Horoscope

திங்கள், ஜனவரி 31

விஜயின் டாப் 10 படங்கள்

போன வாரம் பதிவுலக சீனியர்(கொள்ளுத் தாத்தா), தமிழ்மண நிரந்தர முதல்வர், தள்ளாத வயதிலும் தொடர்ந்து பதிவெழுதி நம்மை ரட்சிக்க வந்த ரட்சகர் சிபி அவர்கள் விஜய் பற்றிய தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார். போனவாரம் நிறைய ஆணிகள் இருந்ததால் எழுத முடியவில்லை.

"பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)"

அப்டின்னு  அவர் பீல் பண்ணியதால


மரியாதை
காதலுக்கு மரியாதை
முதல் மரியாதை
மனைவிக்கு மரியாதை
ஊர் மரியாதை 
கேப்மாரிக்கு மரியாதை


போன்ற படங்களை அவருக்கு நான் டெடிகேட் பண்ணுறேன். இனிமே நான் மரியாதை தரலைன்னு அவர் பீல் பண்ண கூடாதுன்னு மரியாதையா எச்சரிக்கிறேன்.

1. துள்ளாத மனமும் துள்ளும்

பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.

பார்த்த இடம்: கோவில்பட்டி சத்யபாமா.

2. பூவே உனக்காக 

இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை(நிஜம்மாதான். அப்போ 18 - வயசுனால போகலை). நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னதும் ஹாஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம +12 பசங்களோட விருதுநகர் போய் பார்த்தேன். அக்மார்க் விக்ரமன் படம். எல்லா பாடல்களும் ஹிட்.

இடம்: விருதுநகர் அப்சரா

3. திருப்பாச்சி 

என் வாழ்க்கைல மறக்க முடியாத படம். என் தங்கைகளோட முதல்  முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம். 2004 பொங்கல் அன்னிக்கு மதியம் சரியான கூட்டம். டிக்கெட் ரிசர்வ் பண்ணியதால பிரச்சனை இல்லைனாலும் படத்திலையும் தங்கை செண்டிமெண்ட் கதைனால தங்கச்சிங்க என்னை கலாய்ச்சிட்டாங்க.

இடம்: சென்னை ரோகினி

4. மின்சாரக் கண்ணா 

சுமாரான படம்தான். எங்கள் தலைவர் கே.எஸ்.ரவிக்குமாருக்காக போனேன். இதே போல இன்னும் ரெண்டு படம்(ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்) வந்தது. ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்.

இடம்: கோவில்பட்டி லக்ஷ்மி

5. நேருக்கு நேர்

காலேஜ் வாழ்கைல நுழைந்த போது  ரிலீஸ் ஆன படம் இது. ஹாஸ்டல்ல சுப்ரபாதம் போல இந்த படத்தின் பாடல்களே ஓடிகொண்டிருக்கும். தேவா தன் இசையால் அதிரடி பாடல்கள் கொடுத்திருப்பார். அப்போ தேவாவின் இசையில் நிறைய படங்கள் ஹிட்.

இடம்: கோவில்பட்டி சத்தியபாமா

6.  லவ் டுடே

நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை. ரெண்டு மாசம் கழிச்சுதான் ரிலீஸ் ஆச்சு. செம ஜாலியான படம். ரகுவரன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இடம்: கோவில்பட்டி சத்தியபாமா

7. பிரண்ட்ஸ் 

இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்.

இடம்: கோவில்பட்டி ஷண்முகா

8. காதலுக்கு மரியாதை 

போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன். 40 தடவை பார்த்து ஒரு நண்பன் வெற்றி பெற்றான். ஹிஹி

இடம்: கோவில்பட்டி AKS

9. கில்லி 

இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை(இல்லாட்டாலும்). ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).

இடம்: சென்னை உதயம்

10. கோயமுத்தூர் மாப்ளே

கவுண்டமணி காமெடிக்காகவே பார்த்த படம். இப்பவும் காமெடி சேனல்ல கவுண்டமணி காமெடி வந்துக்கிட்டுதான் இருக்கு.நான்-ஸ்டாப் காமெடி.

இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)
.............

வியாழன், ஜனவரி 27

மிகச் சிறந்த சிந்தனையாளன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது அப்பா ஹோமியோபதி டாக்டரை பார்க்க மதுரைவரை போகணும் கூட வா அப்படின்னு கூப்பிட்டார். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அப்பா கூட போனேன். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து புதூர் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அப்பா கூட அங்க போயிருக்கேன். அதனால் எனக்கும் அந்த இடம் தெரியும். பெரியார் நிலையமிலிருந்து புதூர் பஸ் ஏறினோம். சரியான கூட்டம். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் அப்பாவும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.

ரோட் சைடுல ஏதோ துணிக்கடை விளம்பரத்துன "அனுஷ்கா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே(ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு)இறங்குற இடத்தை மறந்துட்டேன்(ஹிஹி). எங்கப்பா இறங்கும்போது ரமேஷ்,ரமேஷ் னு கூப்பிட்டிருக்காரு.




ஆனா நான் அனுஷ்கா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவர் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா ரமேஷ்,ரமேஷ் ன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் அப்பா கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன்(ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் ரமேஷா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப்" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..
...


புதன், ஜனவரி 26

குடிமகளே!!!!


செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.

என்னோட பிரண்ட்ஸ் அஞ்சு பேரு இருந்தாங்க. நான் போகும்போது பார்ட்டி ஆரமிச்சிட்டங்க. நானும் போய் உக்கார்ந்தேன். ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.

எனக்கு ஆப்போசிட் டேபிள்ள மூணு பசங்க, மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).
நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்).

இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி)

நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளைகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

அப்புறம் ஓசில சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினேன். எல்லோரும் என் ரூம் பக்கத்துல இருக்கிறதால ரூம்க்கு வந்தாங்க. நைட் ஒரு மணிக்கு ஒருத்தன் மட்டும் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).

அப்புறம் அவன் கிளம்பி போயிட்டான். காலைல ஒரு ஆறு மணி இருக்கும். மறுபடியும் ரூம்ல வந்து நிக்கிறான். என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.

நாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்?(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை.

ஒரு டவுட்டு: இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும், இன்னொரு விளம்பரத்துல 62-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் இருந்தது. இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..
...
 

ஞாயிறு, ஜனவரி 23

சரவெடி

இந்த வார திருடன்:

நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்ஸி புக் பண்ண வேண்டியது. பின்ன டாக்ஸி டிரைவர்க்கு போன் பண்ணி என் மொபைல்ல பேலன்ஸ் இல்லை. வரும்போது 500,300 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு வாங்க வந்தவுடனே காசு தர்றேன்னு சொல்றது. டிரைவரும் ரீசார்ஜ் பண்ணிடுவாரு. அப்புறம் அந்த அட்ரெஸ்க்கு போய் பார்த்தா யாருமே இருக்க மாட்டங்க. போன் பண்ணினா எடுக்கவும் மாட்டாங்க. இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம்.

இந்த வார ஆல்பம்:

தூங்கா நகரம். மதுரை புகழ் பாடும் பாடல்கள். எல்லா பாடல்களும் சூப்பர். "வைகை சிரிச்சாதூங்கா நகரம்" செம குத்து பாடல்.

"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு  படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க.(கோ படத்தில் பாடல்கள் சுமார்தான். ஹாரிஸின் பழைய பாடல்களின் வாசம் அதிகம்)

இந்த வார படம்: 

"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்த வார கோபம்:

வேளச்சேரி போஸ்ட் ஆபீஸ்ஸில் மாதாமாதம் RD கட்டிகொண்டிருக்கிறேன். வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் பிராஞ்சுக்கு என்னோட RD யை மாற்ற சொல்லி எழுதி கொடுத்தேன். 10 நாளில் மேடவாக்கமில் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். 50 நாள் ஆகியும் வரவில்லை.

மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் ஹெட் ஆபீஸ் எங்கயும் ரெஸ்பான்ஸ் இல்லை. வேளச்சேரியில் போய் சண்டை போட்ட பிறகு விசாரித்து St.Thomas mount Branch-ல இருப்பதாக சொன்னாங்க. அங்க போய் கேட்டா நான் ஒருவாரம் வீட்டு வேலைல பிஸி. இதை மறந்துட்டேன். ரெண்டு நாள்ல மேடவாக்கம் வரும் அப்டின்னு அந்த இன்சார்ஜ் லேடி சொன்னங்க.

ரெண்டு நாள் கழிச்சு போய் வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம். ஏன்னா  நான் ஒரு மாசம் லேட்டா கட்டிட்டனாம். அட நீங்கதானடா லேட் பண்ணினீங்கன்னு கேட்டா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ,ஸ்ட்ரிக்ட்டு அப்டின்னுடாங்க. Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

இந்த வார அறிமுகம்: 

என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.

லிங்க்: இங்க கிளிக்கவும்

இந்த வார சந்தோஷம்:

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............


புதன், ஜனவரி 19

அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள மகனே,

சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.

உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.

உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?

கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?

மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.

அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.

விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?

போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?

முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?

என்றும் அன்புடன்
உன் அப்பா...

டிஸ்கி 1: திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.

டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி

டிஸ்கி 3: இன்று என் பழைய ஆபீஸ் Team Leader பையன் பிறந்தநாள் அழைப்பு வந்தது. இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.


டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?


...

செவ்வாய், ஜனவரி 18

ம்..விளங்கிருச்சு...!

என்னடா புது வருஷம் வேற வந்திருச்சு. ஓசி சாப்பாட்டுக்கு எவனுமே கூப்பிடவே இல்லையேன்னு நினைச்சேன். விதி விட்டதா? பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பனோட அழைப்பு. பொங்கலுக்கு திருச்சி வா அப்டின்னு. விடுவமா நாங்க. கிளம்பிட்டோம்ல திருச்சிக்கு. சென்னைல இருந்து திருச்சி போகும்போது நான் ஏறின பஸ்ல முக்கால்வாசி பொண்ணுங்கதான்(ஒரே குரூப்புன்னு நினைக்கிறேன்). ஆனா எனக்கு டிரைவர்க்கு பின்னால உள்ள சீட்டுதான் கிடைச்சது.(கிர்ர்ரர்ர்ர்)





பொங்கலுக்கு முதல் நாள் கோயிலுக்கு போகலாம்னு சொன்னான். இதுக்குதான் கல்யாணம் ஆனவங்க சகவாசம் வச்சிக்க கூடாதுங்கிறது. திருச்சிய சுற்றிக்காட்ட சொன்னா கோயில், குளம்னு சுத்தி காட்டுறான். சரி போகலாம்னு சொன்னேன். கோவிலுக்கு கிளம்பும்போது டிஷ்யூ பேப்பர் எடுத்து வைச்சான். எதுக்குன்னு கேட்டா அங்க வா தெரியும்னு சொன்னான்.

இந்த வருஷம் உருப்படியா ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல் கோயில்களுக்கு போனேன்(இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்). எல்லா கோவில்லையும் பிரசாதம் கொடுத்தாங்க. பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).

ஸ்ரீரங்கம் ஏழு கோபுரங்கள் கொண்ட மிகப்பெரிய கோவில். ரொம்ப அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.

 காவேரி கரையில் ஸ்ரீரங்கம் கோவில்

மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர். அங்கு உள்ள பல்லவர் குளம் என்ற இடத்தில் எல்லாம் கல்லூரி ஜோடிகள்தான். கல்லூரி பெண்கள் முகம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வருகின்றனர். அங்கு உள்ள கடைகளில் கேட்டபோது இது தினமும் நடப்பதுதான். பர்தா வாடகைக்கு கிடைப்பதாகவும் கூறினார். அட பீச், பார்க், தியேட்டர்லதான் இவங்க தொல்லை தாங்க முடியல. இப்போ கோயில்லையுமா? (அடுத்ததடவை பிகரோடதான் அங்க போகணும். ஹிஹி)



அப்புறம் ஐயப்பன் கோவிலுக்கு போனோம். அங்கு கோவில்ல எழுதி இருந்த வாசகங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது:

- கோவிலுக்குள் பேசாமல் இருக்கலாமே..
- இங்கு சூடம் ஏற்றாமல் இருக்கலாமே..
- கண்ட இடத்தில் விளகேற்றாமல் இங்கு விளக்கு ஏற்றலாமே..
- தியான மண்டபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யலாமே..

அங்கு உள்ள எல்லா வாக்கியங்களும் "மே" என்றே முடிவது போல எழுதி இருந்தது வித்தியாசமாக இருந்தது. மறுநாள் அங்கேயே பொங்கல் கொண்டாடிவிட்டு(ஓசி பொங்கல். ஹிஹி) அவர்களை பிரிய மனமில்லாமல் சென்னை வந்து சேர்ந்தேன்.சண்டே வேற ஜெய் அண்ணன் சாப்பிட வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு. போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.

"முக்கிய" அறிவிப்பு:  கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!
.....

சனி, ஜனவரி 15

திருக்குறள் வாங்கியதால் 420 ஆன நண்பன்

 அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் 

நானும் என் நண்பனும் பொங்கல் அன்னிக்கு கோயிலுக்கு போனோம். போயிட்டு வரும்போது கோவில் வாசல்ல உள்ள கடையில நல்ல புக்ஸ் வாங்கனும்னு சொன்னான். சரி வாடா வாங்கலாம்னு கூட்டிட்டு போனேன்.

படிச்ச பய புள்ள போலிருக்கு. "அத்தனைக்கும் ஆசைப்படு", மகரிஷி எழுதிய புக்ஸ், சுகிசிவம் எழுதிய புக்ஸ் வாங்கினான். நமக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை. வேடிக்கை மட்டும் பாத்துகிட்டு இருந்தேன்.

மொத்தம் Rs.320 வந்தது. பில் போடவான்னு கடைக்காரர் கேட்டார். பில் போட சொன்னோம். அப்புறம் ஓலைசுவடி வடிவில் அழகாக திருக்குறள் புக் இருந்தது. அது வேணும்னு சொன்னான். என்ன விலைன்னு கேட்டேன். Rs.100 ன்னு சொன்னார். 1330 குரலுக்கு 100 ரூபாய். 1000 குறளுக்கு 100 ரூபாய் வைத்தாலும் நமக்கு 330 குறள் ப்ரீயாதான் கிடைக்குது நச்மக்கு லாபம்தான்(என்ன அறிவு) வாங்குடான்னு சொன்னேன்.

கடைக்காரன் சொன்னதுதான் ஹைலைட். ஏற்கனவே 320 ரூபாய் ஆச்சு. திருக்குறள் வாங்கினா நீங்க 420(Four twenty) அப்டின்னார். So, ஒரு திருக்குறள் புக் வாங்கினதால என் நண்பன் 420 ஆயிட்டான்.ஹிஹி...
......

புதன், ஜனவரி 12

இளைஞன்-விமர்சனம்

இப்போது தமிழ்நாடே ஏன் உலகமே எதிர்பார்த்துகொண்டிருந்த இளைஞன் விமர்சனம் முதன் முறையாக பதிவுலகில், அதுவும் என்னுடைய பிளாக்கில்.


ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் படித்தது வளர்ந்தது எல்லாம் கப்பல் வந்துபோகும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான். தினமும் பிரமாண்ட கப்பலை பார்த்து அதில் பயணம் செய்யவேண்டும் என்ற கனவோடு தனது பள்ளிகூட,கல்லூரி  காலங்களை கழிக்கிறான்.

அதன் பின் அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. அங்கும் துறைமுகம் இருப்பதால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே கப்பலில் பயணம் செய்யலாம் என மனதை தேற்றி கொள்கிறான்.

அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது. இவரது விளங்காத அவனுடைய நண்பர்கள் எவ்ளோ கேலி செய்தாலும் இந்த இளைஞன் தனது திருமண முயற்ச்சியை கைவிடவே இல்லை.அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். அதனால்தான் லேட் ஆகிறது என்று அந்த முட்டாள் நண்பர்களுக்கு எப்படி தெரியும்?

அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா? அவனது கப்பல் பயண ஆசை நிறைவேறியதா. அது சஸ்பென்ஸ். யார் அந்த இளைஞன்? பார்க்க ஆவலா?
..
.
.
.
.
.
.
.
.

இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி...
அனைவருக்கும் இந்த இளைஞனின் பொங்கல் மற்றும் 
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
........

திங்கள், ஜனவரி 10

2010-ல் நான் பிடிங்கிய ஆணிகள்

இம்சை பாபு பய வேற தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கான். என்ன பண்றது எழுதிடுவோம். எழுத சரக்கில்லாத போது தொடர்பதிவுக்கு கூப்பிடுபவனே சிறந்த நண்பன். 2010 எனக்கு மறக்க முடியாத சிறந்த வருடம். நிறைய புது அனுபவங்கள்.

ஜனவரி:

எங்க அண்ணன் பொண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் முறையாக இந்த வருட நியூ இயரை அவளுடன் கொண்டாடினேன். அதனாலதான் இந்த வருஷம் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு. இதற்க்கு முன் வேலை செய்த கம்பனில நான் சும்மாவே இருக்குறதா நினைச்சு ஏதாவது வேலை செய்வானே அப்படின்னு நம்பி புரோமோஷன் கொடுத்தாங்க(வாழ்க்கைல முதல் புரமோஷன்). Technical Support Engineer ல இருந்து Acting Team Leader. ஆனாலும் வழக்கம் போல ஆணியை புடுங்கவே இல்லை. ஹிஹி.

பிப்ரவரி:

சிங்கப்பூருக்கு வேலை தேடி  செல்லவேண்டும் என்பதால் ஆபீஸில் மேனேஜரிடம் பொய் சொல்லி லீவ் வாங்கி கிளம்பினேன்.முதன் முறையாக விமானப் பயணம். ஒரு புதிய அனுபவம். சிங்கப்பூர் வந்த ஆண்டு இது. பிளைட்டுல ஓசில சாப்பாடு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டு அங்க உள்ள ஏர் ஹோஸ்டேர்ஸ் கிட்ட கேட்டா இது பட்ஜெட் Airways. அதனால ஓசி கிடையாது மீறி கேட்டா மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு சொல்லிட்டாங்க.ஒருசாக்லேட் கூட கொடுக்கலை. நம்ம போற பஸ்லதான் பிகர் ஏதும் வராது. பிளைட்டுல கூடவா. அவ்வ்வ்வ்வ்வ்....

மார்ச்:

பதிவர் கே.ஆர்.பி செந்தில் அண்ணனை சிங்கப்பூரில் சந்தித்தேன். நான் சந்தித்த முதல் பதிவர். சிங்கப்பூரில் நிறைய உதவிகள் செய்தார்(அடிக்கடி ஓசி சாப்பாடு வாங்கி தருவார்) வேலை தேடியலைந்த இடத்தில் எல்லாம் மூஞ்சில சுடுதண்ணி ஊத்திடுவேன்னு அப்டின்னு மிரட்டுற அளவுக்கு ஆயிடுச்சு. பதிவர் பிரபாகர் மற்றும் நல்லவன் கருப்பை சந்தித்தேன்.

ஏப்ரல்:

கமெண்ட் மட்டுமே போட்டுகொண்டிருந்த என்னை பதிவு எழுத சொல்லி கெஞ்சிய வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. ஒழுங்காக(????) பதிவு எழுத ஆரமித்தது இந்த மாதம்தான். உதவி செய்த வெங்கட் மற்றும் கே.ஆர்.பி செந்தில் அண்ணனுக்கு நன்றி. கோவம் வந்த அவங்களை போய் கும்முங்கோ.

மே:

சிங்கப்பூரில் வேலை கிடைக்காமல் இருந்தபோது நண்பர் மூலமா சென்னைல வேலை கிடைத்தது. புது ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தேன். நல்ல வேளை. நல்ல சம்பளம். நல்ல புரபைல்.

ஜூன்:

பதிவுலகில் சிறந்த நண்பர்கள்(!!!!!!!) கிடைத்தனர்(இப்படி சொல்ல சொல்லி மிரட்டல் வந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன்). பன்னிகுட்டி, ஜெய், அருண் பிரசாத், டெரர், செல்வா, தேவா அண்ணா, சௌந்தர், மங்குனி, பட்டாப்பட்டி அறிமுகம் கிடைத்தது.முதல் முறையாக சென்னையில் பதிவர் சந்திப்புக்கு போனதும் இந்த மாதம்தான்.பதிவுலகில் சிரிப்பு போலீஸ் அவர்களின் காவியங்கள் தொடர்ந்து வர ஆரமித்தது.

ஜூலை:

எங்க பாஸ் இந்த மாதம்தான் வெளியூரில் இருந்து ஆபீஸ்கு வந்தார். நிறைய விசயங்கள் கற்றுக்கொடுத்தார்.

ஆகஸ்டு:

எங்க ஊரில் இன்னொரு பிராஞ்ச் ஆரமித்தோம். இம்சை பாபு நிறைய உதவிசெய்தான். காலை கரெக்டா 10 மணிக்கும் சாயந்தரம் 4 மணிக்கும் ஆபீஸ் வந்து ஓசில டீ வாங்கி கொடுத்துட்டு போயிடுவான். ரொம்ப நல்லவன். என்னோட அம்மா, அப்பாவை சென்னைக்கு கூட்டி வந்து என்னோட தங்க வைத்தேன்.

செப்டம்பர்:

இதுவரை என் குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்து சொன்னாங்க. இந்த வருடம் அருண்,வெங்கட், பாபு,டெரர்  புண்ணியத்துல பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்கள் கிடைத்தது(அய்யய்யோ அந்த பிளாகுக்கு போனா என் மானம் கப்பல் ஏறிடுமே).

அப்புறம் பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள் எனக்கு சில்லிபுரோட்டா, தோசை, மசாலா பால் வாங்கி தருவதற்காகவே வெளிக்குநாட்டில் ச்சீ வெளிநாட்டில் இருந்து வந்து என்னை சந்தித்தார். நான் பிசியா இருந்தாலும் விட மாட்டேங்குறாங்களே.

அக்டோபர்:

தமிழ் வலைப்பதிவர்கள் போரம் சண்டை ஆரமித்தது இந்த மாதம்தான். நானும் இன்னும் சிலரும் போரம் விட்டு வெளியேறினோம். பதிவர் ராஜன் திருமணத்துக்கு போய் அதுவும் சர்ச்சைக்குள் ஆகியது. மண்டப வாடகை பேமஸ் ஆனது. மங்குணியை மீட் பண்ணியது இங்குதான்.

நவம்பர்:

பதிவர் ஜெட்லியின் திருமணத்துக்கு போனேன். மறுபடியும் சிங்கபூர் பயணம். பதிவர்கள் வெறும்பய, பிரபாகர், ரோஸ்விக் ஆகியோரை சந்தித்தேன். வழக்கம் போல வெறும்பய செலவில் ஓசி சோறு கிடைத்தது. நல்லவேளை மாணவன், வைகையை பாக்கலை(எவ்ளோ சந்தோஷம். ஹிஹி). PSV புண்ணியத்தில் நானும், பாபுவும்  கப்பலை சுற்றி பார்த்தோம்.

டிசம்பர்:

எங்க வீடு விற்கப்பட்ட சோகமான மாதம் இது. ஆனால் வெங்கட்டை மீட் பண்ணிய சந்தோசமான மாதமும் இதுதான். அவரது செல்வவில் KFC-யில் சாப்பாடு.(மாசா மாசம் ஒருத்தர் சிக்கிடுறாங்களே). இருவரும் நண்பர் எஸ்.கே வை சந்தித்தோம். அவர் வீட்டிலும் ஓசி டீ. சிபி சென்னைக்கு வந்து எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார். விருதகிரி சூப்பர் ஹிட் படம் இந்த மாதம்தான் வெளியானது. வலைச்சரத்தில் போலீஸ் காவியம் அரங்கேறியது. ஹிஹி....

டிஸ்கி: இம்சை பாபு என் 13 வருட நண்பன். அதனால அவனை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. எப்போ ஊருக்கு போனாலும் ஓசி சாப்பாடு வாங்கி தர ரெடியா  இருக்கும் ஒரே நண்பன். 
....

ஞாயிறு, ஜனவரி 9

ஐ நோ ஐ நோ ஐ நோ!!!


தலைப்ப பார்த்ததும் தெரிஞ்சிருக்குமே. என்ன பதிவுன்னு. சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி என்னுடைய பார்வை. வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை. எனக்கு பிடித்த சில ரகுவரன் படங்கள் பற்றி இங்கே:

பாட்ஷா:

ஆண்டனியை மறக்க முடியுமா. ரகுவரன் என்றாலே பாட்சா தான் உடனே நினைவுக்கு வரும். ரஜினிக்கு ஈகுவலான கேரக்டர். கலக்கலான வில்லன் ரகுவரன். ஆள் டைம் பேவரைட்.


புரியாத புதிர்:

இதில் ரகுவரன் வில்லன் இல்லை. மனைவியை சந்தேகப் படும் சைக்கோ கேரக்டர். அவர் பேசிய ஐ நோ ஐ நோ டயலாக் ரொம்ப பேமஸ். சந்தேகப்படும் கணவனை அப்படியே கண்முன் நிறுத்தி இருப்பார்.

அஞ்சலி:

மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையை மனைவியிடம் மறைத்து உள்ளுக்குள் அழும் ஒரு கேரக்டர். செம அழகாக செய்திருப்பார். சொல்ல போனால் இந்த படத்தின் நாயகனும் இவரே.

சம்சாரம் அது மின்சாரம்:

ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளை. ஆனால் கஞ்சன். அதனாலையே குடும்பம் பிரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்ப தலைவனின் பீலிங்சை அவரது நடிப்பில் பக்காவாக வெளிப்படுத்தி இருப்பார். ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு பார்க்கும் கேரக்டர்.

ஆஹா:

இதிலும் குடும்பத்தின் மூத்த பிள்ளை கேரக்டர். முன்னால் காதலியை மனைவியிடம் மறைத்து அவளின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது, தம்பிக்கு உதவி செய்வது என ஒரு குடும்பத்தலைவனாக வாழ்ந்திருப்பார்.

முதல்வன்:

இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஈகுவலா நடிச்சிருப்பாரு. ஒரு அரசியல்வாதியா கலக்கல் நடிப்பு. அதுவும் அந்த இண்டர்வியூ காட்சி சூப்பர்.

லவ் டுடே:

விஜய்க்கு அப்பாவா வருவார். விஜய்க்கும் விஜயின் நண்பர்களுக்கும் நல்ல நண்பனாக நடித்திருப்பார். அவர் இறக்கும் காட்சி கண்களை கலங்க வைத்துவிடும். நம்ம அப்பா இப்படி இருந்திருக்க கூடாதா என எங்க வைக்கும் கேரக்டர்.

பார்த்தேன் ரசித்தேன்:

தங்கை பாசத்துக்காக எங்கும் கேரக்டர். சிம்ரன் அவரை அண்ணனாக ஏற்று கொள்ளவே மாட்டார். கடைசில சிம்ரன் அவரிடம் உதவி கேட்கும்போது தங்கை நம்மிடம் பேசிவிட்டாளே என ஒரு பீல் கொடுப்பரே. நோ சான்ஸ்.

இது போக அவர் கலக்கிய சில படங்கள்:

விஷாலுடன் சிவப்பதிகாரம்
அஜித்துடன் முகவரி
சத்யராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ரஜினியுடன் சிவா
கார்த்திக்குடன் தொட்டாசிணுங்கி

இதை தொடர எல்லோரையும் தொடர் பதிவுக்கு அழைத்து சாவடிக்கும் சூரியனின் வலை வாசல் அருணை வம்புடன் அழைக்கிறேன். 
...

வெள்ளி, ஜனவரி 7

புரோட்டா மாஸ்டர்

எனக்கு கிடைத்த ஒரு வீடியோ. ஒரு புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை தேச்சு எவ்ளோ தூரம் வீசுறாரு. அதை ஒரு ஆள் கரெக்டா புடிக்கிறாரு. சூபர்ப் வீடியோ. பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

.....

வியாழன், ஜனவரி 6

அழகான மதுரை!!

 இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி 

 
 இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்..


 கடவுளே இந்த கோபுரம் உயரத்துக்கு என் பதிவு ஹிட் ஆகணும் 


 எப்பூடி என் பதிவை படிச்சா கிர்ர்ர்ங்குதா?


 ஒரு வேளை இம்சையோட காக்கா பதிவை தேடுதோ?


 யார்லே அவன் நாத்தம் புடிச்ச மொக்கை பதிவை போட்டது?


ரஜினி பத்தின தொடர் பதிவை ஆரமிச்சது யாரு?


டெரர்: எனக்கு ஓட்டே விழ மாட்டேங்குது. பேசாம நான் மாடு மேய்க்கவே போறேன்(மாடு மேய்க்க சூட்கேஸ் எதுக்கு?)..


 சௌந்தர்: என் பதிவு வானம் போல அழகானது..
செல்வா : பாரு அங்க எவ்ளோ ஓட்டை இருக்கு. அது போல உன் பதிவும் ஓட்டை பதிவா? நீதி: ஒரு வெங்காயமும் இல்லை.

 
 நல்ல பதிவை படிக்க எவ்ளோ தூரம் பறந்தாலும் தப்பில்லை. அதான் சிரிப்பு போலீஸ் பிளாக் போறேன்..

 
சௌந்தர்: அங்க என்ன கூட்டம்?
செல்வா: பன்னிக்குட்டி பிளாக்குல காவலன் படம் ரிலீஸ் பண்ணிருக்காராம்..
 
 த்ரிஷா: ஹலோ மங்குனி சாரா? அடுத்த பதிவு எப்போ? இங்க என் ரசிகர்கள் தொல்லை தாங்கலை. உங்க பதிவை காட்டிதான் விரட்டனும்..


 அடப்பாவி தேவா பதிவை படிச்சு இப்படி சிலை ஆகிட்டானே 


 செல்வா: சீக்கிரம் போ குதிரை. நான் வடை வாங்கணும்..


அம்மா தாயே இந்த ஜோதி ஒளிர்ர மாதிரி வெறும்பய வாழ்க்கைலயும் ஜோதி ஒளிரட்டும்..
.......

செவ்வாய், ஜனவரி 4

ஆல்ட் பஸ்

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன். கிராமங்கள்ல இரவு பத்து மணிக்கு வர்ற பஸ் இரவு அங்கே இருந்து விட்டு காலை நாலு அல்லது அஞ்சு மணிக்கு அந்த ஊரில் இருந்து கிளம்பும்.

எந்த ஊர் கடைசி ஊரோ(அந்த ரூட்ல) அங்கதான் ஆல்ட் பஸ் நிக்கும். நாங்கெல்லாம் கடைசி ஊர் காரன் என்பதான் ஆல்ட் பஸ் எங்க ஊர்ல தான் நிக்கும். பக்கத்து ஊர் பசங்ககிட்ட அதை பத்தி பெருமை பீத்திக்குவோம். ஆல்ட் பஸ் நம்ம ஊர்ல இருக்குறது அப்பெல்லாம் ரொம்ப பெருமை. 

யாராவது மறுநாள் காலை அஞ்சு மணி பஸ்க்கு ஊருக்கு போகணும்னா அவங்க வீட்டுல இருந்துதான் டீ, காபி டிரைவர், கண்டக்டருக்கு போகும். சிலநாள் அவங்க குளிக்கிறதுக்கு வெந்நீர் கூட தருவாங்க.

மறுநாள் ஊருக்கு போகணும்னா முதல் நாள் பத்து மணிவரை வெயிட் பண்ணி பஸ் வந்தததும் சொல்லிட்டு போவாங்க. நாலு மணிக்கே டிரைவர் ஹார்ன் அடிச்சு அலெர்ட் கொடுப்பாரு. 

நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ. டிரைவர்க்கு  டீ கொண்டு போய் கொடுத்துட்டு வருவோம். நம்ம ஊர்ல இருந்து கிளம்பும்போதே டிரைவர் ஹார்ன் அடித்து பக்கத்து ஊர்காரனை எழுப்பி விட்டுடுவாரு.

அதுலயும் பஸ்ல முதல் சீட் டிரைவர்க்கு நேரா இருக்குற ஒத்த சீட்ல(மிச்சதெல்லாம் ரெண்டு சீட் இருக்கும்) உக்கார்றது ரொம்ப பெருமையான விஷயம். டீ, காபி டிரைவர்க்கு  கொடுக்குறதுக்கு காரணமே அந்த ஒத்த சீட்டுல உக்கார வைப்பாரே அதுக்குதான்.அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும். அந்த அதிகாலை பயணமே தனி சுகம்தான்.

மழை பெஞ்சா பஸ் பக்கத்து ஊர்லையே நின்னுடும். அப்போ அந்த ஊர் பசங்க ஆல்ட் பஸ் எங்க ஊர்லதான் இருக்கே அப்டின்னு சொல்லி வெறுப்பேத்துவானுக. இப்பெல்லாம் ஊர்பக்கம் எல்லா கிராமங்களிலும் ஆல்ட் பஸ் வர்றதில்லை என்று கேள்வி. எல்லோர் வீட்டிலும் டூ வீலர் இருக்கு. பஸ்சை யாரும் எதிர் பார்ப்பதில்லை.ஓட்டை பஸ் ஆக இருந்தாலும் அந்த பஸ் டிரைவர் கண்டக்டர் தான் ஹீரோஸ் அங்கே.

அது ஒரு அழகிய நிலாக்காலம்..அழகிய பயணம்...
....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது