Horoscope

ஞாயிறு, ஆகஸ்ட் 29

வாழ்த்துக்கள்

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:

டெரர்:

மக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.

நிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.

டெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.

நிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.

டெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா?

நிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.

டெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.

அடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.

அனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா  அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.

நிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.

அனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.

நிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..

அடுத்து நம்ம jey கிட்ட வர்றாங்க..

ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.

நிருபர்: அய்யா சாமி ஆளை விடு..

அடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..

கோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...

நிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.

கோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: யார நிறுத்த சொல்லணும்?

கோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

நிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.

அடுத்து நம்ம வெங்கட்.

வெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே?

நிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.

வெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.

வெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.

நிருபர்:(அடப்பாவி) சொல்லுங்க சார்..

வெங்கட்:

அனைவருக்கும் இனிய
விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்
மக்கள் அனைவரும்
அனைத்து செல்வங்களும்
பெற்று பல்லாண்டு
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்.

நிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.

வெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..

நிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:

"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல " Suresh-னு " இருக்கும்.. என்னுதுல " Venkat-னு " இருக்கும்.. ( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )"

அடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.

அருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

வெள்ளி, ஆகஸ்ட் 27

எம் பி ஏ vs பி ஈ


ஒரு MBA Student -ம் ஒரு Engineering Student-ம் ஒரு கேம்புக்கு போறாங்க. அங்க ஒரு டென்ட் போட்டு தங்குறாங்க. இரவு நேரம் Engineering Student , MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.

அதுக்கு MBA Student "I see millions of stars" அப்டிங்கிறான். Engineering Student அவன்கிட்ட "வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்". அதுக்கு MBA Student சொல்றான்:

1 . (Astronomically) விண்வெளி ஆராய்ச்சிபடி பல லட்சம் அண்டமும் பல கோடி கோள்களும் இருக்கிறது
2 . (Astrologically) ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது
3 . (Time wise) நேரப்படி இது காலாண்டுக்கு மூன்றுமுறை தோன்றும்.
4 . (Theologically) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் படி கடவுளே பெரியவர், நாம் மிகச்சிறியவரே.
5 . (Meteorologically) வானிலை ஆராய்ச்சிப்படி நாளைக்கு நமக்கு ஒரு அழகான நாளாய் விடியும்.

MBA Student: சரி நீ இதை பத்தி என்ன நினைக்கிற?

Engineering Student (அமைதியான புன்னகையுடன்): (Practically) ங் கொய்யால நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கியே...


ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."

டிஸ்கி: எனக்கு இதை மெயிலில் அனுப்பிய நண்பர் பாபுவுக்கு(இம்சை அரசன் இல்லை) மிக்க நன்றி...தமிழாக்கம் மட்டும் நான் இல்லை. தமிழாக்கம் செய்த ரெண்டு பேரும் மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு மேடைக்கு வாங்க..

புதன், ஆகஸ்ட் 25

கல்லூரி

நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார். நான் பி.எஸ்.சி முதல் வருஷம் சேரும்போதுதான் எங்கள் கல்லூரி Co-Education ஆக மாறியது. நாங்கள்தான் முதல் Batch.


கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.

நிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.

This rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது? அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா?

Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.

இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான? பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்?

இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா????

செவ்வாய், ஆகஸ்ட் 24

ஞாயிறு, ஆகஸ்ட் 22

நண்பனா அவன்??!!

பதினைந்து நாள் எங்க ஊர்ல இருந்துட்டு இன்னிக்கு காலைலதான் சென்னை வந்தேன். நான் வந்தது தெரிஞ்சதும் சென்னைக்கு ஒரே சந்தோஷம். இன்னிக்கு முழுவதும் ஆனந்த மழைதான்.(அது துக்க கண்ணீர் அப்டின்னு சின்னப் புள்ளத்தனமா யாரும் கமென்ட் போடக் கூடாது).

இன்னிக்கு லீவ் தான அப்டின்னு என்னோட நண்பனை பார்க்க போனேன். வீட்டுக்கு  போனதும் அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிட சொல்லி வற்புறுத்த மதிய சாப்பாடு அங்கே முடிஞ்சது(போனதே அதுக்குதான). ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததும் பழைய விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்.

இடையிடையே பேசும்போது என் நண்பன் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி குட்டி குட்டி கதைகளை உதாரணமாக சொன்னான். என்னடா நம்ம நண்பனா இருந்துகிட்டு இவ்ளோ அறிவா இருக்கிறன்னு நினைச்சிகிட்டு அவன் கிட்டயே கேட்டேன்.

"என்கிட்டே ஒரு புக் இருக்குடா. நிறைய கதைகள் இருக்கு. படிக்க ரொம்பவும் நல்லா இருக்கு. போகும்போது கேள். நான் தர்றேன். போய் படி" அப்டின்னு சொன்னான். மழையின் காரணமாக சாயந்தரம் வரைக்கும் அங்கிருந்து கிளம்ப முடியலை. பின்ன ஒரு டீ குடிச்சிட்டு கிளம்பும்போது அந்த கதை புக்கை அவன்கிட்ட கேட்டேன்.

அதுக்கு அவன் தர மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருக்கலாம். நண்பனா அவன்? என்னை இப்படி அவமானப் படுத்தி இருக்க கூடாது. என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படியா அசிங்கப் படுத்துவான். அவன் என்ன பண்ணினான் தெரியுமா?

.
.
அவன் புக் அப்டின்னு சொல்லி கொடுத்தது ஒரு இங்கிலீஷ் கதை புத்தகம். புத்தகம் கொடுத்தானே. எனக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு கேட்டானா அவன். இப்படியா ஒரு guest -ட வீட்ல வச்சி அசிங்கப்படுத்துறது...

(இதுவே VAS ஆளுங்க கிட்ட கொடுத்தா தலைக்கு வச்சு படுத்து தலை வழியா மண்டைல ஏறுமான்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. நாங்கெல்லாம் நேர்மையானவங்க. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிடுவோம். VAS காரங்க மாதிரி ஒண்ணுமே தெரியலைன்னாலும் Steven Spielberg, ஒரு அமெரிக்க Navy கப்பல் அப்டின்னு ஓவர் சீன் போட மாட்டோம்)

செவ்வாய், ஆகஸ்ட் 17

நூத்துக்கு நூறு

நேத்து அருண் மற்றும் டெரர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 98 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).

கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவையும் போட்டாச்சு. அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம டெரர் மற்றும் Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)

நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம். இதுக்கு VAS சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். டெரரை  பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு  பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!

என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:

டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......

..

திங்கள், ஆகஸ்ட் 16

Process Engineer-ன் திருமண அழைப்பிதழ்

எனக்கு மெயில்ல  வந்த திருமண அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு...

எப்படி இருக்கு?????

வியாழன், ஆகஸ்ட் 12

ஒரு கூடை பல்ப்

என்னோட அண்ணன் பொண்ணு MBA படிச்சிக்கிட்டு(ஹாஸ்டல்) இருக்கும்போது அவளை பாக்குறதுக்காக போகலாம்னு பிளான் பண்ணினேன். என்னை சித்தப்பான்னு கூப்பிடாம அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவாள்.

அவளுக்கு போன் பண்ணி வர்ற ஞாயிறு உன்னை பாக்க வர்றேன்னு சொன்னேன். வாங்கப்பா அன்னிக்கு லீவ். என் Friends-சும் இருப்பாங்க. Introduce பண்ணி வைக்கிறேன் அப்படின்னு சொன்னாள்.

சரி அவளோட Friends-சையும் பாத்து பேசிட்டு வருவமேன்னு அன்னிக்கு காலைல நல்ல குளிச்சிட்டு(இன்னிக்காவது குளிச்சியே), நல்லா ஷேவ் பண்ணிட்டு சென்ட் எல்லாம் போட்டுட்டு இப்ப இருக்குற அழகை விட  ஒரு படி மெருகேத்திட்டு  என் அண்ணன் மகளை பார்க்க (அவ Friend-சை பாக்கன்னு                      ஜொள்ளு) ஹாஸ்டல் போனேன்.

என் அண்ணன் பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தேன்., என்ன உன் Friends-யாரையும் காணோம்னு கேட்டேன்(நமக்கு கடமைதான் முக்கியம்). இப்ப வருவாங்கப்பா அப்டின்னு அவ சொல்ல மறுபடியும் பேசிக்கிட்டு இருந்தோம்.

கொஞ்ச நேரம் கழித்து அவளுடைய Friends எல்லோரும் வந்தாங்க. வந்து அவங்க சொன்ன ஒரு விஷயம்...நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
"என்னப்பா நல்லா இருக்கீங்களா?"

என்னை அட்லீஸ்ட் அண்ணன்னு கூட சொல்லிருக்கலாம். அப்பான்னு சொல்லிட்டாங்களே. ஒரு யூத்த பார்த்து இப்படி சொல்லலாமா?  ஒரு பொண்ணு சொன்னா பரவா இல்லை. ஒரு குரூப்பா சேர்ந்து இல்ல சொன்னாங்க. ஒரு மனுஷன் ஒரு பல்ப் வாங்கலாம் இல்லை ரெண்டு பல்ப் வாங்கலாம். இப்படி ஒரு கூடை பல்ப் வாங்கினா எப்படி? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

இருந்தாலும் நம்ம வள்ளுவர் சொன்ன வேதவாக்கை மனசுல வச்சிக்கிட்டு வீடு திரும்பினேன். வள்ளுவர் என்ன சொன்னார்ன்னா...

உன் நண்பனை நேசி. அவனது சகோதரியை அல்ல..
உன் சகோதரியை  நேசி. அவளது தோழிகளை அல்ல..
.
.

திங்கள், ஆகஸ்ட் 9

பதிவுலகில் நான் ஒரு...

நம்ம அருண் போன வருஷம் இந்த தொடர் பதிவுக்கு கூப்பிட்டார். கொஞ்ச நாளா என்னால எழுத முடியலை. Ink வேற காலி ஆயிடுச்சு. புது ink London-ல ஆர்டர் பண்ணி இன்னிக்குதான் கிடைச்சது. அதான் உடனே Ink காயுரதுக்குள்ள இந்த பதிவ எழுதுறேன். 

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சிரிப்பு போலீஸ் 

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் ரமேஷ் என்கிற ரொம்ப நல்லவன். ஒரு தடவை போலீஸ் ட்ரைனிங் போயிட்டு வரும்போது சக நண்பர்களோட ஜாலியா பேசிக்கிட்டு வந்தேன். போலீஸ் ட்ரைனிங் வந்துட்டு இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே நீங்க என்ன சிரிப்பு போலீசா அப்டின்னு ஒருத்தர் கேட்டார். அதுவே என் ப்ளாக் பெயர் ஆயிடுச்சு(ஷ்ஷ்ஷ்).

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

இருக்குற வேலைய விட்டுட்டு சிங்கபூர்ல வேலை தேடி போனேன். அங்க போனத்துக்கப்புறம் பகல்ல ரொம்ப போர் அடிச்சது(தமிளிஷ் பக்கம் தேயுற அளவுக்கு எல்லோர் பதிவையும் படிச்சிட்டு கமெண்ட் போட ஆரமிச்சேன்). கமென்ட்டே இவ்ளோ அழகாவும் அருமையாகவும், மிக சிறப்பாகவும் போடுறீங்களே நீங்க பதிவு எழுதினா எப்படி இருக்கும்ன்னு "கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும்" "கே.ஆர்.பி.செந்தில் அண்ணனும்" அன்பு தொல்லை கொடுத்ததால் எழுத ஆரமித்தேன்.

அதற்க்கு பிறகு பதிவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் வேலாயுதம் டீவீடி அனுப்புறேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அதுக்குதான சிங்கப்பூர் போனேன். அங்க உள்ள chinese , malasiyan எல்லோரும் என் பதிவை மொழி மாற்றம் செய்து படிக்கிற அளவுக்கு ஆள் வேர்ல்ட் மார்க்கெட்டிங் செய்தேன். அதில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. பின்ன வேர்ல்ட் பேங்க்ல கடன வாங்கி விளம்பரம் பண்ணினேன்.

சன் டிவில கூட என் ப்ளாக் பத்தி விளம்பரம் பண்ணறேன்னு சொல்லி கெஞ்சி கேட்டாங்க. அவங்க இருபது சேனல்லையும் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ விளம்பரம் போட்டு கொல்லுவாங்களே. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு ஆச்சே. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய. நான் அடிவாங்கின விசயத்த இங்க பகிர்ந்துக்கிட்டா ஆறுதல் கிடைக்கும்ன்னு எழுதினா இந்த பசங்க அதவச்சு நம்மளை கும்முறாங்க. அது சரி நம்ம வீட்டுல கரென்ட் இல்லைனா பக்கத்து வீட்ல செக் பண்ணி அங்கயும் இல்லைனா சந்தோசப் படுற ஆளுங்கதான நாம!!!!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அதான் சொன்னனே விளம்பரத்துக்கே இருபது மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவாயிடுச்சு. அதெல்லாம் திரும்பி எடுக்க வேணாமா? Jey அண்ணன் ரெண்டு மில்லியன் தரேன்னு சொல்லிருக்கார். (கீரிப்பிள்ளையை வச்சு ஷோ நடத்தி அதுல வர்ற வருமானத்துல என் கடனை அடைக்கிறேன்னு  சொல்லிருக்கார்).

அருண் கூட மோரிசியல எதாச்சும் வித்தை காட்டி காசு கொடுக்குறேன்னு சொல்லிருக்கார். நம்ம காயத்ரி அக்கா தமிழ் டியூஷன் எடுத்து அதுல வர்ற காச தர்றேன்னு சொல்லிருக்காங்க. நம்ம டெரர் பேபி சோப்பு வித்து பணம் தர்றேன்னு சொல்லிருக்கார். இத்தனை நண்பர்கள் இருக்கும்போது நமக்கு பணம் பெரிய விசயமே இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றே செய். இன்றே செய்  அதுவும் நன்றே செய் அப்டின்னு எங்க ஆயா சொல்லிருக்காங்க. அதனால நான் ஒருவன் நமக்கு ஒரு ப்ளாக். இதுதான் நம்ம பாலிசி(க்கும் ஒரு ப்ளாக்குக்கே விரட்டி விரட்டி கும்முறாங்க. இதுல இன்னொன்னு வேறயா?)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நிறைய பேர் இருக்காங்க. பில் கேட்ஸ், ஒபாமா, ஒசாமா பின் லேடன், மம்மூட்டி, அமிதாப் இன்னும் நிறைய(நீங்க தமிழ் பதிவு மட்டும் படிச்சா நான் என்ன பண்றது. எனக்கு உலகத்துல உள்ள எல்லா மொழியும் தெரியும் அப்டின்கிறதினால எல்லா மொழி ப்ளாக்கையும் படிப்பேன். யாராவது google translator use பண்ணி வேற மொழில கமெண்ட் போட்டா பிச்சிபுடுவேன்)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

thecandideye இவர்தான் எனக்கு முதல் கமென்ட் போட்டவர். முதன் முதலில் தொலைபேசியில் பேசி என்னை வாழ்த்தியது கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் தான். அப்புறம் வெங்கட். மற்றும் தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி.

நேத்து ஒபாமா கூட பேசும்போது கடந்த ரெண்டு வாரமா நான் சரியா பதிவு எழுதாத பத்தி வருத்தப்பட்டு பேசினார். பிறகு அவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதாயிடுச்சு.  

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நான் ரொம்ப நல்லவங்க. Actual-லா எனக்கு தமிழ் மொழி வளர்க்கணும்ன்னு ஆசைங்க. நானும் தமிழ் புக் வாங்கி பூமில புதைச்சு உரம் போட்டு தண்ணியெல்லாம் ஊத்தினேன். கடைசிவரைக்கும் தமிழ் வளரவே இல்லைங்க. என்ன பண்றதுன்னே தெரியல. யாராவது ஐடியா கொடுங்களேன்.
.

சனி, ஆகஸ்ட் 7

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்

1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும்போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

3 )  அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.

4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..

5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.

7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.

10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குற பதிவர்களுக்கு விடணும் ஒரு குத்து.

திங்கள், ஆகஸ்ட் 2

மகிழ்ச்சியான தருணம்

சின்ன வயசில இருந்தே ஹாஸ்டல்ல இருந்து பழகியாச்சு. அதுக்கப்புறம் வேலைக்காக சென்னை வந்து எட்டு வருஷம் ஓடிப் போச்சு. படிக்கிற காலத்துல தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு போய் அம்மா அப்பா அக்கா கூட பண்டிகையை கொண்டாடுவேன்..

சென்னை வந்த பிறகு தீபாவளி பொங்கல்னா ஊருக்கு போறதுக்கு டிக்கெட் கிடைக்காம unreserved ல ஏறி ஊருக்கு போவேன்.  இப்ப unreserved ல கூட ஏற முடியாத அளவுக்கு கூட்டமாயிடுச்சு.அதனால் ஊர் அக்கம் போறதுகூட குறைஞ்சு போயிடுச்சு.

அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைல இருந்ததால அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியலை. ஆனா இப்ப ரெண்டு பேரும் retired ஆயிட்டதால அவங்களை சென்னைக்கு கூட்டிட்டு வந்து என்னோட தங்க வச்சிருக்கிறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முறையாக அம்மா அப்பா கூட சேர்ந்து தங்கி இருக்கிறேன்.

என்னோட வாழ்க்கைல இது மிக மகிழ்ச்சியான தருணம் . அதனாலையே ரெண்டு நாளா நெட் பக்கமே போக முடியலை. கொஞ்ச நாள் அவங்களோட டைம் செலவழிச்சுட்டு இந்த பக்கமா வர்றேன். அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது நான்தான்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது