Horoscope

வெள்ளி, ஏப்ரல் 30

பதிவர்களின் டைரி - 3

11 ) நீச்சல்காரன்(http://neechalkaran.blogspot.com)

ஏதேனும் புதியதாக எழுதப்பிடிக்கும்,புதிய முயற்சிகள் வடிக்கப்பிடிக்கும். எழுத்துலக கடலில் நீந்தப்பழகும் சிறு நீச்சல்காரன். இவர் காமெடி குசும்பர். கவிதை குண்டர். இவரது பதிவுகளில் நகைச்சுவை கட்டுரைகள் அதிகம். அதோடு அருமையான கவிதை தொகுப்புகளும் அதிகம். இவரது நகைச்சுவைகள் கம்ப்யூட்டர் தொடர்பாக நிறைய இருக்கும். கம்ப்யூட்டர் ராசிபலன், சாப்ட்வேர் அரசன் 33-புலிகேசி போன்ற பதிவுகள் சிரிக்க சிரிக்க படிக்கலாம்.


12 ) பிரபாகர்(http://ennaththaiezhuthukiren.blogspot.com,http://abiprabhu.blogspot.com//)

நிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன். அவரது எண்ணங்களை, கோபங்களை பதிவு செய்யும் இளைஞன். அவர் சந்தித்த சிந்தித்த விசயங்களை எழுதுகிறார்.


13 ) ஜானகிராமன்.நா(http://podhujanam.wordpress.com/)


சும்மா... மாற்றம் வராதா என ஏங்கும் உங்களில் ஒருவன், உங்களைப்போல் ஒருவன் - சாதாரண பொதுஜனம். வாழ்க்கையின் சந்திப்புக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளகூடிய அன்பு நண்பன். "ஒரு பஸ் பயணம்" எனக்கு பிடித்த பதிவு.


14 ) KVR(http://kosappettai.blogspot.com/, http://nilaraja.blogspot.com/,http://kvraja.blogspot.com/)

"சொல்லிக்கிற மாதிரி ஒரு எழவும் இல்லடே". நம்ம ஒரு ப்ளாக் எழுதுறதுக்கே பத்துநாள் ரூம் போட்டு யோசிக்க வேண்டியதிருக்கு. இவங்க மூணு ப்ளாக், மூணும் வேற வேற கலர்ல எழுதுறாங்க. எப்படின்னு தெரியல. ஒரு வேலை பினாமியா இருக்குமோ. சென்னை தமிழ்ல பிச்சு உதறுவாங்க.

15 ) சித்ரா(http://konjamvettipechu.blogspot.com/)


பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் வெட்டிப் பேச்சுன்னு சொல்றாங்க. ஆனா பதிவுகளை பார்த்தா நிறையா வெட்டியா பேசுவாங்க போல. நிறைய விருதுகள் வாங்கிருக்காங்க(காசெல்லாம் கொடுக்கலைங்க). அவங்க சந்தித்த நிகழ்வுகளை புன்னகையோடு சொல்வதில் கெட்டிகாரங்க இவங்க.


...

வியாழன், ஏப்ரல் 29

கம்ப்யூட்டரும் பிரபலங்களும்

அடப்பாவிகளா. 27 ம் எண்ணின் பெருமைகள்னு ஒரு பதிவு போட்டா ஒரு 27 Comments ம் 27 ஓட்டும் வரும்னு பார்த்தா 10 தைக் கூட தாண்டல. உங்களை எல்லாம் நம்பி நான் கட்சி(ப்ளாக்) ஆரம்பிச்சு ஓட்டு வாங்கி க்கும்...அட போங்கப்பா..

கம்ப்யூட்டருக்கும் நம்ம பிரபலங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்ன தெரியுமா?

1 ) Copy & Paste - இளைய தளபதி விஜய்(முந்தைய படத்தை அப்படியே காப்பி பண்ணி அடுத்த படத்தில் நடிப்பதால்)

2 ) Copy , Edit & Paste - ஜெயம் ராஜா(தெலுங்கு படத்தை காப்பி பண்ணி கொஞ்சம் எடிட் பண்ணி தமிழில் கொடுப்பதால்)

3 ) Motherboard - செல்வராகவன்(motherboard circuit மாதிரி சிக்கலான கதை அமைப்பு உள்ளதால்)

4) System Slow - இயக்குனர் பாலா(எதுவும் சொல்ல தேவையில்லை)

5 ) Hacker - இயக்குனர் ஷக்தி சிதம்பரம் (நல்ல படங்களின் காட்சியை சுட்டு படம் எடுப்பதால்)

6 ) RAM(Temporary memory) - விஜயகாந்த் (கூட்டணி வேண்டாம், கூட்டணி வேணும் மாறி மாறி நினைப்பதால்)

7 ) MS-Paint - இயக்குனர் சிம்பு தேவன் (படம் வரைந்து ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதால்)

8 ) DOS - இயக்குனர் ராம.ராராயணன்(எத்தனை புதுமைகள் வந்தாலும் பழையமாதிரியே படம் எடுப்பதால்)

9 ) 286 computer - ராவணா படம்(286 computer பூட் ஆக எடுக்கும் நேரம் போல இந்த படத்தோட ஷூட்டிங் போய்கிட்டு இருக்கு)

10 ) Power Saving mode - மணிரத்னம் (இருட்டிலையே படம் எடுப்பதால்)
 
இன்னும் வரும்...
.
.

புதன், ஏப்ரல் 28

27 ம் எண்ணின் பெருமைகள்

27 ம் நம்பருக்கு நிறைய பெருமைகள் உண்டு. அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

1 ) எல்லா தமிழ் மாதத்திலும் இங்கிலீஷ் மாதத்திலும் 27 ம் தேதி இருக்கும்(வேணும்னா காலண்டர்ல செக் பண்ணி பாருங்க. பிப்ரவரி மாசத்துல கூட).

2 ) 26 க்கு அப்புறமும் 28 க்கு முன்னாடியும் கட்டாயம் 27 தான் வரும்.

3 ) இப்ப 27 ம் நம்பர் இல்லைன்னு வச்சுகோங்க. நீங்க விறுவிறுப்பா படிக்கிற கதை புத்தகத்துல 27 வது பக்கத்துல என்ன சஸ்பென்ஸ் இருக்குன்னு உங்களுக்கு தெரியாமலே போயிடும்.

4 ) ரஜினிகாந்த்,விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜுன், சத்யராஜ் போன்ற பிரபல நடிகர்கள் 27 வது படம் நடிச்சதுக்கு அப்புறம்தான் 28 வது படம் நடிச்சாங்க.

5 ) அப்துல் கலாம், கலைஞர்,புரட்சிதலைவி, வைகோ போன்ற பிரபல தலைவர்கள் அவர்களுடைய 27 வது வயதை கடந்துதான் வந்தார்கள்.

6 ) கேபிள் சங்கர், பிரபாகர், கேஆர்பிசெந்தில், பட்டாபட்டி போன்ற பிரபல பதிவர்கள் தங்களது 27 பதிப்புகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

7) ஒரு நகரத்துல குறைஞ்சது 27 பேராவது இருப்பாங்க.

சரி சரி மொக்கை போதும், ஏன் 27 க்கு இவ்ளோ பில்ட்-அப் அப்டின்னு யோசிக்கிறீங்களா?
.
.
.
.
.
.
இது என்னோட 27 வது பதிவு.


அதான். ஹீ ஹீ.......

சரி வந்ததுக்கு உருப்படியா ஒன்னு சொல்றேன் கேளுங்க...

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....
.
.

செவ்வாய், ஏப்ரல் 27

வெண்ணிறாடை மூர்த்தியின் தத்துவங்கள்

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
======================================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
======================================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
======================================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
======================================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
======================================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
======================================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
======================================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
======================================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
======================================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
======================================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
======================================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
======================================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
======================================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
======================================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
======================================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.

நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது.

திங்கள், ஏப்ரல் 26

ரத்ததானம் - திரைவிமர்சனம்

பிரபு, கெளதமி, லக்ஷ்மி, சிவசந்திரன், சாதனா, Y. விஜயா, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டு,நிழல்கள் ரவி, ஜெய்கணேஷ் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் சிவசந்திரன். தயாரிப்பு லக்ஷ்மி. 1988 வது வருடம் வெளியானது.



ஒரு படத்தில் வடிவலு பேப்பர் படிச்சிக்கிட்டு இருப்பார். அதில் அடுத்தவருக்கு உதவி செஞ்சா உபத்திரத்தில் முடியும்ன்னு போட்டிருக்கும். வடிவேலு சொல்லுவார் "ஆமா அடுத்தவனுக்கு உதவி செஞ்சா மூத்திரத்தில முடியும். ஏண்டா அது எப்படிடா உதவி செஞ்சா உபத்திரத்தில் முடியும்ன்னு கேப்பார்".

அந்த மாதிரி அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் மூத்திரத்தில் சாரி உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளும் மூன்று இளைஞர்களின் கதை இது. (இந்த படம் வரும்போது பிரபு சத்தியமா இளைஞன்தான்).

பிரபு, மனோ(புதுமுகம்), சந்திரகாந்த் வேலை தேடி சென்னை வர்றாங்க. மூணு பேரும் நல்ல நண்பர்கள். அவங்களுக்கு லக்ஷ்மி தங்குறதுக்கு இடம் கொடுக்குறாங்க. லஷ்மி வீட்டுல போட்டு கொடுக்குற வடை,அதுரசம் எல்லாத்தையும் தெருவுல விக்கிறாங்க. கெளதமியும் உதவியா இருக்காங்க.

கெளதமிக்கும், பிரபுவுக்கும் கல்யாணம். கல்யாணத்துக்கு முதல் நாள் மூணு பேரும் சாகக்கிடக்குற சாதனாவ(Y.விஜயா வோட மகள்) மருத்துவமனையில சேக்குறாங்க. ஆனா அந்த பொண்ணு போலீஸ் கிட்ட அந்த மூணு பேரும்தான் என்ன கெடுக்க முயற்சிபண்ணினாங்க அப்படின்னு சொல்லிடுது. இதனால போலீஸ் மூணு போரையும் அரெஸ்ட் பண்ணிடுறாங்க.

அந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லுச்சு என்பதை சிவசந்திரன்(போலீஸ்) விசாரித்து உண்மையை கண்டுபிடிக்கிறார். அதை விறுவிறுப்பாகவும், போரடிக்காமலும் இயக்குனர் படத்தை கொண்டு போயிருக்கார்.



இதில் லக்ஷ்மியின் கணவராக சந்திரசேகர் பிளாஸ்பேக்கில் வருகிறார். Y.விஜயா வின் கணவருக்கு எதிராக சந்திரசேகர் வாதாடியதிர்க்காக Y.விஜயா ஜெய்கணேஷ் யை வைத்து அவரை கொன்று கொன்றுவிடுகிறார்.  பின்னர் அடுக்கடுக்காக கொலைகள் நடக்கிறது. சந்திரகாந்த், மனோ, Y.விஜயா என எல்லோரும் கொல்லப் படுகின்றனர். லக்ஷ்மியையும் அடித்து காயப்படுத்துறாங்க.

யார் கொலைகாரன், எதற்கு இத்தனை கொலைகள் என தெரிந்துகொள்ள படத்தை பாருங்கள்.

பாடல்கள் ஒன்னும் சூப்பர் ரகமில்லை. எஸ்.எஸ்.சந்திரன் காமெடியும் சொல்லிகொள்ளும்படி இல்லை. முடிந்தால் இந்த படத்தை ஒருதடவை பாருங்கள்.

பதிவர்களின் டைரி - 2

6 ) பிரியமுடன் வசந்த்(http://priyamudanvasanth.blogspot.com/)


நம்ம சினிமாகாரங்க எல்லாம் வித்தியாசமான கதை வித்தியாசமான கேரக்டர் அப்டின்னு சொல்றாங்களே. அவங்கெல்லாம் வித்தியாசம்னா என்னனு இவர்கிட்டதான் கேட்கணும். இவர் என்ன எழுதுவார் எப்படி எழுதுவார் அப்டின்னு யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா பதிவுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நம்மால் யோசிக்கவே முடியாத விசயங்களை எழுதுவதில் கெட்டிக்காரர்.


7 ) குமரன் குடில் (http://www.saravanakumaran.com/)

இவரும் நகைச்சுவையாக எழுதகூடியவர்தான். கார்டூன், சினிமா விமர்சனம், photography , என எல்லா துறைகளிலும் கலந்து கட்டி அடிப்பவர்.



8 ) மங்குனி அமைச்சர்(http://manguniamaicher.blogspot.com/)

பொம்பளை 1: எங்க வீட்டுக்காரர் ஏதாவது டாபிக் கொடுத்தா ஒன் அவர் பேசுவாரு.

பொம்பளை 2: எங்க வீட்டுக்காரர் டாபிக்கே இல்லாம ரெண்டு மணிநேரம் பேசுவாரு..

மங்குனி அமைச்சரும் அப்படித்தான். டாபிக்கே இல்லாமல் பதிவு எழுதுவதில் அதுவும் நகைச்சுவையாக எழுதுவதில் வித்தகர். எந்த பதிவு வேணும்னாலும் படித்து பாருங்கள். ஒண்ணுமே இருக்காது. ஆனால் சிரிப்பு நிச்சியம்.



9 ) பட்டாப்பெட்டி(http://pattapatti.blogspot.com/)

கொஞ்சம் கோபக்காரர். இவரது பதிவுகளில் கோபம் இருக்கும். நாட்டு நடப்புகளை கோபமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் கெட்டிக்காரர். சிரிக்க சிந்திக்க இங்கு வாருங்கள்.



10 ) வால்பையன்(http://valpaiyan.blogspot.com/)

இவரது பதிவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும். இங்கும் ஒரு தடவை வந்து பாருங்களேன். இவரது பெயரில் சில போலிகள் நடமாடுகிறார்கள். கவனமாக இருங்கள். போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.



இன்னும் வரும்...

ஞாயிறு, ஏப்ரல் 25

சினிமா புதிர்கள்

உங்கள் சினிமா அறிவை சோதிக்க உங்களுக்காக சினிமா புதிர் போட்டி ஆரமிக்க போகிறேன். சரியாக பதில் சொல்பவர்களுக்கு என்ன பரிசு என்பதை கடைசியில் சொல்கிறேன். சரி இனி போட்டிக்கு வருவோம்.

1 ) பிரபுவும் விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
2 ) சேது திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரின் பெயர் என்ன?
3 ) ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஏதாவது படத்தின் பெயர் கூறவும்.
4 ) மணிரத்னத்தின் முதல் படத்தில் நடிக்க மறுத்த நடிகையின் பெயர் என்ன? (இன்றுவரை அந்த நடிகை அவரது இயக்கத்தில் நடிக்கவில்லை)
5 ) நடிகை ரோஜாவுக்கும், நதியாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?(ரெண்டுபேரும் நடிகைகள், பெண்கள் என்று சொல்லக்கூடாது)
6 ) S.J.சூர்யா உதவி இயக்குனராக இருந்து ஒரு பாண்டியராஜன் படத்தில் ஒரு காட்சிக்கு வருவார். அந்த படம் என்ன?
7 ) கஸ்தூரிராஜா + சிவாஜி கணேசன் = படம் பெயர்
8 ) காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த்சாமி,மாதுரி தீட்சித் நடிக்க விருந்த படத்தின் பெயர் என்ன?
9 ) முரளியின் தங்கையாக தேவயாணி நடித்த படம் என்ன?
10 ) கார்த்திக்கும் அவரது மனைவியும் திருமணம் செய்துகொள்ள உதவியாய் இருந்த படத்தின் பெயர் என்ன?
11 ) பிரபு + கார்த்திக் =4 படங்களின் பெயர்கள்
12 ) சரத்குமாரின் 99 வது படம் என பூஜை போட்டு நின்று போன போலீஸ் திரைப்படத்தின் பெயர் என்ன?
13 ) அஜித் + கே.எஸ்.ரவிகுமார் = படத்தின் பெயர்(இதில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
14 ) சத்யராஜ் இயக்கிய படம் எது?
15 ) இளைய தளபதி விஜய் ஒரு ரஜினிகாந்த் படத்தில் நடித்திருப்பார். அந்த படம் என்ன?

இந்த 15 கேள்விக்கும் சரியாக பதில் சொல்லும் புத்திசாலி பதிவர்களுக்கு

முதல் பரிசு: 52" இன்ச் கலர் டிவி
இரண்டாம் பரிசு: ஏசெர் லேப்டாப்
மூன்றாம் பரிசு:  2 Wheeler

இதெல்லாம் உங்க வீட்டுலையே இருப்பதால் நானும் அதையே கொடுத்து உங்களை அசிங்கப் படுத்த விரும்பவில்லை. அதனால் உங்களுக்கு.......

.

.

.

.

.

.

.

.

.

.


"ஆசை தோசை அப்பளம் வடை" விருது கொடுக்கலாம் என இருக்கிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?

சனி, ஏப்ரல் 24

பதிவர்களின் டைரி - 1

உங்களுடைய கோடானு கோடி வரவேற்ப்பினை தொடர்ந்து(க்கும் வந்ததே ஐந்து கமெண்டுதான் இதுல கோடானு கோடி வரவேற்ப்பினை தொடர்ந்தாம் அப்டின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்க்குது), பதிவர்களின் பதிவு முகவரிகளை தொகுத்து எழுத ஆரம்பிக்கிறேன்.


1 ) கேபிள் சங்கர்: (http://cablesankar.blogspot.com/)

நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டின்கிற மாதிரி பதிவர்களுக்கு இவரது அறிமுகம் தேவை இல்லை. நான் இவரின் பதிவுகளை படித்த பிறகுதான், Blog ID ஆரம்பித்தேன். திரைவிமர்சனங்களை சுட சுட எழுதுபவர். முன்பு ஆனந்த விகடனின் விமர்சனம் பார்த்து படம் பார்க்க செல்பவர்கள் இப்போது இவரது விமர்சனகளுக்கு பிறகுதான் படம் பார்க்க செல்கின்றனர்.

இவரது கொத்துபரோட்டா ரொம்ப பேமஸ். அதில் வரும் குறும்படம், சின்ன சின்ன தகவல்கள் மற்றும் சாப்பாட்டுக்கடை குறிப்புகள் மிக அருமை.

சினிமா விமர்சனம், தகவல்கள் மற்றும் கதைகளுக்கு இவது ப்ளாக் யை படியுங்கள்.


2 ) கோகுலத்தில் சூரியன்(http://gokulathilsuriyan.blogspot.com/)

பதிவு எழுத ரூம் போட்டு யோசிக்க தேவை இல்லை. சும்மா நம்ம வாழ்வில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக சொன்னால் போதும் என நிருபித்தவர். இவரது பெயர் வெங்கட். எழுதாமல் நிறுத்திவைத்த எனது ப்ளாக் க்கு மீண்டும் உயிர் கொடுத்த நல்ல நண்பர். இவரது பதிவுகளில் நல்ல நகைச்சுவை இருக்கும். இவரது பதிவுகளை விட இவரது கமென்ட் ஏரியா ரொம்ப பிரபலம். அது இதைவிட மிக்க நகைச்சுவையாக இருக்கும். கொஞ்சம் சிந்திக்க நிறைய சிரிக்க இவரது ப்ளாக் படியுங்கள்.



3 ) கேஆர்பி செந்தில்(http://krpsenthil.blogspot.com/)

இவரது பயோடேடா பகுதி ரொம்ப பிரபலம். குமுதத்தில் வரும் பயோடேடா பகுதி மாதிரி இவர் எழுதும் பயோடேடா பகுதிக்கு சிரிப்பு நிச்சயம். பிரபலங்களை கலாய்ப்பதில் கில்லாடி. கவிதை மன்னன். பல நல்ல தொடர் கதைகளையும் எழுதி இருக்கிறார். கவிதை, பயோடேடா பகுதிகளுக்கு இவரது ப்ளாக் படியுங்கள்.


4 ) சாத்தூர் மாக்கான்(http://satturmaikan.blogspot.com/)

இவர் எனது கல்லூரி நண்பர். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இவரது கதைகளில் எழுத்து நடை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அழகுத் தமிழில் அருமையாக கதை சொல்வதில் வல்லவர். அழகு தமிழ் கதைகளுக்கு இவரது ப்ளாக் பாருங்கள்.


5 ) அனாமிகா துவாரகன்(http://reap-and-quip.blogspot.com/)

கொஞ்சம் கோபம், கொஞ்சம் மகிழ்ச்சி,கொஞ்சம் சமையல் இதுதான் இவங்க ப்ளாக். சமீபத்தில் சானியா மிர்சா பற்றி இவர் எழுதிய கொஞ்சம் ரௌத்திரம், கொஞ்சம் ஆதங்கம் # 3 கட்டுரையில் அவரது கோபத்தை நகைச்சுவையாக வெளிபடுத்தி இருப்பார். கொஞ்சம் இங்கு வந்து பாருங்களேன்.


முதல் கட்டுரை என்பதால் ஐந்து பேரினை மட்டுமே சொல்லி இருக்கிறேன். அடுத்த பகுதியில் நிச்சயம் நிறைய நண்பர்களை பற்றி எழுதுகிறேன்.

வெள்ளி, ஏப்ரல் 23

ஒரு கோப்பை தேநீர்

தற்போது சிங்கையில் ஏப்பிரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாக கொண்டாடுகின்றனர். நமது பிரபல பதிவர் KRP செந்தில்(http://krpsenthil.blogspot.com) அவர்களின் அழைப்பை ஏற்று நானும் சென்றிருந்தேன். செந்தில் அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர், நகைசுவை உணர்வு மிக்கவர். அவரிடம் பேசும்போது நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்(இது நானா சொல்றது. அவர் ஒன்னும் காசு கொடுத்து சொல்ல சொல்லலை).


பதிவர் KRP செந்திலுடன் நான்

லிட்டில் இந்தியாவில் உள்ள நூலகத்தில் ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய "ஒரு கோப்பை தேநீர்" என்ற கருத்தரங்கு மழையின் காரணமாக ஏழு மணிக்குதான் ஆரம்பித்தது. நானும் செந்திலும் ஆறு மணிக்கு நூலகத்தை அடைந்தோம். அங்கு எங்களை மாலை சிற்றுண்டி அன்புடன் வரவேற்றது(அப்பாடா காசு செலவழிச்சு வந்தத சாப்பாட்டுல கழிச்சுடனும்) . கேசரி, வடை, கிச்சடி மற்றும் ஒரு கோப்பை தேநீருடன் எங்கள் மாலை சிற்றுண்டி முடிந்தது.

கூட்டத்தில் ஒரு பகுதி

இந்த கருதரங்கிர்க்கு பிரபல எழுத்தாளர் உயர்திரு பிரபஞ்சன், இசை விமர்சகர் ஷாஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பிரபலங்களுக்கு பொன்னாடை போர்த்தும்போது தொகுப்பாளினி ரெஜினா(தமிழ் ஆசிரியையாம்) இப்படி சொன்னார் "உயர்திரு பிரபஞ்சன் அவர்களுக்கு உயர்திரு புருசோத்தமன் ஆடை அணிவிப்பார்". உடனே எனது பக்கத்திலிருந்த பெரியவர் "ஏம்மா அவர்தான் ஆடையோடதான வந்திருக்கார், நீங்க வேற ஏன் அணிவிக்கிறீங்க. அது பொன்னாடைம்மா" என்றதும் கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரெஜினா

பின் ஷாஜி அவர்கள் அவரது இசை விமர்சனம் பற்றியும், அதில் சந்தித்த பிரச்னைகள் பற்றியும் நகைசுவையாக கூறினார். அவர் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டாலும் அருமையான தமிழில் அழகாக பேசினார். ஷாஜி அவர்களுக்கு ஒரு மலையாள படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஒரு மலையாளி. ஆனாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்ததால் அவருக்கு மலையாளம் தத்தக்கா புத்தக்காதான். மோகன்லாலுக்கு கதை சொல்லி ஓகே ஆகிவிட்டதாம்.


மோகன்லால் தயாரிப்பாளரை பார்க்க அனுப்பியிருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளரிடம் அரைகுறை மலையாளத்தில் கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது "சாரே இக்கதை internet ல் எடுத்தது சாரே, மோகன்லால் பரஞ்சது சாரே". ஷாஜிக்கு டென்சன். என்னடா இது நாம எழுதுன கதைய இந்த ஆளு Internet ல சுட்டது, மோகன்லால் சொன்னதுன்னு குழப்புறாரே. இதுக்குமேல விட்டா கதை கந்தல்ன்னு நினச்சு ஷாஜி "சாரி சார் அவருக்கு மலையாளம் சரியா பேச வராதுன்னு" சொல்லு மீதி கதையை அவரே சொன்னாராம்.


கதை சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும்போது இயக்குனர் கோபமாகி "நீ எப்படி எனக்கு மலையாளம் தெரியாதுன்னு சொல்லலாம். நீ யார். ஆச்சா, பூச்சா" அப்டின்னு ஒருமணி நேரம் இங்கிலிஷ்ல திட்டினாராம்.

இசை விமர்சகர் ஷாஜி

அடுத்து உயர்திரு பிரபஞ்சன் பேசினார். அவரும் பல வாழ்வின் சம்பவங்களை கதைகள் சொல்லி கலகலப்பூட்டினார். அவரது பேசினை எழுத வேண்டும் என்றால் அதற்க்கு தனி பதிவு வேண்டும். கடைசியாக அவரிடம் கேள்விகள் கேட்ட்கப்பட்டது.

"நீங்கள் ஒருபத்திரிக்கையில் வேலை செய்யும்போது அரைகுறை ஆடையில் உள்ள நடிகைய பத்தி எழுத சொன்னதற்கு வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். அது உங்கள் சுயமரியாதை. நாங்களும் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?"

அதற்க்கு பிரபஞ்சன் அவர்களின் பதில் "என்னை மாதிரி நீங்கள் வாழ்ந்தால் அடுத்த வேலைக்கு சோறு கிடைக்காது. அனைவரையும் அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். அதற்காக நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அனைவருக்கும் நல்ல குணங்களும் உண்டு, கெட்ட குணங்களும் உண்டு. நான் எனக்கென்று சில கொள்கைகளோடு வாழ்கிறேன். எனக்கு அடுத்தவேளை சோறு நிச்சயமில்லை. எனவே என் கதைகளை படியுங்கள். என்னை மாதிரி வாழ ஆசைப்படாதீர்கள்".

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்

சரியாக ஒன்பது மணிக்கு விழா இனிதே முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்சியை பார்க்க விரும்பும் சிங்கை நண்பர்கள் வரும் வாரம் வசந்தம் தொலைக்காட்சியில் வரும் ஜன்னல் நிகழ்சியை பாருங்கள்.

பதிவர்களை இணைப்பது எப்படி?

இப்போது பதிவுகள் படிப்பது தினமும் காபி குடிப்பது போல் ஆகிவிட்டது. ஆனால் நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளையே இருக்கிறோம். ஆம், நமக்கென்று ஒரு நண்பர்கள் வட்டம், நாம் அவருக்கு கமெண்ட் போடுவது அவர் நமக்கு கமெண்ட் போடுவது என முடித்துக்கொள்கிறோம்.


சில நல்ல பதிவர்களின் பதிவுகள்(சத்தியமா நான் இல்லை) படிக்க யாருமே இல்லாமல் கேட்பாரற்று போய் விடுகிறது. பிரபல பதிவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நிறைய ஓட்டுகள் விழுகிறது. தமிலிஷ் ல் முகப்பு பக்கங்களிலேயே அவர்களுடைய பதிவு வந்து விடுகிறது.

இங்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அனைத்து பதிவுகளையும் படிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ இல்லை. இதற்க்கு என்ன வழி. சங்கம் ஆரம்பித்தால் மட்டும் போதுமா? புதிய பதிவர்களுக்கு யார் ஆதரவு கொடுப்பது. மொத்தம் எத்தனை ப்ளாக்குகள் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல். சிலர் சினிமா பற்றியும், சிலர் அரசியல் பற்றியும், சிலர் கதைகளும் எழுதுகின்றனர். சிலருக்கு கதைகள் படிக்க பிடிக்கும். ஆனால் எத்தனை பதிவர்கள் கதை எழுதுகிறார் என்று அவருக்கு தெரியாது. சரி அவர் எப்படி கதை எழுதும் ப்ளாக்குகளை தேடி படிப்பது.

பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பேரை சந்திக்கிறோம், எத்தனை பேரின் ப்ளாக் முகவரி நமக்கு நியாபகம் இருக்கிறது?


ஏன், எப்படி, எதற்கு? ..

நான் பதிவர்களைப் பற்றியும், அவர்களின் blog Id, அவர்கள் எந்த விசயங்களை எழுதுகிறார்கள் என்பதை பற்றியும் தொகுத்து எழுதலாம் என இருக்கிறேன். இதற்க்கு உங்களுடைய சம்மதமும் வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிந்தால்தான் நான் மேலும் தொடர முடியும். உங்களுடைய பதில் என்ன?

வியாழன், ஏப்ரல் 22

நான்கு மாடுகள்




ஒரு ஊர்ல நான்கு மாடுகள் இணைபிரியாம சேர்ந்தே இருந்ததாம். மேயப் போகும்போது கூட சேர்ந்தே போகுமாம். தினமும் இந்த நான்கு மாடுகளும் காட்டுக்கு மேயப் போகுங்கலாம். இந்த நான்கு மாடுகளையும் வேட்டையாடனும்னு நினச்ச ஒரு புலி அதுங்க பக்கத்துல போச்சாம். நான்கு மாடுகளும் சேர்ந்து புலியை முட்டி விரட்டிடுசாம்.



இந்த நான்கு மாடுகளும் சேர்ந்து இருந்தா நம்மளால வேட்டையாட முடியாது அப்படின்னு நினச்ச புலி, இதுங்களை பிரிக்கணும்னு நினச்சதாம். உடனே புலி நரியை கூப்பிட்டு விஷயத்தை சொல்லுச்சாம். நரி என்ன சும்மாவா தந்திரக்காரன் ஆச்சே. நரி ஒவ்வொரு மாடுகிட்டையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நான்கு மாடுகளையும் பிரிச்சிடுசாம்.

உடனே புலி இதுதான் சமயம் என்று தனித்தனியாக மேய்ந்த நான்கு மாடுகளையும் அடிச்சு சாப்பிட்டுடுசாம்.


Moral Of the Story: நாம நம்ம மாடுகளை காட்டுல மேய விட்டதால்தான புலி அடிச்சது. அப்படி செய்யாம உங்க தோட்டத்துல பயிர் விளையுற இடத்துல மேய விடுங்க. எந்த புலி வருதுன்னு பார்த்துடலாம்.

புதன், ஏப்ரல் 21

மொக்கைகள்

ஒருநாள் ஆபீஸ்ல் நடந்த சம்பவம். அப்போது ஒரு தீவிரவாதியை அரெஸ்ட் பண்ணியிருந்தார்கள். அதே பெயரில் என்னுடன் ஒரு நண்பர் வேலை செய்கிறார். அந்த தீவிரவாதியை அரெஸ்ட் செய்ததும் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனை கலாய்த்து கொண்டிருந்தோம். அவன் எங்களை கவனிக்காமல் இண்டரெஸ்ட் ஆக வேலை செய்து கொண்டிருந்தான்.

டேய் நேத்து பாம் வைக்கத்தான் போன என்று கேட்டோம். வேலை செய்யும் மும்மரத்தில் அவன் சொன்னது "போங்கடா நான் நேத்து என்னோட டெய்லி டார்கெட் முடிச்சுட்டுதான் போனேன்" அப்படின்னு சொல்ல ஒரே சிரிப்புதான் போங்க.(என்னது சிரிப்பு வரலையா? நான் ஒன்னும் பண்ண முடியாது)

----------------------------------------------------------------------------------

ஒருநாள் பஸ்சில் ஏறி ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். பஸ்சில் சரியான கூட்டம். என்னுடைய ஸ்டாப் வந்ததும் ஒரு கூட்டம் பஸ்சில் ஏறி என்னை இறங்க விடவில்லை. அடுத்த ஸ்டாப்பிலும் இதே கதிதான். மூணாவது ஸ்டாப்பில் நான் கேட்டது "அய்யா நீங்க ஏறுறதுக்கு நிறைய பஸ் இருக்கு. ஆனா நான் இறங்குறதுக்கு இந்த ஒரு பஸ் தான் இருக்கு. ப்ளீஸ் இறங்க விடுங்க". (இன்னொருநாள் அவசரத்துல "மகளிர் மட்டும்" பஸ்சில் ஏறி அசடு வழிந்தது வேறு விஷயம். )

-------------------------------------------------------------------------------

ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியா வந்தார். நம்ம ஊரு ரோடை பார்த்துட்டு அவர் சொன்னார் "எங்க ஊர்ல மழையில நனியாம இருக்கவும், வெயில்ல காயாம இருக்கவும் பஸ் ஸ்டாப்-இல் இருந்து வீடு வரைக்கும் நிழல் குடை உண்டு. ஐயோ பாவம். நீங்கெல்லாம் எப்படி இங்க இருக்கீங்களோ". உடனே நம்ம ஆளு சொன்னான் "எங்க ஊர்ல நிழல் குடை இல்லை. ஆனாலும் மழையில நனையவும் மாட்டோம், வெயில்ல காயவும் மாட்டோம்."

வெளிநாட்டுக்காரர்: எப்படி எப்படி?


நம்ம ஆள் சிரிச்சுகிட்டே: ஆமாம் மழை இல்லாதப்ப மழையில நனையவும் மாட்டோம், வெயில் இல்லாதப்ப வெயில்ல காயவும் மாட்டோம்" அப்டின்னானாம். எப்பூடி!!!
--------------------------------------------------------------------------------

விஜய்க்கு பிடிச்ச படம் என்ன தெரியுமா "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்"

------------------------------------

தயாநிதி அழகிரி, பேரரசு மற்றும் இளைய தளபதி கூட்டணியில் புதிய திரைப்படம் "கோபாலபுரம்". இதில் இளைய தளபதி வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். ஆம் வலது காலில் ஆறு விரல் வைத்து நடிக்கிறார்.

செவ்வாய், ஏப்ரல் 20

பாட்டி சுட்ட வடை


ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட்டிங் வடை ஆன் ஹெர் வடை சட்டி. அப்போ ஒரு பையன் வடை வேணும் கையில காசு இல்லை அப்டின்னு கேக்குறான். பாட்டி டென்சனாகி, நோ பேராண்டி, நோ கிரெடிட், if யு வான்ட் வடை, ப்ளீஸ் பே கேஷ் ஆர் யுசிங் யுவர் கிரெடிட் ஆர் டெபிட் கார்ட். உடனே அந்த பையன் அழுக ஆரம்பித்தான்.

உடனே பாட்டி "டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாத" னு பாட ஆரம்பிக்கிறாள். சரி பாட்டி ஐ வில் கம் வித் மை பாதர் கிரெடிட் கார்ட் னு சொல்லிட்டு போயிடுறான். இந்த சமயத்துல ஒரு காக்கா வந்து அந்த வடைய பாட்டிகிட்ட கேக்குது. பாட்டுயும் காசு இல்லாட்டி கிடையாதுன்னு சொல்லிடுறா.


காக்கா டென்சனாகி "தருவியா தரமாட்டியா தரலைனா உன் பேச்சு கா" னு பாடிகிட்டே வடையை ஆட்டையப் போட்டுட்டு போயிடுது. பாட்டி "வட போச்சேன்னு" கவலைல உக்காந்துட்டா.



காக்கா மரத்துல உக்காந்துகிட்டு வடைய சாப்பிட போகும்போது நரி அங்க வந்தது. அது காக்காகிட்ட ஏய் காக்கா யு ஆர் வெரி ப்யுடிபுல். யுவர் வாய்ஸ் சோ நைஸ். "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" னு பாடுச்சு. காக்காவுக்கும் ஒரே குஷி.

உடனே நரி "காக்கா நீ எனக்காக ஒரு பட்டு பாடென்னு" சொல்லுச்சு. உடனே காக்கா வடையை வாய்ல வச்சுகிட்டே "சாரி நரி ஐ ஆம் பீலிங் கங்க்ரி. சோ ஆப்டர் ஈட்டிங் வடை, ஐ வில் சிங்". உடனே நரி நோ காக்கா, நான் சிங்கராஜா ஆபீஸ் ல அமைச்சர்(மங்குனி அமைச்சர் இல்ல) வேலைக்கு இண்டர்வியு க்கு போறேன். சீக்கிரம் பாடு.


உடனே காக்கா அந்த வடையை அதோட லவ்வர்கிட்ட கொடுத்துட்டு "ஏமாந்த சோணகிரி" அப்டின்னு பாட ஆரம்பிச்சதாம். நரி கோபமாகி "காக்கா யு ஆர் சீட்டிங்". நான் நேத்துதான் இந்த கதையை படிச்சேன். நீ பாடும்போது வடை கீழ விழும். நான் எடுத்துட்டு ஓடனும். அதுதான கதை.



உடனே காக்கா சொல்லுச்சாம் "நல்லவேளை நான் நேத்துதான் இண்டர்நெட்ல இந்த கதையை படிச்சேன். இல்லைனா நானும் எங்க கொள்ளுதாத்தா மாதிரி ஏமாந்து போயிருப்பேன். தேங்க்ஸ் டு இன்டர்நெட் அப்படின்னு சொல்லுச்சாம்". நரியும் "வட போச்சேன்னு" போயிடுச்சு.


மாரல் ஆப் தி ஸ்டோரி: அப்டேட் மிக முக்கியம் அமைச்சரே....

திங்கள், ஏப்ரல் 19

கம்ப்யூட்டர்-யை assemble செய்ய ஈசியான வழிகள்

இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். நிறைய பேருக்கு கம்ப்யூட்டர் வாங்கவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் என்ன மாடல் வாங்க வேண்டும், என்ன விலை, எங்கு வாங்குவது, எப்படி assemble செய்வது என நிறைய குழப்பங்கள்.

உங்களுக்காக என்ன மாடல் வாங்க வேண்டும், என்ன விலை, எங்கு வாங்குவது, எப்படி assemble செய்வது என நான் ஈசியாக சொல்லித் தருகிறேன்.

முதலில் என்ன பர்பஸ் க்காக கம்ப்யூட்டர் வாங்க போகிறீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள். வெறும் பாட்டும், படமும் பாக்க, கேம்ஸ் விளையாட என்றால் லோ கான்பிகுரேசன் போதும். ஏதாவது அப்ளிகேசன் ரன் பண்ணவேண்டும் என்றால் அதற்கான செட்டிங்க்ஸ் என்ன என்று நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கான்பிகுரேசன் முடிவு செய்யுங்கள்.



ஓகே. கான்பிகுரேசன் முடிவுசெய்தாயிற்று. அடுத்து உங்கள் பட்ஜெட் என்ன என முடிவு செய்யுங்கள். உங்கள் பட்ஜெட் பொறுத்து ஒரு சில கான்பிகுரேசன் குறைக்கவோ கூட்டவோ முடியும். 500GB Hard disk என்றால் பட்ஜெட்க்கு ஏற்றவாறு 350GB, 200GB என மாற்றிகொள்ளலாம்.


அடுத்து எந்த கடை. ஏனெனில் நிறைய கடைகளில் branded கம்ப்யூட்டர் களின் டுப்ளிகேட் கிடைக்கிறது. எனவே நல்ல கடைகளில் விசாரித்து வாரண்டியுடன் வாங்குங்கள்.



சரி கம்ப்யூட்டர் வாங்கியாச்சு. இப்போது assemble செய்ய ஈசியான வழி என்ன? உங்களுக்கு சுத்தமாக assembling பத்தி தெரியாது. கம்ப்யூட்டர் க்காக இருபதாயிரமோ, முப்பதாயிரமோ செலவழித்து விட்டு தப்பாக assemble செய்து பணத்தை இழக்க வேண்டுமா? அதற்க்கான ஈசியான வழி.


உங்களுக்குதான் assembling தெரியாதே. இருபதாயிரமோ, முப்பதாயிரமோ செலவழித்து கம்ப்யூட்டர் வாங்கின நீங்க இன்னொரு ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுத்தால் நானே உங்கள் கம்ப்யூட்டர்-யை assemble செய்து தருகிறேன். இல்லை இல்லை எனது கம்ப்யூட்டர்-யை நான்தான் assemble செய்வேன் என்று சொன்னால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன் "How to assemble a computer?"

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா?

சனி, ஏப்ரல் 17

பாசிடிவ் இயக்குனர் விக்ரமன்-1


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். விக்ரமன் என்றாலே அனைவருக்கும் ஒரு பாட்டில் பணக்காரனாவது, லாலா லாலா லாலா தீம் மியூசிக், ஒரு பாட்டு ரெண்டு தடவை வருவது, காதலிக்காக தியாகம் பண்ணுவது இதுதான் நினைவுக்கு வரும்.

ஆனால் அவர் சினிமாவுக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்த தொடரில் நான் விக்ரமனின் சினிமா போராட்டங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

சினிமா எக்ஸ்பிரஸ் க்காக அவர் எழுதிய "நான் பேச நினைப்பதெல்லாம்" தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன்.


1990 ஆம் ஆண்டு அவரது முதல் படம் புதுவசந்தம் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை வெளியான அவரது படங்களில் ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ கிடையாது. அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் "சூர்யவம்சம்". வசூலில் ரெகார்ட் பிரேக் கொடுத்த படம் இது.



"Super Good Films" முதலில் மலையாள படங்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தது. அவர்களுடைய முதல் படம் "புதுவசந்தம்". அந்த வாய்ப்பு அவருக்கு ஈஸியாக கிடைக்கவில்லை. பல தயாரிப்பாளர்களால்  நிராகரிக்கப்பட்ட கதைதான் அது.

விக்ரமன் பார்த்திபன், மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். புதியபாதை வெளியாவதற்கு முன்பே அவர் நிறைய கதைகளுடன் கோடம்பாக்கம் கனவுகளுடன் பசியோடு அலைந்திருக்கிறார். அவருக்கு கடவுளாக கிடைத்தவர் R.B.சௌத்ரி. இன்றும் விக்ரமன் என்றால் கதை கூட கேட்காமல் சான்ஸ் கொடுத்துவிடுவார்.


R.B. சௌத்ரியிடம் புதுவசந்தம் சான்ஸ் வாங்கியதும் அவரால் உடனே படம் எடுத்து முடிக்க முடியவில்லை. பல தடைகள், போராட்டம், சினிமா ஸ்ட்ரைக். அவருக்கே இந்த படம் வெளியாகுமா என தெரியவில்லை.



விக்ரமனின் அனைத்து படங்களும் நிறைய விருது வாங்கி இருக்கிறது. அவருடைய முக்கியமான உதவியாளர்களில் ஒருவர் K.S.ரவிக்குமார். விக்ரமனின் ஆரம்பகால படங்கள் வெளியாவதற்கு கே எஸ் ஆர் மிக முக்கியமானவர்.


விக்ரமன் பட தொகுப்பு:

1. புது வசந்தம் - 187 days(1990)

2. பெரும்புள்ளி - (1991)

3. கோகுலம் - 105 days(1993)

4. நான் பேச நினைப்பதெல்லாம்- 120 days (1993)

5. புதிய மன்னர்கள் - 1994

6. பூவே உனக்காக - 270 days (1996)

7. சூர்ய வம்சம் - 250 days (1997)

8. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - 200 days (1998)

9. வானத்தைப்போல - 175 days (2000)

10. உன்னை நினைத்து - 115 days (2002)

12. வசந்தம் (தெலுங்கு) - 2003

13. பிரியமான தோழி - 2003

14. செப்பவே சிறு காலி(தெலுங்கு) - 2004

15. சென்னை காதல் - 2006

16. மரியாதை - 2009

வானத்தைப் போல இந்த நூற்றாண்டின் முதல் தமிழ் படம் என்ற பெருமைக்குரியது. அவரது முதல் பட போராட்டங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது