாம் பணக்காரங்க உக்கார்றது அப்டின்னு ஊர்ல ஒரு நினைப்பு. உண்மைதான். வசதியானவங்கதான் Chair டிக்கெட் எடுத்து வருவாங்க.

நமக்கெல்லாம் பெஞ்ச் இல்லைனா தரைதான். பெஞ்ச் டிக்கெட் எடுத்தா நம்ம வீட்டுக்கு மூட்டைப் பூச்சிகள் இலவசம். அதனால தரை டிக்கெட்லதான் படத்துக்கு கூட்டிட்டு போவாங்க.

இரவு காட்சியா இருந்தா ரொம்ப வசதி. தியேட்டருக்கு வெளில கூட (கதவுக்கு பக்கத்துல) உக்கார்ந்து படம் பாக்கலாம். காத்தும் நல்லா வரும். படம் மொக்கையா இருந்தா அப்படியே ஓடலாம். (ஆனா நாங்கெல்லாம் என்னை மொக்கயா இருந்தாலும் அசர மாட்டோம்ல).

Wallpapper:

அப்புறம் wallposter . தியேட்டர்ல ஒரு இடத்துல படத்தோட காட்சிகளை ஒட்டி இருப்பாங்க. முதல்ல போய் அதத்தான் பாப்போம். இடைவேளைல மறுபடியும் பாத்துட்டு இந்தஇந்த  காட்சிகள் முடிஞ்சிடுச்சு. இந்த காட்சிகள் எல்லாம் இனிமே வரும் அப்படின்னு discuss (ஆமா பெரிய Group Discusstion) பண்ணுவோம். சில காட்சிகள் படத்துல வரலைன்னா தியேட்டர் operator -யை திட்டுவோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டானே அப்டின்னு. 

அப்புறம் ஷீல்ட். எந்த எந்த படம் எவ்ளோ நாள் ஓடிருக்குன்னு ஷீல்ட் அங்க வச்சிருப்பாங்க. அத பாக்குறதுல ஒரு அலாதியான சந்தோஷம். எத்தன தடவ அதே தியேட்டருக்கு போனாலும் அந்த ஷீல்ட திரும்ப திரும்ப பாப்போம்.

இன்னும் நிறைய இருக்கு. உங்களோட கருத்துகளுக்கு பிறகு சொல்றேன். பிடிக்கலன்னா இதோட நிறுத்திக்கிடுவோம்..


......

வியாழன், ஜூலை 22

ஆணீணீணீணீணீணீ

ரெண்டு நாளா ஊர்ல இல்லை(எவ்ளோ சந்தோசம்). என்னோட பேங்க் அக்கவுன்ட் லாக் ஆயிடுச்சு. அதை enable பண்றதுக்கு பேங்க்ல கேட்டா நீங்க நேர்ல வரணும்னு சொல்லிடாங்க(அக்கவுன்ட் ஆரமிக்கும்போது நான் சாதாரண ஆள். இப்ப நான் பிரபல பதிவர் ஆயிட்டதால என்னை பாக்கனும்னு வர சொல்லிருப்பாங்களோ?).

பேங்க் போனா என்னை அலைய விட்டுடாங்க. ஒருத்தர போய் பார்த்தா அவர் "நான் அவன் இல்லை" நீங்க போய் அந்த officer -ர போய் பாருங்க அப்டிங்கிராங்க. அவர போய் பார்த்த அவர் இன்னொருத்தருக்கு redirect-பண்றாரு. ஒரு வழியா மூணு மணி நேரத்துல வேலை முடிஞ்சது. (ஒரு பிரபல பதிவருக்கே இந்த நிலைமையா?)

மொபைல் வழியா எப்படி கமென்ட் reply மற்றும் பப்ளிஷ் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்த "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" அவர்களுக்கு நன்றி. என்னோட போன பதிவுல கமென்ட் போட்டதுக்கும் அவருக்கு உதவி செய்த மற்றும் செய்யப்போகும் அனைவருக்கும் நன்றி.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" அப்டின்னு ஒரு பதிவு போட்டேன். அது எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ். ஆனா அது ஏற்கனவே நிறைய ப்ளாக்-ல வந்துடுச்சுன்னு நம்ம அருண்பிரசாத் சொன்னதால அதை delete பண்ணிட்டேன். பின்ன யாராவது என்னை திருட்டு பயலே அப்டின்னு சொல்லிடுவாங்களே.

அந்த பதிவுக்கு கமென்ட்,ஓட்டு  போட்ட அனைவருக்கும் தேங்க்ஸ்.

"ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க" பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ்:


1 ) Kousalya உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


என்னத்த சொல்ல... ம் ம் ...யோசிச்சு பார்த்தால்..... சரிதான்னு தோணுது....!


2 ) வெங்கட் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"
// போன போஸ்ட்டுக்கு reply பண்ண முடியவில்லை. "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" தான் மொபைல் வழியாக reply பப்ளிஷ் பண்ண உதவி செய்தார். அவருக்கு மிக்க நன்றி. //




யாராவது தஞ்சாவூர் கல்வெட்ல நம்மள பத்தி செதுக்கும் போது.. இந்த Matter-ஐயும் சேர்த்துக்கோங்கப்பா..
---------------------
சும்மா.., சும்மா நீங்க பொண்ணுங்ககிட்டயே வம்புக்கு போயிட்டு இருக்கீங்க...இதையே Continue பண்ணுனீங்க..அப்புறம் கூடிய சீக்கிரம் என் தலைமையில ஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..ஜாக்ரதை..


3 ) அருண் பிரசாத் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்
@ வெங்கட் //என் தலைமையிலஒரு கண்டன போராட்டத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்..//ஆமாம் ஜாக்கிரதை ரமெஷ், கண்டன போரட்டத்தில் வழக்கம் போல நம்ம வெங்கட், கோகுலத்தில் சூரியன் வெங்கட், VAS தலைவர் வெங்கட் இப்படி பலர்(?!) எதிர்ப்பாங்க கட்சில இருக்குற்தே ஒரு ஆளு இதுல கண்டன ஆர்பாட்டம் வேற.




@ ரமெஷ் நீ கலக்கு சித்தப்பு, பாத்துக்கலாம்


4 ) dheva உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"


தம்பி......ரமேசுசுசுசு! ஆராய்ச்சி அமர்க்களமப்பு.....ஏன் இப்புடி...! சிரிப்பு போலிஸ்...எல்லா வேலையும் பாக்குது ஹா..ஹா..ஹா..!

டிஸ்கி: சரி இதுக்கு ஏன் இவ்ளோ விளம்பரம், ஏன் இப்படி மொக்கை போடுற, இந்த பதிவுக்கு ஏன் "ஆணீணீணீணீணீணீ" ன்னு தலைப்பு வச்சிருக்கேன்னு கேக்குறீங்களா? நான் ஊர்ல இல்லைங்கிரதினால எஸ்.எம்.எஸ் ஜோக் போட்டு ஒரு பதிவ ஓட்டிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம அருண் அது ஏற்கனேவே வந்துடுச்சுன்னு சொல்லிட்டார். அதான் அதை Delete பண்ணிட்டு இப்படி ஒரு மொக்கை பதிவு.

 ஆணி அதிகம்னால புது போஸ்ட் இப்ப போட முடியல(யார் கேட்டா?).

செவ்வாய், ஜூலை 20

ராகிங் அரக்கனால் செத்து பிழைத்த மாணவர்

இன்று காலை தினமலரில் இந்த செய்தியைப் படித்ததும் மனம் கலங்கிவிட்டது. வாங்களேன் நண்பர்களே. நம்மளால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

சிவகங்கை:ராகிங் கொடுமையில் சிக்கி மறு பிறவி கண்ட இன்ஜினியரிங் மாணவர் சோபன்பாபு (21), சிகிச்சை, கல் விக்கு உதவிக்கரங்களை எதிர்நோக்கியுள்ளார். இவரது தந்தை செல்வம், சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், முதல் ஆண்டு படித்தார்.


கடந்த 2009 அக்., 22 ல், இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்து,மாடியில் இருந்து தள்ளி விட்டனர்; முதுகு தண்டுவட எலும்பு, கால் முறிவு; நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து அக்., 25 ல், தினமலர் இதழில் செய்தி வெளியானது.கோவை, மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, இடுப்புக்கு கீழ் செயல்படாத நிலையில் வீட்டில் உள்ளார். தொடர் சிகிச்சை, படிப்புக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர், கூறியதாவது: சிகிச்சைக்கு பின் சுயநினைவு வந்த போது மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தேன்.

இதுவரை ஐந்து லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. பிளஸ் 2 ல், 1160 மதிப்பெண் எடுத்தேன். எதிர்கால கனவுகளுடன் கல்லூரியில் சேர்ந்த 44 நாள்களில் இந்த சோகம் நிகழ்ந்தது. ஒரு டி.எஸ்.பி., தலைமையிலும், அண்ணா பல்கலை சார்பிலும் குழுவினர் விசாரித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்துடைப்பு நாடகம் நடக்கிறது. இடுப்பு, காலில் தினமும் "பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்னால் குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என எதிர்பார்த்து சிரமப்பட்டு படிக்க வைத்தனர்.

தற்போது குடும்ப சூழல் மோசமாகி வருகிறது.ஒரு சில மாதங்களில் எழுந்து நடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன். உரிய சிகிச்சையும் தேவைப்படுகிறது. இதற்கு உதவிக்கரம் நீட்டினால், தொடந்து படித்து குடும்பத்திற்கு உதவுவேன் என்றார்.உதவ முன்வருவோர், "98436-51708, 98431-17594' என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், ஜூலை 19

திருட்டு பயலே

இதனால உலக மக்கள் அனைவருக்கும் சொல்லிகொள்வது என்னவென்றால் இனிமேல் நான் எழுதுற பதிவ மொக்கை, குப்பை, தேறாது, பிளேடு அப்டின்னு உக்காந்துகிட்டு ,நின்னுகிட்டு, படுத்துக்கிட்டு உருண்டுகிட்டு சொல்றவுங்க இதோட நிறுத்திகிடனும்.

நம்மள ஒரு சுஜாதா,ராஜேஷ்குமார், பிரபஞ்சன் மாதிரி நினைச்சு நான் எழுதுன பதிவ ஒரு பயபுள்ள காப்பி பண்ணி அதோட பதிவுல போட்டிருக்கு. மொக்கையா இருந்தா யாராவது திருடுவாங்களா? அப்ப நான் நல்லாதான எழுதுறேன். அதனாலதான் சொல்றேன். மொக்கை பதிவுன்னு கமெண்ட் போடுறத இதோட நிறுத்திகிடுவோம்.

இல்லன்னா பெரிய பெரிய விளைவுகளை நீங்க சந்திக்கணும்(உன் பிளாக்க படிக்கிறதா விடவா).

என்னோட பதிவு:

http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post_14.html

திருடின பதிவு:

http://www.eegarai.net/-f5/-t34583.htm

இதுவே நம்ம தம்பி ஜில்தண்ணி அவரோட பதிவுல சொல்லித்தான் தெரியும். இன்னும் எத்தனை பேரோட பதிவ சுட்டிருக்கனோ இந்த பய raj001. சரின்னு அந்த பதிவ எடுக்க சொல்லி கமெண்ட் போட்டேன். அந்த தம்பியும் உடனே எடுத்துட்டான்(பதிவ இல்லைங்க, கமாண்ட எடுத்துட்டான்)

இத நம்ம Jey அண்ணன் கிட்ட சொன்னதும் டென்சனாகி மறுபடியும் ஆளுக்கொரு மிரட்டல் கமெண்ட் செந்தமிழில் போட்டோம். அவ்ளோதான் அடுத்த கமெண்ட் போடுறதுக்குள்ள எங்களோட அக்கவுன்ட லாக் பண்ணிடாங்க. அந்த "error message" என்னனு கீழ பாருங்க.

திருடி போட்டது நல்ல பதிவாம். ஏன்னு சொந்தக்காரன் கேட்டா அது அநாகரீக பதிவாம். என்ன கொடுமை சார் இது?

சரி அவனுக்கு விவரம் பத்தல. என்னோட பதிவ திருடுறதுக்கு பதில் எங்க அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் பதிவ திருடி போட்டிருந்தேன்னா உனக்கு மதுமிதான்னு ஒரு அழகான அன்பான பாசமான சூப்பரான பொண்ணு லவ் லெட்டர் அனுப்பிருக்கும். நீயும் லைப்ல செட்டில் ஆயிருக்கலாம். விவரம் பத்தலையே.

அடுத்த தடவ திருடும்போது என்கிட்டே ஐடியா கேளு. யார் யார் பதிவு திருடினா என்ன நன்மைகள் கிடைக்கும்னு சொல்றேன். ஓகே வா?

கடைசியா அந்த வெப்சைட் owner தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கார். அவர் மன்னிப்பு கேக்குறதுக்கு முன்னால இந்த திருட்டு பதிவ எடுத்திருக்கணும். அப்புறம் என்னோட அக்கவுன்ட enable பண்ணிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா அவர பாராட்டி இருக்கலாம். இந்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் அப்படி எதுவும் நடக்கல.

ஒருவேளை நீங்க படிக்கும்போது அந்த பதிவு காணாமல் போகலாம். அத நான் போட்டோ-வா போடுறேன் கீழே:

ஞாயிறு, ஜூலை 18

டிராபிக் போலீஸ்

நான் பிறந்தது நகரத்துல ஆனாலும் வளர்ந்தது எல்லாம் கிராமத்துலதான். அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. ஏதாவது லீவுக்கு ஊருப்பக்கம் வந்தா உண்டு. அப்பெல்லாம் எங்க வீட்டுல டூ வீலர் எல்லாம் கிடையாது.

அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்டு ஊர சுத்துவோம். அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன்ஸ் கிடையாது. இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை.

அப்புறம் காலேஜ் படிக்கும்போது சொந்த ஊருக்கு வந்துட்டோம். அது சிட்டி அப்டின்கிறதினால ட்ராபிக் போலீஸ் எல்லாம் மீட் பண்ண வேண்டியதாய் போச்சு. நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்பனோட டூ வீலர் எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம டிராபிக் போலீஸ் கைய காட்டினாரு. நமக்கென்ன லிப்ட் கேக்குறாரு போலன்னு ஸ்டைல்-லா வண்டிய நிப்பாட்டினேன்(நீ என்ன பண்ணினாலும் ஸ்டைல்-தான் விட்ரா விட்ரா). அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் கீழே.

போலீஸ்: லைசென்ஸ் எடு.

நான்: (நான் கிராமத்துலயே இருந்துட்டதினால லைசென்ஸ் பத்தி தெரியாதே) அப்டின்னா என்ன சார்?

போலீஸ்: (நான் நக்கல் பண்றதா நினைச்சிகிட்டு) என்ன நக்கலா ஒழுங்கா லைசென்ஸ் எடு.

நான்: சார் சத்தியமா லைசென்சுன்னா என்னன்னு எனக்கு தெரியாது.

போலீஸ்: சரி ஆர்.சி புக் எடு

நான்: அப்டின்னா?

போலீஸ்: இன்சூரன்ஸ்?

நான்: சத்தியமா இல்லை சார்

போலீஸ்: (செம கடுப்பாகி) ஏய் என்ன விளையாடுறியா. எதுவுமே இல்ல என்ன தைரியத்துல வண்டி ஓட்டிகிட்டு வர்ற?

நான்: சார் பகல்ல வர்றதுக்கு என்ன பயம் சார்?

போலீஸ்: டேய் (கடுப்புல மரியாதை குறைஞ்சிடுச்சு) என்ன நக்கலா? எந்த ஊர்டா நீ?

நான்: (நான் வளர்ந்த கிராமத்து பேரை சொன்னேன்)

போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா).

நான்: ஆமா சார்

போலீஸ்: அதான பார்த்தேன். தம்பி இங்கெல்லாம் வண்டி ஒட்டுறதுக்கு லைசென்ஸ் கொடுப்பாங்க. அத வச்சிதான் ஓட்டனும்.

நான்: அது இல்லைனா வண்டி சரியா ஓடாதா சார்?(எனக்கு அப்போ லைசென்ஸ்னா ஏதோ வண்டில மாட்டுற பொருள் அப்டின்னு நினைச்சு கேட்டேன்)

போலீஸ்: இல்லப்பா(அப்டின்னு சொல்லிட்டு லைசென்ஸ், ஆர்.சி. புக் பத்தி அரைமணி நேரம் விளக்கம் கொடுத்தார். உண்மையிலையே நல்ல போலீஸ் அவர்)

நான்: லைசென்ஸ் எங்க சார் போய் எடுக்கணும்?

போலீஸ்: R.T.O ஆபீஸ் போய் எடுத்துடுப்பா.

நான்: சார் அது எங்க இருக்கு. எவ்ளோ செலவாகும். அதுக்கு சொந்த வண்டி வேணுமா?

போலீஸ்: (மனதுக்குள் நாம இவன்கிட்ட காச கறக்கலாம்னு பார்த்தா இவன் நம்மளை மொக்கை போடுறானே)

போலீஸ்: (அதுக்கப்புறம் நான் அவரை விட்டா போதும்னு அவரே எஸ்கேப் ஆயிட்டாரு)

அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட  தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?

வியாழன், ஜூலை 15

சந்தோஷம்

எலெக்சன் வரப் போகுதே. மக்களோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக உளவுத்துறை மக்களை தீவிரமாக கண்காணித்து நம்ம கலைஞர் அய்யாகிட்டா ரிப்போர்ட் கொடுக்க போறாங்க.

உளவுத்துறை: வணக்கம் அய்யா..

கலைஞர்: வணக்கம் என் கழக உளவுத்துறை கண்மணிகளே. உங்களை கண்டதும் என் கண்கள் பணித்தது.இதயம் மகிழ்ந்தது.

உளவுத்துறை: நன்றி அய்யா.

கலைஞர்: சரி இப்ப மக்களோட மனசுல என்ன இருக்கு? மக்கள் சந்தோசமாத்தான் இருக்கிறார்களா?

உளவுத்துறை: ஆமாங்க அய்யா. ரொம்ப சந்தோசமா இருக்காங்க

கலைஞர்: அதுக்கு என்ன காரணம். இலவச டிவியா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: இல்லையா? அப்போ இலவச கேஸ் அடுப்பா?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அதுவும் இல்லையா. ஒரு ரூபாய் அரிசி திட்டம்?

உளவுத்துறை: இல்லை அய்யா.

கலைஞர்: அப்ப கலைஞர் காப்பீட்டு திட்டமா?

உளவுத்துறை: அதுவும் இல்லை அய்யா.

கலைஞர்: என்ன சொல்றீங்க. நம்ம இலவச திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் மக்கள் சந்தோசமா இருக்காங்களா. என்ன அதிசயம். இதுக்கு காரணம் என்னவோ?

உளவுத்துறை: கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் கடந்த பதினோராம் தேதிக்கு அப்புறம் பதிவு எழுதலை. அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம்.
 
கலைஞர்: அப்படியா. அப்டின்னா அவரை பதிவு எழுத விடாமல் செய்து எங்கள் ஆட்சியில்தான் "கோகுலத்தில் சூரியன் வெங்கட்" ப்ளாக் தடை செய்யப்பட்டது அப்டின்னு விளம்பரம் செய்து நாம மக்கள் மனசை கவரலாமா?

உளவுத்துறை: அதிலும் ஒரு சிக்கல் உண்டு அய்யா..

கலைஞர்: என்ன சிக்கல்?

உளவுத்துறை: ஒரே அடியாக தடை செய்து விட்டால் மக்கள் அவரைக் கலாய்க்க முடியாமல் வெக்ஸ் ஆகி மனச்சோர்வுக்கு ஆளாயிடுவாங்க. உலகத்திலேயே எவ்ளோ கலாய்ச்சாலும் தாங்குற ஒரே ஆள் இந்த வெங்கட்தான் அய்யா.
 
கலைஞர்:  அப்படியா. அப்டின்னா என்ன பண்ணலாம்?

உளவுத்துறை: வெங்கட்டை வாரம் ஒரே ஒரு பதிவு போடுமாறு மிரட்டி வைக்கலாம். மக்களை ஒருவாரம் மொக்கைல இருந்து காப்பாத்தின மாதிரியுமாச்சு. ஒரு வாரம் மக்கள் வெங்கட்டை கலாய்ச்ச மாதிரியும் ஆயிடுச்சு.

கலைஞர்: இது நன்றாக இருக்கிறதுடா என் கண்மணி.

உளவுத்துறை:  அப்புறம் கலைஞர் டிவில பதிவர்கள் முன்னிலையில் "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" நடத்தலாம்.

கலைஞர்: ஆஹா அருமை. அப்படின்னா பதிவர்கள் ஓட்டு நமக்குதானே.

உளவுத்துறை: ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை. டேரருக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுத்தா போதும். அந்த ஓட்டும் நமக்குதான்.
 
கலைஞர்: சரி கண்மணி. நீ போய் ராம.நாராயணனை பார்த்து "மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா" ஏற்பாடு பண்ண சொல்லு. நான் வருகிறேன்.

உளவுத்துறை: சரிங்க அய்யா...

புதன், ஜூலை 14

விஜய் ஒரு சகாப்த்தம்

விஜய் இப்ப தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத நபர்(கான்க்ரீட் போட்டிருக்கான்னு எல்லாம் கேக்கப் படாது). தமிழ்நாடே அவரைப் பத்திதான் இப்ப பேசிகிட்டு இருக்கு. முதல் படம் சுமாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவரது திறமையை நிருபித்தவர்.

அப்பா சினிமாவில் இருப்பதால் ஈசியாக சினிமாவுக்கு வந்து விட்டார் என்றாலும் அவரது திறமையால் மட்டுமே அவரால் சினிமாவில் பிரகாசிக்க முடிந்தது. அவரது வெற்றிக்கு காரணம் அவரது விடா முயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

லேட்டஸ்ட்டாக  ரிலீஸ் ஆன இவரது படம் வெற்றிகளையும் வசூல்களையும் வாரிக் குவித்தது என்று சொன்னால் மிகை ஆகாது. லேட்டஸ்ட்டாக வந்த இவரது படம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது முயற்சி.

அந்த படத்திற்கு நிச்சியமாக விருதுகள் கிடைக்கும் என்று மக்களால் பேசப்பட்டாலும் அவரோ ரசிகர்கள் கொடுக்கும் விருதே மிகப் பெரிய விருது என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார். அவரது லேட்டஸ்ட்டாக வந்த படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு மேலும் சில புது பட offerகளை வாங்கி கொடுத்துள்ளது.

இது போன்ற சிறந்த ஒரு அட்டகாசமான படத்தை நமக்கு தந்ததற்காக விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் இது போல அருமையான அட்டகாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம்.(த்ரிஷாவால உங்களுக்கும் அஜித்துக்கும் பிரச்சனைன்னு கேள்விப் பட்டேன் உண்மையா விஜய்?)
.
.
.
.
.
.
.
.

டைரக்டர் விஜய் சார் உங்க மதராசப்பட்டினம் படத்தோட ஹீரோயின் அட்ரஸ் கிடைக்குமா. ஹிஹி எனக்கில்லை சார். நம்ம பய ஜில்தண்ணிக்குதான். பாவம் பக்கம் பக்கமா எமியப் பத்தி கவிதை எழுதுறான். அவனுக்காகவாவது கொடுங்களேன். (நீங்க வேற ஏதாவது விஜய்யை நினைச்சுக்கிட்டு வந்தா நானா பொறுப்பு. போங்க பாஸ்)

செவ்வாய், ஜூலை 13

மூர்த்தி தியேட்டர்

ஒவ்வொருத்தருக்கும் அவங்க லைப்ல ஏதாச்சும் ஒரு தியேட்டர் மறக்க முடியாம இருக்கும். எனக்கும் எங்க ஊர்ல உள்ள மூர்த்தி தியேட்டர் வாழ்க்கைல மறக்க முடியாது. நான் படிச்சது  வளர்ந்தது எல்லாம் கிராமத்துலதான். ஏதாச்சும் லீவ் அப்டின்னா ஊர்ல இருக்குற சித்தி வீட்டுக்கு அம்மா கூட்டிட்டு போவாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்சு மூர்த்தி தியேட்டர் போய் பார்த்த படம் "அம்மன் கோவில் கிழக்காலே". அப்புறம் கொஞ்சம் விவரமான பிறகு லீவ்க்கு ஊருக்கு போகும்போது நிறைய படங்கள் வீட்டுக்கு தெரியாம நானும் என் தம்பி கார்த்தியும்(சித்தி பையன்) பாத்திருக்கோம்.

எல்லோரும் வீட்டுக்குள்ள தூங்கிடுவாங்க. நானும் என் தம்பி கார்த்தியும் வரண்டாவுலதான் தூங்குவோம். எங்க ரெண்டு பேருக்கும் பெரிய நட்பையும் பாசத்தையும் உண்டு பண்ணினது இந்த மூர்த்தி தியேட்டர்தான்.

கதவை வெளில பூட்டி சாவிய நாங்கதான் வச்சிருப்போம். மழை  ஏதாச்சும் பெய்ஞ்சா உள்ள ஓடி வர்றதுக்காக. எல்லோரும் தூங்கினதுக்கு அப்புறம் நானும் என் தம்பியும் செகண்ட் ஷோ க்கு மூர்த்தி தியேட்டர் போயிடுவோம். அப்ப ரெண்டு ரூபாதான் டிக்கெட்.

பதினோரு மணிக்குதான் படம் ஆரமிக்கும். செகண்ட் ரிலீஸ் படம்தான் அங்க ஓடும். ரெண்டு நாளைக்கு ஒரு படம் மாத்திடுவாங்க. அதனால காலாண்டு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு லீவ்ல அங்க இருக்கும்போது ரெண்டு நாளைக்கு ஒருதடவ படத்துக்கு போயிடுவோம்.

இதுவரைக்கும் ஒருதடவ கூட வீட்ல மாட்டினதில்ல. என் தம்பி கார்த்தி என்னை விட ஆறு மாதம்தான் சின்னவன். நல்ல நண்பன். அம்மா அப்பா துணை இல்லாம நானும் என் தம்பியும் தனியா போய் பார்த்த முதல் படம் "தர்ம சீலன்". நான் சினிமா புதிர்ல போடுற நிறைய படங்கள் இந்த மூர்த்தி தியேட்டர்ல பார்த்ததுதான்.

9 standard-க்கு அப்புறம் நான் அம்மா அப்பா கூட எந்த படத்துக்கும் போனதில்லை. பேமிலியோட படம் பார்த்ததுன்னா இந்த மூர்த்தி தியேட்டர்லதான். அதனால இது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா என் வருமானத்துக்கேற்ற தரமான தியேட்டர் மூர்த்தி தியேட்டர். இப்ப அங்க டிக்கெட் 15 ரூபாய் அப்டின்னு நினைக்கிறேன்.

வெள்ளி சனி ஞாயிறு மாலை காட்சியில் எந்த படம் போட்டாலும் House full. எங்க ஊர்ல தீப்பட்டி பெட்டி ஓட்டுற தொழில் பேமஸ்.இந்த மூணு நாளும் அந்த வேலை பாக்குறவுங்க வார சம்பளம் வாங்கிட்டு அங்க படம் பாக்க வந்துடுவாங்க. தியேட்டர்ல படம் பாத்துகிட்டே தீப்பெட்டி பெட்டி ஒட்டிடுவாங்க.

நான் என் தம்பி கார்த்தியோட கடைசியா பார்த்த படம் "திருப்பாச்சி". அதுவும் இதே மூர்த்தி தியேட்டர்லதான். மூர்த்தி தியேட்டர்ல தொடங்கின எங்க பாசம் அதே மூர்த்தி தியேட்டர்ல முடிஞ்சிடுச்சு.

இந்த பதிவை படிக்கிறதுக்கு அவன் இல்லை. ஒரு சின்ன விபத்தில் எமன் அவனை அழைத்துகொண்டான். அடுத்த மாதம் அவனோட நாலாவது ஆண்டு நினைவஞ்சலி. இந்த பதிவு அவனுக்கு சமர்ப்பணம்.

ஞாயிறு, ஜூலை 11

நான் டமிழன்

நான் காலேஜ் படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தத புதுசுல அவ்ளவா இங்கிலீஷ் வராது(இப்ப மட்டும் என்ன வாழுதாம்). எங்க ஊருல எல்லாம் காலேஜ், ஸ்கூல் எல்லாம் இங்கிலீஷ் மீடியமா இருந்தாலும் டீச்சர்ஸ் தமிழ்லதான் கிளாஸ் எடுப்பாங்க. பாவம் அவங்க மட்டும் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாங்க.

சென்னை வந்தாச்சு. வேலை வேற தேடனும். நமக்குதான் யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காதே. அதனால interview எதுக்கும் போகாம வீட்டுல காச வாங்கி கொஞ்ச நாளு செலவளிசிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் அரசமரத்தடில(நம்ம ஜெய் எழுதின அரசமரம் இல்ல) ஞானம் வந்து சரி interview போகலாம்னு முடிவு பண்ணினேன்(அப்பாட இப்பவாச்சும் புத்தி வந்ததே).

Interview-க்கு கிளம்பி போயாச்சு.  நான் என்னவோ பெரிய புத்திசாலி மாதிரி என்னை கேள்வி கேக்க மூணு பேரு. க்கும், ஒரு ஆளு கேள்வி கேட்டாலே பதில் தெரியாது. மூணு பேரா. விடு விடு சமாளிப்போம்.

Interviwer1: Tell me about yourself?
நான்: (என்னடா இந்த ஆளு நம்மளோட அலமாரிய பத்தி கேக்குறாரு) கேனத்தனமா ஒரு சிரிப்பு(எனக்கு இதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சாத்தான)
Interviwer2: Do you have any knowledge in VB?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer3: VB is a language or package?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer1: Have you completed any project in VB with Oracle?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer1:(தமிழில்) எதுக்காவது பதில் சொல்லுப்பா. சும்மா இருந்தா என்ன அர்த்தம். சரி விடு. நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. வந்ததுக்கு அதாவது பண்ணிட்டு போ.
நான்:(சத்திய சோதனை)

பின்ன என்ன திட்டாத குறையா அனுப்பிட்டாங்க. சரி பக்கத்துல ஏதாவது Hotel-க்கு போய் சாப்பிட்டு போவோம்ன்னு Hotel-குள்ள போனேன். சாப்பாடு சாப்பிட்டுட்டு ஏதாவது ஜூஸ் சாப்பிடலாமேன்னு மெனு கார்டு பார்த்தேன். Apple,Orange எல்லாம் குடிச்சு குடிச்சு சலிச்சு போச்சு. புதுசா ஏதாச்சும் சாப்பிடலாம்னு பாத்தா Butter Milk அப்படின்னு இருந்தது. சரி புதுசா இருக்கேன்னு ஆர்டர் பண்ணினேன்.

அடப்பாவிகளா Butter Milk அப்படின்னா நான் தினமும் ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வாங்கி குடிக்கிற மோர் தானா? அத நான் இங்க 12 ரூபாய் கொடுத்து குடிச்சேன். மறுபடியும் சத்திய சோதனை.

வியாழன், ஜூலை 8

முற்பகல் செய்யின்


நான் காலேஜ்-இல் மூணாவது வருடம் படிக்கும்போது காலேஜ்-இல் ஸ்ட்ரைக் நடந்தது. எங்க காலேஜ் NH-7 இல் இருப்பதால் எல்லோரும் சேர்ந்தது ரோட்டில் உற்கார்ந்து பஸ் மறியல் செய்ய ஆரமித்துவிட்டோம். நம்ம நண்பர் ஒருத்தர்தான் தலைமை. யாரையும் காலேஜுக்குள்ள விடல. வர்றவனை எல்லாம் வழி மறிச்சு ரோட்டுல உக்கார வச்சிட்டான்.

அப்ப பக்கத்து ஊர்ல இருந்து ஒரு போலீஸ் ஜீப் வந்தது. ஏன்டா காலேஜ் பிரச்னைக்கு ரோட்ட மறிச்சு பப்ளிக்க டார்ச்சேர் பண்ணுவீங்களா அப்படின்னு  சொல்லிட்டு லத்திய சுழட்டி அடிக்க தலைமை தாங்கின நண்பன் அத்தனை கூட்டத்தையும் தாண்டி முத ஆளா ஓட ஆரமிச்சிட்டான். அப்ப ஏதோ ஒரு குரூப் சராமாரியா போலீஸ் ஜீப்ல கல்லை விட்டு ஏறிய போலீஸ் ஜீப் ரிவேர்ஸ் எடுத்து ஊருக்குள்ள போயிடுச்சு.

மறுபடியும் அதே நண்பன் தலைமையில் ரோட்டில் உக்கார்ந்தோம்(தில்லு ஜாஸ்திதான்). இந்த போலீஸ் போய் Police-Force அனுப்பி வச்சிருக்காங்க. ஒரு அம்பது போலீஸ் பெரிய போலீஸ் வேனோட விஜயகாந்த் படத்துல வர்ற மாதிரி ஒரு கைல லத்தியும் ஒரு கைல கல்லை தடுக்க தடுப்பும் கொண்டுட்டு வந்தது வேனை நிப்பாட்டினதும் பசங்களை அடிக்க ஆரமிச்சிட்டாங்க. எல்லோரும் தலை தெறிக்க ஓட ஆரமிச்சோம்.

அப்ப ஒரு நண்பன் டேய் போலீஸ் வர்ற வேகத்தைப் பார்த்தா சங்கு ஊதாம விடமாட்டாங்க. நிறைய படத்துல பாத்துருக்கேன். காலேஜுக்குள்ள போலீஸ் வரமாட்டாங்க. நாம காலேஜுக்குள்ள போயிடுவோம். (பயபுள்ள என்னை விட அதிகமா  தமிழ் சினிமா பாத்துருக்கும் போல. எனக்கே ஐடியா வரல. அடுத்த சினிமா புதிர்ல இத கேள்வியா போட்டுட வேண்டியதுதான்). அவனவன் மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனா இவன் போலிசுக்கு பயந்து காலேஜுக்குள்ள போக சொல்றான். இப்படி நாம டெய்லி காலேஜ் போயிருந்தா நாம எப்பவோ முன்னேறி இருக்கலாமே!!!.

சரின்னு காலேஜுக்குள்ள போயிட்டோம். நான் அவன்கிட்ட மாப்ளே இந்த இடத்த  எங்கயோ பாத்திருக்கமே அப்டின்னு சொல்ல அட பரதேசி  இதுதாண்டா நம்ம கிளாஸ் ரூம் அப்டின்னு சொன்னான்(நாங்கெல்லாம் 90 நாள் working days-க்கு 95 நாள் லீவ் எடுக்குறவங்கலாச்சே).  அங்க பிரச்சனை பயங்கரமா போயிகிட்டு இருக்கு. போலீஸ் மாட்டினவன்கள எல்லாம் தொவைச்சு எடுத்துகிட்டு இருக்காங்க. நின்னுகிட்டு இருந்த ஒரு போலீஸ் ஜீப்பை பசங்க பாலத்துல இருந்து உருட்டி கீழ தள்ளி விட்டுடாங்க. போலிசுக்கு இன்னும் கோவம் அதிகமாயிடுச்சு(பின்ன கொஞ்சுறதுக்கு அவங்க என்ன சிரிப்பு போலீஸ் மாதிரி அன்பான,அழகான, பண்பான குணமுள்ள ஆளுங்களா?)

அப்ப எங்க கேண்டீன்ல இருந்து ஒரு வேன் ஊருக்குள்ள கிளம்பிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தது. கேட்டை தாண்டி போன ஜீப்பை எங்க நண்பன் அருண் கூப்பிட்டு என்னை ஏன் விட்டுட்டு போறீங்க. நானும் வர்றேன் அப்படின்னு சொல்லி அந்த ஜீப்பை ரிவர்ஸ் வர வச்சு அதுல ஏறிட்டான். இந்த அருண்தான் பஸ்-ல கல்லைவிட்டு எரிஞ்சு எங்களுக்கு தர்ம அடி வாங்க கொடுத்தவன். மேலும் விவரங்களுக்கு இங்க கிளிக்கவும்.

வேன் காலேஜை விட்டு வெளிய வந்ததும் போலீஸ்காரங்க வேனை மறிச்சு அதில இருந்த எல்லோரையும் பின்னி எடுத்துட்டாங்க. சும்மா எங்க கூட இருந்த அருண் வம்பா அந்த வேன்ல ஏறி போய் போலீஸ்காரங்ககிட்ட தர்ம அடி வாங்கினான். ஸ்டேஷன்-ல வேற கொண்டு போய் ஊறவச்சு அடிச்சாங்க. அவனால நாங்க ஏற்கனவே பப்ளிக்ல அடி வாங்கினோம். இப்ப அவன் போலீஸ் கிட்ட...

முற்பகல் செய்யின்............

புதன், ஜூலை 7

சினிமா புதிர்கள் - 11

ரொம்ப நாளா இல்லாம இருந்த சினிமா புதிர்கள் மீண்டும் புது பொலிவுடன்(வெங்கட்டுக்கும், சித்ராவுக்கும் மிகவும் பிடித்த)

1 ) ரஜினிகாந்த்,நளினி நடித்த படம்
2 ) சரத்குமார் நடித்த சகோதரி சம்மந்தமான பெயர் கொண்ட படம்.
3 ) சரத்குமார்,மீனா நடித்த படம். ஜோடியாக இல்லை(பாறை இல்லை)
4 ) விஜயகாந்த், ரகுமான் நடித்த படம்.
5 ) விஜயுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த படம்(ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டர் அல்ல).
6 ) அர்ஜுன் கௌதமி வித்யாசாகர் இசையில்
7 ) பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த்(சேதுபதி IPS இல்லை)
8 ) சத்தியராஜ் படத்தில் டி.எம்.எஸ் பாடல்
9 ) ராதிகா, நிழல்கள் ரவி கலைஞர் வசனத்தில்
10 ) மோகன் சீதா நடித்த படம்,
11 ) பிரபு,மோகன்,அம்பிகா நடித்த படம்.
12 ) சரத்குமாருக்கும், மம்மூட்டிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
13 ) சிவாஜி,சுரேஷ்,ராதா நடித்த படம்.
14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
15 ) கார்த்திக்,சித்தாரா நடித்த படம்.

செவ்வாய், ஜூலை 6

மன்னிக்கணும்

மன்னிச்சிக்கோங்க. பௌர்ணமி பதிவு ரொம்ப மொக்கை ஆயிடுச்சு. போன்-ல நண்பர்கள் எல்லாம் மிரட்ட ஆரமிச்சிட்டாங்க. அதான் அந்த பதிவ எடுத்துட்டேன். அடுத்த பதிவை அப்புறமா போடுறேன். ஓட்டு மற்றும் கமென்ட் போட்ட நண்பர்களுக்கு நன்றி.

திங்கள், ஜூலை 5

மெகா ரசிகன்

நீங்க ஒரு நடிகருக்கு ரசிகனா இருந்தா என்ன பண்ணுவீங்க. முதல் நாள் முதல் ஷோ போவீங்க. கட்அவுட் வைப்பீங்க. தியேட்டர்ல தோரணம் கட்டுவீங்க. பாலாபிஷேம் பண்ணுவீங்க. பீர் அபிஷேகம் பண்ணுவீங்க. அவ்வளவுதான. ஒவ்வொரு படம் பாக்கும்போதும் தர்ம அடியோ திட்டோ வாங்குவீங்களா?.

கட்அவுட் வைக்கிறவன் ரசிகன். தர்ம அடி வாங்கிறவன் மெகா ரசிகன். நான் மெகா ரசிகன். நான் ஒவ்வொரு சரத்குமார் படம் பார்க்கும்போது யாரிடமாவது அடியோ திட்டோ வாங்கி இருக்கிறேன். அதனாலையோ என்னவோ கல்லூரி நாட்களில் அவருடைய மெகா ரசிகனாக இருந்தேன்.

முதல் அடி:(இதை மட்டும் ஏற்கனவே என்னுடைய ப்ளொக்கில் எழுதி இருக்கிறேன்)
9 படிக்கும் போது ஹாஸ்டல்ல +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நாள் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி அவங்க கூட படத்துக்கு போய்ட்டோம். "நாட்டாமை" படம் அது.

நம்ம கெட்ட நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிட்சைல பெயில். அந்த கிறுக்கு பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான்னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமையா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. (உக்கார்ற எடத்துல கட்டி ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)

ரெண்டாவது அடி:

நான் கல்லூரி முதல் வருடம் சேரும்போதுதான் "சூர்ய வம்சம்" படம் ரிலீஸ் ஆனது. அப்ப எங்க காலேஜ் லேப்-ல 12 கம்ப்யூட்டர் தான் உண்டு. தினமும் மதியம் ரெண்டு மணிநேரம்  லேப் தான். நாங்க 23 பேர். இதுல நம்ம சாத்தூர் மாக்கனும் உண்டு. முதல் ஒருமணிநேரம் 12 பேரும் அடுத்த ஒருமணிநேரம் மீதி இருக்குற 11 பேரும் லேப்-ல இருக்கணும். ஆனா முதல்லையே attendance எடுத்துடுவாங்க.

நானும் இன்னொரு நண்பனும் attendance எடுத்து முடிஞ்சதும் கிளம்பி "சூர்ய வம்சம்" படத்துக்கு போயிடுவோம். தொடர்ந்து 25 நாள் மேட்னி ஷோ இந்த படம்தான். 26 வது நாள் படத்துக்கு கிளம்பும்போது H.O.D எங்கள பஸ் ஸ்டாப் ல பார்த்து மாட்டிகிட்டு செம ரைட். ரெண்டு நாள் கிலாசுக்குல்லையே விடல. வீட்ல இருந்து அப்பாவை கூட்டிட்டு வர சொல்லிட்டாரு.

மூணாவது அடி:

"நட்புக்காக" ரிலீஸ். முதல்நாள் முதல் ஷோ. படத்துக்கு போயிட்டேன். என் அம்மா ஒரு கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க. அடுத்த பஸ் 2 மணிக்கு. அதனால அவங்களும் படத்துக்கு வந்திருக்காங்க. எனக்கு செலவுக்கு காசு கொடுக்குற அவங்க பென்ச் டிக்கெட். நானோ பால்கனி டிக்கெட். இடைவேளைல பாத்துட்டாங்க. அப்புறம் என்ன வீட்டுல குமுற குமுற அடிதான்(காலேஜ் கட் அடிச்சதுக்கு).

நாலாவது அடி:

அப்ப செல்போன் வசதி கிடையாது. Landline அவ்ளவா இல்லை. எக்ஸாம் டைம் அது. நான் வீட்டுல group-study, நண்பன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு "சின்னதுரை" படத்துக்கு போனேன். கரெக்டா 2 மணிக்கு போனா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு 11 மணிக்கு கிளம்பி வேற ஒரு இடத்துல உக்கார்ந்துட்டு 2 மணிக்கு தியேட்டருக்கு போறேன். தியேட்டருக்கு எதித்தாப்ல ஒரு ஜோசியர் கடை உண்டு. எங்க அப்பா ஒரு ஜாதகம் பாக்க அங்க வர என்னை தியேட்டர்க்குள்ள பார்க்க. அடுத்து நடந்தத சொல்லனுமா என்ன.

ஐந்தாவது அடி:

எங்க ஊர்ல "பாறை" படம் ரிலீஸ் ஆகலை. சரின்னு கிளம்பி விருதுநகர் போய் பாக்கலாம்னு அங்க போயிட்டேன். அந்த தியேட்டர் கரெக்டா Busstand-க்கு எதுத்தாப்புல. மதுரைல இருந்து எங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தவர் நான் தியேட்டர்குள்ள நுழையுறத பாத்திருக்கார். நான் படம் முடிஞ்சு வர்றதுக்குள்ள நியூஸ்  வீட்டுக்கு வந்திடுச்சு. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்.

அப்புறம் மூவேந்தர், ஒருவன்,ரிஷி, பெண்ணின் மனதை தொட்டு படம் எல்லாம் பாக்கும்போது யார் மூலமாவது வீட்டுக்கு நியூஸ் வந்து நமக்கு திட்டுதான். அப்புறம் ஒரு வழியா அப்பா அடிக்கிறத நிப்பாட்டிட்டார்.

தலைமகன் படம் பாக்கும்போது தியேட்டர்ல எதோ பிரச்சனை சண்டை. நானும் பயந்துட்டேன். செண்டிமெண்ட் படி முத அடி நமக்கு விழுமோன்னு. பட் மீ தி எஸ்கேப். அப்பாட சரத்குமார் படம் பார்த்து அடி வாங்காம தப்பிச்சிட்டேன்.


வீட்டுக்கு தெரிஞ்சு அனுமதியோட பார்த்த ஒரே சரத்குமார் படம் "ஜானகி ராமன்" மட்டும்தான்.

இப்ப சொல்லுங்க நான் ரசிகனா மெகா ரசிகனா?

ஞாயிறு, ஜூலை 4

பூக்காரி-குறும்படம்

இது என் தங்கை தனது காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக இயக்கிய குறும்படம். அதில் நடித்தது என் இன்னொரு தங்கை.

ஒரு பூக்காரியின் மனதை சொல்லும் அழகிய குறும்படம் இது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். 


சனி, ஜூலை 3

மின்சாரக் கனவு

Never Drink while Driving - ஏன்னா வண்டி ஓட்டும்போது குடிச்சா பீர் கீழ சிந்தி வேஸ்ட் ஆயிடுமே....
=====================================
சில முதலாளிங்க மேகம் மாதிரி. திடீர்ன்னு காணாம போயிடுவாங்க. திடீர்ன்னு வந்து இம்சை பண்ணுவாங்க.
=====================================
தப்பு செய்வது மனித இயல்பு. நம்ம தப்பை அடுத்தவங்க மேல போடுறது போரை விட பெரிய விஷயம்.
=====================================
ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.
=====================================
ஒரு பெண் ஒரு ஆணை அவன் ஒருநாளாவது மாறுவான் என எண்ணி திருமணம் செய்கிறாள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவள் மாறமாட்டாள் என்று எண்ணி திருமணம் செய்கிறான். இரண்டுமே நடப்பதில்லை.
=====================================
உங்கள் வாழ்க்கையே உங்கள் கனவுகளில்தான் இருக்கிறது. நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போய் தூங்குங்க.
=====================================
ஒரு சின்ன பையன் மிஸ் கிட்ட: மிஸ் என்னை உங்களுக்கு பிடிக்குமா?
மிஸ்: எஸ் டியர். நீ என் செல்லம்
பையன்: அப்ப எங்க அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு வர சொல்லவா?
மிஸ்: எதுக்கு?
பையன்: நம்ம விசயமா பேசத்தான்..
மிஸ்: (கோவமா) என்ன சொல்ற?
பையன்: ஹேய் என்னோட ட்யுஷன் விசயமாத்தான். நமக்கு படிப்புதான் முக்கியம்...
மிஸ்: ???????????????
=====================================
காந்தி சின்ன விளக்கு வச்சித்தான் படிச்சார்..
கிரகாம் பெல் மெழுகுவர்த்தி வச்சித்தான் படிச்சார்..
ஷேக்ஸ்பியர் தெருவிளக்குலதான் படிச்சார்...

ஒண்ணு மட்டும் புரியல. இவங்க "பகல்ல எல்லாம் என்ன பண்ணினாங்க"?
=====================================
பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணினா எல்லோறோரும் வண்டிய நிப்பாட்டிட்டு "பாத்து போம்மா" அப்டின்னு சொல்லுவாங்க. அதே நேரம் பையன் கிராஸ் பண்ணினா "சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" அப்டிம்பாங்க. என்ன உலகமடா இது..
=====================================
அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
=====================================

வியாழன், ஜூலை 1

நானொரு தெருவிளக்கு

//தொடர் பதிவுக்கு அழைத்த வசந்துக்கு நன்றி//

ஆண்டவன் புண்ணியத்தால இந்த தெருவிளக்கா மாறியாச்சு. அதுவும் இந்த ECR ரோட்டுல இருக்குறதுனால இந்த லவ் பண்ணுற பயபுள்ளைக அடிக்கிற தொல்லை தாங்க முடியல. இதுக்கிடையில அப்பப்ப நாயி வந்து உச்சா போய் நம்மள நாறடிச்சிடுது. கப்பு வேற தாங்க முடியல. நாயிக்கு வேற இடம் கிடைக்கலையா!!! ஒரு வேளை நம்மள நாறடிக்குரதுக்காக  வசந்த் அனுப்பின நாயா இருக்குமோ?

நானும் பாக்கறேன் ஒரு பய பைக்குல தனியா போக மாட்டேன்றான். இதுக்கு பேரு ECR ரோடா இல்லை கப்புள்ஸ் ரோடா? சரி வேலைக்கு போறவங்கதான் இப்படின்னா இந்த காலேஜ் படிக்கிற புள்ளைங்க இவங்களுக்கு மேல இருக்காங்க. அதுவும் அவங்க என் மேல சாய்ஞ்சுகிட்டு விடுற டயலாக் இருக்கே யப்பா நம்ம தமிழ் சினிமா தோத்துடும். தமிழ் சினிமா இயக்குனர்களே இனிமே டயலாக் வேணும்னா கொஞ்ச நேரம் எனக்கு பக்கத்துல நின்னு பாருங்க. நூறு படத்துக்கு தேவையான டயலாக் கிடைக்கும்.

அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.

சரி நம்மளும் ECR ரோட்டுலதான இருக்கோம்.நாமளும் எப்படியாவது பிரபலமா ஆயிடனும். நாம மனுசனா இருந்தா என்ன தெருவிளக்கா  இருந்தா என்ன. நமக்கு தேவை விளம்பரம். (தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க.)

நாம பிரபலம் ஆகுறதுக்கு நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நம்மள பத்தி எழுத சொல்லலாமே. முதல்ல நம்ம செந்தில் அண்ணன் கிட்ட போவோம்.

தெருவிளக்கு(நான்): செந்தில் அண்ணே எப்ப பாத்தாலும் லிங்கன் தெருவிளக்குல படிச்சுதான் பெரிய ஆள் ஆனாருன்னு பழைய பல்லவியே பாடுறாங்க. புதுசா ஏதாவது பண்ணி என்ன பிரபலம் ஆக்குங்க.
கே.ஆர்.பி: என்கிட்டே மூணு வழிகள் இருக்கு. நான் பயோடேட்டா எழுதினா நீ பிரபலம் ஆயிடுவ. அப்புறம் கவிதை. அப்புறம் தெருவிளக்கு 18+ அப்படின்னு ஒரு வீடியோ போடணும்.
தெருவிளக்கு(நான்): ஓகே
கே.ஆர்.பி: முதல்ல பயோடேட்டா

//பெயர் : தெருவிளக்கு
இயற்பெயர் : அது சொன்னாதான் கரண்ட் பில் கட்டுவீங்களா?
நண்பர்கள்: ஆற்காடு மட்டுமே.
காணமல் போனவை : மாட்டி இருந்த பல்புகள்//

தெருவிளக்கு: வேற வேற
கே.ஆர்.பி: நீயே ஒரு தெருவிளக்கு குடும்பத்து குலவிளக்குன்னு ஒரு கவிதை போட்டுடலாம்.
தெருவிளக்கு: அப்புறம்
கே.ஆர்.பி: அப்புறம் உன்னை பத்தின நிர்வாண உண்மைகள் 18+ ன்னு ஒரு வீடியோ போட்டுடலாம்.
தெருவிளக்கு: இவரு நம்மகிட்ட இருக்குற எல்லாத்தையும் உருவிட்டு விட்டுருவாரு. ஜூட்.

அடுத்து நாம கேபிள் அண்ணனை பாப்போம்.

தெருவிளக்கு: வணக்கம் அண்ணே. நான் பேமஸ் ஆகணும் என்ன பண்ணலாம்
கேபிள்: அது ரொம்ப சின்ன விஷயம். தெருவிளக்குக்கு கீழ கொஞ்சம் இடம் ரெடி பண்ணி ஒரு சாப்பாட்டுக்கடை ஆரமிச்சு கொத்து புரோட்டா போடலாம். கூட்டம் பிச்சிக்கிட்டு வரும். அப்படியே நீயும் பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா நம்ம செலவுல இவரு சொந்தமா ஹோட்டல் ஆரமிச்சிடுவாரு போல. ) அண்ணா வேற ஏதாவது?
கேபிள்: தெருவிளக்கும் ரெண்டு இரண்டு ஷாட் பவர் கட்டும்னு ஒரு புத்தகம் வெளியிடலாம்.
தெருவிளக்கு: ஆகா நான் இந்த விளையாட்டுக்கு வரல. விடு ஜூட்.

அடுத்து யாருப்பா அது. அட கோகுலத்தில் சூரியன் வெங்கட். வாங்க வெங்கட் சவுக்கியமா?

வெங்கட்: சவுக்கியம்.
தெருவிளக்கு: ஆமா இந்த உச்சி வெயில்ல ஏன் டார்ச் கொண்டு வர்றீங்க.
வெங்கட்: நாங்கெல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகலாச்சே. அதான்.
தெருவிளக்கு: ஷ். இப்பவே கண்ணைக் கட்டுதே. நைட்ல தான் சூரியன்ல வெளிச்சம் இருக்காது. அப்பவேனா ட்ரை பண்ணுங்க. இப்ப நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு  ஐடியா கொடுங்க.
வெங்கட்: நீங்க ஆணாதிக்கவாதியா இல்ல பெண்ணாதிக்கவாதியா?
தெருவிளக்கு: எனக்கு ஒரு வியாதியும் இல்லியே.
வெங்கட்: ஐயோ நான் அத சொல்லல. நீங்க ஆம்பளைங்களுக்கு சப்போர்ட்டா இல்லா பொம்பளைங்களுக்கு சப்போர்ட்டா?
தெருவிளக்கு: நான் பேமஸ் ஆக ஐடியா கேட்டா நீங்க உங்க VKS-ச உடைக்குறதுக்கு ஆள் சேக்குறீங்களா?
வெங்கட்: அப்படின்னா நீங்க ஹாய் வெங்கட் பகுதிக்கு ஒரு கேள்வி கேட்டு அனுப்புங்க. நான் பதில் சொல்றேன். அப்புறம் இன்று ஒரு தகவல்ல தெருவிளக்கு ஒளி தரும் ஆனா ஒளி தர்ரதெல்லாம் தெருவிளக்கு ஆகாதுன்னு ஒரு பஞ்ச் வைக்கலாம். உடனே நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: பஞ்ச் டயலாக் வேணும்னா நான் பேரரசுகிட்டையே போயிடுவனே. விடு ஜூட்.

யாரு அங்க வர்றது. நம்ம பட்டாபட்டியா. வாங்க பட்டா. நான் பிரபலம் ஆகறதுக்கு ஒரு வழி சொல்லுங்க.

பட்டா: உங்களை(தெருவிளக்கு) காணோம். உங்களோட விலை 15,000 அப்டின்னு சொல்லி ஒரு விளம்பரம் கொடுப்போம். அப்புறம் போலீஸ் சீக்கிரம் கண்டு பிடிச்சிடுசுன்னு சொல்லி ஒரு பஞ்ச் வைப்போம். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தெருவிளக்க தொலைச்சது ராகுல் காந்திதான். அதான் போலீஸ் சீக்கிரம் கண்டுபிடிச்சிடுசுன்னு சொல்லுவோம். ராகுல்காந்தி தொலைச்ச போஸ்டுன்னு பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா இந்த ஆளு நம்மள களி தின்னவிடாம போகமாட்டாரு போல. விடு ஜூட்)

யாருப்பா அது நாம்ம பன்னிக்குட்டி ராம்சாமி மாதிரி இருக்கு. பன்னிக்குட்டி ராம்சாமி நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு ஐடியா கொடுங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி: தெருவிளக்குன்னு ஒரு தலைப்ப மட்டும் நான் என்னோட ப்ளாக்குல போடுறேன். விசயமே இல்லைனாலும் நம்ம பசங்க மங்குனி,பட்டா, மோகன், jey , முத்து,சிரிப்பு போலீஸ் 200 கமெண்டாவது போடுவாங்க. தெருவிளக்கு அப்டிங்கிற பேருக்கு 200 கமெண்டா அப்டின்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நீ பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: அவ்வ. என்னை வச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே.

அடுத்து யாரு நம்ம ஆபிசெர் jey-யா. வாங்க jey. நீங்களாவது ஒரு நல்ல ஐடியா கொடுங்க.

Jey: நீங்க உங்க நண்பர்களை எல்லாம் உங்களுக்கு Follower-ரா மாறச்சொல்லி டார்ச்சர்  கொடுங்க. முடியாதுன்னு சொன்னா குவாட்டரும், பிரியாணியும் வாங்கிகொடுத்து Follower-ரா மாறச்சொல்லுங்கள். யாருமே இல்லாத டீக்கடையில இவ்ளோ கூட்டமான்னு மக்கள் ஆச்சரியப்பட்டு நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.

தெருவிளக்கு: விடு ஜூட்.

அடுத்து யாரு. அட நம்ம தலைவி அனு. வாங்க வாங்க. நீங்களாவது நல்ல ஐடியா கொடுங்க மேடம்.

அனு: எங்கயாவது கூட்டத்துல யாராவது யாரையாவது திட்டினா, கலாய்ச்சா நீங்களும் சென்றது திட்டி கலாய்ங்க. அப்புறம் உங்களை தலைவன் தலைவன் அப்டின்னு உசுபேத்தி விடுவாங்க. நீங்களும் அப்படியே மெயின்டைன் பண்ணி கெத்தா இருங்க. அப்புறம் நீங்கதான் தலை. சீக்கிரம் பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: வேணாம் நான் அழுதுடுவேன். நான் கிளம்புறேன்.

அடுத்து யாருப்பா அது. இந்த ஆளாவது நல்ல ஐடியா கொடுக்குராரன்னு பாப்போம். அட இது நம்ம பிரியமுடன் வசந்த். வாங்க வசந்த் நீங்கதான் வித்தியாசமா யோசிக்கிரவராச்சே. எதாச்சும் ஐடியா கொடுங்க.

வசந்த்: ஏன் தெருவிளக்குல லைட்டும் கரண்ட்டு கம்பியும் மேலதான் போகனுமா. அப்படியே தெருவிளக்க பிடிங்கி தலைகீழா நட்டு வச்சா வித்தியாசமா இருக்கும். வித்தியாசமான தெருவிளக்குன்னு சொல்லி பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: வித்தியாசமா சிந்திக்கிறேன்னு தலைகீழா என்னை வச்சு எவனாவது கரண்டு கம்பிய மிதிச்சு  என்னை கொலை கேசுல உள்ள தள்ளிடுவ போல. எனக்கு இந்த விளையாட்டே வேணாம். நான் பேசாம மறுபடியும் பேசுற மனுசனாவே ஆயிடுறேன். என்னை ஆளை விடுங்க ஜூட்.

பின் குறிப்பு: நான் எல்லோரையும் கலாய்த்ததாக பீல் பண்ணி என்னை திட்டவோ அல்லது அடிக்கவோ நினைப்பவர்கள் என்னை பெருந்தன்மையாய் மன்னித்து நம்ம வசந்த் மாப்ளையை கும்மவும். ஏனென்றால் குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டியவனுக்குதான் தண்டனை அதிகம்ன்னு ஒளவையாரே ராமாயணத்துல சொல்லிருக்கார்.

நம்ம கிட்ட தொடர் பதிவுக்கு மாட்டிகிட்டவங்க:

1 ) சாத்தூர் மாக்கான் ராமசாமி: உங்களுக்கு ஒரு கால இயந்திரம் கிடைக்குது. அதுல ஏறி நீங்க பிறக்குறதுக்கு முன்னால எதோ ஒரு வருசத்துக்கு போகணும். எந்த வருசத்துக்கு போவீங்க. என்ன பண்ணுவீங்க. உங்களுக்கான தலைப்பு "கால இயந்திரம்" .

2 ) சூரியனின் வலைவாசல் அருண் பிரசாத்: நீங்க ஒரு வெளிநாட்டுக்காரர். நீங்க சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றீங்க. உங்க பார்வைல இந்தியா எப்படி இருக்கும். அதுதான் உங்கள் பதிவுக்கான கரு. உங்களுக்கான தலைப்பு "நான் இந்தியன் அல்ல".

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது