ஞாயிறு, ஜூலை 11

நான் டமிழன்

நான் காலேஜ் படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தத புதுசுல அவ்ளவா இங்கிலீஷ் வராது(இப்ப மட்டும் என்ன வாழுதாம்). எங்க ஊருல எல்லாம் காலேஜ், ஸ்கூல் எல்லாம் இங்கிலீஷ் மீடியமா இருந்தாலும் டீச்சர்ஸ் தமிழ்லதான் கிளாஸ் எடுப்பாங்க. பாவம் அவங்க மட்டும் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாங்க.

சென்னை வந்தாச்சு. வேலை வேற தேடனும். நமக்குதான் யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காதே. அதனால interview எதுக்கும் போகாம வீட்டுல காச வாங்கி கொஞ்ச நாளு செலவளிசிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் அரசமரத்தடில(நம்ம ஜெய் எழுதின அரசமரம் இல்ல) ஞானம் வந்து சரி interview போகலாம்னு முடிவு பண்ணினேன்(அப்பாட இப்பவாச்சும் புத்தி வந்ததே).

Interview-க்கு கிளம்பி போயாச்சு.  நான் என்னவோ பெரிய புத்திசாலி மாதிரி என்னை கேள்வி கேக்க மூணு பேரு. க்கும், ஒரு ஆளு கேள்வி கேட்டாலே பதில் தெரியாது. மூணு பேரா. விடு விடு சமாளிப்போம்.

Interviwer1: Tell me about yourself?
நான்: (என்னடா இந்த ஆளு நம்மளோட அலமாரிய பத்தி கேக்குறாரு) கேனத்தனமா ஒரு சிரிப்பு(எனக்கு இதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சாத்தான)
Interviwer2: Do you have any knowledge in VB?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer3: VB is a language or package?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer1: Have you completed any project in VB with Oracle?
நான்: (மறுபடியும் கேனத்தனமா ஒரு சிரிப்பு)
Interviwer1:(தமிழில்) எதுக்காவது பதில் சொல்லுப்பா. சும்மா இருந்தா என்ன அர்த்தம். சரி விடு. நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. வந்ததுக்கு அதாவது பண்ணிட்டு போ.
நான்:(சத்திய சோதனை)

பின்ன என்ன திட்டாத குறையா அனுப்பிட்டாங்க. சரி பக்கத்துல ஏதாவது Hotel-க்கு போய் சாப்பிட்டு போவோம்ன்னு Hotel-குள்ள போனேன். சாப்பாடு சாப்பிட்டுட்டு ஏதாவது ஜூஸ் சாப்பிடலாமேன்னு மெனு கார்டு பார்த்தேன். Apple,Orange எல்லாம் குடிச்சு குடிச்சு சலிச்சு போச்சு. புதுசா ஏதாச்சும் சாப்பிடலாம்னு பாத்தா Butter Milk அப்படின்னு இருந்தது. சரி புதுசா இருக்கேன்னு ஆர்டர் பண்ணினேன்.

அடப்பாவிகளா Butter Milk அப்படின்னா நான் தினமும் ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வாங்கி குடிக்கிற மோர் தானா? அத நான் இங்க 12 ரூபாய் கொடுத்து குடிச்சேன். மறுபடியும் சத்திய சோதனை.

50 கருத்துகள்:

seemangani சொன்னது…

நான்தான் பஸ்ட்டு...

விசரன் சொன்னது…

அட அட..
சிரித்தேன்.. நன்றிகள்.
http://visaran.blogspot.com/

கலாநேசன் சொன்னது…

இது சென்னையில் நடந்ததா இல்லை அதுக்கப்புறமா சிங்கப்பூர் போய் நேர்முகத் தேர்வு போனிங்களே அப்பவா?

seemangani சொன்னது…

பயபுள்ளைக்கு மொத சிரிப்புலே புரிய வேண்டாம் இவன்லாம் ஒரு ஆபீசரு...மோர் ஜோரு...சிரிப்பு பகிர்வுக்கு நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க seemangani நன்றி

@ நன்றி விசரன்

//இது சென்னையில் நடந்ததா இல்லை அதுக்கப்புறமா சிங்கப்பூர் போய் நேர்முகத் தேர்வு போனிங்களே அப்பவா?//

அட நான் சிங்கபூர் போகிறப்ப கலாநேசன் மாதிரி ரொம்ப புத்திசாலிங்க. இது சென்னை வந்தப்ப நடந்தது...

//பயபுள்ளைக்கு மொத சிரிப்புலே புரிய வேண்டாம் இவன்லாம் ஒரு ஆபீசரு...மோர் ஜோரு...சிரிப்பு பகிர்வுக்கு நன்றி... //

கரெக்டா சொன்னேங்க seemangani தல

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அட அட இஷ்தான்ஃபுல்...

:))

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு எந்த பிரச்சினை வந்ததாலும் இனி நான் தான் டீல் பண்ற மாதிரி இருக்கும். எப்பவும் மாமமுல ரெடியா வச்சுங்க உஷார்!! புளியலையா?? நான் தான் 100-வது follower. ஹி..ஹி..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அப்ப நெஜமாவே உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் சொன்னது…

//டீச்சர்ஸ் தமிழ்லதான் கிளாஸ் எடுப்பாங்க//
1.English கிளாஸ எப்படி தமிழ்ல எடுப்பாங்க.
2. அந்த அரசமரம், எந்த ஏரியா தல. என் தம்பிய அனுப்பனும்
3. VB என்ன படம் தல?
//நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. //
4.நம்ம சினிமா புதிர்களை பார்க்க சொல்லுங்க. இதுலதான் கேள்வியும் ரமெஷே, பதிலும் ரமெஷே.
5.Apple, Orange - பெரிய ஆளுயா நீ! Englishலாம் படிச்சிருக்க. ஆனா, Interview ல தான் இந்த வார்த்தை வராம, ரேவதி மாதிரி காத்துதான் வருது! ;)

சி. கருணாகரசு சொன்னது…

டப்பாவிகளா Butter Milk அப்படின்னா நான் தினமும் ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வாங்கி குடிக்கிற மோர் தானா? அத நான் இங்க 12 ரூபாய் கொடுத்து குடிச்சேன்//
நல்ல அனுபவம்!

LK சொன்னது…

arumai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப்ரியமுடன் வசந்த் vaanka மாப்பு எதுனாச்சும் தமிழ்ல சொல்லுங்க...

@ கே.ஆர்.பி.செந்தில் i can walk english, i can sleep english, i can blog english, i can tamilish english, i can vote english

@ எம் அப்துல் காதர் மிக்க நன்றிங்க. வீட்டு அட்ரெஸ் கொடுங்க. gift அனுப்புறேன். மீண்டும் நன்றி தல

@ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி LK

@ நன்றி சி. கருணாகரசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1.English கிளாஸ எப்படி தமிழ்ல எடுப்பாங்க.
- தமிழ்ல google transalate use பண்ணி சொல்லுவாங்க தல..
2. அந்த அரசமரம், எந்த ஏரியா தல. என் தம்பிய அனுப்பனும்
- நீங்க நம்ம பட்டிகாட்டான் jey -க்கு போன் பண்ணிநீங்கனா அவரு சொல்லுவாரு...
3. VB என்ன படம் தல?
- அதான நான் பத்து வருசமா தேடிட்டு இருக்கேன். கிடைக்கலையே தல..
4.நம்ம சினிமா புதிர்களை பார்க்க சொல்லுங்க. இதுலதான் கேள்வியும் ரமெஷே, பதிலும் ரமெஷே.
- அந்த ஆளு என் கைல கிடைச்சானா சொல்லிடலாம்
5.Apple, Orange - பெரிய ஆளுயா நீ! Englishலாம் படிச்சிருக்க. ஆனா, Interview ல தான் இந்த வார்த்தை வராம, ரேவதி மாதிரி காத்துதான் வருது! ;)
- என்னது Apple, Orange எல்லாம் இங்கிலீஷ் வார்த்தையா. அடப்பாவிகளா எங்க கணக்கு வாத்தியார் இதெல்லாம் சொல்லித் தரலியே...

Jey சொன்னது…

நான் காலேஜ் படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தத புதுசுல அவ்ளவா இங்கிலீஷ் வராது(இப்ப மட்டும் என்ன வாழுதாம்).|||

அரிச்சந்திரனுக்கு அடுத்து உண்மைய மட்டுமே பேசுரதுல உனனை அடிச்சிக்க முடியாது டேமேஜரு...

Jey சொன்னது…

///அதுக்கப்புறம் அரசமரத்தடில(நம்ம ஜெய் எழுதின அரசமரம் இல்ல) ஞானம் வந்து சரி interview போகலாம்னு முடிவு பண்ணினேன்///

ஆகா... , நம்ம பதிவதிவையும், ஓசில விளம்பரபடுத்தி நெஞ்ச நக்குராரே இந்த டேமேஜரு.

Jey சொன்னது…

Interviwer1: Tell me about yourself?
நான்: (என்னடா இந்த ஆளு நம்மளோட அலமாரிய பத்தி கேக்குறாரு) கேனத்தனமா ஒரு சிரிப்பு(எனக்கு இதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சாத்தான)||||||||||

என்னா.. சிப்பு, மை நேம் இஸ் சிப்பு, ம்ய் ஊரு நேம் இஸ் டெம்பில்பட்டினு சொலற அள்வுக்கு கூடவா உனக்கு தெரியாது..., உன்னைவிட எனக்கு இங்லீஷ் நொம்ப தெரியும் போலயே...

Jey சொன்னது…

|||நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. வந்ததுக்கு அதாவது பண்ணிட்டு போ. |||

யோவ் இத மனசுல வச்சிகிட்டுதான், சினிமாபுதிர்ன்ற பேர்ல, எங்கள பிறாண்ட்டிட்டிருக்கியா.....

Jey சொன்னது…

|||பின்ன என்ன திட்டாத குறையா அனுப்பிட்டாங்க.|||

சேதாரமில்லாம ... அனுப்பிட்டாங்கனு சந்தோசபடு மக்கா...

அது சந்தேகமே இல்லாம வேப்பமரத்து ஆத்தா புண்ணியம்தான், பேசாம நன்றிகடன் செலுத்த, ஒருவாட்டி பூக்குழி இறங்கிரு...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

இந்த சிறிய வயதில் பல சத்திய சோதனைகளை கடந்த அண்ணன் ரமேஷ் வாழ்க :))

நானும் இன்டர்வியுவுக்கு போனா இதையே பின்பற்றலாம்னு இருக்கேன்
(அப்பத்தான் பின் நாட்களில் அண்ணனை போல் பெரிய மென்பொருள் நிருவனத்திற்கு ஓனராக முடியும்) ஹா ஹா :D

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. வந்ததுக்கு அதாவது பண்ணிட்டு போ. //

இது top. நீங்க என்ன கேள்வி கேட்டுகிடிங்க தல? அந்த கேள்விகவது பதில் சொன்னிங்கள?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

யோவ் மெதுவா குத்துயா வலிக்குது காது......

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்ல வேல , என்னைய படிச்சு மாதி படிச்சு தொலைக்கல , தப்பிச்சேன்

ஜெயந்தி சொன்னது…

அது எதுக்கு மேல ஒரு தமிழ் டேபிள் காலம். ஓகோ டமிளன்னு நிரூபிக்கவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அரிச்சந்திரனுக்கு அடுத்து உண்மைய மட்டுமே பேசுரதுல உனனை அடிச்சிக்க முடியாது டேமேஜரு...//

ரொம்ப நன்றி JEY தல...

//ஆகா... , நம்ம பதிவதிவையும், ஓசில விளம்பரபடுத்தி நெஞ்ச நக்குராரே இந்த டேமேஜரு.//

நமக்குள்ள என்ன பாஸ்..தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை இங்கிலீஷ்.

//யோவ் இத மனசுல வச்சிகிட்டுதான், சினிமாபுதிர்ன்ற பேர்ல, எங்கள பிறாண்ட்டிட்டிருக்கியா.....//

பப்ளிக் பப்ளிக் .....

//அது சந்தேகமே இல்லாம வேப்பமரத்து ஆத்தா புண்ணியம்தான், பேசாம நன்றிகடன் செலுத்த, ஒருவாட்டி பூக்குழி இறங்கிரு...//

யோவ் பூக்குழி இறங்க ஆள் தேடிட்டு இருக்கியா கமிசன் எவ்ளோ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இது top. நீங்க என்ன கேள்வி கேட்டுகிடிங்க தல? அந்த கேள்விகவது பதில் சொன்னிங்கள?//

நான் தமிழ்லையும் கொஞ்சம் வீக் டெர்ரர்...

//யோவ் மெதுவா குத்துயா வலிக்குது காது......//

மணி (ஆயிரத்தில் ஒருவன்) குத்திடுவோம்.

//நல்ல வேல , என்னைய படிச்சு மாதி படிச்சு தொலைக்கல , தப்பிச்சேன்//

@ மங்குனி அமைச்சர் வாங்க வாங்க..

//அது எதுக்கு மேல ஒரு தமிழ் டேபிள் காலம். ஓகோ டமிளன்னு நிரூபிக்கவா?//

ஆமா ஜெயந்தி ஐ ஆம் எ டமிழன்

மங்குனி அமைச்சர் சொன்னது…

முதல் காமன்ட்ட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ,

நல்ல வேல , நான் உன்னைய மாதிரி படிச்சு தொலைக்கல , தப்பிச்சேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்பத்தான் பின் நாட்களில் அண்ணனை போல் பெரிய மென்பொருள் நிருவனத்திற்கு ஓனராக முடியும்//

பருத்திவீரன்: என்ன மாப்பு சௌக்கியமா?
டீ கடைக்காரன்: சீக்கிரம் டீய குடிச்சிட்டு கிளம்புங்கடா
செவ்வாழை: அத உங்க முதலாளிய சொல்ல சொல்லு.
டீ கடைக்காரன்: யார் எங்க முதலாளி
செவ்வாழை: நம்ம டக்லஸ் அண்ணன்
டீ கடைக்காரன்: அவனையே நான் நேத்துதான் வேலைக்கு சேத்துருக்கேன். ஏன்டா ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிட்டு அலையுறியா. இடத்த காலி பண்ணு...

.....
பெரிய மென்பொருள் நிருவனத்திற்கு ஓனராக முடியும்: தம்பி ஜில்தண்ணி. நான் வேலைதான் பாக்குறேன். ஓனராக முடியும் அப்டின்னு சொல்லி என்னை டக்லஸ் ஆக்கிடாத....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நல்ல வேல , நான் உன்னைய மாதிரி படிச்சு தொலைக்கல , தப்பிச்சேன்//

அதான எனக்கு இங்கிலீஷ் தான் தெரியாது தமிழ் தெரியுமே. பின்ன ஏன் மங்குனி அமைச்சர் கமென்ட் புரியலை ன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். அப்பாட ஸ்பெல்லிங் மிஸ்டேக்

ப.செல்வக்குமார் சொன்னது…

// Butter Milk அப்படின்னா நான் தினமும் ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வாங்கி குடிக்கிற மோர் தானா? //
Butter Milk அப்படிங்கறது மோரா...? தகவலுக்கு நன்றி ..
//நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு. //
என்னை கேள்வி கேட்டு பத்தி சொன்னீங்க .. சிரிப்பு போலீஸ் பத்தியா ...?

Siva சொன்னது…

"நீயே ஒரு கேள்வி கேட்டு நீயே ஒரு பதில சொல்லு".
கேள்வி: என்ன கேள்வி கேட்பது?
பதில்: அதுதானே தெரியல.
Butter Milk அப்படின்னா நான் தினமும் ரெண்டு ரூபாய் பாக்கெட்டுல வாங்கி குடிக்கிற மோர் தானா? அத நான் இங்க 12 ரூபாய் கொடுத்து குடிச்சேன்//
ஏமாறுவதற்கு முன்னால் எச்சரிக்கை கொடுத்ததற்கு நன்றி தல.

முத்து சொன்னது…

உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?ஜாலி என்னை மாதிரியே ஒரு ஆளு

முத்து சொன்னது…

கலாநேசன் கூறியது...

இது சென்னையில் நடந்ததா இல்லை அதுக்கப்புறமா சிங்கப்பூர் போய் நேர்முகத் தேர்வு போனிங்களே அப்பவா?////////////


எங்க நடந்தா என்ன சார் நமக்கு தேவை அவர் பல்பு வாங்கணும் அவ்வளவு தானே

முத்து சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

அப்ப நெஜமாவே உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?...//////

இதில் என்ன சந்தேகம் அவர் என் இனம்

முத்து சொன்னது…

seemangani கூறியது...

பயபுள்ளைக்கு மொத சிரிப்புலே புரிய வேண்டாம் இவன்லாம் ஒரு ஆபீசரு.///////////////


நான் மட்டும் அந்த ஆபீசராய் இருந்தால் பயபுள்ளையை சும்மா ரூம் குள்ளயே வூடு கட்டி அடிசுருப்பேன்

முத்து சொன்னது…

Jey கூறியது...
அரிச்சந்திரனுக்கு அடுத்து உண்மைய மட்டுமே பேசுரதுல உனனை அடிச்சிக்க முடியாது டேமேஜரு./////////


என்ன சொல்லுற ஜெ,சிப்பு டேமேஜரா!!அப்போ அந்த கம்பெனி விளங்கனாப்புல தான்

Jey சொன்னது…

முத்து சொன்னது…
Jey கூறியது...
அரிச்சந்திரனுக்கு அடுத்து உண்மைய மட்டுமே பேசுரதுல உனனை அடிச்சிக்க முடியாது டேமேஜரு./////////


என்ன சொல்லுற ஜெ,சிப்பு டேமேஜரா!!அப்போ அந்த கம்பெனி விளங்கனாப்புல தான் ///

என்ன முத்து இது தெரியாதா, இவர் பதிவுகள படிச்ச , அவரோட கடை ஓனரு, இவர டேமேஜர் ஆக்கிட்டாராம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ முத்து உங்களுக்கு இன்னும் விவரம் பத்தல. வீட்டுல பெரியவங்க யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வாங்க...

பிரசன்னா சொன்னது…

I english know very well.. my country language :)

பட்டாபட்டி.. சொன்னது…

அடப்பாவி.. இவ்வளவு நாளா, நீ இங்கிலீசு தெரிஞ்ச வெள்ளக்காரனு நினச்சுக்கிட்டு இருந்தேன்யா..

சே..திசைகாட்டி சொன்னது சரியாப்போச்சு..

அவ்வ்வ்வ்வ்வ்வ்.

http://thisaikaati.blogspot.com/2010/07/pimpangal.html

அனு சொன்னது…

யூ நோ நோ இங்க்லிஸ்?? ஐ இங்க்லிஸ் வெரி நோ. ஐ இங்கிலிஸ் யூ டீச்சீங்.. யூ தவுசண்ட் ருபீஸ் மீ பேயிங் (டெய்லி டெய்லி)..
யூ ஒன் மந்த் பிகம் இங்க்லிஸ் பாய்.. டீல் ஒகே? நாட் ஒகே??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரசன்னா யு நோ பைவ் லாங்குவேஜஸ் இன் இங்கிலீஷ்?

@ பட்டாபட்டி.. சிங்கபூருக்கு வந்த்தப்பவே தெரிய வேணாம் என்னைப் பத்தி...

@ டீல் ஓகே அனு.

Jey சொன்னது…

அனு கூறியது...
யூ நோ நோ இங்க்லிஸ்?? ஐ இங்க்லிஸ் வெரி நோ. ஐ இங்கிலிஸ் யூ டீச்சீங்.. யூ தவுசண்ட் ருபீஸ் மீ பேயிங் (டெய்லி டெய்லி)..
யூ ஒன் மந்த் பிகம் இங்க்லிஸ் பாய்.. டீல் ஒகே? நாட் ஒகே??///

டேமேஜரு, என்னையும் ட்யூசனுக்கு சேத்துக்க சொல்லி, ரெகமெண்ட் பண்ணுயா, பாத்தா வெள்ளைக்கார அம்மணி மாதிரி தெரியுது!!!, நானும் இங்லீசு கத்துகிட்டு பெரியாளாயிருவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Jey தல அதெல்லாம் எதுக்கு.. நியூ வாட்டர் குடிச்சா இங்கிலீஷ் நல்லா பேசலாமாம். ட்ரை பண்ணி பாருங்களேன்...

Jey சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Jey தல அதெல்லாம் எதுக்கு.. நியூ வாட்டர் குடிச்சா இங்கிலீஷ் நல்லா பேசலாமாம். ட்ரை பண்ணி பாருங்களேன்...///

எங்க இங்லீசு கத்துகிட்டு உன்னவிட, நல்ல பேசிருவேணு, ஏன்யா பதறுரே. சரி வுடு நான் நேராவே அந்த இனிலீசு அம்மனிகிட்ட டீல் பேசிக்கிறேன்.
இந்த அம்மனி முடியாதுன்னா சொல்லிட்ட, 30 நாள் இங்லீசு புக்க படிச்சாவது உன்ன விட பெரியாளாயி, இங்லீசுல கவுஜ எழுதாம வுடமாட்டேண்டியோவ்....

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

தானே பட்டர் மில்க் குடித்த உண்மைத்தமிழன் ரமேஷ் வாழ்க.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

முத்து சொன்னது…

Jey சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Jey தல அதெல்லாம் எதுக்கு.. நியூ வாட்டர் குடிச்சா இங்கிலீஷ் நல்லா பேசலாமாம். ட்ரை பண்ணி பாருங்களேன்...///

எங்க இங்லீசு கத்துகிட்டு உன்னவிட, நல்ல பேசிருவேணு, ஏன்யா பதறுரே. சரி வுடு நான் நேராவே அந்த இனிலீசு அம்மனிகிட்ட டீல் பேசிக்கிறேன்.
இந்த அம்மனி முடியாதுன்னா சொல்லிட்ட, 30 நாள் இங்லீசு புக்க படிச்சாவது உன்ன விட பெரியாளாயி, இங்லீசுல கவுஜ எழுதாம வுடமாட்டேண்டியோவ்..../////////////////////


அடப்பாவிங்களா இது உங்களுக்கு நல்லாவா இருக்கு இதுக்கு நீங்க ரெண்டு பேறும் ஆரஞ்சு பச்சடி சாப்பிட்டு சாவலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட் thanks

//அடப்பாவிங்களா இது உங்களுக்கு நல்லாவா இருக்கு இதுக்கு நீங்க ரெண்டு பேறும் ஆரஞ்சு பச்சடி சாப்பிட்டு சாவலாம்//

no bad words please muthu

முத்து சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...


//அடப்பாவிங்களா இது உங்களுக்கு நல்லாவா இருக்கு இதுக்கு நீங்க ரெண்டு பேறும் ஆரஞ்சு பச்சடி சாப்பிட்டு சாவலாம்//

no bad words please முத்து///////////////

இதுவே உனக்கு கெட்ட வார்த்தையா அப்போ கெட்ட வார்த்தையை என்னன்னு சொல்லுவ அகராதின்னா

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது