திங்கள், ஏப்ரல் 26

ரத்ததானம் - திரைவிமர்சனம்

பிரபு, கெளதமி, லக்ஷ்மி, சிவசந்திரன், சாதனா, Y. விஜயா, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டு,நிழல்கள் ரவி, ஜெய்கணேஷ் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் சிவசந்திரன். தயாரிப்பு லக்ஷ்மி. 1988 வது வருடம் வெளியானது.ஒரு படத்தில் வடிவலு பேப்பர் படிச்சிக்கிட்டு இருப்பார். அதில் அடுத்தவருக்கு உதவி செஞ்சா உபத்திரத்தில் முடியும்ன்னு போட்டிருக்கும். வடிவேலு சொல்லுவார் "ஆமா அடுத்தவனுக்கு உதவி செஞ்சா மூத்திரத்தில முடியும். ஏண்டா அது எப்படிடா உதவி செஞ்சா உபத்திரத்தில் முடியும்ன்னு கேப்பார்".

அந்த மாதிரி அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் மூத்திரத்தில் சாரி உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளும் மூன்று இளைஞர்களின் கதை இது. (இந்த படம் வரும்போது பிரபு சத்தியமா இளைஞன்தான்).

பிரபு, மனோ(புதுமுகம்), சந்திரகாந்த் வேலை தேடி சென்னை வர்றாங்க. மூணு பேரும் நல்ல நண்பர்கள். அவங்களுக்கு லக்ஷ்மி தங்குறதுக்கு இடம் கொடுக்குறாங்க. லஷ்மி வீட்டுல போட்டு கொடுக்குற வடை,அதுரசம் எல்லாத்தையும் தெருவுல விக்கிறாங்க. கெளதமியும் உதவியா இருக்காங்க.

கெளதமிக்கும், பிரபுவுக்கும் கல்யாணம். கல்யாணத்துக்கு முதல் நாள் மூணு பேரும் சாகக்கிடக்குற சாதனாவ(Y.விஜயா வோட மகள்) மருத்துவமனையில சேக்குறாங்க. ஆனா அந்த பொண்ணு போலீஸ் கிட்ட அந்த மூணு பேரும்தான் என்ன கெடுக்க முயற்சிபண்ணினாங்க அப்படின்னு சொல்லிடுது. இதனால போலீஸ் மூணு போரையும் அரெஸ்ட் பண்ணிடுறாங்க.

அந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லுச்சு என்பதை சிவசந்திரன்(போலீஸ்) விசாரித்து உண்மையை கண்டுபிடிக்கிறார். அதை விறுவிறுப்பாகவும், போரடிக்காமலும் இயக்குனர் படத்தை கொண்டு போயிருக்கார்.இதில் லக்ஷ்மியின் கணவராக சந்திரசேகர் பிளாஸ்பேக்கில் வருகிறார். Y.விஜயா வின் கணவருக்கு எதிராக சந்திரசேகர் வாதாடியதிர்க்காக Y.விஜயா ஜெய்கணேஷ் யை வைத்து அவரை கொன்று கொன்றுவிடுகிறார்.  பின்னர் அடுக்கடுக்காக கொலைகள் நடக்கிறது. சந்திரகாந்த், மனோ, Y.விஜயா என எல்லோரும் கொல்லப் படுகின்றனர். லக்ஷ்மியையும் அடித்து காயப்படுத்துறாங்க.

யார் கொலைகாரன், எதற்கு இத்தனை கொலைகள் என தெரிந்துகொள்ள படத்தை பாருங்கள்.

பாடல்கள் ஒன்னும் சூப்பர் ரகமில்லை. எஸ்.எஸ்.சந்திரன் காமெடியும் சொல்லிகொள்ளும்படி இல்லை. முடிந்தால் இந்த படத்தை ஒருதடவை பாருங்கள்.

3 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சிரிப்பு போலிசுன்றதுக்கு இப்புடியா.
ஆமா இந்த படம் எங்க ஓடுது ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Online ல தேடிப்பாருங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பதிவு அருமை.... விரிவான அலசல்.... (திரட்டி 0)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது