திங்கள், மே 10

பதிவர்களின் டைரி - 5

21 ) அவிய்ங்க(http://aveenga.blogspot.com/)
கோவக்கார இளைஞன். தான் பார்த்த நாம்மால் முடியாது என்கிற ஏக்கத்தை பிரதிபலிக்கும் நண்பர். இவரது படைப்புகளில் கோபம் கொப்பளிக்கும். நமக்கும் கூட நம் சமூகம் இப்படி இருக்கிறதே என்ற ஏக்கத்தை தாக்கத்தை உண்டு பண்ணும் நண்பர்.

22 ) இனியவன்(http://www.iniyavan.com)
நாட்டு நடப்பு, சினிமா, அரசியல் என எல்லா துறைகளிலும் கட்டுரைகள் எழுதுகிறார். படித்து பாருங்கள்.

23 ) என் நடை பாதையில்(http://shelpour.blogspot.com/2010/03/2006-2010.html)
கோவை P.S.G tech இல் எஞ்சினியரிங் படிக்கும் மாணவன். வசிப்பது திருப்பூரில். கம்ப்யூட்டர் தகவல்கள், மென்பொருள்கள் பற்றி எழுதுகிறார்.

24 ) ஏதோ என்னால முடிஞ்சது(http://dharmendiran.blogspot.com/)
அவரது வாழ்வியல் நிகழ்வுகளை கொஞ்சம் நகைச்சுவையாக எழுதுகிறார்.

25 ) பேநா மூடி(http://peenamoodi.blogspot.com)
அழகாக எழுதும் அன்பு நண்பர். இவரை பற்றி நான் சொல்வதைவிட (அட என்ன சொல்றதுன்னு தெரியலைப்பா) இவரது பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


கொறிக்க:

சோவியத் திரைப்பட கலைஞர்கள் ஒருமுறை தமிழகத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு தமிழக திரைப்பட ஸ்டுடியோக்களை சுற்றிக்காட்டும் பொறுப்பு கலைவாணர் N.S.கிருஷ்ணனிடம் கொடுக்கப்பட்டது.

அவர் சுற்றிக்காட்டும்போழுது இது இங்கிலாந்தில் செய்தது, இது ஜப்பானில் செய்தது, இது லண்டனில் செய்தது என வெளிநாடுகளின் பெயரை சொல்லிக்கொண்டு வந்தார். இதைக்  கேட்ட ஒரு சோவியத் கலைஞர் உங்கள் ஊரில் ஒன்றும் செய்யவில்லையா என கேட்டார்.

இதனால் தர்மசங்கடமான NSK நிலைமையை சமாளித்தபடி "இந்த ஸ்டுடியோவில் உள்ள சுவர்களை நாங்கள்தான் கட்டினோம், இந்த மரங்களை நாங்கள்தான் நட்டினோம், இங்கு நிற்கின்ற கார்களின் டயர்களுக்கு நாங்கதான் காற்று அடித்தோம்" என நகைச்சுவையாக கூறினார். கேட்டவர்களோ NSK யின் நகைச்சுவையை ரசித்து பாராட்டினர்.10 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்ல தொகுப்பு நண்பா.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கொறிக்க குடுத்தது நல்லா இருக்குங்க ..

Chitra சொன்னது…

Good ones. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ராம்ஸ்
@ நன்றி கே ஆர் பி செந்தில்
@ நன்றி சித்ரா

பட்டாபட்டி.. சொன்னது…

ஹி..ஹி..ரமேஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஏன் பட்டா சிரிப்பு. என் எழுத்துள் என்ன பிழை கண்டீர்.

ஜானகிராமன்.நா சொன்னது…

கொறிக்க மேட்டர்: ஏய் சூப்பர்பா... நீ இப்படி எழுதி பாத்ததே இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்ன ஜானகி இப்படி சொல்லிடீங்க. நான் எல்லா பதிவுலையும் எழுதுரனே.

GD சொன்னது…

கொஞ்ச‌ம் வேலை அதிகம் இன்றைக்குதான் நான் பார்த்தேன்
என்ன‌ ர‌மேஷ் என்னயும் லிஸ்ட்ட‌ சேத்து.. ரொம்ப‌ புல்ல‌ரிக்குது போங்க‌..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அட..ஆமாம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது