திங்கள், அக்டோபர் 10

வர்ணம் & சதுரங்கம் - விமர்சனம்

வர்ணம்:


முன்குறிப்பு: பதிவர்களுக்கு பிரிவியூ காட்சி ஏற்பாடு செய்த அண்ணன் உண்மை தமிழன் மற்றும் இயக்குனர் ராஜூவுக்கு மிக்க நன்றி. கேபிள் சங்கர்,ஜாக்கி சேகர், சுகுமார் சுவாமிநாதன், செந்தில், மணிஜி மற்றும் பலர் வந்திருந்தினர். படம் முடிந்ததும் இயக்குனர் ராஜூ மற்றும் படத்தில் மோனிகாவின் அண்ணனாக நடித்த கூத்துப்பட்டறை முத்துக்குமாரையும் மீட் பண்ணி பேசிக்கொண்டிருந்தோம்.
மணி(புதுமுகம்) ஜாதிசண்டையில் அப்பாவை இழந்தவன். ஊரில் சேட்டை செய்வதால் வெளியூரில் இருக்கும் மாமன் துரை(சம்பத்) வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். அங்கு தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த தங்கம்(அஸ்வதா) ஜாதியின் காரணமாக மணியால் ஒதுக்க படுகிறாள். ஒரு நாள் பரிச்சையில் காப்பி அடிக்க அவளது பேப்பரை கொடுத்து உதவியதால் அவள் மீது மணிக்கு அன்பு ஏற்படுகிறது. துரையிடம் டிரைவராக இருக்கும் அன்வருக்கும் ஸ்கூல் டீச்சர் கவிதாவுக்கும்(மோனிகா) காதல். ஜாதியின் காரணமாக யாருக்கும் தெரியாமல் லவ் செய்கிறார்கள்.
 (அஸ்வதா)

கவிதாவின் அண்ணனும், துரையும் நண்பர்களாதளால் துரைக்கு கவிதாவை கட்டிவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் கவிதாவும், அன்வரும் தப்பிக்க முயற்சிக்கும்போது மணியின் அப்பாவை கொன்றது அன்வர்தான் என தெரிந்து அன்வரை கொலை செய்ய மணி முயற்ச்சிக்கிறான். அதன்பிறகு இருவரும் தப்பித்தார்களா, மணியும் தங்கமும் ஒன்றாக சேர்ந்தார்களா என்று ரெண்டு மணி நேரம் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் புதுமுக இயக்குனர் ராஜூ..
(அஸ்வதா)
ரசிக்க வைத்த விசயங்கள்:

- மூனாறு,கேரளா லொகேஷன்கள்

- பரிச்சை ஹாலில் பிட்டடிக்கும் காட்சிகள் & வசனங்கள்.(ஏண்டா எக்ஸாம் இவ்ளோ லேட்டா முடிக்கிற. படிச்சிருக்கியான்னு வாத்தியார் கேட்க இல்லை சார் தூங்கிட்டேன்னு பையன் சொல்லும் காட்சி செம)

- ராமராஜன் ரசிகராக வரும் கூத்துப்பட்டறை முத்துகுமாரின் நடிப்பும், வசன உச்சரிப்பும். வெள்ளைகாரியிடம் இவ்ளோ அழகா இங்கிலிஸ் பேசுறாளே இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிருப்பா போல என குடிபோதையில் சொல்வதும், வேட்டியை மடிச்சிகட்டிக்கிட்டு மேல ஏறி நிற்கும் நண்பரிடம் வளந்துட்ட போல என கலாய்ப்பதும், சீரியல் செட் போடுரவனிடம் ஒவ்வொரு லைட்டா எண்ணி எரியுற லைட்டுக்குத்தான் காசு கொடுப்பேன் என்று சொல்வதும் மனிதர் செமையாய் நடித்திருக்கிறார். 

- குண்டுப்பையன் ஆ.ஏ.ஈ.லாலாலா காதலின் தீபம் ஒன்று என பாடல் பாடும் காட்சியும் அவனுக்கும் கலாவுக்கும் உள்ள காதல் காட்சியும்..

- டைட்டிலில் வரும் ஓவிய காட்சிகள்

- ஜாதி பிரச்சனை, திருவிழா காட்சிகளை மிகவும் அழகாக சொன்னது..

இயக்குனர் ராஜூவிடம் நேரடியாக கேட்ட கேள்விகள்:

- ஹீரோ சின்ன பையனாக இருக்கும்போது அவரது அப்பாவை கொன்ற ஒருவன் பத்து வருடம் கழித்தும் அதே இளமையாக இருந்து ஹீரோயினை லவ் செய்வது எப்படி. அவருக்கு வயசே ஆகாமல் இருப்பதற்கு அவர் என்ன சிரிப்பு போலீஸ் ரமேசா?

-  கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஏன் அவ்ளோ நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளம்?

- ஹீரோவின் அப்பாவை கொன்றது அன்வர்தான்னு ஹீரோவின் அம்மாவுக்கு எப்படி தெரியும்?

சதுரங்கம்:


பதிவர்களுக்கு பிரிவியூ காட்சி ஏற்பாடு செய்த அண்ணன் உண்மை தமிழன் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு மிக்க நன்றி. கேபிள் சங்கர்,ஜாக்கி சேகர், சுகுமார் சுவாமிநாதன், செந்தில், மணிஜி,சங்கர், கே.ஆர்.பி செந்தில்,அஞ்சா சிங்கம் மற்றும் பலர் வந்திருந்தினர். படம் முடிந்ததும் இயக்குனர் கரு.பழனியப்பனிடம் பேசிக்கொண்டிருந்தோம். படத்தை பற்றியும், படத்தின் கதையை பற்றியும் நிறை பேர் எழுதிவிட்டதால் படம் ஒரு தடவை பார்க்கலாம் என்ற என் கருத்தை பதிவு செய்து முடிக்கிறேன்.

பின்குறிப்பு :
அண்ணன் உண்மை தமிழன் அவர்கள் எப்படியாவது "பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை" படத்துக்கு பிரிவியூ ஷோ ஏற்பாடு செய்து பவர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் பிறவி பலனை அடைவோம். அது மட்டுமில்லாமல் உங்களுக்கு சென்னை மவுன்ட் ரோட்டில் காக்கா ஆய் போகாத மாதிரி சிலை வைக்கிறோம் என பதிவுலக நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

58 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

நீங்க இயக்குனரிடம் நேரடியாக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கலாநேசன் கூறியது...

நீங்க இயக்குனரிடம் நேரடியாக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்??//

முதல் படம்தான. சில குறைகள் இருக்கத்தான் செய்யும். சிரித்தார் அவ்ளோதான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்படி நடுராத்திரி பதிவு போட்டுக் கொல்றாய்ங்கய்யா.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மோனிகா வந்தாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

மோனிகா வந்தாங்களா?//

இல்லிங்கோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...இப்படி நடுராத்திரி பதிவு போட்டுக் கொல்றாய்ங்கய்யா.....//

உனக்கு நாடு ராத்திரி இங்க என்ன வேலை போய் தூங்க வேண்டித்தான?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அவருக்கு வயசே ஆகாமல் இருப்பதற்கு அவர் என்ன சிரிப்பு போலீஸ் ரமேசா?//////

ஓ அதான் சிரிப்பு போலீஸ் இன்னமும் கல்யாணம் பண்ணாம இருக்காரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அவருக்கு வயசே ஆகாமல் இருப்பதற்கு அவர் என்ன சிரிப்பு போலீஸ் ரமேசா?//////

ஓ அதான் சிரிப்பு போலீஸ் இன்னமும் கல்யாணம் பண்ணாம இருக்காரா?//

Im still 17

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஏன் அவ்ளோ நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளம்///////

படம் சின்னதா போயிருக்கும், கிளைமாக்ச நீட்டிட்டாங்க..... படுவா இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டிருக்கான்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஹீரோவின் அப்பாவை கொன்றது அன்வர்தான்னு ஹீரோவின் அம்மாவுக்கு எப்படி தெரியும்?////

பார்த்திருப்பாங்க.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ஹீரோவின் அப்பாவை கொன்றது அன்வர்தான்னு ஹீரோவின் அம்மாவுக்கு எப்படி தெரியும்?////

பார்த்திருப்பாங்க.......///

சாவடிக்கிறானே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// படத்தை பற்றியும், படத்தின் கதையை பற்றியும் நிறை பேர் எழுதிவிட்டதால் படம் ஒரு தடவை பார்க்கலாம் என்ற என் கருத்தை பதிவு செய்து முடிக்கிறேன். //////

ஆமா சொல்லிட்டாருய்யா பெரிய கலக்டரு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஏன் அவ்ளோ நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளம்///////

படம் சின்னதா போயிருக்கும், கிளைமாக்ச நீட்டிட்டாங்க..... படுவா இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டிருக்கான்யா....//

அதுக்காக இவ்ளோ நீளம் கூடாதுய்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////// படத்தை பற்றியும், படத்தின் கதையை பற்றியும் நிறை பேர் எழுதிவிட்டதால் படம் ஒரு தடவை பார்க்கலாம் என்ற என் கருத்தை பதிவு செய்து முடிக்கிறேன். //////

ஆமா சொல்லிட்டாருய்யா பெரிய கலக்டரு.....//

நீங்க கலக்டரு சொன்னாத்தான் படம் பாப்பீங்களா? எந்த ஊரு கலக்டரு படம் பார்க்க சொன்னாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பின்குறிப்பு : அண்ணன் உண்மை தமிழன் அவர்கள் எப்படியாவது "பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை" படத்துக்கு பிரிவியூ ஷோ ஏற்பாடு செய்து பவர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் பிறவி பலனை அடைவோம். //////

பாவம் அவருக்கு இருக்கற நல்ல பேரையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////உங்களுக்கு சென்னை மவுன்ட் ரோட்டில் காக்கா ஆய் போகாத மாதிரி சிலை வைக்கிறோம் என பதிவுலக நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். //////

குடை புடிச்சிட்டு நிக்கிறமாதிரி சிலை வெக்க போறியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////உங்களுக்கு சென்னை மவுன்ட் ரோட்டில் காக்கா ஆய் போகாத மாதிரி சிலை வைக்கிறோம் என பதிவுலக நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். //////

குடை புடிச்சிட்டு நிக்கிறமாதிரி சிலை வெக்க போறியா?//

அப்பாலிக்கா ரூம் போட்டு யோசிப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////பின்குறிப்பு : அண்ணன் உண்மை தமிழன் அவர்கள் எப்படியாவது "பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை" படத்துக்கு பிரிவியூ ஷோ ஏற்பாடு செய்து பவர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் பிறவி பலனை அடைவோம். //////

பாவம் அவருக்கு இருக்கற நல்ல பேரையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே?//

நாங்கெல்லாம் 50 ஓட்டுல தோத்தவங்க. தெரியுமில்ல

செங்கோவி சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 3
இப்படி நடுராத்திரி பதிவு போட்டுக் கொல்றாய்ங்கய்யா.......//

அண்ணன் ஏன் நம்மளை திட்டுதாரு?

செங்கோவி சொன்னது…

//நீங்க இயக்குனரிடம் நேரடியாக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்??//

முதல் படம்தான. சில குறைகள் இருக்கத்தான் செய்யும். சிரித்தார் அவ்ளோதான்//

டைரக்டரையே டரியல் ஆக்கிய சிப்பு வாழ்க.

செங்கோவி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

மோனிகா வந்தாங்களா?//

இல்லிங்கோ.//

அப்புறம் ஏன்யா போனீங்க?

மாணவன் சொன்னது…

வணக்கம்ணே, எப்படி இருக்கீங்க நலமா? எதோ விமர்சனம் எழுதியிருக்கீங்கபோல.. இருங்க படிச்சா வரேன்... :)

மாணவன் சொன்னது…

ஆமாம் விமர்சனம் எங்கே???
:-)

மாணவன் சொன்னது…

அழகான ரசனையுடன் அருமையான எழுத்து நடை, ஓட்டம் இப்படி எல்லாமே கலந்து மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.... :)

மாணவன் சொன்னது…

//படத்தை பற்றியும், படத்தின் கதையை பற்றியும் நிறை பேர் எழுதிவிட்டதால் படம் ஒரு தடவை பார்க்கலாம் என்ற என் கருத்தை பதிவு செய்து முடிக்கிறேன். ///

பதிவு எங்க பண்ணுனீங்க ரிஜிஸ்டர் ஆபிஸ்லயா? :)

மாணவன் சொன்னது…

//அவருக்கு வயசே ஆகாமல் இருப்பதற்கு அவர் என்ன சிரிப்பு போலீஸ் ரமேசா?//

அதானே...அப்படியே வயசானாலும் கல்யாணமே ஆகாம இருக்குறதுக்கு அவரு என்ன ரமேசா? :)

மாணவன் சொன்னது…

அழகா தொகுத்து சொல்லியிருக்கீங்க...வாழ்த்துகள்!
பகிர்வுக்கு நன்றிண்ணே.

மாணவன் சொன்னது…

ரொம்ப யதார்த்தமா எழுதி இருக்கீங்க........ :)

மாணவன் சொன்னது…

அழகான விமர்சனம்... எழுத்து நடையும் அருமை.. எழுத்து மெருகேறிக் கொண்டே போகின்றது... வாழ்த்துகள்!

மாணவன் சொன்னது…

தங்களின் விமர்சனம் படம் பார்க்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. நன்றி வணக்கம்! :-)

siva சொன்னது…

ரொம்ப யதார்த்தமா எழுதி இருக்கீங்க........ :)

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

சிரிப்பு போலீஸ் ஏன் ஒரு படம் டைரக்ட் பண்ண கூடாது? . . .

வைகை சொன்னது…

பதிவர்களுக்கு பிரிவியூ காட்சி ஏற்பாடு செய்த அண்ணன் உண்மை தமிழன் மற்றும் இயக்குனர் ராஜூவுக்கு மிக்க நன்றி.//

அடிங்.. ஓசில பார்த்துட்டு வந்தத எவ்வளவு பகுமானமா சொல்ற? :)

வைகை சொன்னது…

மோனிகாவின் அண்ணனாக நடித்த கூத்துப்பட்டறை முத்துக்குமாரையும் மீட் பண்ணி பேசிக்கொண்டிருந்தோம்//

நல்ல வேளை மோனிகாவ பார்க்கல... பாவம் சின்ன பொண்ணு பயந்துருக்கும் உன்னை பார்த்து :)

வைகை சொன்னது…

அவள் மீது மணிக்கு அன்பு ஏற்படுகிறது//

ஹி..ஹி... இப்பிடியெல்லாம் அன்பு வந்தா எனக்கு என்கூட படிச்ச எல்லா பொண்ணுங்க மேலயும் வரணுமே? :))

வைகை சொன்னது…

ஜாதியின் காரணமாக யாருக்கும் தெரியாமல் லவ் செய்கிறார்கள்.
//

யாருக்கும் தெரியாம செஞ்சாதான் லவ்.. தெரிஞ்சு செஞ்சா அது கல்யாணம் :))

வைகை சொன்னது…

](அஸ்வதா)ரசிக்க வைத்த விசயங்கள்://

இடைவேளையில் டைரெக்டர் வாங்கி கொடுத்த பாப்கார்னும் முட்டை போண்டாவும் :))

வைகை சொன்னது…

இயக்குனர் ராஜூவிடம் நேரடியாக கேட்ட கேள்விகள்://


அப்ப மறைமுகமா என்ன கேட்ட? :)

வைகை சொன்னது…

கொன்ற ஒருவன் பத்து வருடம் கழித்தும் அதே இளமையாக இருந்து ஹீரோயினை லவ் செய்வது எப்படி//

சேலத்துல போய் லேகியம் வாங்கி சாப்ட்ருப்பான்.. படுவா இதெல்லாம் ஒரு கேள்வியா? :))

வைகை சொன்னது…

மட்டுமில்லாமல் உங்களுக்கு சென்னை மவுன்ட் ரோட்டில் காக்கா ஆய் போகாத மாதிரி சிலை வைக்கிறோம் //

எப்பிடி சிலைக்கு பக்கத்துல நின்னு காக்கா ஆய் போகும்போதெல்லாம் கைல புடிக்க போறியா? :))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

தங்களின் விமர்சனம் படம் பார்க்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. நன்றி வணக்கம்! :-)

மாலுமி சொன்னது…

மிக்க நன்றி
நடு இரவில் பதிவை போட்டதுக்கு........
மிகவும் ஆவல் துண்டுகிறது
வர்ணம் படம் பாக்கறதுக்கு.......
மிகவும் கோவத்துடன் இருக்கிறோம்
மோனிகாவிடம் கையழுத்து வாங்காமல் வந்ததுக்கு.........
இப்போதே வாந்தி வாந்தியா வருகிறது
நீ பவர் ஸ்டார் படம் பார்க்க போறதுக்கு.............
மிகவும் மனது கஷ்டமாக இருக்கிறது
மோப்ப நாய் கிட்ட கடி வாங்காமல் வந்ததுக்கு..........

பெசொவி சொன்னது…

What a good post! Congrats!

(engo poda vendiya commentai verengaavathu poduvor sangam!)

அருண் பிரசாத் சொன்னது…

மிக்க நன்றி
நடு இரவில் பதிவை போட்டதுக்கு........
மிகவும் ஆவல் துண்டுகிறது
வர்ணம் படம் பாக்கறதுக்கு......

மாணவன் சொன்னது…

45....

vinu சொன்னது…

46

vinu சொன்னது…

47

vinu சொன்னது…

48

vinu சொன்னது…

49

vinu சொன்னது…

50

vinu சொன்னது…

ஆங் வந்த வேலை முடிஞ்சது நான் வரட்டே!!!!

@மானவா இப்புடித்தான் தீயா வேலை செய்யணும்!!!

FOOD சொன்னது…

//அவருக்கு வயசே ஆகாமல் இருப்பதற்கு அவர் என்ன சிரிப்பு போலீஸ் ரமேசா?//
நாங்க நம்புறோங்க.

அஞ்சா சிங்கம் சொன்னது…

நேத்து அங்கதான் இருந்தீங்களா?

நான் மிஸ் பண்ணீட்டேன் .............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விமர்சனம் சூப்பர்......!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நம்மையும் மதிச்சி பிரிவியூ ஷோ காட்டுனவங்களுக்கு நன்றிலேய் மக்கா...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தங்கள் விமர்சனம் அருமை, பதிவு சூப்பர்.. ஹி ஹி ஹி

விச்சு சொன்னது…

சுருக்கமான விமர்சனம்..நல்லாயிருந்துச்சு..புது பதிவர்களுக்கும் இப்படி ஏதாவது சந்திக்க வாய்ப்பு கொடுங்க!!

பெயரில்லா சொன்னது…

தங்கள் விமர்சனம் அருமை,,,,நல்லாயிருந்துச்சு..இப்படி ஏதாவது சந்திக்க வாய்ப்பு கொடுங்க!!

Krishnamoorthy.....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது