ஞாயிறு, அக்டோபர் 16

பதிவர்களின் வெடி


நம்ம பதிவர்கள் நம்மளைத்தான் பதிவெழுதி இம்சை பண்றாங்க. ஒரு சேஞ்சுக்கு தீபாவளி பட்டாசு வாங்க போக சொல்லலாம்ன்னு பார்த்தா அங்க போயும் என்ன லொள்ளு பண்ணிருகாங்கன்னு பாருங்க.


கேபிள் சங்கர்: அண்ணே பட்டாசு கிடைக்குமா?

கடைக்காரன்: என்ன பட்டாசு வேணும்?

கேபிள்: ஒரே பட்டாசு லட்சுமி வெடி மாதிரி வெடிக்கனும். தரை சக்கரம் மாதிரி சுத்தணும். மத்தாப்பு மாதிரி பொரியனும். ராக்கெட் மாதிரி மேல போகணும்..

கடைக்காரன்: சார் அப்படியெல்லாம் வெடி இல்லை. தனித்தனியாத்தான் வாங்கணும்.

கேபிள்: அட போய்யா. நான் ஒரு பன்முக கலைஞன். நானே பாடுறேன். நானே நடிக்கிறேன். நானா பாக்குறேன்(!!!). நான் எழுதுற ஒரு கொத்து புரோட்டால பல விஷயம் கிடைக்குது. இத பண்ண முடியாதா? வேணாம் விடு நானே போயி உடான்ஸ்ன்னு தனியா ஒரு வெடி தயாரிச்சிக்கிறேன்.
===========================================================
கடைக்காரன்: என்ன வெடி சார் வேணும்?

வெங்கட்: எனக்கு டைம் இல்லை. அதனால வெடி எல்லாம் வாங்கி ஒரே நேரத்துல பத்த வச்சிடுவேன். ஆனா நான் வெடி சவுண்ட மாடரேசன்ல வைக்கணும். எனக்கு எப்போ வெடி சத்தம் கேக்கணும்ன்னு தோணுதோ அப்போ மாடரேசனை எடுத்து வெடி சத்தம் கேக்கணும்.

கடைக்காரன்: !!!!!!
===========================================================
பன்னிகுட்டி ராம்சாமி: டேய் ஏண்டா மார்கெட்டுல இவ்ளோ கூட்டமா இருக்கு.

டெரர்: தீபாவளி பர்சேசுக்கு வந்த கூட்டம் டா.

பன்னிகுட்டி: தீபாவுக்கு வலியா. அடங்கொன்னியா போய் டாக்டரை கூட்டிட்டு வாடா ராஸ்கல்.

டெரர்: செருப்பு பிஞ்சிடும். அது தீபாவளி.

பன்னி: ஓ தீபாவுக்கு வழி விடணுமா. தெளிவா சொல்லுடா பரதேசி.

டெரர்: கர். தூ
===========================================================
கடைக்காரன்: என்ன வெடி சார் வேணும்?

அருண் பிரசாத் தயிர் கடையுற மதத்தையும் ஒரு பூவையும் படமாக கொடுக்கிறார்.

கடைக்காரன்: இத வச்சு என்ன பண்றது. என்ன வெடி வேணும்ன்னு சொல்லுங்க சார்?

அருண் பிரசாத்: ஏன்யா மத்தையும் பூவையும் தர்ரனே. மத்தாப்பூன்னு கண்டு பிடிக்க முடியாதா? என் பிளாக்குக்கு வந்து பழைய சினிமா புதிரை கண்டு பிடிச்சு பழகு..
===========================================================
உண்மைதமிழன்: ஸ்பெக்ட்ரம் வாலா கொடுங்க..

கடைக்காரன்: அப்படின்னா?

உண்மைதமிழன்: 17000 கோடியே @@@@@ வாலா. வெடி போட்டா என் பதிவை படிக்க ஆகுற நாள் மாதிரி ஒரு வாரத்துக்கு வெடிக்கனும்
===========================================================
செல்வா: அண்ணே பட்டாசு வேணும்.

கடைக்காரன்: என்ன பட்டாசு வேணும்?

செல்வா: வெளியில வெடிக்கிற பட்டாசுதான் வேணும். தப்பித்தவறி முழுங்கி வயிறு எரிஞ்சா கூட வயித்துல வெடிச்சிட கூடாது.

கடைக்காரன்:அதை ஏன் முழுங்குரீங்க?

செல்வா: அது என் இஷ்டம். அதை ஏன் நீங்க கேக்குறீங்க. வயித்துக்குள்ள போன வெடிக்க கூடாது.

ஒரு பட்டாசு வாங்குகிறார். பட்டாசு அங்கே வெடித்து விடுகிறது.

செல்வா: முட்டாள் பட்டாசு அதுவாக வெடித்துவிட்டது. அதை வெடிப்பதற்காக வாங்கி வைத்த பத்தி, தீப்பெட்டியை என்ன செய்வது?
===========================================================
தேவா: எமக்கு ஒரு தனித்துவமான பட்டாசு ஒன்று வேண்டும்,

கடைக்காரன்: அப்படின்னா தண்ணில வெடிக்கிற பட்டாசா? அந்த மாதிரியெல்லாம் இல்லை சார். 

தேவா: இல்லை யாம் கேட்பது தீபாவளிக்கு அனைவரும் கொளுத்தும் வெடியல்ல, ஆனால் அது போல இருக்கும் பட்டாசு.

கடைக்காரன்: சார் உங்களுக்கு என்ன பட்டாசு வேணும்னு கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லுங்க சார்.

தேவா: இதோ கேட்டுக் கொள். அந்தப் பட்டாசு வெடித்தால் யாருக்கும் கேட்க கூடாது. ஆனால் வெடித்தது தெரிய வேண்டும். புகை வரக்கூடாது, ஆனால் வாசனை வரவேண்டும். வெளிச்சம் வரவேண்டும் ஆனால் நெருப்பு வரக்கூடாது எனில் எமக்குச் சம்மதம்.

கடைக்காரன்: மயங்கி விழுகிறான்...............
===========================================================
வைகை: தீபாவளிக்கு பட்டாசு வாங்கனும், ஆனா......

ரமேஷ்: என்ன ஆனா?

வைகை: இல்ல அது தமிழினத்தலைவருக்கு புடிக்காதே? பொங்கல் கொண்டாடுனாத்தான் அவருக்கு புடிக்கும்...

ரமேஷ்: அப்போ கொண்டாடு.......

வைகை: அப்போ தீபாவளி அன்னிக்கு என்ன பண்றது?

ரமேஷ்: காலண்டர்ல பொங்கல் டேட் வரைக்கும் கிழிச்சிட்டு, பொங்கல் வெச்சிடு........... 

வைகை:??!!
==================
சிபி: அண்ணே நமீதா வெடி இருந்தா கொடுங்க...

கடைக்காரன்: யோவ் அதெல்லாம் இல்ல, இங்க லட்சுமி வெடிதான் இருக்கு, 
சிபி: என்ன சார் இது அநியாயம்? 20 வருசத்துக்கு முன்னாடி ரிட்டயர் ஆன நடிகைக்கெல்லாம் பட்டாசு வெச்சிருக்கீங்க, நேத்து வந்த நமீக்கு இல்லியா? 

கடைக்காரன்: சார், நானா பேர் வெச்சென், பேர் வெச்சவன் கிட்ட போய் கேளுங்க சார்..

சிபி: இதல்லாம் ஒத்துக்க மாட்டேன், நாளைக்கே விமர்சனத்துல போட்டு கேள்வி கேப்பேன்... ஆபீசர் கிட்ட கம்ளைன்ட் பண்ணிடுவேன்

கடைக்காரன்: சார், சார், அப்படியெல்லாம் பண்ணி யாவாரத்த கெடுத்துடாதீங்க, நானே அந்த பட்டாசுக்கு நமீதான்னு பேர் வெச்சிடுறேன் சார்...........

சிபி: அப்படின்னா இரு.... நான் சொல்ற பேர்களை வரிசையா வைய்யி... ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா, இலியானா, திரிஷா, அஞ்சலி, அனன்யா, காஜல் அகர்வால், ................

கடைக்காரன் கடையை போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுகிறான்..........

69 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நகைச்சுவையாக வெடித்த
பதிவர்களின் வெடி" அருமை. பாராட்டுக்கள்.

RAMVI சொன்னது…

நல்ல வேடிக்கையான தீபாவளி.வாழ்த்துக்கள்.

சங்கர் நாராயண் @ Cable Sankar சொன்னது…

இதுக்குப் பேர்தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா? #டவுட்டு :))

வைரை சதிஷ் சொன்னது…

இப்போ பதிவர்களை வைத்தே காமெடி பன்ன ஆரம்பிச்சிட்டீங்களா

நாகராஜசோழன் MA சொன்னது…

பரவால்லை, நம்ம ரமேஷ் பட்டாசு வாங்க கடைக்கு போகல...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ் - அண்ணே ஓ சி வெடி இருக்கா?


கடைக்காரர் - தம்பி.. ஓ சி சாப்பாடு வேணும்னா அன்னதானம் நடக்கற கோயிலுக்கு போங்க, ஆனா ஓ சி வெடி கிடைக்காது..விஷாலே வந்தாலும் சரி..

வைகை சொன்னது…

நம்ம பதிவர்கள் நம்மளைத்தான் பதிவெழுதி இம்சை பண்றாங்க//

இப்ப நீ பண்ற மாதிரி? :)

வைகை சொன்னது…

கேபிள்: ஒரே பட்டாசு லட்சுமி வெடி மாதிரி வெடிக்கனும். தரை சக்கரம் மாதிரி சுத்தணும். மத்தாப்பு மாதிரி பொரியனும். ராக்கெட் மாதிரி மேல போகணும்..///

அப்ப பட்டாசுல உன்னைய கட்டிதான் பத்தவைக்கணும் :))

வைகை சொன்னது…

வேணாம் விடு நானே போயி உடான்ஸ்ன்னு தனியா ஒரு வெடி தயாரிச்சிக்கிறேன்///

அது வெடி இல்லை போல... பல பேருக்கு டவுசர கிழிச்ச பாம் :))

வைகை சொன்னது…

எனக்கு எப்போ வெடி சத்தம் கேக்கணும்ன்னு தோணுதோ அப்போ மாடரேசனை எடுத்து வெடி சத்தம் கேக்கணும்///

அப்ப வெடிய காதுக்குள்ளதான் வைக்கணும் :))

வைகை சொன்னது…

பன்னி: ஓ தீபாவுக்கு வழி விடணுமா. தெளிவா சொல்லுடா பரதேசி.

டெரர்: கர். தூ ///

இரண்டு அறிவாளிகள் சேர்ந்தா இப்பிடித்தானே பேச முடியும்? :))

வைகை சொன்னது…

அருண் பிரசாத்: ஏன்யா மத்தையும் பூவையும் தர்ரனே. மத்தாப்பூன்னு கண்டு பிடிக்க முடியாதா? என் பிளாக்குக்கு வந்து பழைய சினிமா புதிரை கண்டு பிடிச்சு பழகு..///

அதுக்கு அந்த கடைக்காரன்...வெடிய அவன் வீட்டுக்குள்ள பத்தவசிக்கலாம் :)

வைகை சொன்னது…

செல்வா: முட்டாள் பட்டாசு அதுவாக வெடித்துவிட்டது. அதை வெடிப்பதற்காக வாங்கி வைத்த பத்தி, தீப்பெட்டியை என்ன செய்வது?///

உன் ப்ளாக்க கொளுத்த சொல்லு :))

வைகை சொன்னது…

உண்மைதமிழன்: 17000 கோடியே @@@@@ வாலா. வெடி போட்டா என் பதிவை படிக்க ஆகுற நாள் மாதிரி ஒரு வாரத்துக்கு வெடிக்கனும்//

ஒரு வாரத்துக்கு அப்பறம் தொடரும் போட்டு வெடிக்குமா? :)

வைகை சொன்னது…

தேவா: இதோ கேட்டுக் கொள். அந்தப் பட்டாசு வெடித்தால் யாருக்கும் கேட்க கூடாது. ஆனால் வெடித்தது தெரிய வேண்டும். புகை வரக்கூடாது///

தேவா கேக்குறது வெடியே இல்லை... ஹாஸ்பிட்டல்ல கொடுக்குற மயக்கமருந்து :))

வைகை சொன்னது…

வைகை: அப்போ தீபாவளி அன்னிக்கு என்ன பண்றது?
ரமேஷ்: காலண்டர்ல பொங்கல் டேட் வரைக்கும் கிழிச்சிட்டு, பொங்கல் வெச்சிடு...........///

அப்ப பொங்கல் அன்னைக்கு என்ன பண்றது? :)

வைகை சொன்னது…

சிபி: என்ன சார் இது அநியாயம்? 20 வருசத்துக்கு முன்னாடி ரிட்டயர் ஆன நடிகைக்கெல்லாம் பட்டாசு வெச்சிருக்கீங்க, நேத்து வந்த நமீக்கு இல்லியா? //

அண்ணன கொஞ்சம் பொறுத்துக்க சொல்லுங்க...கொஞ்ச நாள் கழிச்சு நமீயே வெடிக்கும் :))

வைகை சொன்னது…

ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா, இலியானா, திரிஷா, அஞ்சலி, அனன்யா, காஜல் அகர்வால், ................
கடைக்காரன் கடையை போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுகிறான்..........///

எந்த நடிகை வீட்டுக்கு? :)

வைகை சொன்னது…

சிரிப்பு போலிஸ் - அண்ணே..பட்டாசு வேணும்..

கடைகாரர் - என்ன பட்டாசு?

சிரிப்பு போலிஸ் - அத வெடிச்சா அதுல இருந்து இட்லி வரணும்... கொஞ்ச நேரம் கழிச்சு அதுலே சட்னி வரணும்... முக்கியமா ஒரு பட்டாசு வெடிச்சா மூணு வேளைக்கும் சாப்பாடு வரணும்... அதுவும் ஓசியா... இருக்கா அண்ணே?

கடைக்காரர் - டேய்ய்.. பரதேசி போடா..போ...போய் கபாலீஸ்வரர் கோவில் வாசல்ல குந்திக்க... கொஞ்ச நாள் கழிச்சி நீயே வெடிப்ப..

சிரிப்பு போலிஸ் - ?????%%^^^&&

Dr. Butti Paul சொன்னது…

காமெடி வெடி, அருமை.

பெசொவி சொன்னது…

//
அருண் பிரசாத் தயிர் கடையுற மதத்தையும் ஒரு பூவையும் படமாக கொடுக்கிறார்.

கடைக்காரன்: இத வச்சு என்ன பண்றது. என்ன வெடி வேணும்ன்னு சொல்லுங்க சார்?

அருண் பிரசாத்: ஏன்யா மத்தையும் பூவையும் தர்ரனே. மத்தாப்பூன்னு கண்டு பிடிக்க முடியாதா? என் பிளாக்குக்கு வந்து பழைய சினிமா புதிரை கண்டு பிடிச்சு பழகு..//

ROFL!

Madhavan Srinivasagopalan சொன்னது…

all are good.. especialy 'maththu' & 'poo' and latchmi vedi, namitha vedi..

ரசிகன் சொன்னது…

ROFL :)))

தினேஷ்குமார் சொன்னது…

மாம்ஸ் எல்லா வெடியும் வெடிக்குமா ....

♔ம.தி.சுதா♔ சொன்னது…

சீபி வெடி மட்டும் தான் வெடிக்கும் மற்றதெல்லாம் புஸ்வானமாயிடும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிரிப்பு போலீசு மட்டும் எங்க போனாரு? பட்டாசு வாங்க சிங்கப்பூரு போயிட்டாரா?

NAAI-NAKKS சொன்னது…

ROFL :))

dheva சொன்னது…

யுடான்ஸ் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்...!


தம்பி தீபாவளி வந்துருச்சு போல.......ஆமாம் சாப்பாட்டு வெடின்னு ஒண்ணு வந்து இருக்காம் காசு கொடுத்து வாங்கினா வெடிக்காதாம்...ஓசில வாங்கணுமாம்..ஹி ஹி..ஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வெங்கட்: எனக்கு டைம் இல்லை. அதனால வெடி எல்லாம் வாங்கி ஒரே நேரத்துல பத்த வச்சிடுவேன். ஆனா நான் வெடி சவுண்ட மாடரேசன்ல வைக்கணும். ////

பத்த வெச்சி கக்கூசுக்குள்ள தூக்கிப் போட்ருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பன்னிகுட்டி ராம்சாமி: டேய் ஏண்டா மார்கெட்டுல இவ்ளோ கூட்டமா இருக்கு.

டெரர்: தீபாவளி பர்சேசுக்கு வந்த கூட்டம் டா.

பன்னிகுட்டி: தீபாவுக்கு வலியா. அடங்கொன்னியா போய் டாக்டரை கூட்டிட்டு வாடா ராஸ்கல்.

டெரர்: செருப்பு பிஞ்சிடும். அது தீபாவளி.

பன்னி: ஓ தீபாவுக்கு வழி விடணுமா. தெளிவா சொல்லுடா பரதேசி.

டெரர்: கர். தூ /////////

என்றா இது... மொதல்ல பன்னிகுட்டி ராம்சாமி, அப்புறம் பன்னிகுட்டி, அப்புறம் பன்னி..... கை வலிச்சிடுச்சாக்கும்....?

! சிவகுமார் ! சொன்னது…

//நானே பாடுறேன். நானே நடிக்கிறேன். நானா பாக்குறேன்//

யாருக்கும் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது!!

! சிவகுமார் ! சொன்னது…

//ஆனா நான் வெடி சவுண்ட மாடரேசன்ல வைக்கணும்//

மன்மோகன் வெடியா?

! சிவகுமார் ! சொன்னது…

//ஆனா நான் வெடி சவுண்ட மாடரேசன்ல வைக்கணும்//

மன்மோகன் வெடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அருண் பிரசாத்: ஏன்யா மத்தையும் பூவையும் தர்ரனே. மத்தாப்பூன்னு கண்டு பிடிக்க முடியாதா? என் பிளாக்குக்கு வந்து பழைய சினிமா புதிரை கண்டு பிடிச்சு பழகு../////

பழகி...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////! சிவகுமார் ! கூறியது...
//நானே பாடுறேன். நானே நடிக்கிறேன். நானா பாக்குறேன்//

யாருக்கும் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது!!////////

சத்திய சோதனை....

எஸ்.கே சொன்னது…

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இராஜராஜேஸ்வரி
@ RAMVI
@ ரசிகன்

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சங்கர் நாராயண் @ Cable Sankar சொன்னது… 3

இதுக்குப் பேர்தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா? #டவுட்டு :))//

என்னது மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைரை சதிஷ் சொன்னது… 4

இப்போ பதிவர்களை வைத்தே காமெடி பன்ன ஆரம்பிச்சிட்டீங்களா
//

எப்பவுமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 5

பரவால்லை, நம்ம ரமேஷ் பட்டாசு வாங்க கடைக்கு போகல...//

ஆமா ஓசி பட்டாசுதான் பிடிக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 6

ரமேஷ் - அண்ணே ஓ சி வெடி இருக்கா?


கடைக்காரர் - தம்பி.. ஓ சி சாப்பாடு வேணும்னா அன்னதானம் நடக்கற கோயிலுக்கு போங்க, ஆனா ஓ சி வெடி கிடைக்காது..விஷாலே வந்தாலும் சரி..
///

ROFL

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 7

நம்ம பதிவர்கள் நம்மளைத்தான் பதிவெழுதி இம்சை பண்றாங்க//

இப்ப நீ பண்ற மாதிரி? :)//

போங்கண்ணே என்னை ரொம்ப புகழாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 8

கேபிள்: ஒரே பட்டாசு லட்சுமி வெடி மாதிரி வெடிக்கனும். தரை சக்கரம் மாதிரி சுத்தணும். மத்தாப்பு மாதிரி பொரியனும். ராக்கெட் மாதிரி மேல போகணும்..///

அப்ப பட்டாசுல உன்னைய கட்டிதான் பத்தவைக்கணும் :))//

பொம்பளை பட்டாசா? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 9

வேணாம் விடு நானே போயி உடான்ஸ்ன்னு தனியா ஒரு வெடி தயாரிச்சிக்கிறேன்///

அது வெடி இல்லை போல... பல பேருக்கு டவுசர கிழிச்ச பாம் :))
//

Haa haa haa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 11

பன்னி: ஓ தீபாவுக்கு வழி விடணுமா. தெளிவா சொல்லுடா பரதேசி.

டெரர்: கர். தூ ///

இரண்டு அறிவாளிகள் சேர்ந்தா இப்பிடித்தானே பேச முடியும்? :))//

அறிவாளியா? எங்க? எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 13

செல்வா: முட்டாள் பட்டாசு அதுவாக வெடித்துவிட்டது. அதை வெடிப்பதற்காக வாங்கி வைத்த பத்தி, தீப்பெட்டியை என்ன செய்வது?///

உன் ப்ளாக்க கொளுத்த சொல்லு :))//

நீங்க துப்பி துப்பியே இங்க ஈரமா இருக்கே. அப்புறம் எப்படி எரியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 16

வைகை: அப்போ தீபாவளி அன்னிக்கு என்ன பண்றது?
ரமேஷ்: காலண்டர்ல பொங்கல் டேட் வரைக்கும் கிழிச்சிட்டு, பொங்கல் வெச்சிடு...........///

அப்ப பொங்கல் அன்னைக்கு என்ன பண்றது? :)//

கவலைபடாதே . மறுநாள் மாட்டு பொங்கல். அதனால முத நாளே உன்னை குளிப்பாட்டி பெயின்ட் அடிப்பாங்க :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 19

சிரிப்பு போலிஸ் - அண்ணே..பட்டாசு வேணும்..

கடைகாரர் - என்ன பட்டாசு?

சிரிப்பு போலிஸ் - அத வெடிச்சா அதுல இருந்து இட்லி வரணும்... கொஞ்ச நேரம் கழிச்சு அதுலே சட்னி வரணும்... முக்கியமா ஒரு பட்டாசு வெடிச்சா மூணு வேளைக்கும் சாப்பாடு வரணும்... அதுவும் ஓசியா... இருக்கா அண்ணே?

கடைக்காரர் - டேய்ய்.. பரதேசி போடா..போ...போய் கபாலீஸ்வரர் கோவில் வாசல்ல குந்திக்க... கொஞ்ச நாள் கழிச்சி நீயே வெடிப்ப..

சிரிப்பு போலிஸ் - ?????%%^^^&&//

காபலீஸ்வரர் கோவில் சாப்பாடு டேஸ்ட்டாவே இல்லை. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Dr. Butti Paul சொன்னது… 20

காமெடி வெடி, அருமை.
//

Thanks boss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@PSV *MAdhavan

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தினேஷ்குமார் சொன்னது… 24

மாம்ஸ் எல்லா வெடியும் வெடிக்குமா ....//

சிலது புஸ்வானம்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது… 25

சீபி வெடி மட்டும் தான் வெடிக்கும் மற்றதெல்லாம் புஸ்வானமாயிடும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா///

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 26

சிரிப்பு போலீசு மட்டும் எங்க போனாரு? பட்டாசு வாங்க சிங்கப்பூரு போயிட்டாரா?//

அவரே மத்தாப்பூ போல சிரிக்கிறாரே . அவருக்கு எதுக்கு பட்டாசு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS சொன்னது… 27

ROFL :))
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dheva சொன்னது… 28

யுடான்ஸ் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்...!


தம்பி தீபாவளி வந்துருச்சு போல.......ஆமாம் சாப்பாட்டு வெடின்னு ஒண்ணு வந்து இருக்காம் காசு கொடுத்து வாங்கினா வெடிக்காதாம்...ஓசில வாங்கணுமாம்..ஹி ஹி..ஹி!//

நன்றினா. அந்த வெடி எங்க கிடைக்கும்? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்றா இது... மொதல்ல பன்னிகுட்டி ராம்சாமி, அப்புறம் பன்னிகுட்டி, அப்புறம் பன்னி..... கை வலிச்சிடுச்சாக்கும்....?//

உன் பேரை டைப் செஞ்சா கீபோர்டு அழுகுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 32

//ஆனா நான் வெடி சவுண்ட மாடரேசன்ல வைக்கணும்//

மன்மோகன் வெடியா?//

ஆஹா இது நல்லா இருக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 36

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சேன்!//

ஹா ஹா ஹா

siva சொன்னது…

[co="red"]testing Here[/co]

அருண் பிரசாத் சொன்னது…

அது சரி... ஓசி(சோறு) வெடி கிடைக்குமா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொளுத்துறதுல வெடிக்காத வெடி வேணும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தீபாவளி வெடியை வச்சே பதிவு தேத்துராங்களே, எலேய் மனோ உனக்கு இன்னும் பயிற்சி பத்தாதோ..???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெடி வெடிக்குது வெடி வெடிக்குது சோத்து பானையில வெடி வெடிக்குது....

செங்கோவி சொன்னது…

தீபா வழி தான்யா டாப்பு...

கலக்குங்க..ஆணி அதிகம்..அப்புறம் பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

damaal damaal :)

ஜெய்லானி சொன்னது…

ஹா..ஹா....செம ஜோக்கு ..ஹா..ஹா... ஒரு வழியா போட்டாச்சுபோல :-))))

Mohamed Faaique சொன்னது…

ரமேஸ்: மச்சீ!!! இந்த ஊசி வெடி இவ்ளோ உயராமா இருக்கு பாரே!!

டெரர் பாண்டியன்: நல்லா பார்ரா..அது ஆளுயர கண்ணாடி....

கோமாளி செல்வா சொன்னது…

அருண் அண்ணனுதும் வெங்கட் அண்ணனுதும் எனக்கு ரொம்ப பிடிச்சது. வாய்விட்டுச் சிரிச்சேன்.

கீழ வைகை அண்ணன் உங்களுக்கு எழுதினதும் சூப்பர் :))

Mohamed Faaique சொன்னது…

@ கோமாளி செல்வா சொன்னது…

/// அருண் அண்ணனுதும் வெங்கட் அண்ணனுதும் எனக்கு ரொம்ப பிடிச்சது. வாய்விட்டுச் சிரிச்சேன்.

கீழ வைகை அண்ணன் உங்களுக்கு எழுதினதும் சூப்பர் :))///

அப்போ மத்ததெல்லாம் கேவலமா இருக்கு’னு சொல்ல வர்ரீங்களா??? ஹி..ஹி... (revenge)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது