நீங்க ஒரு நடிகருக்கு ரசிகனா இருந்தா என்ன பண்ணுவீங்க. முதல் நாள் முதல் ஷோ போவீங்க. கட்அவுட் வைப்பீங்க. தியேட்டர்ல தோரணம் கட்டுவீங்க. பாலாபிஷேம் பண்ணுவீங்க. பீர் அபிஷேகம் பண்ணுவீங்க. அவ்வளவுதான. ஒவ்வொரு படம் பாக்கும்போதும் தர்ம அடியோ திட்டோ வாங்குவீங்களா?.
கட்அவுட் வைக்கிறவன் ரசிகன். தர்ம அடி வாங்கிறவன் மெகா ரசிகன். நான் மெகா ரசிகன். நான் ஒவ்வொரு சரத்குமார் படம் பார்க்கும்போது யாரிடமாவது அடியோ திட்டோ வாங்கி இருக்கிறேன். அதனாலையோ என்னவோ கல்லூரி நாட்களில் அவருடைய மெகா ரசிகனாக இருந்தேன்.
முதல் அடி:(இதை மட்டும் ஏற்கனவே என்னுடைய ப்ளொக்கில் எழுதி இருக்கிறேன்)
9 படிக்கும் போது ஹாஸ்டல்ல +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நாள் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி அவங்க கூட படத்துக்கு போய்ட்டோம். "நாட்டாமை" படம் அது.
நம்ம கெட்ட நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிட்சைல பெயில். அந்த கிறுக்கு பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான்னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமையா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. (உக்கார்ற எடத்துல கட்டி ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)
ரெண்டாவது அடி:
நான் கல்லூரி முதல் வருடம் சேரும்போதுதான் "சூர்ய வம்சம்" படம் ரிலீஸ் ஆனது. அப்ப எங்க காலேஜ் லேப்-ல 12 கம்ப்யூட்டர் தான் உண்டு. தினமும் மதியம் ரெண்டு மணிநேரம் லேப் தான். நாங்க 23 பேர். இதுல நம்ம சாத்தூர் மாக்கனும் உண்டு. முதல் ஒருமணிநேரம் 12 பேரும் அடுத்த ஒருமணிநேரம் மீதி இருக்குற 11 பேரும் லேப்-ல இருக்கணும். ஆனா முதல்லையே attendance எடுத்துடுவாங்க.
நானும் இன்னொரு நண்பனும் attendance எடுத்து முடிஞ்சதும் கிளம்பி "சூர்ய வம்சம்" படத்துக்கு போயிடுவோம். தொடர்ந்து 25 நாள் மேட்னி ஷோ இந்த படம்தான். 26 வது நாள் படத்துக்கு கிளம்பும்போது H.O.D எங்கள பஸ் ஸ்டாப் ல பார்த்து மாட்டிகிட்டு செம ரைட். ரெண்டு நாள் கிலாசுக்குல்லையே விடல. வீட்ல இருந்து அப்பாவை கூட்டிட்டு வர சொல்லிட்டாரு.
மூணாவது அடி:
"நட்புக்காக" ரிலீஸ். முதல்நாள் முதல் ஷோ. படத்துக்கு போயிட்டேன். என் அம்மா ஒரு கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க. அடுத்த பஸ் 2 மணிக்கு. அதனால அவங்களும் படத்துக்கு வந்திருக்காங்க. எனக்கு செலவுக்கு காசு கொடுக்குற அவங்க பென்ச் டிக்கெட். நானோ பால்கனி டிக்கெட். இடைவேளைல பாத்துட்டாங்க. அப்புறம் என்ன வீட்டுல குமுற குமுற அடிதான்(காலேஜ் கட் அடிச்சதுக்கு).
நாலாவது அடி:
அப்ப செல்போன் வசதி கிடையாது. Landline அவ்ளவா இல்லை. எக்ஸாம் டைம் அது. நான் வீட்டுல group-study, நண்பன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு "சின்னதுரை" படத்துக்கு போனேன். கரெக்டா 2 மணிக்கு போனா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு 11 மணிக்கு கிளம்பி வேற ஒரு இடத்துல உக்கார்ந்துட்டு 2 மணிக்கு தியேட்டருக்கு போறேன். தியேட்டருக்கு எதித்தாப்ல ஒரு ஜோசியர் கடை உண்டு. எங்க அப்பா ஒரு ஜாதகம் பாக்க அங்க வர என்னை தியேட்டர்க்குள்ள பார்க்க. அடுத்து நடந்தத சொல்லனுமா என்ன.
ஐந்தாவது அடி:
எங்க ஊர்ல "பாறை" படம் ரிலீஸ் ஆகலை. சரின்னு கிளம்பி விருதுநகர் போய் பாக்கலாம்னு அங்க போயிட்டேன். அந்த தியேட்டர் கரெக்டா Busstand-க்கு எதுத்தாப்புல. மதுரைல இருந்து எங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தவர் நான் தியேட்டர்குள்ள நுழையுறத பாத்திருக்கார். நான் படம் முடிஞ்சு வர்றதுக்குள்ள நியூஸ் வீட்டுக்கு வந்திடுச்சு. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்.
அப்புறம் மூவேந்தர், ஒருவன்,ரிஷி, பெண்ணின் மனதை தொட்டு படம் எல்லாம் பாக்கும்போது யார் மூலமாவது வீட்டுக்கு நியூஸ் வந்து நமக்கு திட்டுதான். அப்புறம் ஒரு வழியா அப்பா அடிக்கிறத நிப்பாட்டிட்டார்.
தலைமகன் படம் பாக்கும்போது தியேட்டர்ல எதோ பிரச்சனை சண்டை. நானும் பயந்துட்டேன். செண்டிமெண்ட் படி முத அடி நமக்கு விழுமோன்னு. பட் மீ தி எஸ்கேப். அப்பாட சரத்குமார் படம் பார்த்து அடி வாங்காம தப்பிச்சிட்டேன்.
வீட்டுக்கு தெரிஞ்சு அனுமதியோட பார்த்த ஒரே சரத்குமார் படம் "ஜானகி ராமன்" மட்டும்தான்.
இப்ப சொல்லுங்க நான் ரசிகனா மெகா ரசிகனா?
38 கருத்துகள்:
me the 1st
//செண்டிமெண்ட் படி முத அடி நமக்கு விழுமோன்னு.///
ஊரறிஞ்ச விஷயத்தயெல்லாம், ஊரகூட்டி சொல்லனுமா ராசா!!!!:)
ஹி.,ஹி., ஹி..!!
தப்பு பண்றது தப்பில்ல..
ஆனா அதை இப்படியா
தப்பு தப்பா பண்றது..??
நாங்கல்லாம் காலேஜ் Day-ல
எத்தனை சினிமா பார்த்து
இருப்போம்.. ஆனா
ஒரு தடவைகூட மாட்டினதே
இல்ல..
@ நன்றி jey. ஒரு விளம்பரம்தான்.
@ வெங்கட் நானும் எவ்ளவோ படம் பாத்திருக்கேன். ஒரு தடவ கூட மாட்டினதில்லை. ஆனா சரத்குமார் படம் பார்த்தா மட்டும் மாட்டிக்கிறேன்..
அண்ணே உண்மையிலேயே நீங்க மெகா ஸ்டார் தான்
தொடர்ந்து எழதுங்கள் உங்க வாழ்க்கை அனுபவங்களை,ரசிக்கிறோம்
உங்களின் சினிமா புதிர்கள் அனைத்தும் படித்தேன் .. நீங்க கே டி வீ .. ராஜ் டிஜிடல் அதிகம் பாப்பீங்களோ? அனைத்தும் அருமை... அடுத்த புதிர்கள் எப்ப வரும்?
தொடர்ந்து 25 நாள் மேட்னி ஷோ இந்த படம்தான். 26 வது நாள்////
ரமேஷ் , சத்தியமா நீ நல்லவந்தான் , என்னா அடிச்சாலும் தாங்குற , அப்புறம் அந்த படத்த இந்தனை தடவையா பாத்தா ??? இதுக்கு இந்த அடி பத்தாதே ???
படம் பார்த்தது ஒரு "பேரிடி"..... படம் பார்த்ததுக்கு "தர்ம அடி"....... என்ன கொடுமை சார், இது!
Hi me the first..
iyoo pavam... neenga oru mega (adivangia) rasigarthanga :)))
நீங்கள் ஒரு 'அடி(ம)பட்ட' ரசிகர்.
ஆயிரம் உதை வாங்கி அபூர்வ ரசிகன் நீங்க தாங்கோ!
நீங்க அடிவாங்குறத பொறுக்காமதான் சரத்குமார் நடிக்கிறத நிறுத்திட்டாரோ
கமெண்ட்ஸ் எல்லாம் எங்கயா கானோம்?., என் பிளாக்ல இருந்த மென்ஸயும் கானோம். யாரொ நமகெதிரா சதி பன்னிட்டிருக்காங்க பொலயே?.
neenka maha rasikanunka
சுப்ரீம் மெகா ரசிகன்.
உட்காருர எடத்துல கட்டினா, நிக்குற எடத்துல உக்கார வேண்டியதுதானே ...!!!
அம்புட்டு பெரிய ரசிகனா நீங்க ...!!!
இதில் இருந்து என்ன தெரிகிறது நீங்க மெகா ரசிகன் இல்லை மொக்கை ரசிகன்
படம் பார்த்ததற்கே பாவம் இவ்வளவு நொந்து போயி இருக்கீங்க,அவர் கட்சி வேறு ஆரம்பிச்சு இருக்காரு அவருக்கு வோட்டு போட்டால் உங்கள் கதி!! நினைத்து பார்த்தால் சிப்பு சிப்பாவருது
நீங்க அவர் கட்சியில் இருக்கீங்களா...னு மொதல்ல சொல்லுங்க...??
சின்ன வயசிலேயே நிறைய தில்லு முல்லு இருக்கும் போல? அது அதை அந்த வயசிலே செஞ்சிரனும். நல்ல நகைச்சுவை! வர வர நிறைய படங்களை தேடி கொண்டு வந்து நன்றாக மிக்ஸ் செய்கிறீர்கள். இது பதிவை படிக்கும் போது நல்ல ஓர் வாசிக்கும் அனுபவம் தரும். வாழ்த்துக்கள்!
கமெண்ட்ஸ் காணாமல் போன பிரச்சனை முடிஞ்சதா?
@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்
//உங்களின் சினிமா புதிர்கள் அனைத்தும் படித்தேன் .. நீங்க கே டி வீ .. ராஜ் டிஜிடல் அதிகம் பாப்பீங்களோ? அனைத்தும் அருமை... அடுத்த புதிர்கள் எப்ப வரும்? //
@ வருகைக்கு நன்றி ராஜா. ராஜ் டிஜிடல் அதிகம் பார்ப்பதுண்டு. புதிர்கள் விரைவில் போடுகிறேன்.
//படம் பார்த்தது ஒரு "பேரிடி"..... படம் பார்த்ததுக்கு "தர்ம அடி"....... என்ன கொடுமை சார், இது! //
@ சித்ரா எங்க தானயத்தலைவன் படம் உங்களுக்கு பேரிடியா. இருங்க உங்களுக்கு ஜக்குபாய் ப்ரீ dvd அனுப்புறேன்.
@ மங்குனி அமைச்சர் சும்மா ஒரு விளம்பரத்துக்காக 25 நாள் பார்த்தது அவ்ளோதான்.,
@ நன்றி Mythili
@நன்றி வாசன்
//நீங்க அடிவாங்குறத பொறுக்காமதான் சரத்குமார் நடிக்கிறத நிறுத்திட்டாரோ//
அப்படிதான் நினைக்கிறேன் அருண்
//கமெண்ட்ஸ் எல்லாம் எங்கயா கானோம்?., என் பிளாக்ல இருந்த மென்ஸயும் கானோம். யாரொ நமகெதிரா சதி பன்னிட்டிருக்காங்க பொலயே?.//
சரத்குமார் படம் பாத்தா அடி விழுன்னு சொன்னேன். அட பாவமே அவர பத்தி பதிவ போட்டா கமெண்ட்ஸ் எல்லாம் காணாமப் போகுதே. ப்ளாக்-ளையும் அவரோட செண்டிமெண்ட் வொர்க்-அவுட் ஆகுதோ?
@ நன்றி ரமேஷ் கார்த்திகேயன்
//உட்காருர எடத்துல கட்டினா, நிக்குற எடத்துல உக்கார வேண்டியதுதானே ...!!!//
நான் என்ன கோமாளியா?
/அம்புட்டு பெரிய ரசிகனா நீங்க ...!!!//
ஆமா ப.செல்வக்குமார்
@ நன்றி ஜெயந்தி
//படம் பார்த்ததற்கே பாவம் இவ்வளவு நொந்து போயி இருக்கீங்க,அவர் கட்சி வேறு ஆரம்பிச்சு இருக்காரு அவருக்கு வோட்டு போட்டால் உங்கள் கதி!! நினைத்து பார்த்தால் சிப்பு சிப்பாவருது//
@ முத்து நல்ல வேளை அவர் கட்சி ஆரமிச்சதுக்கு அப்புறம் நான் ஓட்டு போடல..
//இதில் இருந்து என்ன தெரிகிறது நீங்க மெகா ரசிகன் இல்லை மொக்கை ரசிகன்//
முத்து பப்ளிக் ல உண்மைய சொல்லகூடாது...
//நீங்க அவர் கட்சியில் இருக்கீங்களா...னு மொதல்ல சொல்லுங்க...??///
@ ஜெட்லி படம் பார்த்ததுக்கே இப்படி. இதுல கட்சி வேறயா?
@ Software Engineer நன்றி
நீங்க மெகா மெகா ரசிகன் ...
@நன்றி செந்தில் அண்ணா
ஹாஹாஹாஹாஹா....ரசிச்சு சிரிக்கும்படியா எழுதி இருக்கீங்க ரமேஸ்...ஆயிரம் அடிவாங்கிய மெகா ரசிகனுக்கு வாழ்த்துகள்...
@ thanks seemangani
இந்த தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கத்தான் நான் எல்லாம் கல்லூரி காலத்தில் மலையாள குறும் படம் மட்டுமே பார்ப்பேன், அதுவும் இடைவேளை முடிந்து பத்து நிமிடத்தில் ஹாயாக வெளியே வந்து விடலாம்.
@ ராம்ஜி_யாஹூ எவ்ளோ புத்திசாலிதனமான பதில் போங்க. நோ சான்ஸ்
சரத்குமார்க்கு ஒட்டு போடுங்க
அடி விழுதா பாக்கலாம்...
மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…
சரத்குமார்க்கு ஒட்டு போடுங்க
அடி விழுதா பாக்கலாம்... ////////////
சார் அப்படி தான் சரியா கோத்து விடுங்க பயபுள்ள மாட்டிகிட்டு முழிக்கட்டும்
//சரத்குமார்க்கு ஒட்டு போடுங்க
அடி விழுதா பாக்கலாம்... //
முதல்ல அவர் எலெக்சன்-ல நிக்கட்டும்..
//சார் அப்படி தான் சரியா கோத்து விடுங்க பயபுள்ள மாட்டிகிட்டு முழிக்கட்டும் //
முத்து உங்களுக்கு நியூ வாட்டர் கொடுக்க கூடாதுன்னு போராடிட்டு இருக்கேன். எனக்கே ஆப்பா? பட்டா முத்துவுக்கு நியூ வாட்டர் அனுப்பவும்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
முத்து உங்களுக்கு நியூ வாட்டர் கொடுக்க கூடாதுன்னு போராடிட்டு இருக்கேன். எனக்கே ஆப்பா? பட்டா முத்துவுக்கு நியூ வாட்டர் அனுப்பவும்////
அது பட்டாவால் கூட முடியாது ஏன் என்றால் நான் தான் ஓல்சேல் ஓனர் வேண்டும் என்றால் சொல்லு உனக்கு அனுப்பி வைக்கிறேன்
/அது பட்டாவால் கூட முடியாது ஏன் என்றால் நான் தான் ஓல்சேல் ஓனர் வேண்டும் என்றால் சொல்லு உனக்கு அனுப்பி வைக்கிறேன் //
மூணு மாசம் நியூ வாட்டர் குடிச்சுத்தான் கொஞ்சம் அழகா மாறிருக்கேன். இந்த அழகு போதும்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மூணு மாசம் நியூ வாட்டர் குடிச்சுத்தான் கொஞ்சம் அழகா மாறிருக்கேன். இந்த அழகு போதும்.
அதான் போடோவில் தலை ஒரு பக்கமாய் கோனிக்கிட்டு இருக்கா பார்த்து ஒரே அடியாய் கோணிக்க போகுது
//அதான் போடோவில் தலை ஒரு பக்கமாய் கோனிக்கிட்டு இருக்கா பார்த்து ஒரே அடியாய் கோணிக்க போகுது //
அது ஸ்டைல் பாஸ்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அதான் போடோவில் தலை ஒரு பக்கமாய் கோனிக்கிட்டு இருக்கா பார்த்து ஒரே அடியாய் கோணிக்க போகுது //
அது ஸ்டைல் பாஸ்/////////
இப்ப தான் தெரியுது நீங்க ஏன் சரத் ரசிகர் என்று!
கருத்துரையிடுக