வியாழன், ஜூலை 1

நானொரு தெருவிளக்கு

//தொடர் பதிவுக்கு அழைத்த வசந்துக்கு நன்றி//

ஆண்டவன் புண்ணியத்தால இந்த தெருவிளக்கா மாறியாச்சு. அதுவும் இந்த ECR ரோட்டுல இருக்குறதுனால இந்த லவ் பண்ணுற பயபுள்ளைக அடிக்கிற தொல்லை தாங்க முடியல. இதுக்கிடையில அப்பப்ப நாயி வந்து உச்சா போய் நம்மள நாறடிச்சிடுது. கப்பு வேற தாங்க முடியல. நாயிக்கு வேற இடம் கிடைக்கலையா!!! ஒரு வேளை நம்மள நாறடிக்குரதுக்காக  வசந்த் அனுப்பின நாயா இருக்குமோ?

நானும் பாக்கறேன் ஒரு பய பைக்குல தனியா போக மாட்டேன்றான். இதுக்கு பேரு ECR ரோடா இல்லை கப்புள்ஸ் ரோடா? சரி வேலைக்கு போறவங்கதான் இப்படின்னா இந்த காலேஜ் படிக்கிற புள்ளைங்க இவங்களுக்கு மேல இருக்காங்க. அதுவும் அவங்க என் மேல சாய்ஞ்சுகிட்டு விடுற டயலாக் இருக்கே யப்பா நம்ம தமிழ் சினிமா தோத்துடும். தமிழ் சினிமா இயக்குனர்களே இனிமே டயலாக் வேணும்னா கொஞ்ச நேரம் எனக்கு பக்கத்துல நின்னு பாருங்க. நூறு படத்துக்கு தேவையான டயலாக் கிடைக்கும்.

அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.

சரி நம்மளும் ECR ரோட்டுலதான இருக்கோம்.நாமளும் எப்படியாவது பிரபலமா ஆயிடனும். நாம மனுசனா இருந்தா என்ன தெருவிளக்கா  இருந்தா என்ன. நமக்கு தேவை விளம்பரம். (தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சும்மாவா சொன்னாங்க.)

நாம பிரபலம் ஆகுறதுக்கு நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நம்மள பத்தி எழுத சொல்லலாமே. முதல்ல நம்ம செந்தில் அண்ணன் கிட்ட போவோம்.

தெருவிளக்கு(நான்): செந்தில் அண்ணே எப்ப பாத்தாலும் லிங்கன் தெருவிளக்குல படிச்சுதான் பெரிய ஆள் ஆனாருன்னு பழைய பல்லவியே பாடுறாங்க. புதுசா ஏதாவது பண்ணி என்ன பிரபலம் ஆக்குங்க.
கே.ஆர்.பி: என்கிட்டே மூணு வழிகள் இருக்கு. நான் பயோடேட்டா எழுதினா நீ பிரபலம் ஆயிடுவ. அப்புறம் கவிதை. அப்புறம் தெருவிளக்கு 18+ அப்படின்னு ஒரு வீடியோ போடணும்.
தெருவிளக்கு(நான்): ஓகே
கே.ஆர்.பி: முதல்ல பயோடேட்டா

//பெயர் : தெருவிளக்கு
இயற்பெயர் : அது சொன்னாதான் கரண்ட் பில் கட்டுவீங்களா?
நண்பர்கள்: ஆற்காடு மட்டுமே.
காணமல் போனவை : மாட்டி இருந்த பல்புகள்//

தெருவிளக்கு: வேற வேற
கே.ஆர்.பி: நீயே ஒரு தெருவிளக்கு குடும்பத்து குலவிளக்குன்னு ஒரு கவிதை போட்டுடலாம்.
தெருவிளக்கு: அப்புறம்
கே.ஆர்.பி: அப்புறம் உன்னை பத்தின நிர்வாண உண்மைகள் 18+ ன்னு ஒரு வீடியோ போட்டுடலாம்.
தெருவிளக்கு: இவரு நம்மகிட்ட இருக்குற எல்லாத்தையும் உருவிட்டு விட்டுருவாரு. ஜூட்.

அடுத்து நாம கேபிள் அண்ணனை பாப்போம்.

தெருவிளக்கு: வணக்கம் அண்ணே. நான் பேமஸ் ஆகணும் என்ன பண்ணலாம்
கேபிள்: அது ரொம்ப சின்ன விஷயம். தெருவிளக்குக்கு கீழ கொஞ்சம் இடம் ரெடி பண்ணி ஒரு சாப்பாட்டுக்கடை ஆரமிச்சு கொத்து புரோட்டா போடலாம். கூட்டம் பிச்சிக்கிட்டு வரும். அப்படியே நீயும் பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா நம்ம செலவுல இவரு சொந்தமா ஹோட்டல் ஆரமிச்சிடுவாரு போல. ) அண்ணா வேற ஏதாவது?
கேபிள்: தெருவிளக்கும் ரெண்டு இரண்டு ஷாட் பவர் கட்டும்னு ஒரு புத்தகம் வெளியிடலாம்.
தெருவிளக்கு: ஆகா நான் இந்த விளையாட்டுக்கு வரல. விடு ஜூட்.

அடுத்து யாருப்பா அது. அட கோகுலத்தில் சூரியன் வெங்கட். வாங்க வெங்கட் சவுக்கியமா?

வெங்கட்: சவுக்கியம்.
தெருவிளக்கு: ஆமா இந்த உச்சி வெயில்ல ஏன் டார்ச் கொண்டு வர்றீங்க.
வெங்கட்: நாங்கெல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகலாச்சே. அதான்.
தெருவிளக்கு: ஷ். இப்பவே கண்ணைக் கட்டுதே. நைட்ல தான் சூரியன்ல வெளிச்சம் இருக்காது. அப்பவேனா ட்ரை பண்ணுங்க. இப்ப நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு  ஐடியா கொடுங்க.
வெங்கட்: நீங்க ஆணாதிக்கவாதியா இல்ல பெண்ணாதிக்கவாதியா?
தெருவிளக்கு: எனக்கு ஒரு வியாதியும் இல்லியே.
வெங்கட்: ஐயோ நான் அத சொல்லல. நீங்க ஆம்பளைங்களுக்கு சப்போர்ட்டா இல்லா பொம்பளைங்களுக்கு சப்போர்ட்டா?
தெருவிளக்கு: நான் பேமஸ் ஆக ஐடியா கேட்டா நீங்க உங்க VKS-ச உடைக்குறதுக்கு ஆள் சேக்குறீங்களா?
வெங்கட்: அப்படின்னா நீங்க ஹாய் வெங்கட் பகுதிக்கு ஒரு கேள்வி கேட்டு அனுப்புங்க. நான் பதில் சொல்றேன். அப்புறம் இன்று ஒரு தகவல்ல தெருவிளக்கு ஒளி தரும் ஆனா ஒளி தர்ரதெல்லாம் தெருவிளக்கு ஆகாதுன்னு ஒரு பஞ்ச் வைக்கலாம். உடனே நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: பஞ்ச் டயலாக் வேணும்னா நான் பேரரசுகிட்டையே போயிடுவனே. விடு ஜூட்.

யாரு அங்க வர்றது. நம்ம பட்டாபட்டியா. வாங்க பட்டா. நான் பிரபலம் ஆகறதுக்கு ஒரு வழி சொல்லுங்க.

பட்டா: உங்களை(தெருவிளக்கு) காணோம். உங்களோட விலை 15,000 அப்டின்னு சொல்லி ஒரு விளம்பரம் கொடுப்போம். அப்புறம் போலீஸ் சீக்கிரம் கண்டு பிடிச்சிடுசுன்னு சொல்லி ஒரு பஞ்ச் வைப்போம். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு தெருவிளக்க தொலைச்சது ராகுல் காந்திதான். அதான் போலீஸ் சீக்கிரம் கண்டுபிடிச்சிடுசுன்னு சொல்லுவோம். ராகுல்காந்தி தொலைச்ச போஸ்டுன்னு பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: (ஆகா இந்த ஆளு நம்மள களி தின்னவிடாம போகமாட்டாரு போல. விடு ஜூட்)

யாருப்பா அது நாம்ம பன்னிக்குட்டி ராம்சாமி மாதிரி இருக்கு. பன்னிக்குட்டி ராம்சாமி நான் பேமஸ் ஆகிறதுக்கு ஒரு ஐடியா கொடுங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி: தெருவிளக்குன்னு ஒரு தலைப்ப மட்டும் நான் என்னோட ப்ளாக்குல போடுறேன். விசயமே இல்லைனாலும் நம்ம பசங்க மங்குனி,பட்டா, மோகன், jey , முத்து,சிரிப்பு போலீஸ் 200 கமெண்டாவது போடுவாங்க. தெருவிளக்கு அப்டிங்கிற பேருக்கு 200 கமெண்டா அப்டின்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நீ பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: அவ்வ. என்னை வச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே.

அடுத்து யாரு நம்ம ஆபிசெர் jey-யா. வாங்க jey. நீங்களாவது ஒரு நல்ல ஐடியா கொடுங்க.

Jey: நீங்க உங்க நண்பர்களை எல்லாம் உங்களுக்கு Follower-ரா மாறச்சொல்லி டார்ச்சர்  கொடுங்க. முடியாதுன்னு சொன்னா குவாட்டரும், பிரியாணியும் வாங்கிகொடுத்து Follower-ரா மாறச்சொல்லுங்கள். யாருமே இல்லாத டீக்கடையில இவ்ளோ கூட்டமான்னு மக்கள் ஆச்சரியப்பட்டு நீங்க பேமஸ் ஆயிடுவீங்க.

தெருவிளக்கு: விடு ஜூட்.

அடுத்து யாரு. அட நம்ம தலைவி அனு. வாங்க வாங்க. நீங்களாவது நல்ல ஐடியா கொடுங்க மேடம்.

அனு: எங்கயாவது கூட்டத்துல யாராவது யாரையாவது திட்டினா, கலாய்ச்சா நீங்களும் சென்றது திட்டி கலாய்ங்க. அப்புறம் உங்களை தலைவன் தலைவன் அப்டின்னு உசுபேத்தி விடுவாங்க. நீங்களும் அப்படியே மெயின்டைன் பண்ணி கெத்தா இருங்க. அப்புறம் நீங்கதான் தலை. சீக்கிரம் பேமஸ் ஆயிடுவீங்க.
தெருவிளக்கு: வேணாம் நான் அழுதுடுவேன். நான் கிளம்புறேன்.

அடுத்து யாருப்பா அது. இந்த ஆளாவது நல்ல ஐடியா கொடுக்குராரன்னு பாப்போம். அட இது நம்ம பிரியமுடன் வசந்த். வாங்க வசந்த் நீங்கதான் வித்தியாசமா யோசிக்கிரவராச்சே. எதாச்சும் ஐடியா கொடுங்க.

வசந்த்: ஏன் தெருவிளக்குல லைட்டும் கரண்ட்டு கம்பியும் மேலதான் போகனுமா. அப்படியே தெருவிளக்க பிடிங்கி தலைகீழா நட்டு வச்சா வித்தியாசமா இருக்கும். வித்தியாசமான தெருவிளக்குன்னு சொல்லி பேமஸ் ஆயிடுவ.
தெருவிளக்கு: வித்தியாசமா சிந்திக்கிறேன்னு தலைகீழா என்னை வச்சு எவனாவது கரண்டு கம்பிய மிதிச்சு  என்னை கொலை கேசுல உள்ள தள்ளிடுவ போல. எனக்கு இந்த விளையாட்டே வேணாம். நான் பேசாம மறுபடியும் பேசுற மனுசனாவே ஆயிடுறேன். என்னை ஆளை விடுங்க ஜூட்.

பின் குறிப்பு: நான் எல்லோரையும் கலாய்த்ததாக பீல் பண்ணி என்னை திட்டவோ அல்லது அடிக்கவோ நினைப்பவர்கள் என்னை பெருந்தன்மையாய் மன்னித்து நம்ம வசந்த் மாப்ளையை கும்மவும். ஏனென்றால் குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டியவனுக்குதான் தண்டனை அதிகம்ன்னு ஒளவையாரே ராமாயணத்துல சொல்லிருக்கார்.

நம்ம கிட்ட தொடர் பதிவுக்கு மாட்டிகிட்டவங்க:

1 ) சாத்தூர் மாக்கான் ராமசாமி: உங்களுக்கு ஒரு கால இயந்திரம் கிடைக்குது. அதுல ஏறி நீங்க பிறக்குறதுக்கு முன்னால எதோ ஒரு வருசத்துக்கு போகணும். எந்த வருசத்துக்கு போவீங்க. என்ன பண்ணுவீங்க. உங்களுக்கான தலைப்பு "கால இயந்திரம்" .

2 ) சூரியனின் வலைவாசல் அருண் பிரசாத்: நீங்க ஒரு வெளிநாட்டுக்காரர். நீங்க சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றீங்க. உங்க பார்வைல இந்தியா எப்படி இருக்கும். அதுதான் உங்கள் பதிவுக்கான கரு. உங்களுக்கான தலைப்பு "நான் இந்தியன் அல்ல".

44 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லா எழுதிருக்கப்பு. ஆனா என்ன கடைசில என்னய கோத்து விட்ருக்க பாரு. என்னத்த சொல்ல நீயுமா என்னய நம்புற.

தமிழ் அமுதன் சொன்னது…

///அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.///

;;)))

தனி காட்டு ராஜா சொன்னது…

நல்ல வெளிச்சம்......பளிர்னு அடிக்குது..........

Software Engineer சொன்னது…

போலீஸ் சார் - சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க. நிமிடத்துக்கு 100 சிரிப்புன்னு டிராமால தான் கேள்வி பட்டிருக்கேன். பாராவுக்கு பத்து சிரிப்புன்னு இப்போ தான் பாக்கிறேன். நிச்சயமா நீங்க சிரிப்பு போலீஸ் தான். கண்டிப்பா சொல்றேன் இந்த முறை பண்ணி குட்டி சாரை விட உங்களுக்கு நெறைய கமெண்ட் விழ போகுது. அருமை!

பட்டாபட்டி.. சொன்னது…

அட..அதுக்காக எதுக்கு..( டி.ஆர் ) தெருவிளக்கா ஆகனும்..

நாலு பச்சமொளகாய்..
அரைலிட்டர் நல்லெண்ணெய்..

சூரிய உதயத்தில எழுந்து..
.
..
( உஷ்...பாரு எல்லாரும் கேட்கறாங்க..தனியா சொல்லிக்கொடுக்கிறேன்..)

அப்புறம் நீ ஓகோ-னு எங்கேயொ போயிடுவே..ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

யோவ்.. நல்ல நக்கல் வருதுய்யா உமக்கு..


கலக்கு..கலக்கு..கலக்கிட்டே இரு..
வாழ்த்துக்கள் ரமேஸ்..

( தயவு செய்து இது என்ன படம் என்ற கேள்வி வேணாம்.. ஹி..ஹி.. எனக்குத்தரியாது..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ் நீயும் என்ன மாதிரி ரொம்ப நல்லவந்தான்

@ நன்றி தமிழ் அமுதன்

@ Software Engineer மானாட மயிலாட நிறைய பாப்பீங்களோ . குஷ்பூ சொல்ற மாதிரி மாதிரி கிழி கிழி அப்டின்கிறேன்களே.

@ நன்றி தனி காட்டு ராஜா

@ நன்றி பட்டாபட்டி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாலு பச்சமொளகாய்..
அரைலிட்டர் நல்லெண்ணெய்..

சூரிய உதயத்தில எழுந்து..
///

பட்டா நீங்க என்ன சொல்ல வரீங்க?

Software Engineer சொன்னது…

இதுல ஸ்பெஷல் என்னனா, நீங்க குறிப்பிட்டிருக்கிற மற்ற பதிவர்களை என்னை போல தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாக புரிந்து ரசித்து சிரிக்க முடிகிறது. மத்தவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்!

Jey சொன்னது…

////Jey: நீங்க உங்க நண்பர்களை எல்லாம் உங்களுக்கு Follower-ரா மாறச்சொல்லி டார்ச்சர் கொடுங்க. முடியாதுன்னு சொன்னா குவாட்டரும், பிரியாணியும் வாங்கிகொடுத்து Follower-ரா மாறச்சொல்லுங்கள். யாருமே இல்லாத டீக்கடையில இவ்ளோ கூட்டமான்னு மக்கள் ஆச்சரியப்பட்டு நீங்க பேமஸ் ஆயிடுவீங்க ///

யோவ், பிரைவேட்டா உனக்கு மட்டும் கொடுத்த ஐடியாவ, இப்படியா பப்ளிக்கா போடுறது, எல்லோரும் இத ஃபாலோ பன்னி பேமஸாயிற மாட்டாங்க?. அவ்வ்வ்வ்வ்வ்

Jey சொன்னது…

அப்படியே என் வீட்டுக்கு வந்து என்னோட “பட்டிகாட்டானின் தீ மிதித்த (பூக்குழி) அனுபவம்”
http://pattikattaan.blogspot.com/

படிச்சிட்டு போ, இப்பதான் சூடா போட்ருக்கேன்.

Punnakku Moottai சொன்னது…

டேய் பெரிய பருப்பா நீ! ரொம்ப நக்கல் பண்ணுற. அடங்கு! இல்ல, ஆப் பாயில கலக்கி ஆம்லேட் போடப்படும். சும்மா ரொம்ப கலாச்சிகினு இருக்கே.

ஒன்னோட வீட்டுக்கு ஆட்டோ வரும்போது, மொதோ ஆட்டோவுலே வீச்சருவளோட நான்தாண்டி இறங்குவேன் பாரு. ஒரே 'வீச்' ஒன்னோட டங்குவாரு கட்டு. வெட்டு ஒன்னு துண்டு மூணு. மடக்கிவச்சி வெட்டுவான் இந்த புண்ணாக்கு, தெரியுமா. ஜாக்கரத!!!

ஏய் சிரிப்பு போலிசு, இதுக்கு முந்தின பதிவு, இதவிட நல்ல இருந்தது. சூப்பர் continue பண்ணு.

நீ சிங்கப்பூர் வந்தப்ப நானும் அங்கதான் இருந்தேன். பிரபாவுக்கு நீ போன் பண்ணும் போது கூட அவர் என் ரூம்லே தான் இருந்தார். இப்போ என்ன சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்திபுட்டானுவோ. புரியாத தமிழில் எழுதும் நேசமித்திரன் கூட இருக்கேன் இப்போ. அந்த ஆளு எழுதறது, தண்ணி அடிச்சாலும் புரியலே, அடிக்கலேன்னாலும் புரியல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீ சிங்கப்பூர் வந்தப்ப நானும் அங்கதான் இருந்தேன். பிரபாவுக்கு நீ போன் பண்ணும் போது கூட அவர் என் ரூம்லே தான் இருந்தார். இப்போ என்ன சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்திபுட்டானுவோ. புரியாத தமிழில் எழுதும் நேசமித்திரன் கூட இருக்கேன் இப்போ. அந்த ஆளு எழுதறது, தண்ணி அடிச்சாலும் புரியலே, அடிக்கலேன்னாலும் புரியல.//

@ Punnakku Moottai பிரபாகர் சொன்னார். உங்களையும், ரோஸ்விக்கியும் பாக்க பிளான் பண்ணினேன். ஆனா முடியல.

பிரேமா மகள் சொன்னது…

இப்ப,,,, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத ஆரம்பிச்சிட்டாங்களா? அது சரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.
////
:-) அருமை
-

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அப்புறம் பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான் அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. மவனே ஒரு நாளைக்கு கரண்ட் கம்பில கைய வச்சு பாரு நான் எப்படி தூக்கி எறியிறேன்னு.
////
:-) அருமை
-

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யோவ், பிரைவேட்டா உனக்கு மட்டும் கொடுத்த ஐடியாவ, இப்படியா பப்ளிக்கா போடுறது, எல்லோரும் இத ஃபாலோ பன்னி பேமஸாயிற மாட்டாங்க?. அவ்வ்வ்வ்வ்வ்///

ஒரு விளம்பரம்தான் jey

//மத்தவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்!//

புரிய வச்சிடலாம் Software Engineer

//இப்ப,,,, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத ஆரம்பிச்சிட்டாங்களா? அது சரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

ஆமா பிரேமா மகள்

@ நன்றி உலவு.காம்

கலாநேசன் சொன்னது…

எதிர் கவுஜ படிச்சிருக்கேன். இன்னிக்குத் தான் எதிர் பயோ டேட்டா படிச்சேன். தொடரட்டும் உங்கள் ....................

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் என்னைய ஏன்யா வம்புக்கு இழுக்கிறே.. இப்பதான் தஞ்சாவூருல இருந்து பொம்பள பேருல (மதுமிதா) ஒரு லூசு மிரட்டல் மெயில் அனுப்புது ,..
பிரபலம் ஆன பிராப்ளம்தான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஆமா செந்தில் அண்ணே பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான் . இதெக்கெல்லாம் நாம பயப்படலாமா!! அதுக்கு ஒரு பயோடேட்டா போடுறோம். ஓகே வா?

@ நன்றி கலாநேசன்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Chitra சொன்னது…

பின் குறிப்பு: நான் எல்லோரையும் கலாய்த்ததாக பீல் பண்ணி என்னை திட்டவோ அல்லது அடிக்கவோ நினைப்பவர்கள் என்னை பெருந்தன்மையாய் மன்னித்து நம்ம வசந்த் மாப்ளையை கும்மவும். ஏனென்றால் குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டியவனுக்குதான் தண்டனை அதிகம்ன்னு ஒளவையாரே ராமாயணத்துல சொல்லிருக்கார்.


...... சிரிப்பு போலீஸ் has the license to "kill" ...ஹா,ஹா,ஹா,ஹா,ஹா, ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நண்பர்களே பெயரில்லா அப்டின்னு ஒன்னு இப்ப நம்ம ப்ளாக் குக்கு வந்து தேவை இல்லாத கமென்ட் போட ஆரமிச்சிருக்கு(ஒரு வேலை நான் ரொம்ப ரொம்ப பேமஸ் ஆயிட்டனோ?). நேத்து நம்ம செந்தில் அண்ணனுக்கு கொலை மிரட்டல் கூட வந்திருக்கு. ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. நாம யாரையாவது கலாய்ச்சா (உரிமைபட்டவங்களதான் கலாய்க்கிறோம்) பதிலுக்கு கலாய்க்கலாம் தப்பில்லை. அதை விட்டுட்டு தேவயில்லாத கமெண்ட்ட avoid பண்ணனும். இந்த ஜென்மங்கள் திருந்துவாங்களா? பேர் சொல்லவே துப்பில்ல. இதுல கமென்ட் வேற......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks Chitra

பட்டாபட்டி.. சொன்னது…

ஏம்பா ரமேஸ்..
தெருவிளக்கா ஆனா, யாராவது வந்து, அவங்க குலதெய்வமுனு சொல்லிக்கிட்டு, கோயில் கட்டிடப்போறாங்க..பார்த்து சூதனமா இருந்து பொழச்சுக்கோ..ஹி..ஹி

Mythili சொன்னது…

very nice kalakal post.

மங்குனி அமைச்சர் சொன்னது…

கடைசி வரைக்கு நீ ஆற்காட்டார மீட் பண்ணவில்லையா ???? இருக்குடி உனக்கு ஆப்பு

ஜெயந்தி சொன்னது…

கலக்கலா தெருவிளக்கா இருந்து தெருவுல நடக்கறத எழுதியிருக்கீங்க. உங்கள் கற்பனை அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// கோயில் கட்டிடப்போறாங்க..பார்த்து சூதனமா இருந்து பொழச்சுக்கோ..ஹி..ஹி///

அப்ப குஷ்பூ மாதிரி கட்சில சேர்ந்திடுவேன்(அவங்களுக்கும் கோயில் காட்டினாங்களே)

@ தேங்க்ஸ் Mythili

//கடைசி வரைக்கு நீ ஆற்காட்டார மீட் பண்ணவில்லையா ???? இருக்குடி உனக்கு ஆப்பு//

இருட்டுல அவர் எங்க இருந்தார்னு கண்டுபிடிக்க முடியல மங்கு

@ நன்றி ஜெயந்தி

ப.செல்வக்குமார் சொன்னது…

நீங்க இந்த ஆட்டத்துல கோமாளிய சேர்த்துக்கவே இல்ல ..(-:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தொடர் பதிவெழுதுனதுக்கு நன்றி மாப்ள...

வித்யாசமா எழுதியிருக்கீங்க ... இதுல பதிவர்களை சேர்ப்பதற்க்கு பதிலா ரோட்டுல சிறுவயசுலயே பிச்சை எடுக்கவிடப்பட்ட சிறுமி கூட பேசற மாதிரி இல்லைன்னா மகன்களால் துரத்திவிடப்பட்டு நாதியற்று கிடக்கும் ஒரு பெரியவர் போஸ்ட் மரம் கீழ படுத்துகிடக்கும்போது அவர்கிட்ட பேசறது , போஸ்ட்டுக்கு கீழ நடக்கும் விபச்சாரம் இப்பிடியெல்லாம் எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன்...

so no problem இதோடவா முடிஞ்சுடவா போகுது இன்னும் இருக்குதானே எழுதுங்க மாப்பி தொடர்ச்சியா ஒரே மாதிரியான நகைச்சுவையா எழுதுங்க வாழ்த்துகள்...

அனு சொன்னது…

ஆஹா.. யாரையும் விட்டு வைக்கல போல இருக்கே...

இப்படி எல்லாம் அடி வாங்க கூடாதுன்னு தான் நான் blog-கே ஆரம்பிக்காம safeஆ விளையாடிட்டு இருக்கேன்.. எனக்கேவா?? ஏன் இந்த கொலைவெறி..

எல்லாம் சரி.. என்னை mention பண்ணுறதுக்கு உங்களுக்கு வேற யாரு போட்டோவும் கிடைக்கலயா.. இந்த போட்டோவ போட்டதுக்கு நீங்க என்னை கத்திய எடுத்து குத்தியிருக்கலாம்..

//நானும் பாக்கறேன் ஒரு பய பைக்குல தனியா போக மாட்டேன்றான். //

ஏன் இந்த பொறாமை?? நீங்களும் அப்படியே ஒரு அகல் விளக்கையோ, அரிக்கேன் விளக்கையோ பண்ணியிருக்க வேண்டியது தானே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீங்க இந்த ஆட்டத்துல கோமாளிய சேர்த்துக்கவே இல்ல ..(-://

அடுத்த டார்கெட் நீதான் தம்பி...

@ நன்றி வசந்த் நானும் கொஞ்சம் சீரியசாதான் யோசிச்சேன். ஆனா எனக்கே படிக்கிறதுக்கு கஷ்டமா இருந்தது. எதுக்கு பிரச்சனைன்னு நம்ம வழிலையே எழுதிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இப்படி எல்லாம் அடி வாங்க கூடாதுன்னு தான் நான் blog-கே ஆரம்பிக்காம safeஆ விளையாடிட்டு இருக்கேன்.. எனக்கேவா?? ஏன் இந்த கொலைவெறி..//

தலைவி இல்லாம ஒரு பதிவா?

//எல்லாம் சரி.. என்னை mention பண்ணுறதுக்கு உங்களுக்கு வேற யாரு போட்டோவும் கிடைக்கலயா.. இந்த போட்டோவ போட்டதுக்கு நீங்க என்னை கத்திய எடுத்து குத்தியிருக்கலாம்..//

ஹிஹி.
நீங்கதான் தல அப்டின்னு சிம்பாலிக்கா சொன்னேன்.

//ஏன் இந்த பொறாமை?? நீங்களும் அப்படியே ஒரு அகல் விளக்கையோ, அரிக்கேன் விளக்கையோ பண்ணியிருக்க வேண்டியது தானே..//

ட்ரை பண்ணினேன். கிடைக்கல அதான்...

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

Famous ஆகணும் அவ்ளோதானே..?!

நம்மள புகழ்ந்து நாமே கவிதை
எழுதிக்கணும்.., - அதை படிச்சிட்டு
மக்கள் கொதிச்சி போயி கமெண்ட்
போடுவாங்க.., கும்மி எடுப்பாங்க..

எவ்ளோ வலிச்சாலும் வலிக்காத
மாதிரியே Acting குடுக்கணும்..

அப்பத்தான் நம்மள கும்மினவங்க
நாலு பேர்கிட்ட போயி...
" அங்கே ஒருத்தன் இருக்கான்..
எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்..
அவன் ரொம்ப நல்லவன்னு " சொல்லி விடுவாங்க..

அப்புறம் அவங்க வந்து கும்முவாங்க..
இப்படியே கும்ம ., கும்ம
நீங்க சைக்கிள் கேப்ல Famous ஆயிடலாம்..


// பாண்டிச்சேரில இருந்து பைக்குள வர்ற பயலுக
அவ்ளோ இடம் இருந்தும் கரெக்டா என் மேலதான்
அவங்க குடிச்ச பாட்டுல தூக்கி எறிவாய்ங்க. //

நீங்க தெருவிளக்குன்னு சொன்னீங்க..??!!
அவங்களுக்கு ஒருவேளை உங்களை
பார்த்தா குப்பை தொட்டி மாதிரி தெரியுதோ..??!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நம்மள புகழ்ந்து நாமே கவிதை எழுதிக்கணும்.., - அதை படிச்சிட்டு மக்கள் கொதிச்சி போயி கமெண்ட் போடுவாங்க.., கும்மி எடுப்பாங்க..///
//அப்புறம் அவங்க வந்து கும்முவாங்க..இப்படியே கும்ம ., கும்ம நீங்க சைக்கிள் கேப்ல Famous ஆயிடலாம்..///

அப்படியே உங்களைபோல இருக்கணும்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் இவ்ளோ தூரம் சொல்லணும்?

//நீங்க தெருவிளக்குன்னு சொன்னீங்க..??!!அவங்களுக்கு ஒருவேளை உங்களை பார்த்தா குப்பை தொட்டி மாதிரி தெரியுதோ..??!!//

தண்ணி அடிச்சவனுக்கு எதுவுமே தெரியாதே!!!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

என்ன ரமேஷு ஆயிரத்தில் ஒன்ன மறந்துட்டியே
நான் எப்பதான் ப்ராப்ள பதிவர் ஆவறது.....

*VELMAHESH* சொன்னது…

அருமை!...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி சரி, மத்தவங்களுக்கு கொடுத்த மாதிரி நமக்கு வெறும் குவார்ட்டரோட முடிச்சிடாதேய்யா, மேலே ஏதாவது போட்டுக்கொடுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பன்னிக்குட்டி ராம்சாமி: தெருவிளக்குன்னு ஒரு தலைப்ப மட்டும் நான் என்னோட ப்ளாக்குல போடுறேன். ///

தலைப்பா இதுவே டூ மச்சு! வெறும் படம் போட்டாவே போதும், நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் வந்து குமுறி எடுத்துடுவாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சரி சரி, மத்தவங்களுக்கு கொடுத்த மாதிரி நமக்கு வெறும் குவார்ட்டரோட முடிச்சிடாதேய்யா, மேலே ஏதாவது போட்டுக்கொடுய்யா!//

பட்டாகிட்ட சொல்லி நியூ வாட்டர் வாங்கிட்டு வரசொல்றேன்.

//தலைப்பா இதுவே டூ மச்சு! வெறும் படம் போட்டாவே போதும், நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் வந்து குமுறி எடுத்துடுவாங்க!//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி VELMAHESH*

//என்ன ரமேஷு ஆயிரத்தில் ஒன்ன மறந்துட்டியே

நான் எப்பதான் ப்ராப்ள பதிவர் ஆவறது.....//

சீக்கிரம் ஆக்கிடலாம் மணி சார்

நீச்சல்காரன் சொன்னது…

ரசிச்சுப் படிச்சேன். நல்லாயிருக்கு அப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks நீச்சல்காரன்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது