பிப்ரவரி 14 + ஒரு கல்லூரியின் கதை = நினைத்தாலே இனிக்கும்
சிவா(ப்ரித்வி), சக்தி(ஷக்தி), மீரா(ப்ரியாமணி), கார்த்தி(லொள்ளுசபா ஜீவா) மற்றும் வாசு(கார்த்தி குமார்) வகுப்பில் படிப்பவர்கள். வாசுவுக்கும் சிவாவுக்கும் ஆகவே ஆகாது. சிவாவும் மீராவும் காதலிக்கிறார்கள். காலேஜ் எலெக்சனில் சிவா வை பழி வாங்க வாசு மீராவையே சிவாவுக்கு எதிராக நிக்கும்படி செய்கிறான். மீரா எவ்வளவு சொல்லியும் சிவா மீரா மீது கோபம் கொள்கிறான்.
வாசு எலெக்சன் பெட்டியில் மீரா மற்றும் சிவா சேர்ந்து எடுத்த போட்டோவை போட்டுவிடுகிறான். சிவாதான் செய்ததாக நினைத்து வாசு எதிர்பார்த்த படியே சிவாவும் மீராவும் பிரிகின்றனர். அப்போது சக்தி ஜெனரேடர் ரூமில் இறந்து கிடக்கிறான்.
8 வருடம் கழித்து எல்லா நண்பர்களும் காலேஜில் சந்திக்கிறார்கள். அப்போது யாரோ சிவாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அனைவரும் வாசுவை சந்தேகப் படுகிறார்கள்.
சக்தியை கொலை செய்தது யார்? சிவாவை கொலை செய்ய முயன்றது யார்? மீராவும் சிவாவும் சேர்ந்தார்களா என்ற கேள்விக்கு நீ..............ண்ட நேரத்துக்குப் பிறகு விடை கிடக்கிறது. யார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.
படத்தில் உண்மையான ஹீரோ விஜய் ஆண்டனியும் ஒளிப்பதிவாளரும் தான்.
இந்த படத்திற்கு பிறகு நான் எடுத்த சில முக்கியமான முடிவுகள்:
1. சன் பிச்சர் படத்தை இனிமேல் தியேட்டரில் போய் பார்க்க கூடாது(அயன் விதிவிலக்கு)
2. சங்கம் தியேட்டரில் போய் படம் பார்க்க கூடாது(சங்கம் தியேட்டரில் நான் பார்த்த எல்லா படமும் மொக்கை. தென்றல், இதயத் திருடன், அ ஆ, பொக்கிஷம் மற்றும் நினைத்தாலே இனிக்கும்)
காதலில் விழுந்தேன் -- கிணத்துலையே விழலாம்
தெனாவெட்டு -- படம் பார்த்த எல்லோருக்கும் ஒரு தெனாவெட்டு தான்(நாங்களும் உயிரோடு இருக்கம்ல படம் பார்த்துட்டு)
தீ -- அடியில தீயப் பத்தவச்ச மாதிரி இருந்தது
மாசி(ல்)லாமணி -- கொஞ்சம் அழுக்குதான்
திண்டுக்கல் சாரதி- தியேட்டர்ல திண்டுகள் பூட்டுதான்
நினைத்தாலே இனிக்கும் -- சுகர் பேசன்ட்டுக்கு மட்டும்
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
4 கருத்துகள்:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
test
நல்ல வித்தியாச பார்வை, சன் டிவி படங்களின் மேல். :-))
அன்பின் ரமேஷ்
நல்ல்தொரு சிந்தனை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கருத்துரையிடுக