திங்கள், ஆகஸ்ட் 24

பிடித்த வேற்று மொழி படங்கள்.

1. Jurasic Park: நான் முதன் முதலாக தியேட்டர்ல பார்த்த இங்கிலீஷ் படம். அப்பெல்லாம் இங்கிலீஷ் படம் நா அந்த மாதிரி படம் நு நினெச்சு பசங்க சீ நு சொன்னாங்க, அப்புறம் இந்த படத்துக்கு எல்லா பள்ளிகூடத்தில் இருந்தும் பசங்கள கூட்டி போனாங்க.

2. Hum Appke Hain Houn: ஹிந்தி படமே ரிலீஸ் ஆகாத எங்க ஊர்ல ரிலீஸ் ஆகி 50 நாள் ஓடுச்சு.பாட்டும் படமும் சூப்பர் ஹிட்.

3. ரங்கீலா: A.R.Rahman மியூசிக் க்கு காகவே எங்க ஊர்ல ஓடுச்சு.

4. Bommarillu(Telugu): இந்த படம்தான் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆக ரீமேக் ஆச்சு. ஜெயம் ரவிய விட சித்தார்த் நல்ல நடிச்சிருப்பார்.

5. Vikramaarkudu(Telugu): ரவி தேஜா 2 வேடங்களில் நடித்த ஆக்ஷன் + காமடி படம். நான் முதன் முதலாக தியேட்டர் ல பார்த்த தெலுங்கு படம். இந்த படம் தான் இப்ப பருத்தி வீரன் கார்த்தி நடிப்பில் "சிறுத்தை" யாக வருகிறது.

6. Aarya(Telugu): அல்லு அர்ஜுன் நடித்த படம். காதலர்களை ஹீரோ பயங்கரமா கலாக்கிரதுதான் படம். பயங்கர ஜாலியாப் போகும் படம். இந்த படம் தான் தனுஷ் நடிப்பில் "குட்டி" யாக ரிலீஸ் ஆகப் போகுது.

7. KICK (Telugu): இதுவும் ரவி தேஜாவோட அக்மார்க் ஆக்ஷன் + காமடி படம். நம்ம ஊர் ஷாம் போலீஸ் ஆபீஸ் ஆ வருவார். இது தான் ஜெயம் ரவி நடிப்பில் "தில்லாலங்கடி" யா வரப் போகுது.

8. Taata Birla (Telugu): சிவாஜி, நாகேந்திர பிரசாத்(வாசகி படத்துல ஹீரோ வா வருவார் அவர்தான்), லயா (சாணக்யா, கஜேந்திரா படத்துல நடிச்சவர்) நடிச்ச புல் காமடி படம். நம்ம ஊர் டாடா பிர்லா கதைதான். ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர இந்த படம் கேரன்ட்டி.

9. Evil Dead(All Parts): பேய் படம் அப்படின்னு சொன்னாலே intha padam thaan gnabakam varum. த்ரில்லேர் படம். நான் உண்மையிலேயே பயந்தேன்.

10 . Winners and Sinners: Jacki Jhan நடித்தது. ஆக்ஷன் + காமடி மொவயே. விஜய் டி. வீ ல அடிக்கடி போடுவாங்க.

இன்னும் நிறைய இருக்கு. டைம் கிடைக்கும் பொது சொல்றேன். இதுக்கு அப்படியே பின்னூட்டம் போட்டு போங்களேன்.

3 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

test

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

மாற்று மொழிப் படங்களிக் கண்டு ரசித்து இடுகை இட்டது நன்று நன்று

நல்வாழ்த்துகள் ரமேஷ்

நட்புடன் சீனா

Madhavan Srinivasagopalan சொன்னது…

வருஷத்துக்கொரு கமெண்டாவது இந்தப் பதிவுக்கு வேணும் போல..
இது ஆகஸ்ட் 2011..எனவே, இதோ இந்த கமெண்டு..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது