Horoscope

வெள்ளி, ஆகஸ்ட் 27

எம் பி ஏ vs பி ஈ


ஒரு MBA Student -ம் ஒரு Engineering Student-ம் ஒரு கேம்புக்கு போறாங்க. அங்க ஒரு டென்ட் போட்டு தங்குறாங்க. இரவு நேரம் Engineering Student , MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.

அதுக்கு MBA Student "I see millions of stars" அப்டிங்கிறான். Engineering Student அவன்கிட்ட "வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்". அதுக்கு MBA Student சொல்றான்:

1 . (Astronomically) விண்வெளி ஆராய்ச்சிபடி பல லட்சம் அண்டமும் பல கோடி கோள்களும் இருக்கிறது
2 . (Astrologically) ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது
3 . (Time wise) நேரப்படி இது காலாண்டுக்கு மூன்றுமுறை தோன்றும்.
4 . (Theologically) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் படி கடவுளே பெரியவர், நாம் மிகச்சிறியவரே.
5 . (Meteorologically) வானிலை ஆராய்ச்சிப்படி நாளைக்கு நமக்கு ஒரு அழகான நாளாய் விடியும்.

MBA Student: சரி நீ இதை பத்தி என்ன நினைக்கிற?

Engineering Student (அமைதியான புன்னகையுடன்): (Practically) ங் கொய்யால நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கியே...


ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."

டிஸ்கி: எனக்கு இதை மெயிலில் அனுப்பிய நண்பர் பாபுவுக்கு(இம்சை அரசன் இல்லை) மிக்க நன்றி...தமிழாக்கம் மட்டும் நான் இல்லை. தமிழாக்கம் செய்த ரெண்டு பேரும் மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு மேடைக்கு வாங்க..

52 கருத்துகள்:

அனு சொன்னது…

என்னாது?
காந்தி செத்துட்டாரா???

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க இடுகை பயனுள்ளதா இருந்தது.கால தாமதமாக போடப்பட்டது என நையாண்டி செய்யும் அனுவுன் கமெண்ட்டைக்கூட பிரசுரித்த உங்க தாரால மனசு வாழ்க

அனு சொன்னது…

எனக்கு தெரிஞ்ச ஒரு ஜோக்..

3 MBAs ஒரு காட்டு வழியே போய்ட்டு இருந்தாங்களாம். அப்போ, நடுவுல ஒரு பயங்கரமான ஆறு வந்துச்சாம்.. உடனே, பயந்து போய் மூணு பேரும் கடவுள் கிட்ட வேண்டுனாங்களாம்..

HR1: கடவுளே, இந்த ஆற்றைக் கடக்க எனக்கு உறுதியைக் கொடு..

உடனே கடவுள் அவருக்கு உறுதியான கைகளையும் கால்களையும் கொடுத்தாராம்.. HR1 ரொம்ப கஷ்டப்பட்டு 2,3 மணிநேரத்தில ஆற்றை தாண்டுனாராம்..

HR2: கடவுளே, இந்த ஆற்றைக் கடக்க எனக்கு உறுதியையும், அதற்கு தேவையான பொருட்களையும் கொடு..

உடனே, கடவுள் அவருக்கு ஒரு சின்ன மரக்கட்டைய குடுத்தாராம்.. அதைப் பிடிச்சுக்கிட்டே கஷ்டப்பட்டு HR2-ம் ஒரு மணி நேரத்துல கரை சேர்ந்தார்..

HR3: கடவுளே, இந்த ஆற்றைக் கடக்க எனக்கு உறுதியையும், தேவையான பொருட்கள் மற்றும் அறிவையும் கொடு..

உடனே, கடவுள் அவனை ஒரு Engineerஆக மாற்றி விட்டார்.. அவன் Mapஐ பார்த்து பக்கத்தில் உள்ள Bridgeஐ use பண்ணி 5 நிமிஷத்தில் அந்த ஆற்றை கடந்தானாம்...
-------------------------------
பி.கு:
நாங்களும் இஞ்சினியர் தானுங்க்ணோவ்..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// எனக்கு இதை மெயிலில் அனுப்பிய நண்பர் பாபுவுக்கு(இம்சை அரசன் இல்லை)//
சீ சீ எனக்கு இந்த அளவுக்கு சென்சே கிடையாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வாங்க அனு. ஜோக் அருமை. மன்னிக்கணும் பதிவை தூக்கிட்டு புதுசா போட்டதால உங்க கமெண்டும் போயிடுச்சு..

@ வாங்க செந்தில் வருகைக்கு நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சீ சீ எனக்கு இந்த அளவுக்கு சென்சே கிடையாது//

@ பாபு அதான் தெரியுமே...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.//
சந்திரனில் ஆயா வடை சுடுறது தெரியுது

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது//
உனக்கு சனி எங்கே நிற்கிறதுன்னு பாரு.சீக்கிரம் அப்ப தான் கல்யாணம் நடக்கும்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."//
அணு நீங்க அப்ப..Non sense ....

அனு சொன்னது…

//மன்னிக்கணும் பதிவை தூக்கிட்டு புதுசா போட்டதால உங்க கமெண்டும் போயிடுச்சு..//

சரி விடுங்க.. இதுக்கெல்லாம் அழுதா நல்லாவா இருக்கு?? கண்ணைத் துடைங்க...

என்னது நானு யாரா? சொன்னது…

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க அப்பு! கடைசி லைன் படிக்கும்போது சிரிப்பு அடக்க முடியல!

அனு சொன்னது…

@harini
///ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."//
அணு நீங்க அப்ப..Non sense ...//

முன்னாடி போட்டிருக்குற 0% அ கவனிக்காம விட்டுட்டீங்களே.. ஒரு வேளை 0-க்கு value இல்லைன்னு விட்டுட்டீங்களா?

இதுக்கு தான் இஞ்சினியரா இருக்கனும்னு சொல்றது.. அப்போ தான், சின்ன விஷயம் கூட கண்ணுல படும்..

என்னது நானு யாரா? சொன்னது…

இன்டில submit செய்யலையா அப்பு?

செல்வா சொன்னது…

அட பாவமே ..
இப்படிஎல்லாமா நடக்கூது....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

MBA பெருசா BE பெருசா .. யாராவது அடிச்சு சொல்லுங்க. பாப்போம்...

அடிக்கிறது சிரிப்பு போலிசையா தான் இருக்கணும்..

செல்வா சொன்னது…

@ அனு // அப்போ, நடுவுல ஒரு பயங்கரமான ஆறு வந்துச்சாம்.. உடனே, பயந்து போய் மூணு பேரும் கடவுள் கிட்ட வேண்டுனாங்களாம்..//
பயங்கரமான ஆறுனா எப்படி இருக்கும் ..
கொம்பு இருக்குமா இல்ல கருப்பா இருக்குமா ..?
இல்ல பல்லு நீளமா இருக்குமா ..?

S.M.Raj சொன்னது…

நாங்களும் இஞ்சினியர் தானுங்க்ணோவ்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

பயபுள்ள...காலேஜ் எம் பி ஏ பி ஈ ன்னு பெனாத்துதே.. மந்திரிச்சு உடனும்.
மாரியாத்தா ரமேஷ நல்லபடியாக்கு. வெங்கட்ட தீ மிதிக்க உடறேன்...

சௌந்தர் சொன்னது…

ஒரு டெண்ட்டுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா........

Jey சொன்னது…

//ENGINEERING = 100% COMMON SENSE

& 0% NON-SENSE."//

என்ன டேமேஜர்...., இதயும் தமிழாக்கம் பண்ணிருந்தா நாங்களும் படிச்சி கருத்து சொல்லுவோம்லே?

Chitra சொன்னது…

இதை விடவும் அருத பழசு forward மெயில் உங்களுக்கு கிடைக்கலியா? வேணாம், அழுதுடுவேன்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//& 0% NON-SENSE."//
அணு நீங்க அப்ப..Non sense ....//

//முன்னாடி போட்டிருக்குற 0% அ கவனிக்காம விட்டுட்டீங்களே.. ஒரு வேளை 0-க்கு value இல்லைன்னு விட்டுட்டீங்களா?/

@ அனு நீங்க ஹரிணிய தப்ப நினைக்காதீங்க. அனு நீங்க, நான் ரெண்டு பெரும் சென்ஸ் உடையவங்க அப்டிங்கிரத்தான் அணு நீங்க அப்ப..Non senseசொல்றாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சந்திரனில் ஆயா வடை சுடுறது தெரியுது///

யாரோட ஆயா?

@ நன்றி என்னது நானு யாரா?பங்காளி..

@ ப.செல்வக்குமார் ஆமா நீ என்ன படிக்கிற?

@ வெறும்பய உனக்கு ஏன் இந்த கொலைவெறி ராசா?

//பயங்கரமான ஆறுனா எப்படி இருக்கும் ..
கொம்பு இருக்குமா இல்ல கருப்பா இருக்குமா ..?
இல்ல பல்லு நீளமா இருக்குமா ..?//

உனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது கோமாளி?

@ S.M.Rajஓகே அடுத்த ஆர்டர் உங்களுக்குதான்...

//பயபுள்ள...காலேஜ் எம் பி ஏ பி ஈ ன்னு பெனாத்துதே.. மந்திரிச்சு உடனும்.
மாரியாத்தா ரமேஷ நல்லபடியாக்கு. வெங்கட்ட தீ மிதிக்க உடறேன்...//

சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க மணி சார்..

@ சௌந்தர்ஆமா

//என்ன டேமேஜர்...., இதயும் தமிழாக்கம் பண்ணிருந்தா நாங்களும் படிச்சி கருத்து சொல்லுவோம்லே?//

அந்த ரெண்டு பெரும் இத தமிழாக்கம் பண்ணலியே. ஏய் அந்த ரெண்டு பயலுகளும் ஒழுங்க மேடைக்கு வாங்க..

ஜில்தண்ணி சொன்னது…

அடங்கப்ப்பா இந்த இஞ்சி தின்னவங்க இம்ச தாங்கலப்பா :)

கருடன் சொன்னது…

அனு சொன்னது…

//எனக்கு தெரிஞ்ச ஒரு ஜோக்..

3 MBAs ஒரு காட்டு வழியே போய்ட்டு இருந்தாங்களாம். அப்போ,//


என்னாது? ஆங்கிலேயர் இந்தியா பிடிச்சிடாங்களா???

(ரமேசு.. நீ சொன்ன மாதிரி கமெண்ட் போட்டேன்..)

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட//

நடந்து போகும் போது போர வழி பாத்து நட... வானத்துல என்ன பார்வை? எதவது குழில விழ போற...

(எலேய் மக்கு Engineer கதை தப்பா சொல்லாத... இப்படி சொல்லனும்.. ”டெண்ட் போட்டு தூங்கறாங்க... அதிகாலை கண் விழிச்சி Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பாத்தா”)

கருடன் சொன்னது…

அட MBA Student என்ன ஒரு அறிவு Astronomy, theologi, meterology இப்படி பல விஷயம் தெரிஞ்சி வச்சி இருக்கான்... அறிவாளிகள் பார்வை விசாலமானது.. டெண்ட் கொட்டால படம் பாக்கரவன இஞ்ஜினியர் அக்கினா டெண்ட் பத்திதான் கவலை வரும்...

கருடன் சொன்னது…

@அனூ

கீழே உள்ள கேள்விகளுக்கு சரியாக விளக்கம் தேவை

1. மரகட்டை பிடித்து கொண்டு : அப்படியானால் அவர் ஒரு கையில் நீந்தினாரா? நீரேட்டம் மர கட்டை வேறு திசையில் தள்ளும்.. 2 கை கொண்டு நீந்தியவர் 2 மணி நேரம் ஒரு கையில் நீந்தியவர் எப்படி ஒரு மணி நேரத்தில்?

2. அதற்கு தேவையான பொருட்களையும் கொடு : இங்கு என் Map தரவில்லை?

3. நீந்தி கடக்க 3 மணி நேரம் - அப்படியானால் மிகவும் அகலமான ஆறு.. அதை எப்பாடி 5 நிமிடாத்தில் கடந்தார்... ?

பல லாஜிக் ஓட்டை இருப்பதால் இது இஞ்ஜினியர்களின் கட்டுக் கதை என்று நாட்டாமை ரமேசு தீர்ப்பு அளிப்பார்

- டெரர் - MBA(HR)

அனு சொன்னது…

@டெரர்
//கீழே உள்ள கேள்விகளுக்கு சரியாக விளக்கம் தேவை//

உங்களை வெளியூரு ப்ளாக்ல கூப்பிடுறாங்களாம்.. போய்ட்டு வாங்க.. நான் பதில் சொல்லுறேன்.. (அதுக்கு அப்புறம், நீங்க திரும்பி வந்தீங்கன்னா!!)

கருடன் சொன்னது…

@அனு
//உங்களை வெளியூரு ப்ளாக்ல கூப்பிடுறாங்களாம்.. போய்ட்டு வாங்க.. நான் பதில் சொல்லுறேன்.. (அதுக்கு அப்புறம், நீங்க திரும்பி வந்தீங்கன்னா!!)//

ஐஐஐ!!!! எஸ்ஸ்ஸ் ஆகராங்க!!! பதில் தெரியல சொல்லுங்க...... இப்பவும் நான் வெளி ப்ளாக்ல கமெண்ட் போட்டுதான் இருக்கேன். மாமன், மச்சன் இன்னைகு அடிச்சிபோம் நளைக்கு சேர்ந்துபோம்... நீங்க அந்த 100% sense use பண்ணி பதில் சொல்லுங்க அம்மணி...

ஜெய்லானி சொன்னது…

@@@அனு சொன்னது…

என்னாது?
காந்தி செத்துட்டாரா??? //


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சீமான்கனி சொன்னது…

அந்த பாபாவ நான் ஒருமுறை பார்க்கணும்... ஒன்னு சொல்லணும்...

Unknown சொன்னது…

இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா...?

வெங்கட் சொன்னது…

@ டெரர்.,

// அப்படியே நடந்து போகும்போது
Engineering student MBA student-கிட்ட
அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு
என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.


அதுக்கு MBA Student "I see millions of stars"
அப்டிங்கிறான். Engineering Student அவன்கிட்ட
"வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்".
அதுக்கு MBA Student சொல்றான்: //

இதை சொன்னதுல என்ன தப்பு..??
வானத்தை பார்னு சொல்லிட்டு..
என்ன தெரியுதுன்னு கேட்டா அவன்
Stars தெரியுதுன்னு தான் சொல்லுவான்..

பின்ன டெண்ட் என்ன வானத்துலயா
கட்டி இருக்கு..???????

// நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு
போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள
பேசிக்கிட்டே இருக்கியே //

முதல்ல அதை சொல்லாம..
வெட்டியா பேச்சை ஆரம்பிச்சது யாரு..??

அந்த Engineering Student-ம் உங்கள
மாதிரி லூஸ் தானா..??!!

// டெண்ட் போட்டு தூங்கறாங்க...
அதிகாலை கண் விழிச்சி
Engineering student., MBA student-கிட்ட
அந்த வானத்தைப் பாத்தா.. //

Yes.. இப்படி ஆரம்பிச்சா தான்
கதைக்கு லாஜிக் ஒத்துவருது..

ஒரு லாஜிக்கோட உருப்படியா கதை
சொல்ல தெரியல..
நான் Engineering College வழியா
தினமும் பஸ்ல போவேன்னு
பெருமை வேற..

வெங்கட் சொன்னது…

@ டெரர்.,

// பல லாஜிக் ஓட்டை இருப்பதால்
இது இஞ்ஜினியர்களின் கட்டுக் கதை //

ஹி.., ஹி.., ஹி...
சூப்பர் அப்பு...

@ அனு.,

// போய்ட்டு வாங்க.. நான் பதில் சொல்லுறேன்..
(அதுக்கு அப்புறம், நீங்க திரும்பி வந்தீங்கன்னா!!) //

ஆஹா.. வலிக்காத மாதிரியே
என்னாமா நடிக்கறீங்க..!!??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அடங்கப்ப்பா இந்த இஞ்சி தின்னவங்க இம்ச தாங்கலப்பா :)//

@ ஜில்லு வா ராசா எந்த பொண்ணு கூட சுத்திகிட்டு இருக்க?

@ TERROR-PANDIYAN(VAS)உங்களுக்கு இருக்குற அறிவுக்கு நீங்க எங்கயோ இருக்க வேண்டியவரு...

@ ஜெய்லானி & கலாநேசன் ஆமா இதுகூட தெரியாத ஐயோ ஐயோ...

@ சீமான்கனிஹிஹி

//ஒரு லாஜிக்கோட உருப்படியா கதை
சொல்ல தெரியல..
நான் Engineering College வழியா
தினமும் பஸ்ல போவேன்னு
பெருமை வேற..//

@ வெங்கட் கதை சொன்னா அனுபவிக்கனும் ஆராய்ச்சி பண்ணகூடாது...

அனு சொன்னது…

@டெரர்

//ஐஐஐ!!!! எஸ்ஸ்ஸ் ஆகராங்க!!! பதில் தெரியல சொல்லுங்க......//

பதிவை விட நம்ம கமெண்ட் பெருசாகிட கூடாதேன்ற நல்ல எண்ணத்துல ஜோக்கை கொஞ்சம் கட் பண்ணி போட்டேன்.. அதான், பிரச்சனை ஆகிடுச்சு.. பேசாம, 'எதிர் பதிவுகள்'னு நானே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுடலாமான்னு பாக்குறேன்.. அந்த அளவுக்கு என் கமெண்ட்ஸ் பெருசா இருக்கு ;)

Actually, HR2க்கு கடவுள் ஒரு மரக்கட்டை குடுப்பார்.. அதை வச்சு அவன் ஒரு தோனி செஞ்சு ஆற்றைக் கடப்பான்.

இப்போ பதில்..
1. ஆறு ரொம்ப பயங்கரமா (more current) இருக்கிறதுனால நீச்சல்/தோனில போறது ரொம்ப கஷ்டம். ஜான் ஏறுனா முழம் சறுக்கிற கதை தான் :)

2.MBA (HR)க்கு MAP use பண்ணுற அளவுக்கு அறிவு இருக்கா?? ஹிஹி.. என்ன டெரர் சார், காமெடி பண்ணிகிட்டு..

3. Refer Answer no. 1
------------------------------
நான் சமாளிக்குறத பாத்தா நானும் சீக்கிரம் ஒரு MBA ஆகிடுவேன் போல இருக்கு..

Jayadev Das சொன்னது…

Why do you hate MBA guys so much? Many B.Tech's from the prestigeous IITs go for MBA in IIM's. And in fact they take it as a challenge to enter IIM, what is wrong with MBA?

Jayadev Das சொன்னது…

a

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Why do you hate MBA guys so much? Many B.Tech's from the prestigeous IITs go for MBA in IIM's. And in fact they take it as a challenge to enter IIM, what is wrong with MBA?//

ஆகா அடுத்து ஒரு மன்னிப்பு கடிதம் எழுதணும் போல?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

என்ன இங்க சண்டை ... என்ன இங்க சண்டை ......
ரமேஷ் உனக்கு இந்த நாரதர் வேலை தேவையா ...
உன் கோவில்பட்டி பரஞ்ச க்கு B .E யும் வேலைக்கு வரமாட்டுது ,MBA யும் வரமாட்டுது .

கருடன் சொன்னது…

@அனு
//நான் சமாளிக்குறத பாத்தா நானும் சீக்கிரம் ஒரு MBA ஆகிடுவேன் போல இருக்கு..//

ஹா.. ஹா.. ஹா.. அனு!! மறுபடி லாஜிக் விட்டிங்க.... தொடர்ந்து விவாதிக்க ஆசை பட்டா என் ப்ளாக் வாங்க. ரமேஷ் வீட்டுல ரத்தம் சிந்த வேண்டாம்.

(ஏற்க்கனவே ஒரு நண்பார் கோவம வந்து இருக்க மாதிரி தெரியுது.. அப்புறம் சிரிப்பு போலீஸ் சீரிய்ஸ் போலீஸ் ஆகி நம்மள லாடம் கட்டிடும்...அவ்வ்வ்வ்வ்வ்)

கருடன் சொன்னது…

@Jayadeva...
//Why do you hate MBA guys so much? Many B.Tech's from the prestigeous IITs go for MBA in IIM's. And in fact they take it as a challenge to enter IIM, what is wrong with MBA?//

Jayadeva சார்!! Cool Cool!! ரமேசு நல்லா சிரிப்பு காட்டும். சீரியஸா எடுத்துகாதிங்க. நாங்க இப்படிதான் ஜாலியா அடிச்சிபோம்...otherwise எல்லா படிப்பும் சிறந்ததுதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Jayadeva சார்!! Cool Cool!! ரமேசு நல்லா சிரிப்பு காட்டும். சீரியஸா எடுத்துகாதிங்க. நாங்க இப்படிதான் ஜாலியா அடிச்சிபோம்...otherwise எல்லா படிப்பும் சிறந்ததுதான்.//

அடுத்தவருக்கு விழ வேண்டிய அடியை தானே போய் வாங்கும் தலைவர் டெரர் வாழ்க...

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//அடுத்தவருக்கு விழ வேண்டிய அடியை தானே போய் வாங்கும் தலைவர் டெரர் வாழ்க... //

கிர்ர்ர்ர்ர்ர்.... எலேய் ரமேசு.. பாவம் போலீஸ் 2 ருபாய் மாமூல் கொடுக்கலாம் பாத்தேன்...நீ என்னைய கும்ம பாக்கர.....இருலே போய் ஆள கூட்டியாரேன்....

Jey சொன்னது…

46

Jey சொன்னது…

47

Jey சொன்னது…

48

Jey சொன்னது…

49

Jey சொன்னது…

50

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//தமிழாக்கம் மட்டும் நான் இல்லை. தமிழாக்கம் செய்த ரெண்டு பேரும் மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு மேடைக்கு வாங்க//
யாரப்பா அந்த ரெண்டு பேரு சீக்கிரம் மேடைக்கு வாங்க...

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

பதிவுலகத்துக்கு புதியவன்..!
உங்களை போன்றவர்களின் வருகைகாக எனது பக்கங்கள் காத்திருக்கிறது...!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது