புதன், ஜூன் 16

புதுமைப் பெண்


ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட நண்பரை சந்திக்க போயிருந்தேன். ரெண்டுபேரும் ஒரு டீக்கடைல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு பொண்ணு ஷர்ட்டும், பேண்ட்டும் போட்டு போய்கிட்டு இருந்தாங்க. அப்ப அந்த நண்பன் சொன்னான். இதெல்லாம் நல்ல பொண்ணே இல்லடா.

நான் கேட்டேன் "ஏன்டா இப்படி சொல்ற?உன் சொந்தக்கார பொண்ணா?". இல்லடா டிரஸ்ஸ பாரு ஆம்பளைங்க மாதிரி. இதெல்லாம் உருப்படவே உருப்படாது அப்டின்னு சொன்னான். எனக்கு சுர்ருன்னு கோவம் வந்திடுச்சு(நான்தான் தாய்க்குலங்களை ரொம்பவும் மதிக்கிற ஆளாச்சே-அனு கவனிக்கவும்). டிரஸ்ஸ வச்சு நீ எப்படி ஒரு பொண்ணோட கேரக்டர எடை போடலாம். நீ சொல்றது ரொம்ப தப்பு அப்டின்னு சொன்னேன்.

நண்பன்: இல்லடா சுடிதார், சேலை,தாவணி போட்டாதான் பொண்ணுங்க. இல்லைனா வேஸ்ட்.
நான்: சுடிதார், சேலை,தாவணி போட்டா அழகா இருப்பாங்கன்னு சொல்ல வர்றியா?
நண்பன்: இல்ல சுடிதார், சேலை,தாவணி போட்டாதான் நல்ல பொண்ணுங்க.
நான்: உன் கருத்துக்கு நான் உடன்பட வில்லை. உங்க வீட்ல இந்த மாதிரி டிரஸ் பண்ணினா என்ன பண்ணுவ.
நண்பன்: அடி பின்னிடிவேன்.
நான்: இது ஆணாதிக்கம்தான். ஒரு பொண்ணு என்ன டிரஸ் போடணும்ன்னு முடிவு பண்ண நீ யாரு?
நண்பன்: அது வந்து.
நான்: நீ என்ன டிரஸ் போடணும்னு நாங்க சொன்ன ஏத்துப்பியா?
நண்பன்: இல்லை
நான்: அப்ப பொண்ணுங்கண்ணா உனக்கு அவ்ளோ இளப்பமா?

அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் பயங்கர வாக்குவாதம். சிலதை எழுத முடியாது. இவன் மட்டுமில்லைங்க நிறைய பேரு இப்படிதான் நினைக்கிறாங்க. ஒரு பொண்ணு ஆபாசமாவோ, கவர்ச்சியாவோ டிரஸ் பண்ணினா குத்தம் சொல்லுங்க. அதை விட்டுட்டு மார்டன் டிரஸ் போட்ட பொண்ணுங்க எல்லாம் தப்புன்னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும்.

இன்னொரு நண்பருக்கு கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோ அனுப்பினாங்க. போட்டோவுல அந்த பொண்ணு மார்டன் டிரஸ் போட்டிருக்குன்னு சொல்லிட்டு அந்த நண்பர் வேணாம்ன்னு சொல்லிட்டாராம். அதுக்கு அவர் சொன்ன பதில் "பொண்ணு பேன்ட், ஷர்ட் போட்டிருக்கு. நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. போட்டோவுல சேலை கட்டி எடுத்திருக்கலாம்ல" (ஆமா இவரு பெரிய லார்டு லபக்கு தாஸ் பேமிலி)

இந்த மாதிரி ஜென்மங்கள் எப்ப திருந்துமோ தெரியலடா சாமி......31 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

பெண்ணியவாதி ரமேஷ் வாழ்க :-).

Chitra சொன்னது…

புல்லரிச்சு போச்சு, சிரிப்பு போலீஸ்.....

:-)

அருண் பிரசாத் சொன்னது…

ரமெஷ், போன பதிவுல செய்த DAMAGE அ சரிசெய்யறீங்க போல. அனு உங்களை அப்போதே மன்னிச்சிட்டாங்க. ஒரு பதிவ DAMAGE CONTROL க்கு WASTE செய்துட்டிங்க

அப்பாவி தங்கமணி சொன்னது…

கஷ்டம் தான்... இந்த காலத்துல இப்படியா

King Viswa சொன்னது…

நான்கூட ஏதோ புரட்சித்தலைவி பதிய பதிவோ என்று நினைத்தேன்.

நீங்க இவ்வளவோ நல்லவரா ரமேஷ்?

பாருப்பா, இந்த புள்ளைக்கும் உள்ளார ஏதோ இருந்திருக்கு.

அருண் பிரசாத் சொன்னது…

எல்லாத்துக்கும் காரணம் இந்த வெங்கட் அ சொல்லனும் சீரியஸ் பதிவு போடாதயான கேட்டா தானே. இப்ப எல்லோரும் சீரியஸ் ஆகியாச்சி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி ராம்ஸ்
@ நன்றி சித்ரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அனு உங்களை அப்போதே மன்னிச்சிட்டாங்க//

ஐ சங்க தலைவி என்னை மன்னிச்சிட்டாங்களா. சூப்பர்.

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

ரமேஷ் ஒண்ணு சொல்லவா ? சரி வேணாம் போ...

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

பெண்ணாதிக்கவாதி ரமேஷ் வாழ்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அப்பாவி தங்கமணி
ஆமாங்க இப்படியும் சில ஜென்மங்கள் இருக்குதுங்க

@ கிங் விஸ்வா - என்னை ரொம்ப புகழாதீங்க. ஒரு கேள்வி கிடைக்கலை அதனால இன்னிக்கு உங்க பதிவு வரலை.

//எல்லாத்துக்கும் காரணம் இந்த வெங்கட் அ சொல்லனும் சீரியஸ் பதிவு போடாதயான கேட்டா தானே. இப்ப எல்லோரும் சீரியஸ் ஆகியாச்சி.//

ஆமா அதான் காரணமோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி வசந்த் மாப்ளே

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

////(நான்தான் தாய்க்குலங்களை ரொம்பவும் மதிக்கிற ஆளாச்சே-அனு கவனிக்கவும்). //////

அதைத்தான் ரொம்ப நேரமா கவனிக்கிறேன்

Jey சொன்னது…

மகளிர் சங்கத்திலிருந்து ஏதாவது, காரியம் ஆகவேண்டியிருக்குதா?.
ஆகட்டும். ஆகட்டும்!!!>

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪

//மகளிர் சங்கத்திலிருந்து ஏதாவது, காரியம் ஆகவேண்டியிருக்குதா?.
ஆகட்டும். ஆகட்டும்!!!>//

ஆமா ஜெய்

Phantom Mohan சொன்னது…

நான்: இது ஆணாதிக்கம்தான். ஒரு பொண்ணு என்ன டிரஸ் போடணும்ன்னு முடிவு பண்ண நீ யாரு?
////////////////////////////

அதக் கேக்க நீங்க யாரு?

ஒரு ஆணை எதிர் கேள்வி கேட்டு மடக்கிய நீங்கள்ளும் ஒரு ஆணாதிக்கவாதி, கேள்வியாதிக்கவாதி, மடக்கியாதிக்கவாதி!

என் காட்டுத்தனமான கண்டனங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு ஆணை எதிர் கேள்வி கேட்டு மடக்கிய நீங்கள்ளும் ஒரு ஆணாதிக்கவாதி, கேள்வியாதிக்கவாதி, மடக்கியாதிக்கவாதி!//

எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுறாங்களே...

KATHIR = RAY சொன்னது…

//அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் பயங்கர வாக்குவாதம். சிலதை எழுத முடியாது. //

Enna Vaakuvaadham Paneenganu Adhutha Padhivu Eludhunga.

Ellorum Derinjukattum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Enna Vaakuvaadham Paneenganu Adhutha Padhivu Eludhunga.
//

sollidalaam

வால்பையன் சொன்னது…

நல்ல பொண்ணு, கெட்ட பொண்ணு!
சர்டிபிகேட் கொடுக்குற கம்பெனி வச்சிருக்காரா உங்க நண்பர்!

ஜெயந்தி சொன்னது…

கரெக்டா சொன்னீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நல்ல பொண்ணு, கெட்ட பொண்ணு!
சர்டிபிகேட் கொடுக்குற கம்பெனி வச்சிருக்காரா உங்க நண்பர்!//

இருக்கும் இருக்கும்

@ நன்றி ஜெயந்தி

அனு சொன்னது…

//நான்தான் தாய்க்குலங்களை ரொம்பவும் மதிக்கிற ஆளாச்சே-அனு கவனிக்கவும்//

ம்ம்ம்.. கவனிச்சாச்சு.. கவனிச்சாச்சு..

நியாயமான ஒரு பதிவு போட்டதால மன்னிச்சு விட்டுட்டேன்..

சண்டை போட்டு உங்களை ஒரு பிரபல பதிவர் ஆக்கலாம்னு பார்த்தேன்.. ஆனா, விதி வலியது. நீங்களே வேணாம்-ன்றீங்க.. என்ன பண்ணுறது..

பி.கு:
நேத்து நைட் பார்க்கும் போது இந்த போஸ்ட் இல்ல..ஆனா, இப்போ நேத்து dateல போஸ்ட்+கமெண்ட்ஸ் இருக்குது.. எப்படி??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நியாயமான ஒரு பதிவு போட்டதால மன்னிச்சு விட்டுட்டேன்.//
ரொம்ப நன்றிங்க
//சண்டை போட்டு உங்களை ஒரு பிரபல பதிவர் ஆக்கலாம்னு பார்த்தேன்.. //
மறுபடியும் ஒரு பதிவு சிக்காமலா போயிடும்

//நேத்து நைட் பார்க்கும் போது இந்த போஸ்ட் இல்ல..//

இல்லியே அனு நேத்து சாயந்தரம் ஆறு மணிக்கே பதிவு போட்டாச்சு

அனு சொன்னது…

//இல்லியே அனு நேத்து சாயந்தரம் ஆறு மணிக்கே பதிவு போட்டாச்சு//

ஓ.. நான் தான் என் time machineல டைம் கரெக்ட்டா செட் பண்ணல போல..

என்ன எல்லோரும் சீரியஸ் பதிவா போட ஆரம்பிச்சுட்டீங்க? எங்க போனாலும் கொசுத்தொல்லை தாங்கல.. என்னை கமெண்ட் போட விடக்கூடாதுன்னு எதாவது உள்நாட்டு சதி நடக்குதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விடுங்க அனு இனிமே எந்த பதிவு போட்டாலும் நாம கலந்து கட்டி கலாய்க்கிறோம். டீலா நோ டீலா?

அனு சொன்னது…

//விடுங்க அனு இனிமே எந்த பதிவு போட்டாலும் நாம கலந்து கட்டி கலாய்க்கிறோம். டீலா நோ டீலா?//

ஜனா கிட்ட டோஸ் வாங்க நான் ரெடி.. நீங்க ரெடியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நம்ம ஜனாங்க பாத்துக்கலாம். வாங்க கலாய்க்கலாம்

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..,

போன பதிவுல நான் சொன்ன
அட்வைஸை அப்படியே
Follow பண்ண ஆரம்பிச்சிட்டீங்க
போல இருக்கே..

அந்த அட்வைஸ் இதோ..

// தாய்குலத்தோட ஆதரவு இல்லாமா
அரசியலா இருந்தாலும் சரி.,
சினிமாவா இருந்தாலும் சரி.,
Blog-ஆ இருந்தாலும் சர்..
எங்கேயும் ஜெயிக்க முடியாது.. //

ஆனா அதுக்காக இப்படியா
ஆஸ்கார் ரேஞ்சுக்கு Performance
குடுக்கறது..??

வெங்கட் சொன்னது…

@ அருண் & ரமேஷ்..,

//எல்லாத்துக்கும் காரணம் இந்த
வெங்கட் அ சொல்லனும்
சீரியஸ் பதிவு போடாதயான
கேட்டா தானே.
இப்ப எல்லோரும் சீரியஸ் ஆகியாச்சி.//

// ஆமா அதான் காரணமோ. //

அடபாவிகளா..? இது உங்களுக்கே
நியாயமா படுதா..?
ஒரு பச்சை புள்ள மேல
இப்படியா பாய்சன் தெளிக்கறது..??!!

கூப்பிடுங்க உங்க சங்க தலைவிய..
இதுக்கு ஒரு நியாயம் தெரிஞ்சாகணும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆனா அதுக்காக இப்படியா
ஆஸ்கார் ரேஞ்சுக்கு Performance
குடுக்கறது..??//

ஹி ஹி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

//ஒரு பச்சை புள்ள மேல
இப்படியா பாய்சன் தெளிக்கறது..??!! //

யாருப்பா அது....

//கூப்பிடுங்க உங்க சங்க தலைவிய..
இதுக்கு ஒரு நியாயம் தெரிஞ்சாகணும்.. //

இந்த மாதிரி சின்ன பிரச்சநிக்கெல்லாம் எங்க தலைவி வரமாட்டாங்க.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது