Horoscope

வியாழன், செப்டம்பர் 2

பதிவுலகம் வரமா? சாபமா?

வரமே:

1 . அருண் மாதிரி தமிழ் இல்லாத காட்டுக்குள்ள(தண்ணி இல்லாத காடுதான் இருக்கனுமா) இருந்தா பொழுது போறதுக்கு இலவசமா கிடைக்கிறது பதிவுலகம் ஒண்ணுதான்.

2 . ஆபீஸ்ல ஆணி இல்லாதப்ப போரடிச்சா வேற வழியே இல்லை. பதிவுலகம்தான் பொழுதுபோக்கு.

3 . சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் மக்களுக்காகவே இலவசமாக கிடைக்க கூடிய இடம் பதிவுலகம்தான்(காசு கொடுத்து எவன் படிக்கிறது)

4 . அடுத்தவங்கள கலாய்க்கிரதுலையும் ஒரு சந்தோசம்தான். நேரடியா யாரையும் கலாய்க்க முடியாது. பதிவுலகுல நமக்கு பிடிக்காதவங்களை நல்லா கலாய்க்கலாம்.

5 . நமக்கு வேண்டாத நண்பர்கள் இருந்தா சில பிரபல பதிவர்களோட பதிவை படிக்க சொன்னா அதுக்கப்புறம் அந்த நண்பர்கள் தொல்லையே நமக்கு கிடையாது...

6 . மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)

7 . நிறைய பதிவர்கள் பதிவை படிச்சு நம்ம தமிழ் அறிவை வளர்த்துக்கலாம்(சத்தியமா நான் டெரரை சொல்லலை)

8 . சார் நீங்கதான அந்த பிரபல பதிவர்ன்னு மக்கள் கிட்ட இருந்து ஆட்டோகிராப் கேட்டு வர்றத்துக்கு சான்ஸ் உண்டு(நீதான அந்த மொக்கை பதிவர்ன்னு அடி பின்னாம இருந்தா சரிதான்).

சாபமே:

1 . ஆபீஸ்ல சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்களின்(!!!!????) பதிவை படிக்கும்போது மெய்மறந்து ஆணியை மறக்கும்போது நம்ம மேலதிகாரி figure முன்னாடி கேவலமா திட்டுவாரே. இந்த அவமானம் தேவையா? கண்டிப்பா பதிவுலகம் தேவையா?

2 . பாக்குற நண்பர்கள்கிட்ட எல்லாம் என் பதிவை படின்னு சொல்றதால நட்பு வட்டம் குறைஞ்சிடும்(பின்ன எவன்கிட்ட கடன் வாங்குறது)

3 . அனானின்னு ஒரு நோய் தாக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம்.

4 . சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.

5 . பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு  அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்(இதுல எந்த உள்குத்தும் இல்லை)

44 கருத்துகள்:

சேலம் தேவா சொன்னது…

ரெண்டாவதா வரது எல்லாம் உங்களுக்கு நடந்தது மாதிரியே இருக்கே?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

. பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்(இதுல எந்த உள்குத்தும் இல்லை)//

இந்தாளை எனக்கும் தெரியும் மாம்ஸ் த்தூ இதெல்லாம் ஒரு பொழப்புன்னு மட்டும் சொல்லிக்கிறேன் ங்கொய்யால பிச்ச எடுத்து ஓட்டு வாங்கி ரெண்டு மாடி வீடு கட்டப்போற மாதிரிதான்..

கொஞ்ச நேரம் கழிச்சு அந்தாளு வந்தா நான் இல்லைன்னு சொல்லிடு மாம்ஸ்!

தோழி சொன்னது…

எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது நமக்கு வரமே...
நாங்கள் எப்போது அதன் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறோமோ அப்போது அது சாபமாகிறது...

dheva சொன்னது…

தம்பி....கொன்னு புட்ட போ....! சீரியசா எழுதுற ப்திவு எல்லாம்....வரமா? சாபமா?

நாயகன் கமல் பாணில...............தெரியலையேப்பா.....அவ்வ்வ்வ்வ்!

Chitra சொன்னது…

இதில், உங்களுக்கு எத்தனை வரங்கள்? எத்தனை சாபங்கள்? :-)

GSV சொன்னது…

//அருண் மாதிரி தமிழ் இல்லாத காட்டுக்குள்ள(தண்ணி இல்லாத காடுதான் இருக்கனுமா) இருந்தா பொழுது போறதுக்கு இலவசமா கிடைக்கிறது பதிவுலகம் ஒண்ணுதான்.//

இதை நான் வழிமொழிகிறேன்

@ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//இந்தாளை எனக்கும் தெரியும் //

கண்டுபுடிசிடேன்,அவரு "blog" லையே தூங்கிறவர் ஆச்சே...ஏன் அப்படின்னு கேட்டா "comments" பார்த்துகிட்டே கண் முழித்தா நல்லதாம்.

GSV சொன்னது…

//இந்தாளை எனக்கும் தெரியும்//

இவர் சொன்ன பொன்மொழி உங்களுக்காக " கமெண்ட்ஸ் ல கண் முழித்தா கண்ணுக்கு நல்லதுங்க"

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குங்க.

நிலாமதி சொன்னது…

சத்தியமா வரம் தானுங்க ஒரு நாள் கணனியில் பதிவுகள் படிக்காவிடால் அந்த நாள் விடியாதுங்க . இனிய பொழுது போக்கு. எனக்கு. உங்களுக்கு.............?

Unknown சொன்னது…

ஆபிஸ்ல ஆணிய மட்டும் பாருங்க பாஸ்...........

க ரா சொன்னது…

இம்ம்.. என்னென்னவோ சொல்ற.. ரொம்ப பிரபல பதிவராய்ட போ :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரெண்டாவதா வரது எல்லாம் உங்களுக்கு நடந்தது மாதிரியே இருக்கே? //

@ சேலம் தேவா அப்படியா?

//கொஞ்ச நேரம் கழிச்சு அந்தாளு வந்தா நான் இல்லைன்னு சொல்லிடு மாம்ஸ்! //

@ வசந்த் மாப்பு பங்காளிகளுக்குள்ள ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு நடுவுல..

@ தோழி நீங்க சொல்றது சரிதான்..

@ dheva வாங்க பிரதர் வாங்க

@ Chitra தெரியலையே சிஸ்டர்......

@ GSV அவர் யாருன்னு ஒரு குழு கொடுங்க..

@ DrPKandaswamyPhD நன்றி

@ நிலாமதி நன்றி

///ஆபிஸ்ல ஆணிய மட்டும் பாருங்க பாஸ்........... //

கலாநேசன் ஆபீஸ் கலாசாரத்தையே மாத்திடுவீங்க போல....

@ இராமசாமி கண்ணண் நன்றி நண்பா

Jey சொன்னது…

பட்டிமன்றம் எப்ப டேமேஜர் நடந்தது?. சொல்லவே இல்லை...

Jey சொன்னது…

///சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் ///

அட அட அட... எங்கியோ போய்ட்டே போலீஸூ....:)

Jey சொன்னது…

நெ. 4 .. நச்....:)

Jey சொன்னது…

நெ.6 - இது சிரிப்பு போலீஸு

Jey சொன்னது…

//நிறைய பதிவர்கள் பதிவை படிச்சு நம்ம தமிழ் அறிவை வளர்த்துக்கலாம் //

என் பிளாக் மாதிரினு சொல்லு...):

Jey சொன்னது…

//சார் நீங்கதான அந்த பிரபல பதிவர்ன்னு மக்கள் கிட்ட இருந்து ஆட்டோகிராப் கேட்டு வர்றத்துக்கு சான்ஸ் உண்டு //

அல்ரெடி...ஆட்டோ கிராப் கேட்டு தொந்தரவுதான்....(பிரபலம் ஆனாலே இதெல்லாம் சகஜமப்பா...:))

Jey சொன்னது…

//சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.//

ஆமா ஆமா....என்னத்த சொல்ல...

Jey சொன்னது…

//பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்//

இல்லியே இதுல செம இள்குத்து இருக்கா மாறி தெரியுதே....:)

Jey சொன்னது…

சரி சிரிப்பு போலீஸ் பதிவு படிக்குறது ... வரமா? சாபமா?... ஒரு பட்டி மன்றம் எழுதட்டுமா....:)

என்னது நானு யாரா? சொன்னது…

உங்க அனுபத்தில எதெல்லாம் நடந்திருக்கு பங்காளி?

அதையும் ஒரு பதிவா போடுங்க. படிக்கிறவங்களுக்கு பயனா இருக்கும் இல்ல!

மங்குனி அமைச்சர் சொன்னது…

சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் மக்களுக்காகவே இலவசமாக கிடைக்க கூடிய இடம் பதிவுலகம்தான்///

யாருய்யா அந்த இலக்கிய வாதி ? எங்க அவரு பிளாக் அட்ரஸ் கொஞ்சம் குடேன் , எனக்கு இலக்கியம் ரொம்ப பிடிக்கும்

அருண் பிரசாத் சொன்னது…

//இந்தாளை எனக்கும் தெரியும் மாம்ஸ் த்தூ இதெல்லாம் ஒரு பொழப்புன்னு மட்டும் சொல்லிக்கிறேன் ங்கொய்யால பிச்ச எடுத்து ஓட்டு வாங்கி ரெண்டு மாடி வீடு கட்டப்போற மாதிரிதான்..//

ரமெசு, சந்தோஷ்மா... கோத்துவிட்டாச்சா? நிம்மதியா தூங்குங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@மங்கு இலக்கியம் பிடிக்குமா இல்லை இலக்கியாவைப் பிடிக்குமா தெளிவாச் சொல்லும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் பிரசாத் ச்சே ச்சே நான் ரொம்ப நல்லவன்..

@ என்னது நானு யாரா? நன்றி அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்ததுக்கு....

//சரி சிரிப்பு போலீஸ் பதிவு படிக்குறது ... வரமா? சாபமா?... ஒரு பட்டி மன்றம் எழுதட்டுமா....:)//

@ Jey அது வரமென்னு தான் தீர்ப்பு கிடைக்கும்..

//இல்லியே இதுல செம இள்குத்து இருக்கா மாறி தெரியுதே....:)// இல்லை இல்லை இல்லை கோபால்

சௌந்தர் சொன்னது…

சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.//// ஹி ஹி ஹி உங்களுக்குமா


இந்த பதிவு எங்களுக்கு வரமா சாபமா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ங்கொய்யாலே போலீசு....பதிவ மட்டும் போட்டுட்டா போதுமா? தீர்ப்பச் சொல்லுய்யா வெளக்கெண்ணெ!

Jey சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ங்கொய்யாலே போலீசு....பதிவ மட்டும் போட்டுட்டா போதுமா? தீர்ப்பச் சொல்லுய்யா வெளக்கெண்ணெ!//

தீர்ப்பச் சொல்லிட்டா கெடா வெட்டு நடத்த்லம்னு நினைசா பயபுள்ள தப்பிக்குதே பன்னி...

நீ லீவ் முடிஞ்சி வா...கொல்லப் பேருக்கு கெடா வெட்டு நடத்த வேண்டியிருக்கு..அப்படியே முத்துவுக்கு சொல்லிவிட்ரு...

செல்வா சொன்னது…

கண்டிப்பா சிரிப்பு போலீஸ் எழுதறது இலக்கியம்தான்.. ( என்னை சிரிப்பு ..? )
உண்மையாத்தான் சொல்லுறேன் ..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நிச்சயமா இப்படி ஒரு பதிவ கொடுத்ததற்கு உனக்கு சாபம் தான்

vinu சொன்னது…

இதுல எந்த உள்குத்தும் இல்லை

amma sathiyama namma sirippu polish mealla sathiyamaa ithulla eanthaa ull kuththum illaingoooooooooooo

பெயரில்லா சொன்னது…

செம மேட்டரு!

பெயரில்லா சொன்னது…

அருமையான பட்டிமன்றம் பல்வேறு தலைப்புகளில் தொடருங்க பாஸ்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

தீர்ப்பு சொல்ல நாட்டாமை வெங்கட் ஐ அழைக்கிறேன்....

அனு சொன்னது…

பட்டி மன்றத்துக்கு ரெண்டு ஆள் குறையுதுன்னு சாலமன் பாப்பையா சொல்லிட்டு இருந்தாராம்..

பேசாம, நீங்களே போய் ரெண்டு sideக்கும் பேசிட்டு வந்துடுங்களேன்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எல்லாம் சூப்பரு,நீங்க ஆஃபீஸ்ல ஓ பி அடிக்கற ஆளா?
அது சரி
<<< மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)>>>
இது என்னை தாக்கற மாதிரி இருக்கே?அப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சௌந்தர் சௌந்தர் இது வரமே...

@ பன்னிக்குட்டி ராம்சாமி தீர்ப்பு ஒரு மாமாங்கத்துக்கு ஒத்தி வைக்கபடுகிறது...ஆமா ஒரு மாமாங்கத்துக்கு எவ்ளோ நாள்..

@ ப.செல்வக்குமார் & பாபு தேங்க்ஸ்

@ vinu அதைதான நானும் சொன்னேன்...

@ ஆர்.கே.சதீஷ்குமார் நன்றிங்க..

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) பாவம் அவரு. VAS கட்சிலையே அவரால தீர்ப்பு சொல்ல முடியல..

@ அனு உங்க ஐடியா க்கு தேங்க்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//<<< மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)>>>
இது என்னை தாக்கற மாதிரி இருக்கே?அப்படியா?//



கப்புன்னு பிடிச்சிட்டீங்களே நண்பா...

a சொன்னது…

//தோழி சொன்னது…
எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது நமக்கு வரமே...
நாங்கள் எப்போது அதன் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறோமோ அப்போது அது சாபமாகிறது...

//

நானும்...

ஜெயந்தி சொன்னது…

பட்டிமன்றத்துல ரெண்டு பக்கமுமே நீங்கதானா? நடுவர் யாரு? தீர்ப்பு இன்னும் வரலப்பா.
தீர்ப்பு வந்தா நாட்டாமைய தீர்ப்ப மாத்தச்சொல்லுவோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டிமன்றத்துல ரெண்டு பக்கமுமே நீங்கதானா? நடுவர் யாரு? தீர்ப்பு இன்னும் வரலப்பா.
தீர்ப்பு வந்தா நாட்டாமைய தீர்ப்ப மாத்தச்சொல்லுவோம்.//

ஜெயந்தி நடுவர் லீவ்ல இருக்கார். வந்தததும் பஞ்சாயத்த கூட்டுவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

திக் திக் அனுபவம்தான் அண்ணா. பயணங்கள் தொடரட்டும்..

Meerapriyan சொன்னது…

pathivulakam varamaa? saabamaa?-umma karuthai padithu thalaiyai piythu kollalaam pola ullathu.police joke ezhuthi irukkar. siringlen!-meerapriyan

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது