வியாழன், செப்டம்பர் 9

பிரபலமாக சில சுலபமான வழிகள்

1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.

2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.

3 என்னதான் ஒருத்தர பத்தி கேவலமா திட்டினாலும் அவர் தயவு தேவைன்னா சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு அவர் நல்லவர், வல்லவர், தங்கமானவர்ன்னு பேட்டி கொடுக்கணும்.

4 உங்க வீட்டுல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம்னா யாரும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு அறிக்கை விடணும்(இது அருண், ஜெய், வெங்கட் தேவா அண்ணா, கே.ஆர்.பி அண்ணா மற்றும் டெரர்க்கு மட்டுமே பொருந்தும்)

5 எங்கயாவது ஊட்டி, கொடைக்கானல்லு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திடீர்ன்னு ஞானம் வந்து ஊருக்கு திரும்பி ரோடு சரியில்லை, ஊர்ல கரண்ட் இல்லை அப்டின்னு அறிக்கை விடணும்.

6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும்

7 Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.

8 உன் ஸ்டைல மாத்துன்னு சொன்னாலும் உங்க கேவலமான பழைய style-லையே இருக்கணும். கேட்டா மக்களுக்கு இதான் பிடிக்கும்ன்னு சொல்லன்னும். (சத்தியமா இது டாக்டர் விஜய் இல்லை)

9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.

10 இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. அவ்ளோதான்.

33 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

///பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான் வெங்கட்டை சொல்லலை)///

அது எங்களுக்குத் தெரியும் ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

// Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.///
அது நான் கிடையாது ..?!?

ப.செல்வக்குமார் சொன்னது…

//இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. அவ்ளோதான்.
///
இது நல்ல ஐடியா.. ஆனா இந்த மாதிரி ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது ..?

சௌந்தர் சொன்னது…

இந்த வழி கொஞ்சம் ஈஸிய இருக்கே

அருண் பிரசாத் சொன்னது…

பிரபல பதிவர் ரமெஷ் வாழ்க!

எப்படியும் ஆட்டோ வரபோகுது, அடி வாங்கி பிரபலம் ஆகபோறீங்க. அதான் இப்பவே கூவிட்டேன்

சௌந்தர் சொன்னது…

6 வது, வெங்கட் அப்படி தான் செய்கிறாரா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இரு இரு இத பதிவ கருணாநிதிக்கும் ,ஜெயலலிதா வுக்கும் forward பண்ணுறேன்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சௌந்தர் அந்த ஆட்டோவ ரமேஷ் பக்கம் திருப்பி விடுப்பா

வெங்கட் சொன்னது…

// பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான் வெங்கட்டை சொல்லலை) //

என்ன ஒரு அத்துமீறல்.,
என்ன ஒரு அராஜகம்.,
என்ன ஒரு வில்லத்தனம்...,

இதை எதிர்த்து இந்த Blog-ஐ
விட்டு வெளி நடப்பு செய்கிறேன்..

என் ரசிகைகள் யாரும் இதுக்காக
ரமேஷுக்கு எதிராக போராட்டங்களில்
ஈடுபடுவதோ., உண்ணாவிரதம் இருப்பதோ
வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

ரமேஷு..,
Next உங்களை சுப்ரீம் கோர்ட்ல
Meet பண்றேன்..!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.//

அப்போ வாங்கி கொடுத்தவனே சொன்னா? இல்லை கூட இருந்து ஊத்தி கொடுத்தவனே சொன்னா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.//

என்னதான் வித விதமா சோப்பு வந்தாலும் நீ செங்கல் தேச்சி குளிக்கிற மாதிரியா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//3 என்னதான் ஒருத்தர பத்தி கேவலமா திட்டினாலும் அவர் தயவு தேவைன்னா சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு அவர் நல்லவர், வல்லவர், தங்கமானவர்ன்னு பேட்டி கொடுக்கணும்.//

நீ முன்னாடி வி.கே.ஸ் சொல்லி வீரமா சண்டை போட்டு... பின்னாடி வந்து ஓட்டு கேட்டு கெஞ்சர மாதிரி...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//4 உங்க வீட்டுல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம்னா யாரும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு அறிக்கை விடணும்(இது அருண், ஜெய், வெங்கட் தேவா அண்ணா, கே.ஆர்.பி அண்ணா மற்றும் டெரர்க்கு மட்டுமே பொருந்தும்)//

யோ!!! உன் கல்யாணத்துல கல்யாண பொண்னே உன்ன வரவேண்டாம் சொல்லும்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அப்போ வாங்கி கொடுத்தவனே சொன்னா? இல்லை கூட இருந்து ஊத்தி கொடுத்தவனே சொன்னா?//

ஹ........ஹா.............

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான் வெங்கட்டை சொல்லலை)//

நீ ஊர்ல இருக்கவன் பெயர்ல எல்லாம் ID Create பண்ணி... எந்த பிரவுசிங் செண்டர் பாத்தலும் உள்ளபோய் உனக்கு நீயே ஓட்டு போடறியே...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//7 Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.//

நேத்து Facebookல ரமேஷ் நல்லவன் எழுதி இருந்தனே அதை சொல்றியா இல்லை இன்னைக்கு orkutல சிரிப்பு போலீஸ் நல்லா ப்ளாக் சொன்னனே அதை சொல்றியா??

மங்குனி அமைசர் சொன்னது…

9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.///

இது சம்பந்தமான உங்க திறமைய நேத்து பாத்தேன்

மங்குனி அமைசர் சொன்னது…

1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.///

பேசாம ஆமான்னு சொல்லிட்டு , அந்த ஆளு கிட்ட இன்னொரு கட்டிங் வாங்கி குடிக்கலாமுள்ள

மங்குனி அமைசர் சொன்னது…

2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.///

நீங்க கலைஞர சொல்லலையே ?

மங்குனி அமைசர் சொன்னது…

அறிக்கை விடணும்.

6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான் வெங்கட்டை சொல்லலை)
///

இப்ப சொன்னிகளே இது சரி

மங்குனி அமைசர் சொன்னது…

10 இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. ///

இது என்னவோ கொஞ்சம் யோசிக்கிற மாதிரி இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நம்ம சிப்பு போலீசுக்கு மாமுல் குடுத்தும் பிரபலம் ஆயிடலாம்!

pinkyrose சொன்னது…

@ ரமேஷ்.,

// பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு
ID create பண்ணி உங்களை நீங்களே
புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான்
வெங்கட்டை சொல்லலை) //

என்ன கொடுமை இது?
வெங்கட் சாரை இப்படி எல்லாம் சொல்லக்கூடாது
He is a Perfect Gentleman.

உங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.
இவரு சொல்லி இருக்கறது என் பிரெண்ட் ஷாலினி
பத்தி தான். அதனால நான் விளக்கம் குடுக்கறேன்.

ஷாலினி என் Best Friend.அவளுக்கு வெங்கட் சார் பிளாக்கை Intro
பண்ணினது நான் தான்.

நான் 10 நாள் Coaching போயிருந்தப்ப
ஷாலினியே ஒரு ID Create பண்ணி வெங்கட் சார்
பிளாக்ல கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டா..
Thats it..

இதுக்காக ஷாலினி Profile வெங்கட் சார்தான்
Create பண்ணினார்னு சொல்றதெல்லாம் ஓவர்.

வேணும்னா ஷாலினிகிட்ட சொல்லி
உங்களையும் புகழ்ந்து கமெண்ட் போட சொல்லவா?

வெங்கட் சொன்னது…

@ Pinky.,

// He is a Perfect Gentleman. //

Thanks Pinky..!!

இன்னும் கொஞ்சம் விட்டா
Pinky Profile-ம் நான் தான்
Create பண்ணினேன்..

இந்த Comment கூட நான் தான்
Type பண்ணி குடுத்தேன்னு சொல்லுவாரு..

" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
( கோகுலத்தில் ) சூரியன் மறைவதில்லை.. "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இவரு சொல்லி இருக்கறது என் பிரெண்ட் ஷாலினி
பத்தி தான். அதனால நான் விளக்கம் குடுக்கறேன்.இதுக்காக ஷாலினி Profile வெங்கட் சார்தான்
Create பண்ணினார்னு சொல்றதெல்லாம் ஓவர்.
வேணும்னா ஷாலினிகிட்ட சொல்லி
உங்களையும் புகழ்ந்து கமெண்ட் போட சொல்லவா?///

@ பிங்கி நான் பொதுவாத்தான் சொன்னேன். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற மாதிரி நீங்களா எப்படி ஷாலினி ன்னு நினைசீங்க. அப்ப அதான் உண்மையா? உங்க கமென்ட் கூட வெங்கட் போடுற மாதிரி one by one தான் இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

///பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும் (சத்தியமா நான் வெங்கட்டை சொல்லலை)///

அது எங்களுக்குத் தெரியும் ..!//


அது வெங்கட் தாங்கிற உண்மை தெரியுமோ?


//சௌந்தர் கூறியது...

இந்த வழி கொஞ்சம் ஈஸிய இருக்கே//


yes. try it


//அருண் பிரசாத் கூறியது...

பிரபல பதிவர் ரமெஷ் வாழ்க!

எப்படியும் ஆட்டோ வரபோகுது, அடி வாங்கி பிரபலம் ஆகபோறீங்க. அதான் இப்பவே கூவிட்டேன்//


மெய்யாலுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

இரு இரு இத பதிவ கருணாநிதிக்கும் ,ஜெயலலிதா வுக்கும் forward பண்ணுறேன்//


ஏன் இப்படி இம்சை பண்ற?


சௌந்தர் கூறியது...

6 வது, வெங்கட் அப்படி தான் செய்கிறாரா//


ஆமாங்க...


@ வெங்கட் எந்த கோர்ட் போனாலும் உண்மைதான் ஜெயிக்கும். நான் தான் ஜெயிப்பேன்...


// TERROR-PANDIYAN(VAS) நீங்கள் போதையில் இருப்பதால் உங்கள் கமென்ட் செல்லுபடியாகாது. தயவு செய்து போதை தெளிந்தவுடன் வரவும்.


//மங்குனி அமைசர் கூறியது...

9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.///

இது சம்பந்தமான உங்க திறமைய நேத்து பாத்தேன்//


ஹிஹி

//மங்குனி அமைசர் கூறியது...

1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.///

பேசாம ஆமான்னு சொல்லிட்டு , அந்த ஆளு கிட்ட இன்னொரு கட்டிங் வாங்கி குடிக்கலாமுள்ள//


ஆமா ஆமா


//மங்குனி அமைசர் கூறியது...

2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.///

நீங்க கலைஞர சொல்லலையே ?//


இல்லையா கோர்த்துவுட்டு போயிடாத..


// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நம்ம சிப்பு போலீசுக்கு மாமுல் குடுத்தும் பிரபலம் ஆயிடலாம்!/


exactly exactly

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.//

நாங்கள்லாம் சும்மா வரும்போதே அப்பிடித்தான் கேக்குறாய்ங்க, என்ன பண்றது?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) நீங்கள் போதையில் இருப்பதால் உங்கள் கமென்ட் செல்லுபடியாகாது. தயவு செய்து போதை தெளிந்தவுடன் வரவும்.//

நீ ஊத்தி கொடுத்தியா??

(ஹி ஹி ஹி...கேப்போம் இல்ல...)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

இதெல்லாம் எப்படி தல குப்பற படுத்து யோசிப்பிங்களோ
!????

GSV சொன்னது…

இதனால சொல்லிகிறது என்னன்னா நேட்று இரவு எனது கம்பெனி யோட "midyear review" ரிசல்ட் சொன்னங்க, அதுல என்னக்கு ஒரு கணிசமான ஊக்க தொகை .(முதல் முறையா "MIDYEAR REVIEW " ல) கிடைத்துள்ளது. ஆகையால் இனி சிரிப்பு போலிசுக்கு ஒவ்வொரு ஆறு மாதமும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொள்ள படுகிறது, மேலும் போலீஸ் ச வாழ்த்தி ப்ளாக் ல "Post" போடுறவங்களுக்கும் கணிசமான தொகை மணி ஆர்டர் செயப்படும். "VAS" காரவுங்க "போஸ்ட்" போட்டா கணிசமான தொகைய சேர்த்து அடுத்து வரும் விஜய் படத்துக்கு இலவசமா டிக்கெட் கொடுக்கப்படும்.

இப்படிக்கு,
G .S .V

என்னது நானு யாரா? சொன்னது…

தல! எல்லாத்தையும் விட கடைசி ஐடியா தான் எல்லோருக்கும் work-out ஆகும்னு நினைகிறேன்.

மத்ததெல்லாம் கொஞ்சம் சிரமம் தான்யா...( சாலமன் பாப்பையா குரலில் படிங்க அப்பு!)

என்னது நானு யாரா? சொன்னது…

அந்த தமிழ்மணம் ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைங்க ரமேஷ்! இப்போ என்னால ஓட்டு போட முடியல.

கீழே கொண்டுவந்து வைச்சாத்தான், அது சரியா வேலை செய்யும். என்னுடைய வலைபக்கத்திலும் ஓட்டு போட முடியாம இருந்தது. இப்போ சரியாச்சி.

நீங்களும் மத்த ஓட்டு பட்டிகள் கிட்ட அந்த தமிழ்மணம் ஓட்டு பட்டையை கொண்டுவந்து வெச்சிடுங்க.

உங்களுக்கு ஓட்டு வேணும்னா சீக்கிரம் சரி செய்யுங்க

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது