தலைப்ப பார்த்ததும் தெரிஞ்சிருக்குமே. என்ன பதிவுன்னு. சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி என்னுடைய பார்வை. வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை. எனக்கு பிடித்த சில ரகுவரன் படங்கள் பற்றி இங்கே:
பாட்ஷா:
ஆண்டனியை மறக்க முடியுமா. ரகுவரன் என்றாலே பாட்சா தான் உடனே நினைவுக்கு வரும். ரஜினிக்கு ஈகுவலான கேரக்டர். கலக்கலான வில்லன் ரகுவரன். ஆள் டைம் பேவரைட்.
புரியாத புதிர்:
இதில் ரகுவரன் வில்லன் இல்லை. மனைவியை சந்தேகப் படும் சைக்கோ கேரக்டர். அவர் பேசிய ஐ நோ ஐ நோ டயலாக் ரொம்ப பேமஸ். சந்தேகப்படும் கணவனை அப்படியே கண்முன் நிறுத்தி இருப்பார்.
அஞ்சலி:
மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையை மனைவியிடம் மறைத்து உள்ளுக்குள் அழும் ஒரு கேரக்டர். செம அழகாக செய்திருப்பார். சொல்ல போனால் இந்த படத்தின் நாயகனும் இவரே.
சம்சாரம் அது மின்சாரம்:
ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளை. ஆனால் கஞ்சன். அதனாலையே குடும்பம் பிரிகிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்ப தலைவனின் பீலிங்சை அவரது நடிப்பில் பக்காவாக வெளிப்படுத்தி இருப்பார். ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு பார்க்கும் கேரக்டர்.
ஆஹா:
இதிலும் குடும்பத்தின் மூத்த பிள்ளை கேரக்டர். முன்னால் காதலியை மனைவியிடம் மறைத்து அவளின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது, தம்பிக்கு உதவி செய்வது என ஒரு குடும்பத்தலைவனாக வாழ்ந்திருப்பார்.
முதல்வன்:
இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஈகுவலா நடிச்சிருப்பாரு. ஒரு அரசியல்வாதியா கலக்கல் நடிப்பு. அதுவும் அந்த இண்டர்வியூ காட்சி சூப்பர்.
லவ் டுடே:
விஜய்க்கு அப்பாவா வருவார். விஜய்க்கும் விஜயின் நண்பர்களுக்கும் நல்ல நண்பனாக நடித்திருப்பார். அவர் இறக்கும் காட்சி கண்களை கலங்க வைத்துவிடும். நம்ம அப்பா இப்படி இருந்திருக்க கூடாதா என எங்க வைக்கும் கேரக்டர்.
பார்த்தேன் ரசித்தேன்:
தங்கை பாசத்துக்காக எங்கும் கேரக்டர். சிம்ரன் அவரை அண்ணனாக ஏற்று கொள்ளவே மாட்டார். கடைசில சிம்ரன் அவரிடம் உதவி கேட்கும்போது தங்கை நம்மிடம் பேசிவிட்டாளே என ஒரு பீல் கொடுப்பரே. நோ சான்ஸ்.
இது போக அவர் கலக்கிய சில படங்கள்:
விஷாலுடன் சிவப்பதிகாரம்
அஜித்துடன் முகவரி
சத்யராஜுடன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ரஜினியுடன் சிவா
கார்த்திக்குடன் தொட்டாசிணுங்கி
இதை தொடர எல்லோரையும் தொடர் பதிவுக்கு அழைத்து சாவடிக்கும் சூரியனின் வலை வாசல் அருணை வம்புடன் அழைக்கிறேன்.
...
50 கருத்துகள்:
ஐ நோ ஐ நோ ஐ நோ...
பூவிழி வாசலிலே
என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
இந்த படங்களில் கூட அவர் நடிப்பு நல்லாயிருக்கும்!
ஐ ஆல்சோ நோ..
அட்டகாசமான நடிகர்....
கடைசி படமான - யாரடி மோகினியில் தனுஷிட்டுக்கு அப்பாவா வந்து ஒரு டயலாக் சொல்லுவார் - தண்ணி தினமும் அடிப்பியா , அப்படி பண்ணாத அடிக்ட் ஆயிடுவே வேணாம்.........
அருமையான நடிகர் - அருமையான கணவனாகவும் அருமையான அப்பாவாவும் வாழக் கொடுத்து வைக்கவில்லை...
@ maadhavi -- அதென்ன மிடில் கிளாஸ்.. -- எட்டாம் கிளாசா ?
ஐ நோ ஐ நோ ஐ நோ. ...நீ ஒரு லூசுன்னு ஐ நோ ......
I know....
ரகுவரனின் இன்னொரு அருமையான படம் தொட்டாசிணுங்கி. ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார். அதை பற்றியும் ஒருவரி விமர்சித்திருக்கலாம்
வார்த்த வார்த்த வார்த்த வார்த்த வார்த்த வார்த்த வார்த்த வார்த்த
மிஸ்டர் அம்மையப்பன்!
வீட்டுக்கு நடுவுல கோடு கிழி!
சரக்கு இல்லைன்னா இப்படி கூட
பதிவு போட்டு ஒப்பு ஏத்தலாம்..
I Know.., I Know.., I Know.., I Know..
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
ஐ ஆல்சோ நோ..
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
ஐ நோ.. ஐ நோ..
நீங்க ஏன் இப்படி பதிவு போட்டிங்க I Know.I Know.I Know.
/// இது எங்கள் சொத்து
My site is worth
Rs 209,756.21
Your website value? /////
:)))))))))))))) ha ha ha ha ha ha ha ha ha ha
/// இது எங்கள் சொத்து
My site is worth
Rs 209,756.21
Your website value? /////
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
ஐ டோண்டு நோ.
ஐ டோண்டு நோ.
ஐ டோண்டு நோ.
ஐ நோ ஐ நோ ஐ நோ...
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
@சௌந்தர்
//நீங்க ஏன் இப்படி பதிவு போட்டிங்க I Know.I Know.I Know. //
நீங்க ஏன் இந்த கேள்விய கேட்டிங்க I Know.I Know.I Know.
மறக்க இயலாத நடிப்புகளில் இவரின் நடிப்பு ஒன்றுதான் சிறந்த நடிகர் . ரகுவரன் பற்றிய உங்களின் எழுத்து நடை ரசிக்க வைக்கிறது . நன்றி
உண்மையில் எந்த சின்ன கேரக்டர் இருந்தாலும் , ரகுவரன் மட்டும் தனியாக தெரிவார்.மிக சிறந்த நடிகர்.
//சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி என்னுடைய பார்வை. வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை//
மிகவும் உண்மையான கருத்து மிகச்சரியாக சொன்னீர்கள்
ஐ நோ ஐ நோ ஐ நோ...
ம்ம்ம்... வெளங்கிருச்சு...............
நல்லதொரு நினைவூட்டல்! திருமலையில் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்! அது கூட நன்றாகவே இருக்கும்!!
ரன் படத்துல வரும் ரகுவரன் டயலாக் " நான் வா ன்னு சொல்லி அவன் போய்ட்ட ,வேணாம்பா "
இது எல்லாம் அவர் முத்திரை !
நல்ல மனிதரை பற்றிய படைப்பை வழங்கிய காவலருக்கு மிக்க நன்றி
எனக்கும் நீங்க சொன்ன அத்தனை ... பாத்திரங்களும் பிடிக்கும் .... ரகுவரன்.... திரைத்துறையின் நான்விரும்பிய அத்தியாயம்.... பகிர்வுக்கு நன்றி.
ரகுவரன் - வில்லாதி வில்லன் தான் - ஐயமே இல்லை - நன்கு ரசிக்கலாம்
padhivu பதிவு ஓக்கே ,பூ விழி வாசலிலே ரொம்ப முக்கியமான படமாச்சே...
அப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்
டைட்டிலை பார்த்ததுமே நான் நினைச்சேன் நம்மாளுங்க அதையே கமெண்ட்டா போடப்போறாங்கன்னு...
ஐ நோ வாட் யு நோ! யு நோ வாட் ஐ நோ! தே நோ வாட் வீ நோ! வி நோ வாட் தே நோ! ஹவ் யு நோ ஐ நோ? ஹவ் தே நோ வீ நோ?
மாணவன் கூறியது...
//சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி என்னுடைய பார்வை. வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை//
மிகவும் உண்மையான கருத்து மிகச்சரியாக சொன்னீர்கள்/////////
தங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்!!
//நம்ம அப்பா இப்படி இருந்திருக்க கூடாதா என எங்க வைக்கும் கேரக்டர்//
உங்க டாடி என்ன நினைச்சிருப்பாரு போலீஸ்கார்..?! :-)))
ஹேஹ ஹ ஹா ...ஹே.ஹே ஹே ...ஹே,ஹ .ஹ.ஹா
மிக சிறந்த நடிகர்.
வில்லன் அப்டின்னாலே நம்பியாருக்கு அப்புறம் தமிழ் ரசிகர்களை டெரர் ஆக்கிய நடிகர் ரகுவரன்தான். அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும் ரசிகர்களை டெரர் ஆக்கியது என்பதே உண்மை//
ஐ ஆல்சோ நோ.
முதல்ல உங்க போட்டோ அழகா இருக்கு அண்ணா!
தனுசுடன் இப்ப ஒரு படம் வந்துசே அத விட்டுடீங்க ..!!
மங்குனி அமைச்சர் சொன்னது… 41
ஹேஹ ஹ ஹா ...ஹே.ஹே ஹே ...ஹே,ஹ .ஹ.ஹா//
கழுதை மேய்க்கிற பயலை யார் உள்ள விட்டது?
மிகச்சிறந்த நடிகர்
ரஹீம் கஸாலி சொன்னது… 10
ரகுவரனின் இன்னொரு அருமையான படம் தொட்டாசிணுங்கி. ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார். அதை பற்றியும் ஒருவரி விமர்சித்திருக்கலாம்//
ஆமாம் எனக்கும் மிகவும் பிடித்த படம்..
ரஹீம் கஸாலி சொன்னது… 10
ரகுவரனின் இன்னொரு அருமையான படம் தொட்டாசிணுங்கி. ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார். அதை பற்றியும் ஒருவரி விமர்சித்திருக்கலாம்//
ஆமாம் எனக்கும் மிகவும் பிடித்த படம்..
சேலம் தேவா சொன்னது… 40
//நம்ம அப்பா இப்படி இருந்திருக்க கூடாதா என எங்க வைக்கும் கேரக்டர்//
உங்க டாடி என்ன நினைச்சிருப்பாரு போலீஸ்கார்..?! :-)))
//
hehe
சி.பி.செந்தில்குமார் சொன்னது… 36
padhivu பதிவு ஓக்கே ,பூ விழி வாசலிலே ரொம்ப முக்கியமான படமாச்சே...
அப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்
//
ok new idea
இந்த தொடர்பதிவை எழுதினா....டெரர் அடிக்க வரமாட்டானே!
உயிருக்கு நீங்க பாதுகப்பு தரீங்களா? நான் எழுதறேன்
கருத்துரையிடுக