Horoscope

செவ்வாய், நவம்பர் 30

கனிமொழி - காவியம்


கை கொடுங்க டைரக்டர் சார். இவ்ளோ அழகான அருமையான காவியத்தை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு அழகா மக்கள் ரசனைகேர்ப்ப படம் எடுக்கனும்னு உங்களுக்கு எப்படி சார் தோனுச்சு?

150 கொடி போட்டு எந்திரன் படம் எடுத்தாங்களாம். போங்க சார். அவ்ளோ செலவு பண்ணி என்ன பிரயோஜனம். செலவே இல்லாம எவ்ளோ அழகா படம் எடுத்திருக்கேங்க. ஜெய்யோட நடிப்பும் சரி அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்ஸும் சரி சூபெர்ப்.

கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா?). சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். ஒவ்வொரு வசனங்களும் அவ்ளோ அருமை. வருங்கால சந்ததிகள் தெரிஞ்சு வச்சிக்க வேண்டிய வசனங்கள் சார்.

ஹீரோவின் நண்பனா வர்ற ஜோடி நம்பர் 1 மைக்கல் சூப்பர்(இத நம்பி பாவம் டிவி சான்ஸ் கூட மிஸ் பண்ணிருப்பாரே ).

ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். அவங்களை பாத்துக்கிட்டே இருக்கலாம்(இன்னும் உயிரோட இருக்கியாடா நீ).

அப்புறம்:

- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?
- படத்துல நீங்க சொல்லவந்த கருத்து என்னவோ?(ஏன்யா மெசேஜ் மெசேஜ்ன்னு எல்லாத்துலையும் மெசேஜ் தேடுறீங்க)
- காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ?
- பாட்டை தவிர படத்துல எதாச்சும் கவனிக்கிற மாதிரி விஷயம் ஏதாச்சும் இருக்கா சார்?
- படத்துல அடிக்கடி டாய்லெட்ட குளோசப்ல காட்டுறீங்களே ஏன்? படம் பாக்குறதுக்கு பதிலா பேசாம அங்கே குந்த வச்சு உக்காந்திருக்கலாம்னா?
- எதுக்காக இந்த படம் எடுத்தீங்க சார்?
- போட்ட காசாவது வந்துச்சா சார்?
- அடுத்த காவியம் எப்போ சார்?

இப்படி எந்த பயலாவது உங்க கிட்ட வந்து கேட்டா சொல்லுங்க சார். பிச்சுபுடுவோம். பொறாமை பிடிச்ச பயலுக சார். இப்படி ஒரு படம் ச்சீ மகா காவியம் நான் பாத்ததும் இல்லை. பாக்க போறதும் இல்லை. மொத்தத்துல ஜெய்யின் கனிமொழி திரைப்படம் ஒரு மகா காவியம்.

# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.
.............

சர சர சரவெடி

இந்த வார வாழ்த்துக்கள்:

தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.


இந்த வார கோவம்:


எங்க ஆபீஸ் ஷிப்ட் பண்ணலாம்னு புரோக்கர் கிட்ட இடம் பாக்க சொன்னோம். இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ஏன் ஒரு மாசம்தான வாடகை கேப்பீங்க. இப்ப என்ன ரெண்டு மாசம்ன்னு கேட்டா, வீடுன்னா ஒரு மாசம் கமர்சியல்ன்னா ரெண்டு மாச வாடகை அப்டின்னு சொல்றாங்க.
எனக்கு சரியான கோவம். அப்டின்னா முதல்லையே சொல்லிருக்கனுமே அப்டின்னு சண்டை போட்டு ஒரு மாச வாடகைதான் கொடுத்தேன். திட்டிகிட்டே வாங்கிட்டு போனாங்க.

இந்த வார காமெடி 1:


விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.

இந்த வார காமெடி 2:

நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.

இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.

இந்த வார ஆடியோ:

விருதகிரி.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்(என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்).

"ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா"

இந்த பாடல் எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்ட். நாட்டுப்பற்றை தூண்டும் பாடல் இது. சம்போ சிவா சம்போ மியூசிக்ல இன்னொரு பாட்டும் இருக்கு. மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். (தலைவா படம் எப்போ ரிலீஸ்?)

இந்த வார பலிகடா:

வேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. கும்மி வேணுமா வேணாமானு ஒரு பட்டிமன்றம் வச்சிடலாம். என்ஜாய் பண்ணு ராசா. ...
...............

ஞாயிறு, நவம்பர் 28

எனக்கு விளம்பரம் வேணாம்னு சொன்னா யார் கேக்குறா?



எதிர்பார்க்காதது நடந்து போச்சு. நேத்துல இருந்து போன் மேல போன். இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை போன் பேசிப் பேசியே முடிஞ்சு போச்சு. நம்ம சிபி செந்தில் குமார் வேற போன் பண்ணி ட்ரீட் வேணும்ன்னு அடம். சரி சென்னை கிளம்பி வாங்க ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னா பேனா பென்சில் இல்ல அதனால ட்ரீட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.


யோவ் ட்ரீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு பேனா பென்சில்ன்னு கேட்டா, ட்ரீட்னா சாப்டு மட்டும் வந்திட மாட்டேன். வந்துட்டு:



ட்ரீட்டின் ஹைலைட்ஸ் டிஷஷ் 
மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் சாப்பாடு
சாப்பாட்டின் பிளஸ் மைனஸ் 



அப்டின்னு ரெண்டு பக்கத்துக்கு பதிவு போடணும். அதனால வரலைன்னு சொல்லிட்டாரு. 


என்னால இப்போ வீட்டை விட்டு வெளில போக முடியலை(சத்தியமா கடன் தொல்லை எதுவும் இல்லை). எல்லோரும் என்கிட்டே ஆட்டோகிராப் கேட்டு ஒரே அன்புத் தொல்லை. ஆனா காபி வித் அனுவுல கூப்ட்டாங்க அப்டின்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்(ஏன்னா எனக்கு பொய் சொல்ல தெரியாது).


சரி சரி. நம்மளையும் மதிச்சு தமிழ் மணத்துல 14 வது இடம் கொடுத்துருக்காங்க(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).
 
மங்குனி வேற நைட் ரெண்டு மணிக்கு போன் பண்ணி நீங்க பதிவரா இல்லை பிரபல பதிவரான்னு கேக்குறாரு(கலாய்க்கிறாராம். இந்தவாரம் பயபுள்ள பேரு தமிழ்மணத்துல  வரலைல. அந்த வயித்தெரிச்சல்).


டெரர் வேற போன் பண்ணி பின்னூட்டம் போடுறவங்களை, பின்னூட்டம் போட்டு தர்ம அடி வாங்குறவங்களை  மதிச்சு ஏதாச்சும் Top-20 List போடுவாங்களானு கேட்டு தொல்லை பண்றாரு. (மவனே உனக்குன்னு சொந்தமா ஒரு பிளாக் இருக்கு. காக்கா ஏதாச்சும் அங்க போய் கக்கா போயிடப் போகுது. போய் ஏதாச்சும் பதிவை எழுது. உன் கூட்டாளி அருண் வலைச்சரத்துல எழுதுற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாரு. நீ இன்னும் உன் சொந்த பிளாக்குல எழுதுறதுக்கு யோசிக்கிற. போ அந்த  புள்ளைகிட்ட சீக்கிரம் நல்லா நல்லா பதிவு எழுதுறது எப்படின்னு கத்துக்கோ). 


அருண் தம்பி வலைச்சரத்துல நல்லா எழுதி நம்ம குரூப் பேர காப்பத்தனும். அங்க போய் டீ போடுவது எப்படின்னு பதிவு போட்டே மவனே நாங்க உன்னை போட்டு தள்ள வேண்டிதிருக்கும்.


இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் என் பதிவை படிக்கும் எல்லோருக்கும் நன்றிகள். உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்(அய்யய்யோ எல்லா பாலோயரும்  போயிட்டா புதுசா ஆள் செக்கனுமே. அவ்வ்வ்வ்)..
.....

வெள்ளி, நவம்பர் 26

ஜோக்ஸ்

பன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!

===============================================
என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி 
===============================================
உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.

உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.
===============================================
ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்
===============================================
கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.
===============================================
செல்வா: நண்பா எனக்கு சாப்பிட பிடிக்கலை, தூங்க பிடிக்கலை எனக்கு காதல் வந்திடுச்சோ
சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி
=============================
ஜில் தண்ணி: ஊர்ல பஸ் டிக்கெட், டிரைன் டிக்கட், சினிமா டிக்கெட் வச்சிருக்குறவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. ஒரே ஒரு ஹால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யையோ
===============================================
மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்.
ஆனால் study லீவ் என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். படிக்கவும் முடியாமா என்ஜாய் பண்ணவும் முடியாம ... அந்த அவஸ்தை அனுபவிச்சு பாத்தாதான் தெரியும்
===============================================
டெரர் அவர்களின் இதயத்தையும் உடைக்கவோ காயப்படுத்தவோ வேண்டாம். ஏன்னா அவருக்கு இதயம் ஒண்ணுதான. வேணும்னா அவரோட எலும்ப உடைங்க. அதுதான் 206 இருக்கே.
===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!
===============================================
பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...
===============================================
டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான்.  இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். 
......

வியாழன், நவம்பர் 25

சிங்கப்பூர் பயணம் -2

சிங்கப்பூர் பயணம்-1 எழுதி ரொம்ப நாளாச்சே. ஏன் ரெண்டாவது பகுதி எழுதலை அப்டின்னு மங்குனி அமைச்சர் ரொம்ப பீல் பண்ணி அழுதார். அவங்க ஏரியாவுல உள்ள அழகான பொண்ணுங்க எல்லாம் என் அழகுல மயங்கி என்னோட போட்டோ கேட்டதா வேற சொன்னார்.(இப்ப பயபுள்ள ரமேஷ் என் நண்பன் அப்டின்னு சொல்லிட்டு அலையுது).

தீபாவளிக்கு மறுநாள் காலை நம்ம வெறும்பயலை சந்திக்கலாம்னு போன் பண்ணினா லக்கி பிளாசாவுல பிஸியாக இருப்பதாக சொன்னார். அதனால் காலையில் பதிவர் ரோஸ்விக் மற்றும் பிரபாகர் அவர்களை அவர்களது வீட்டில் சந்தித்தேன்.

பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன்.

வெறும்பயலும் நானும் 







அப்புறம் தீபாவளியை அங்கே கொண்டாடிவிட்டு சென்னை வந்த சேர்ந்தேன். யாருப்பா அது பட்டாவை பாத்தியான்னு கேக்குறது. பிச்சுபுடுவேன். அவரு எவ்ளோ பெரிய ஆளு. நம்மளை மாதிரி சின்ன பயலுகளை எல்லாம் வந்து பாப்பாரா என்ன? பட்டா சார் எப்பவும்  போல நீங்க பிஸியா இருக்குற மாதிரி நடிங்க ச்சீ பிஸியாவே இருங்க.

டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே. ச்சே. இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம்.

புதன், நவம்பர் 24

தமிழா தமிழா

ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா

புத்தன் காந்தி ஏசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க
புதிய உதயம் கண்டவன்

இல்லை என்ற சொல்லை இனி சொல்ல தேவை இல்லை
தமிழகத்தின் தாய்க்கேல்லாம் நீயே செல்லப் பிள்ளை

தட்டிக் கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தமிழன் வந்து விட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்தவாடை சுமக்குதிந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே

வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள போதிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாளன் கையிலே
எல்லாம் மாறும் தருணம் உன்னால்தானே வரணும்
வழியை காட்டு முன்னால் வருகிறோம் உன் பின்னால்

உணவும் கல்வியும் காற்றைப் போல எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை  உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் கூட்டம் விண்ணில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே

வாழும்போதே வாழவைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணினல் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா!!
புயலாய் நடப்பாய் முன்னாள் புறப்பட்டு வருகிறோம் பின்னால்

எங்கள் கேப்டனே வா வா புரட்சி கலைஞரே வா வா
ஏழையை காக்க எங்களை காக்க வெற்றி காண வா வா
புத்தன் ஏசு காந்தி எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க புதிய உதயம் கண்டவன்

#  இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....
....

திங்கள், நவம்பர் 22

பிளாக்- வெங்கட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!(எதிர்பதிவு)

Flash News : கோகுலத்தில் சூரியன்.

நமது வெங்கட் அவர்களை
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...

" பிளாக் பத்தி வாயே திறக்க
மாட்டேங்குறீங்களே.. ஏன்..? "

" அது வந்து.. அது வந்து..!! "

" ஒரு பதிவரா இருந்துகிட்டு
இப்படி மௌனமா இருந்தா
என்ன சார் அர்த்தம்..? "

நமது வெங்கட் தர்மசங்கடத்தில்
நெளிகிறார்.. ஆனாலும் நிருபர்கள்
அவரை விடுவதாய் இல்லை..

கொக்கி பிடி கேள்விகளால்
மடக்குகிறார்கள்..

" பிளாக் பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ
அதை மக்களுக்கு சொல்லுங்க.."

" சரி சொல்றேன்... எழுதிக்கோங்க..

எனக்கு தெரிஞ்ச பிளாக்..

ஒண்ணு கருப்பு
இன்னொன்னு அபார்ட்மென்ட்(பிளாக்)

நிருபர் படை Shock ஆகிறது..

" என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க..!! "

" நான் என்ன பண்றது..?
VAS எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "

" அப்ப பதிவர் மீட்டிங் லயும் இதை தான்
சொல்ல போறீங்களா..? "

" No., No., அங்கே உண்மையை
தான் சொல்ல போறேன்.. "

" அதென்ன உண்மை..? "

" எனக்கு தெரிஞ்ச பிளாக்..

ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)
இன்னொன்னு பயங்கர கருப்பா இருக்கும்(செல்வா)

" இதுக்கு நீங்க பேசாமலே
இருந்து இருக்கலாம்...!!
....
....

ஞாயிறு, நவம்பர் 21

நிக்காம ஓடு ஓடு

பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நந்தனம் வர்த்தக மையத்தில் ஒரு புயல் மையம் கொல்லப் சீ சீ கொள்ளப் போகிறது. மக்கள் அனைவரும் தீயா இருக்கணும். மழை பெஞ்சாலும் தீயாவே இருக்கணும்.

புரட்சி கலைஞர், கேப்டன், கருப்பு எம்.ஜி.யார், வருங்கால முதலமைச்சர், விஜயகாந்த் (ஏம்பா எல்லா பேரும் சொல்லிட்டேன்ல. ஏதாச்சும் விட்டு போச்சா?. சாமிக்குத்தம் ஆயிட போவுது!!) முதன் முறையாக முக்கி (சீ இன்னிக்குன்னு பாத்து கூகுளாண்டவர் இம்சை பண்றாரே) இயக்கி நடிக்கும் விருத்தகிரி பாடல் வெளியீட்டு விழா.


இன்னிசை மழையில் நனைய வாருங்கள். குடைகளுக்கு அனுமதி இல்லை. பாடல்களுக்கு இப்போதே டிமாண்டு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவுக்கு பிந்துங்கள் ச்சீ முந்துங்கள். உள்ளே வரும்போது யாராவது உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க. 

டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்(அய்யா தினமும் நூறு கமென்ட் வருமே. இந்த டிஸ்கி போட்டா கமெண்டே வராதே. நிம்மதியா இருக்கலாம் )
......

வெள்ளி, நவம்பர் 19

சர சர சரவெடி

ஆளாளுக்கு கொத்து புரோட்டா, சான்விட்ச், நூடுல்ஸ், பட்டாணி, களி, கேழ்வரகுன்னு எழுதுறாங்களே. நாமளும் எழுதுவோம் அப்படின்னு ஒரு ஐடியா. சரி என்ன தலைப்பு வைக்கலாம்(பதிவுதான் மொக்கையா இருக்கும். அட்லீஸ்ட் தலைப்பையாவது நல்லா பிடிப்போம்) அப்டின்னு ஒரு வாரம் ரூம் போட்டு யோசிச்சேன்.

சர சர சரவெடி. இதி சிலநேரம் சவுண்டா வெடிக்கும். சில நேரம் புஸ்ஸுன்னு போயிடும். அது மாதிரிதான் நம்ம பதிவும். சில நேரம் ஹிட் ஆகும்(ஆக்கப்படும்) சில நேரம் புஸ்ஸுன்னு போயிடும்.

இந்த வார வாழ்த்துக்கள்:

இந்த வார ஆனந்த விகடன்ல நம்ம ஜில்தண்ணியோட ட்விட் வந்திருக்கு. தம்பிக்கு வாழ்த்துக்கள்.

நவம்பர் 18 ஆம் தேதி திருமணமான  பதிவர் ஜெட்லி சரவணன் & கயல்விழி தம்பதியர்க்கு வாழ்த்துக்கள். 

இந்தவார சிறந்த காமடி:

@ரமேஷ் & அருண்

ஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க?? யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))"
டெரர் அவர்கள் நல்ல பதிவராம். அதுக்கெல்லாம் பதிவு எழுதணும் தம்பி.

இந்த வார நீயா நானா:

லிவிங் டுகதர் நல்லதா கேட்டதா?

இந்தவார சிறந்த நண்பேண்டா:

ப்ரியமுடன் வசந்த். கமென்ட் போட்ட எல்லோருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அழகாக டெம்ப்ளேட் செய்து கொடுத்த மாப்பு வசந்துக்கு நன்றி. 

இந்த  வார தத்துவம்:

கத்திரிக்காயை வச்சி துணியை கிழிக்க முடியாது. கத்திரிக்கோலை வச்சு சமைக்கவும் முடியாது.

நீதி: செல்வாவை நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன். 

இந்த வார ஆடியோ:

தென் மேற்கு பருவக்காற்று. இந்த படத்தின் பாடல்களை கேட்டு பாருங்க. எல்லா பாடல்களும் நல்லா இருக்கு. இசை யாருன்னு தெரியலை. ஆடுகளம் பாடல்கள் சுமார். எங்கேயும் காதல்ல ரெண்டு பாட்டு பழைய பாடல்களை நியாபகப் படுத்துகிறது. 

இந்த வார செய்தி:

தினமணி,. தினத்தந்தி, தினமலர், ஹிந்து, தாட்ஸ்தமிழ் இதுல எல்லாம் படிக்காத செய்தியா நான் சொல்ல போறேன். போய் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிங்க. இல்லை பக்கத்துக்கு வீட்டுல போய் ஓசி பேப்பர் படிங்க.

இந்த வார கோபம்/பாவம்:

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஐந்து அண்ணன் தம்பிகள். அப்பாவுக்கோ கடைசி  பையன் மீதுதான் பாசம் அதிகம். அவரது பென்சன் பணத்தை கடைசி பையனுக்கு மட்டும்தான் தருவார். இதனால் மிச்ச நாலு பேரும் அவங்க அப்பா கூட பேசுறதில்லை.

போன மாசம் அவரது பென்சன் பணத்தை மூத்த பையனின் பொண்ணுக்கு கொடுத்துவிட்டார்(அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை). போன மாசம் பெரியவர் கடைசி பையனுக்கு பென்சன் கொடுக்காததால்  கடைசி பையன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டார். பெரிய பசங்களும் அவர் மீது உள்ள கோவத்தால் அவரை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. 

இங்கு யாரை குறை சொல்லுவது? கடைசி பையனுக்கே எல்லாத்தையும் கொடுத்துவிட்டு மீதி பசங்களுக்கு கோவத்தை ஏற்பத்திய பெரியவரா? இல்லை ஒரு மாத காசு வரலைன்னு வீட்டை விட்டு துரத்திய கடைசி பையனையா?

இந்த வார A ஜோக்:

ஏதாச்சும் கடைக்கு போய்  நல்ல A ஜோக் புக்கா வாங்கி படிங்க. நான் ஏதாச்சும் சொன்னா அப்புறம் சிரிப்பு போலிசின் போர்னோ சேவைன்னு பதிவை போட்டு என் அழகை வர்ணிப்பாங்க. நான் பாவம்.
.....


வியாழன், நவம்பர் 18

லிவிங் டுகதர்

நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். இத ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன். ஹாஸ்டல்ல  இருந்ததால நிறைய தப்பு பண்ணுவதற்கு வாய்ப்பும் அதிகம். ஆனால் நான் தமிழ் கலாச்சாரத்தை மதித்து நடப்பதால், ஓடுவதால், நிற்பதால் எந்த தப்பும் செய்யவில்லை. அதுவும் இல்லாமல் சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.

அதனால கிளாஸ் கட்டடிக்க முடியாது. ஏன்னா ஹாஸ்டல்ல இருந்து வெளில போக முடியாது. இல்லைனா ஹாஸ்டல்ல வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கணும். அவர் ஹாஸ்பிடல் போக சொல்லுவாரு. காசு செலவாகும். அதனால லீவே போட முடியாது.


அதனால எக்ஸாம்ல லீவ் லெட்டர் எழுத சொல்லி கேட்டா சுத்தமா தெரியாம முழிச்சிகிட்டு இருப்போம். ஆனா வீட்டுல இருந்து வர்ற பசங்க அடிக்கடி லீவ் எடுக்குறதால அவங்க எல்லாம் லீவ் லெட்டர் பக்காவா எழுதுவாங்க.

அப்ப எல்லாம் ரெண்டு ரூபாய் இங்க் பேனாதான் கிடைக்கும்(யாருப்பா அது வயசானவனான்னு கேக்குறது). ஹீரோ பேனா வாங்கியே தர மாட்டாங்க. ஒரு தடவை எங்க அப்பா நான் பரிச்சைல நல்ல மார்க் எடுத்ததுக்காக(நம்புங்கப்பா) ஹீரோ பேனா வாங்கி கொடுத்தார். அதுவும் இங்க் பேனாதான். அப்போ என் நண்பன் ஒரு கவிதை எழுதினான்.

ஒரு ஹீரோவே 
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!

சரி விடுங்க. இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு. சொல்லவந்த மேட்டர மறந்திடப்போறேன். நான் ஸ்கூல் படிக்கும் போது லீவ் லெட்டர் எழுத தெரியாம இருந்தேன்னு சொன்னன்ல. சரி ஹீரோ பேனா வந்திருச்சு. இப்ப இத வச்சு லீவ் லெட்டர் எழுதி பாப்போம்னு தப்பு தப்பா எழுத ஆரமிச்சேன்.

கொஞ்ச நாள்ல லீவ் லெட்டர் எழுதி ரொம்ப நல்லா கேதர் பண்ணிக்கிட்டேன். அப்புறமா உண்மைலயே என்னோட இங்க் ஹீரோ பேனாவ வச்சி லீவ் லெட்டர் எழுதி லீவ் எடுத்தேன். நான் இந்த ஹீரோ பேனாவால கேதர் பண்ணிக்கிட்டது நிறைய.

நான் ரேனால்ஸ், பால் பாயிண்ட் பேனா எல்லாம் உபயோக படுத்த மாட்டேன். ஏன்னா அது வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிச்சது. நான் தமிழ் கலாச்சார முறைப்படி வளர்ந்தவன். அதனால வெள்ளைக்காரன் கலாச்சாரத்த நான் ஏன் மதிக்கணும். அதனால இங்க் பேனாதான் உபயோகப் படுத்துவேன். தமிழ் கலாச்சாரம் வாழ்க.

கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க(அய்யயோ தெரியாம சொல்லிட்டனே. டெரர் பய நேரா அங்கதான போவான்). யப்பா சாமிகளா தெரியாம சொல்லிட்டேன். (கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க). இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.

ஒழுங்கா ஓட்டு போட்டா தமிழர் கலாச்சாரப்படி ஓட்டுக்கு பணம் தரப்படும்.(எப்ப அப்டின்னெல்லாம் கேட்கக்கூடாது. ஓகே வா?) ஆனா யார் என்ன சொன்னாலும் நான் தமிழ் கலாச்சாரபடி இங்க் பேனாலதான் எழுதுவேன்.

டெரர்க்கு டிஸ்கி: மச்சி எப்பவுமே நான் சொல்றத கேக்க மாட்டேல்ல. அத அப்படியே பாலோ பண்ணு. மைனஸ் ஓட்டு போட சொல்லிருக்கேன். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு அப்படியே பிளஸ் ஓட்டு போட்டுட்டு ஓடிப் போயிடு.

மெயின் டிஸ்கி: அதென்ன லிவிங் டுகதர்னு டைட்டில் வச்சிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லலையேன்னு பாக்குறீங்களா. அது ஒன்னுமில்லைங்க. லீவ் இங்க் டு கேதர் (இங்க் பேனா வச்சு லீவ் லெட்டர் எழுதி கேதர் பண்ணினது) அப்டின்னுதான் type பண்ணினேன். ஆனா கூகிள் Translator செஞ்ச லொள்ளால அது லிவிங் டுகதர் அப்டின்னு மாறிப் போச்சு. நான் என்ன பண்றது?

சரி விடுங்க. என்ன கெட்ட பழக்கம். இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க. நான் ரொம்ப பாவம். இன்னும் கல்யாண மண்டப வாடகை தெரிஞ்சிகிடுற அளவுக்கு கூட வரலை. ரொம்ப சின்ன பையன். ப்ளீஸ் விட்டுடுங்க. அவ்வ்வ்.
........

புதன், நவம்பர் 17

ஜெட்லி சரவணா-திருமண வாழ்த்துக்கள்


விண்ணைத் தாண்டிவந்த 
நிலாப்பெண் கயல்விழியின்
கைத்தளம்  பற்றிய 
கருப்பு சூரியன்
தங்க மகன்
நல்லவனுக்கு நல்லவன்

அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று  நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.


நேற்று மாலை நடந்த ரிசப்சனில் எடுத்த போட்டோ. இன்று(November-18-2010) காலை திருமணம்.

இடமிருந்து வலம்: கே.ஆர்.பி.செந்தில்,உண்மைத் தமிழன், மயில்ராவணன், சங்கர், கேபிள் சங்கர், நான்தான்,எறும்பு ராஜகோபால், வீடு திரும்பல் மோகன் குமார்.

கடைசியா ஜாக்கி சேகர் வந்தார். கிளம்பும்போது மழை தூறியதால் பஸ்ஸில்  போகலாம் என்று சொல்ல ஜாக்கி சேகரோ நான் பக்கா லோக்கல். அதனால பஸ்ஸில் வரமாட்டேன். வேணும்னா மீன் பாடி வண்டில வரேன்னு சொல்லி அடம் பிடித்தார்.
..

திங்கள், நவம்பர் 15

அடிச்சிட்டு சாவுங்க!!!

அவர ஏன் திட்டுன?

நான் திட்டுனத விடு. அவரு எப்படி அந்த பதிவ அந்த மாதிரி போடலாம்?

அவரு அந்த மாதிரி போட்டா உனக்கென்ன? நீ உனக்கு பிடிச்ச மாதிரி இந்த மாதிரி ஒரு பதிவு போடு?

என்ன இருந்தாலும் அவரு அன்னிக்கு அந்த மாதிரி பதிவு அப்படியே போட்டிருக்க கூடாது?

அப்படி என்ன பதிவ போட்டாரு?

அன்னிக்கு அந்தமாதிரி பதிவு போட்டது தப்பு. அதவிட அந்த மாதிரி கமெண்ட்ஸ்ச அனுமதிச்சது மிக தப்பு.

அதெல்லாம் சரிதான். உலகத்துல இல்லாததா பதிவா போட்டாரு. இவர் சொல்லலைன்னா நெட்ல கிடைக்காதா என்ன?

நெட்ல கிடைக்கும்னா எத வேணா சொல்ல வேண்டியதுதானா?

உனக்கு பிடிக்கலைன்னா போக வேண்டித்தான?

பொது இடம்னா எல்லோரும் வருவாங்க. என்னை போக சொல்ல நீ யாரு?

நான் அப்படிதான் சொல்லுவேன். எனக்கு நீயா நெட் பில் கட்டுற?

நான் கட்டினாலும் கட்டலைனாலும் கேப்பேன். அதான் ஓட்டு போடுரனே. பின்ன என்ன?

ஓட்டு போட்டா என்ன வேணாலும் கேப்பியா? அசிங்க அசிங்கமா திட்டுவேன்?

என் வாய் சும்மாவா இருக்கும். நானும் திட்டுவேன். உன் மானத்தை பஸ்சுல ஏத்துவேன்.

என்ன சண்டை என்ன சண்டை. யார் இவங்க? ஏதும் அரசியல்வாதிங்களா. ஓட்டு பத்தியெல்லாம் பேசுறாங்க. சண்டையா யாராவது நிப்பாட்டுங்க.

அதெல்லாம் முடியாது. சண்டைய நிப்பாட்டுன்னு சொன்னா உன்னை வண்டி வண்டியா திட்டுவாங்க.

அப்படியா. அப்டின்னா இவங்க யாரு?

பிரபல பதிவர்களாம். ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்களாம். அடிச்சிட்டு சாவுங்க...

ஞாயிறு, நவம்பர் 14

யார் இவர்?

இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு. இவர் அடி வாங்காத இடமே இல்லைங்க. ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும் கைப்புள்ள மாதிரி அடுத்த இடத்துக்கு அடிவாங்க கிளம்பிடுவாரு. அவ்ளோ நல்லவரு.

இவருக்குன்னு சொந்தமா ஒரு ப்ளாக் இருக்குங்க(சத்தியமா இருக்கு). அட யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே. அம்மாவசை அன்னிக்கு கண்டிப்பா போஸ்ட் போட ட்ரை பண்ணுவாரு. ஏன்னா அப்பத்தான் கொஞ்சமாச்சும் தெளிவா இருப்பாரு.

திடீர்னு எதாச்சும் ப்ளாக் போய் என் ப்ளாக் சும்மாதான் இருக்கு தூசி தட்டிட்டு வரேன்னு கமெண்ட் போடுவாரு. யாராச்சும் திருந்தி நல்லவங்களா மாறுனா இவருக்கு பிடிக்கவே பிடிக்காது. உடனே அவங்களை பாராட்டி கமெண்ட் போடுவாரு(கலாய்சிட்டாராமா!!). யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.

சில நேரம் அவரோட ப்ளாக் நேம் மறந்து தொலைச்சிட்டு நம்மகிட்ட வந்து நான் ஒரு ப்ளாக் வச்சிருந்தனே அதோட பேர் என்னனு கேட்டு நம்மளையே டெரர் ஆக்குவாரு. என் போஸ்ட்க்கு வா, கமெண்ட் போடு, ஓட்டு போடுன்னு தொல்லை வேற.

சரி நம்ம பயலாச்சே, ஆபீஸ்ல வேலையே பாக்கலைன்னாலும் நம்ம பதிவுக்கு வந்து கமெண்டும் ஓட்டும் போடுதே. நாமளும் பண்ணலாம்னா அங்க போய் பாத்தா ஒரு எழவும் புரியாது. இதுக்கு தேவா அண்ணா பிளாக்கே பரவாயில்லை.அப்பாக்கள் மட்டுமா பாவம் இந்த ப்ளாக் படிக்கிற எல்லோருமே பாவம்தான்.

மங்கு, பன்னி இந்த பீச என்ன பண்ணலாம். நீங்களே சொல்லுங்க!!! இவரு யாருன்னு மட்டும் நான் சொல்ல மாட்டேன்...

வெள்ளி, நவம்பர் 12

பிரபல தொழிலதிபர்கள்

வர வர எல்லாத்துலையும் அரசியல் ஆயிடுச்சு. ஊசி பாசி விக்கிறவங்க எல்லாரும் தொழிலதிபராம். நாட்டுல இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைப்பா.

அதே மாதிரி இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா. மொக்கை பதிவு எழுதுறவங்க எல்லாம் பிரபல பதிவராம். அய்யோ ராமா என்னால இந்த கொடுமைய தாங்க முடியலையே. ஆண்டவா என்னை நீதான் காப்பாத்தணும். நான் கூடத்தான் பிரபல பதிவர். ஆனா பாருங்க எனக்கு இந்த விளம்பரம் பிடிக்காது.

இந்த கொடுமைய நீங்களே பாருங்க:(http://www.tamilmanam.net/top/blogs/1)



என்னங்க உங்களுக்கே ஓவரா தெரியலை. மகா ஜனங்களே உங்களால ஜீரணிக்க முடியலைல. அதுக்குன்னு ஒரு யோகாசனம் இருக்கு. இதப் பண்ணுங்க. வேற என்ன பண்றது..
அது சரி தமிழ்மணம் தமிழர் பதிவுதான போடணும். கொரியமொழில எழுதுறவங்க லிஸ்ட் எல்லாம் ஏன் வருது? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்..


சரி சரி வாழ்த்துக்கள் பிரபல பதிவுலக நண்பர்களே. வேற ஒண்ணுமில்லை. ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..

.....

வியாழன், நவம்பர் 11

முத்து குளிக்க வாரீகளா!!!

பியர்ல் சிட்டி. முத்து நகரம். தூத்துக்குடிக்கு இப்படியும் அழகான பெயர் உண்டு. நான் ரெண்டு வருஷம் அங்கதான் படிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன். சார் இங்க துறைமுகத்துக்குள்ள ரெண்டு தீவிரவாதிங்க நுழஞ்சிட்டாங்க. சீக்கிரம் வாங்க அப்டின்னு. உங்களாலதான் அவங்கள பிடிக்க முடியும்ன்னு.

சரின்னு அவசர அவசரமா தூத்துக்குடி துறைமுகத்துக்கு போனேன். ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ராஜ மரியாதையோட($$$$$) துறைமுகத்துக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க எந்த தீராவியாதிகள் சீ தீவிரவாதிகள்னு கேட்டேன். அவங்க ரெண்டு பேரும் சரக்கு கப்பல்ல சரக்கடிச்சிட்டு உக்காந்திருக்காங்கன்னு சொன்னாங்க.
அப்புறம் பலத்த போராட்டம், ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகு இந்த சிரிப்பு போலீஸ் அந்த ரெண்டு தீவிரவாதிகளை பிடித்தேன். ஒருத்தர் கிட்ட பேர் என்னன்னு கேட்டா பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு டார்ச்சர் பண்றார். ஒருத்தர் என்னன்னா கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்லியே இம்சை பண்றார்.
ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால குழந்தைகள் பயப்படக்கூடாது(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 
 தீவிரவாதிகள் சரக்கடித்து கவுந்த சரக்கு கப்பல் 

 கப்பலின் ஒரு பகுதி..
 பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)
 கேப்டனின்(விஜயகாந்த் இல்லை) ரூம்
 கேப்டனின் ரூமிலிருந்து view  
 
தீவிரவாதிகளை பிடித்த வெற்றிக் களிப்பு..
ஒரு தீவிரவாதியுடன் நான் 
 கரையோரம் கப்பல் 
 கருத்து சொல்ல ஒண்ணுமில்லை..
 பர்மா கப்பல். அவங்க கொடி
 நான்தான். ஹிஹி
 கப்பலின் கேப்டன் ரூம் view
கண்டைனர் ஏரியா..
தீவிரவாதிகள்(நான் இல்லை) போலீஸ்க்கு  கொடுத்த ஸ்டில்..
அது சரி பிடிபட்ட தீவிரவாதிகள் எங்கன்னு கேக்குறீங்களா? கொஞ்சம் அதிகமா மாமூல் கொடுத்ததால விட்டுட்டேன். ஹிஹி

செவ்வாய், நவம்பர் 9

சிங்கப்பூர் பயணம் -1

கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது.

போயிட்டு வர்றேன் அப்டின்னு மங்குனிக்கு போன் பண்ணினா சிங்கப்பூர் போறியா சந்தோசம் அப்டின்னு ரிப்ளை வருது(போறியா சந்தோசம் திரும்பி வந்துடாதேன்னு அர்த்தம். போயிட்டு வரியா அப்டின்னு கேக்கலை). எல்லா பயலுகளும் கொலை வெறிலதான் அலையிறாங்க.

ஏர்போர்ட் போனதும் அங்க இமிகிரேஷன்ல உள்ள அம்மணி நான் வேலைக்கு போவதாக எண்ணி என்னிடம் கேட்க, நான் தீபாவளியை அக்கா மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட போவதாக சொன்னேன். உன் மூஞ்சிய பாத்தா குடும்பத்தோட தீபாவளி கொண்டாடுற மாதிரி தெரியலையே(அதுக்கு தனி மூஞ்சியா என்ன?). வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.

மூணு மாசத்துக்கு முன்னாடி வேலை தேடி போகும்போது விட்டுட்டாங்க. இப்ப சும்மா போகும்போது டார்ச்சர் பண்றாங்க.விட்டா நமக்கு இங்கயே தீபாவளி முடிஞ்சிடும்ன்னு பயந்து அப்புறம் ஆமான்னு சொல்லி எஸ்கேப்பு ஆகி வந்தேன். பிளைட் சரியான நேரத்துக்கு கிளம்பிடுச்சு.

காலைல ஆறு மணிக்கு சிங்கப்பூர் போய் சேர்ந்தேன். வீட்டுக்கு போய்விட்டு மதியம் லிட்டில் இந்தியாவுக்கு அக்கா குழந்தையுடன் போய் தீபாவளிக்கு தேவையான பொருள்கள் வாங்கினேன். சிக்கன் வாங்க ரெண்டு மணிநேரம் வரிசைல நின்னேன். எல்லா பயலுகளும் பாத்து கிலோ பதினஞ்சு கிலோ வாங்குறானுக.

அப்புறம் தீபாவளி அன்னிக்கு குடும்பத்தோட Sky Park(இதை பற்றி தெரிந்து கொள்ள அந்த லிங்க் கிளிக் பண்ணவும்) போனேன். 56 வது மாடிக்கு லிப்ட்ல போகும்போது அந்த பீலிங்கே சூப்பர். போட்டோ உங்கள் பார்வைக்கு...







































வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது