புதன், மே 12

நானும் மொக்கைப் படங்களும்

கல்லூரியில் படிக்கும்போது ஆர்வக்கோளாரில் நிறைய மொக்கை படங்களுக்கு போய் பல்பும், தலைவலியும் வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. (உன் பதிவை படிக்கிறதே மொக்கை. அதிலும் மொக்கை படங்களா அப்டின்னு யாரும் கமான்ட் போடக்கூடாது)

1) மோனிஷா என் மோனலிசா

இது வரைக்கும் எந்த ஒரு படத்துக்கும் பாதியில் நான் எழுந்து வந்ததில்லை. ஆனால் நான் முதன் முறையாக  பாதியில் எழுந்து வந்த மகா காவியம் இந்த படம். இந்த படம் பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம். இயக்குனர் ஏன் இந்த படம் எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

2 ) விவரமான ஆளு

சத்யராஜ், தேவயாணி,விவேக்,மும்தாஜ் என்ற கூட்டணிக்காக போன படம். டிக்கெட் எடுக்கும்போது எனக்கு என் நண்பனோட அண்ணன் எனக்கு டிக்கெட் எடுத்தாங்க. இடைவேளைக்கு அப்புறம் வாடா போகலாம், படம் ரொம்ப மொக்கை அப்டின்னு என்னை கூப்ட்டார். விதி விட்டாதான. பார்த்துட்டு வர்றேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டேன். கொடுமையான படம் இது.

3 ) கும்மிப்பாட்டு

 வீரத்தாலாட்டு படம் ஹிட். அதுக்கப்புறம் வந்த கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த படம். அப்பப்பா படம் படு மொக்கை. முடியலை.

4 )உளவுத்துறை

விஜயகாந்தின் 125 வது படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் படம் படு மோசம். தாங்கமுடியாத தலைவலியை தந்த படம்.

5 ) உன்னைக்கொடு என்னைத் தருவேன்

அஜித், சிம்ரன், R.B.சௌத்ரி கூட்டணி என் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்.

உங்களுக்கு பிடித்தால் நீங்களும் பல்பு வாங்கின படத்தை ஷேர் பண்ணிக்கலாமே. வாங்க பல்பு வாங்கலாம். பிடிச்சா சொல்லுங்க அடுத்த லிஸ்ட் கொடுக்குறேன்.

12 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

:-(

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அடுத்த லிஸ்ட்டா
அய்யா சாமி ஆளை உடு....

பேநா மூடி சொன்னது…

Nanbaa.. Idhe thalaippil nan bulb vangiya padangalai patri oru naalu maasathuku munnar eludhi iruken.. Mudinjal padichu ensaai pannunga..

முகிலன் சொன்னது…

இதுல உளவுத்துறைய சேத்துக்கிட்டதை என்னால ஏத்துக்கிட முடியலை.. என்ன ஒரு காமெடிப் படம் அது.. அதப் போயி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ராம்ஸ் நீ என்ன சொல்ல வர்ற?
@ மணி சார் இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு..
@ ஆனந்த் (பேனா மூடி) நான் பொய் பாக்குறேன். அப்படியே லிங்க் கொடுத்திருக்கலாமே. வேலை எப்டி போகுது?
@ யாரப்பா இது முகிலன் வீட்டுக்கு அனுப்ப ஒரு விஜயகாந்த் பட லிஸ்ட் எடு..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மொக்கை பதிவர் வந்திடாருபா ....

அனு சொன்னது…

//திருநேல்வேல்யில் ராம், முத்துராம் திரையரங்கு புதிதாக திறந்ததால் அதை பார்ப்பதற்காக போன படம். படம் சூப்பர் மொக்கை. நான் அழுதுட்டேன்//

சேம் தியெட்டர்
சேம் படம்
சேம் ப்ளட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாத்தீங்களா அனு நாமா எல்லா விசயத்துலையும் ஒற்றுமையா இருக்கோம். சில விசக்கிருமிகள்(வெங்கட்டை சொல்லல) பேச்சை கேக்காதீங்க.

www.thalaivan.com சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Muneeswaran சொன்னது…

அஞ்சு படத்துல உளவுத்துறையை மட்டும் பார்க்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமை எனக்கு அமைஞ்சது. மரண மொக்கை. அந்தப் படம் பாத்ததுக்கு அப்புறம் விஜயகாந்தை பாத்தாலே பூச்சாண்டியை பாத்த குழந்தை மாதிரி ஓட ஆரம்பிச்சுட்டேன். அப்புறமா ரமணா பாத்து கொஞ்சம் சமாதானம் ஆனேன்.

Jayadeva சொன்னது…

இனிமே மொக்கை படம் வந்தா உடனே தெரியப் படுத்துங்க, நாங்க தப்பிச்சுக்குவோம். கடந்த காலத்துப் படத்த இப்போ சொல்லி எதுக்கு பிரயோஜனம்?

Sriram சொன்னது…

சுறா மாதிரியான வந்த, வர போகின்ற டாக்டர் அவர்களின் படங்களை பற்றி எச்சரிக்கை செய்வதை விட்டு இப்படி பழைய படங்களை வைத்து மொக்கை போடாதீர் please

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது