Horoscope

ஞாயிறு, ஏப்ரல் 25

சினிமா புதிர்கள்

உங்கள் சினிமா அறிவை சோதிக்க உங்களுக்காக சினிமா புதிர் போட்டி ஆரமிக்க போகிறேன். சரியாக பதில் சொல்பவர்களுக்கு என்ன பரிசு என்பதை கடைசியில் சொல்கிறேன். சரி இனி போட்டிக்கு வருவோம்.

1 ) பிரபுவும் விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
2 ) சேது திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரின் பெயர் என்ன?
3 ) ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஏதாவது படத்தின் பெயர் கூறவும்.
4 ) மணிரத்னத்தின் முதல் படத்தில் நடிக்க மறுத்த நடிகையின் பெயர் என்ன? (இன்றுவரை அந்த நடிகை அவரது இயக்கத்தில் நடிக்கவில்லை)
5 ) நடிகை ரோஜாவுக்கும், நதியாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?(ரெண்டுபேரும் நடிகைகள், பெண்கள் என்று சொல்லக்கூடாது)
6 ) S.J.சூர்யா உதவி இயக்குனராக இருந்து ஒரு பாண்டியராஜன் படத்தில் ஒரு காட்சிக்கு வருவார். அந்த படம் என்ன?
7 ) கஸ்தூரிராஜா + சிவாஜி கணேசன் = படம் பெயர்
8 ) காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த்சாமி,மாதுரி தீட்சித் நடிக்க விருந்த படத்தின் பெயர் என்ன?
9 ) முரளியின் தங்கையாக தேவயாணி நடித்த படம் என்ன?
10 ) கார்த்திக்கும் அவரது மனைவியும் திருமணம் செய்துகொள்ள உதவியாய் இருந்த படத்தின் பெயர் என்ன?
11 ) பிரபு + கார்த்திக் =4 படங்களின் பெயர்கள்
12 ) சரத்குமாரின் 99 வது படம் என பூஜை போட்டு நின்று போன போலீஸ் திரைப்படத்தின் பெயர் என்ன?
13 ) அஜித் + கே.எஸ்.ரவிகுமார் = படத்தின் பெயர்(இதில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
14 ) சத்யராஜ் இயக்கிய படம் எது?
15 ) இளைய தளபதி விஜய் ஒரு ரஜினிகாந்த் படத்தில் நடித்திருப்பார். அந்த படம் என்ன?

இந்த 15 கேள்விக்கும் சரியாக பதில் சொல்லும் புத்திசாலி பதிவர்களுக்கு

முதல் பரிசு: 52" இன்ச் கலர் டிவி
இரண்டாம் பரிசு: ஏசெர் லேப்டாப்
மூன்றாம் பரிசு:  2 Wheeler

இதெல்லாம் உங்க வீட்டுலையே இருப்பதால் நானும் அதையே கொடுத்து உங்களை அசிங்கப் படுத்த விரும்பவில்லை. அதனால் உங்களுக்கு.......

.

.

.

.

.

.

.

.

.

.

"ஆசை தோசை அப்பளம் வடை" விருது கொடுக்கலாம் என இருக்கிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?

20 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனக்கு அப்பளம் வேண்டாம்

வெங்கட் சொன்னது…

பாஸ்..,
கடைசில நீங்க கொடுத்த
சொம்பை கூட மன்னிச்சிடறோம்..
அந்த கேள்விக்கெல்லாம்
என்ன விடைன்னு கடைசில
சொல்லுங்க..
மண்டையே வெடிச்சிடும்
போல இருக்கு..!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ramesh சார் ரூம் போட்டு
யோசிப்பிங்க்களா
எனக்கு தெரிந்த பதில்
14 - வில்லாதி வில்லன்
(இந்த படத்தில நான் ஒர்க் பன்னியிருக்கேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கேஆர்பிசெந்தில்
நான் உங்களுக்காக வட்ட அப்பளம், ஸ்டார் அப்பளம், முக்கோண அப்பளம், சதுர அப்பளம்னு வித்தியாசம் வித்தியாசமாக வாங்கி வச்சுருக்கேன். இப்படி பொசுக்குன்னு வேண்டாம்னு சொல்லிடீங்களே. அப்புறம் அப்பளத்துக்கெல்லாம் பயோடேடா எழுதகூடாது. ஓகே வா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெங்கட்
முதியோர் கல்வில இருக்குற உங்க பிரண்ட் அனுகிட்ட கேட்டாவது எழுதுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@மணி
விவேக்: 14 கேள்விக்கும் சரியான பதில் சொன்னா ஒரு கோடி ரூபாய்.
மயில்சாமி: அப்ப முதல்லையே 14 வது கேள்விய கேட்டா நான் பரிசு வாங்கிட்டு போயிடுரனே.

அந்த மாதிரி நீங்க 14 வது கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா எல்லாம் பரிசு கொடுத்துட மாட்டேன். வில்லாதி வில்லன் படத்தில் வேலை செய்ததற்கு வாழ்த்துக்கள். எனக்கு அந்த படம்(பூ சத்யராஜ்) ரொம்ப பிடிக்கும்.

பிரபாகர் சொன்னது…

அப்பளம் அப்புறம், மொதல்ல பதில் சொல்லுங்கப்பு! நாட்டுக்கு எவ்ளோ முக்கியம்...!

பிரபாகர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிரபாகர் சார் வெயிட் பண்ணுங்க விடை கிடைச்சதும் உங்களுக்கு சொல்றேன்

SShathiesh-சதீஷ். சொன்னது…

இது சிரிப்பு போலிஸ் இல்லை விவகாரமான போலிஸ் ஆளைவிட்டா சாமி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சதீஷ் இதுக்கே இப்படியா இன்னும் இருக்கு நிறையா...

KVR சொன்னது…

தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்

2. விக்னேஷ்
3. சிவப்பு மல்லி
4. சுஹாசினி :-)
6. நெத்தி அடி
7. வீரத் தாலாட்டு
8. என்ஜினியர்
9. கண்ணுக்குக் கண்ணாக
10. சோலைக்குயில்
11. அக்னி நட்சத்திரம், உரிமை கீதம், தை பொறந்தாச்சு, குஸ்தி
12. 1977
13. பகைவன்
14. வில்லாதி வில்லன்
15. வெற்றி படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார். ஆனால், படத்தின் கதாநாயகன் விஜயகாந்த். கேள்வி தப்பா பதில் தப்பான்னு தெரியல. விஜய் நடிச்சது அவங்க அப்பா இயக்கின படம் தான். அவங்க அப்பா இயக்கத்திலே ரஜினி நடிச்சது “நான் சிவப்பு மனிதன்”. அந்தப் பட ஷூட்டிங்ல விஜய் ரஜினி கூட ஃபோட்டோ எடுத்திருக்கார், ஆனா கூட நடிக்கலைன்னு நினைக்கிறேன்.

மிச்ச ரெண்டுக்கு அரை அப்பளம் கழிச்சிக்கோங்க

KVR சொன்னது…

5. ரெண்டு பேரும் கமலுக்கு ஜோடியா நடிச்சதில்லை (சரியா?)
1. ஒரு 3D படம் நடிச்சாரே, அதுவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ KVR
வருகைக்கு நன்றி. 3 பதில்கள் தப்பு. அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நண்பா கடைசி கேள்வி சரியா தப்பா? முடிவு பண்ணுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@KVR

உங்களுக்கு நொறுங்கின அப்பளம்தான் கிடைக்கும் . பரவா இல்லையா ?

KVR சொன்னது…

//உங்களுக்கு நொறுங்கின அப்பளம்தான் கிடைக்கும் . பரவா இல்லையா ?
//

பரவாயில்லை கொடுங்க. பாயசத்தில் போட்டு மிக்ஸ் பண்ணி அடிச்சிக்கிறேன்.

அப்பப்போ இப்படி மண்டை காய வைக்கிற சினிமா புதிர்கள் போடுங்க :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிச்சியமா KVR இனி ரெகுலரா எதிர்பார்க்கலாம்..

KVR சொன்னது…

பதில்களுக்கு வெயிட்டிங்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1 ) பிரபுவும் விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
- காலையும் நீயே மாலையும் நீயே
2 ) சேது திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரின் பெயர் என்ன?
- விக்னேஷ்
3 ) ராமநாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ஏதாவது படத்தின் பெயர் கூறவும்.
- சிவப்பு மல்லி
4 ) மணிரத்னத்தின் முதல் படத்தில் நடிக்க மறுத்த நடிகையின் பெயர் என்ன? (இன்றுவரை அந்த நடிகை அவரது இயக்கத்தில் நடிக்கவில்லை)
-சுஹாசினி
5 ) நடிகை ரோஜாவுக்கும், நதியாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?(ரெண்டுபேரும் நடிகைகள், பெண்கள் என்று சொல்லக்கூடாது)
- இருவரும் கமலுடன் நடிக்கவில்லை.
6 ) S.J.சூர்யா உதவி இயக்குனராக இருந்து ஒரு பாண்டியராஜன் படத்தில் ஒரு காட்சிக்கு வருவார். அந்த படம் என்ன?
-நெத்தியடி
7 ) கஸ்தூரிராஜா + சிவாஜி கணேசன் = படம் பெயர்
- என் ஆச ராசாவே
8 ) காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த்சாமி,மாதுரி தீட்சித் நடிக்க விருந்த படத்தின் பெயர் என்ன?
- எஞ்சினியர்
9 ) முரளியின் தங்கையாக தேவயாணி நடித்த படம் என்ன?
- கண்ணுக்கு கண்ணாக
10 ) கார்த்திக்கும் அவரது மனைவியும் திருமணம் செய்துகொள்ள உதவியாய் இருந்த படத்தின் பெயர் என்ன?
- சோலைக்குயில்
11 ) பிரபு + கார்த்திக் =4 படங்களின் பெயர்கள்
- குஸ்தி, தை பொறந்தாச்சு ,அக்னி நட்சத்திரம், உரிமை கீதம்
12 ) சரத்குமாரின் 99 வது படம் என பூஜை போட்டு நின்று போன போலீஸ் திரைப்படத்தின் பெயர் என்ன?
- காக்கி
13 ) அஜித் + கே.எஸ்.ரவிகுமார் = படத்தின் பெயர்(இதில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
- பகைவன்
14 ) சத்யராஜ் இயக்கிய படம் எது?
- வில்லாதி வில்லன்
15 ) இளைய தளபதி விஜய் ஒரு ரஜினிகாந்த் படத்தில் நடித்திருப்பார். அந்த படம் என்ன?
- நான் சிவப்பு மனிதன்(காந்தி தேசமே பாட்டுக்கு கோடி அசைப்பார்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பதினோரு கேள்விகளுக்கு சரியான பதில்கள் சொல்லி அண்ணன் KVR அவர்கள் நொறுங்கின அப்பளத்தை பரிசாக பெறுகிறார். அண்ணனுக்கு ஒரு ஜே போடுங்க. நன்றி KVR.

KVR சொன்னது…

//இளைய தளபதி விஜய் ஒரு ரஜினிகாந்த் படத்தில் நடித்திருப்பார். அந்த படம் என்ன?
- நான் சிவப்பு மனிதன்(காந்தி தேசமே பாட்டுக்கு கோடி அசைப்பார்)
//

வட போச்சே :-)

ஒண்ணாவது கேள்வி தவிர மத்ததெல்லாம் கன்ஃபியூஷன்ல மிஸ் ஆனது தான். அடுத்த தடவை ஒரு கை பார்த்திடுறேன் :-)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது