செவ்வாய், ஆகஸ்ட் 28

பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்

காலைல இருந்து ஆளைக் காணோம். கரெக்டா ஓசி சோத்துக்கு வந்துட்டேங்களே என என்னை அவமானபடுத்த முயன்று தோற்றுப்போன மெட்ராஸ் பவன் சிவகுமார் 

பதிவர் சந்திப்பு முடிந்து மூணுநாள் ஆச்சு. எல்லோரும் பதிவர் சந்திப்பு பத்தி பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்லி நாலு பக்கம் பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பு வரவு செலவு கணக்கு பத்தி பதிவு போடுறாங்க. பதிவர் சந்திப்பில் எடுத்த போட்டோவை போடுறாங்க. இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் முக்கியமான உண்மையை மறைத்துவிட்டனர்.

ஆம் பதிவர் சந்திப்பில் இந்த பதிவரின் பணி மகத்தானது. இவர் இல்லையெனில் பதிவர் சந்திப்பே முழுமை அடைந்திருக்காது. ஆனால் நடந்தது என்ன? இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது. இதனால் இவர் அடைந்த மன உளைச்சலுக்கு அளவேயில்லை. பாவம் டெரர் பிளாக்கை படித்த வாசகன் போல பித்து பிடித்து அலைகிறார்.

அந்த பதிவர் உங்களுக்கு நல்லதுதானையா பண்ணினார். அவரை மறைப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக இல்லை. உங்களுக்கு காலைல டீ,காப்பி,ஜூஸ் மதியம் சப்பாத்தி,ஸ்வீட்,சாம்பார் சாதம்,பிரியாணி,தயிர்சாதம், தயிர்பச்சடி,ஊறுகாய்,கூட்டு,அப்பளம் அப்புறம் சாயந்தரம் டீ,காப்பி என நாக்குக்கு சுவையாய் சமைத்து கொடுத்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி யாராச்சும் போஸ்ட் போட்டீங்களா?

ஒண்ணுமே செய்யாம சும்மா MGR மாதிரி தொப்பி போட்டுக்கிட்டு மேடைக்கு மேலையும்,கீழேயும்  ஒரு நாப்பது பக்க நோட்ட கைல தூக்கிட்டு அலைஞ்ச ஜெய் அவர்களை பாராட்டி பதிவேழுதுரீங்க. பாவம் அடுப்புல வெக்கைல காஞ்சு உங்களுக்கு சமைச்சு போட்ட ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி ஒரு பதிவெழுத முடியலை.

பாவம் அவர். இப்படி புலம்ப விட்டுடீங்களே. இந்த பாவம் சும்மா விடுமா?
யோவ் நான் என்னையா பாவம் செய்தேன் உங்களுக்கு ருசியா சாப்பாடு போட்டும் என்னைபத்தி ஏதாவது போஸ்ட் உண்டா (பதிவர் திருவிழா)

இதனால் இந்த பதிவு சோறு கொடுத்த வள்ளல்,அறுசுவை நாயகன் ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி பாராட்டி பதிவு எழுதியதால் ஒரு வேளை சாப்பாடு எனக்கு பார்சல் அனுப்பும்படி கேட்டுக்கொண்டு முடிக்கப்படுகிறது.

டிஸ்கி 1:
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று.

டிஸ்கி 2:  உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லுவாங்க. மணி சார் நீங்க ஏன் இலையின் ஓரத்தில் எல்லோருக்கும் உப்பு வைக்கலை. அதனாலதான் யாரும் உங்களுக்கு நன்றி சொல்லி போஸ்ட் போடலை. இனிமேலாவது இலை ஓரத்துல உப்பு வைங்க. உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க. ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே :)

 டிஸ்கி 3: பதிவுலகுக்கு பேமசானது வடை. முதல் கமெண்ட்டை வடை எனவே குறிப்பிடுவோம். அப்படிப்பட்ட உணவு வஸ்துவை பதிவர் சந்திப்பில் போடாமல் விட்டதற்காக மணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

78 கருத்துகள்:

ராஜி சொன்னது…

தம்பி ரமேஷ் உன்னை முதல்ல சாப்பிட சொன்னது நாந்தான். என்னை சொல்லவே இல்லை. சோ அன்னிக்கிக்கு சாப்பிட்ட சாப்பாடு உடம்புல ஒட்டாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தியாச்சு மாத்தியாச்சு :)

இரவு வானம் சொன்னது…

மூணாவது வடை எனக்கே

இரவு வானம் சொன்னது…

மணி அவருக்கு பாராட்டுக்கள் சோறு போட்ட தெய்வம் சார் நீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் கூறியது...

மூணாவது வடை எனக்கே//

நீங்களும் ஆரமிச்சிடீங்களா?

Madhavan Srinivasagopalan சொன்னது…

// பாவம் டெரர் பிளாக்கை படித்த வாசகன் //

Same side goal..

நாய் நக்ஸ் சொன்னது…

அப்புறம் பார்சல் கட்ட எடுத்துவந்த பாத்திரங்களை பற்றி
எதுவுமே சொல்லலை...????

நீர் பார்சல் கட்டியதால்....கடைசி பந்தியில் அமர்ந்த
எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலை தெரியுமா...???

கொஞ்சம் இறக்கம் காட்டி இருக்க கூடாதா???

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ஓசில சாப்பிட்டதுக்காக சமைச்சவருக்கு நன்றி சொன்ன பரதேசி, அதுக்கு பில் செட்டில் பண்ண எனக்கு ஏன்டா சொல்லலை....

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ஓசில சாப்பிட்டதுக்காக சமைச்சவருக்கு நன்றி சொன்ன பரதேசி, அதுக்கு பில் செட்டில் பண்ண எனக்கு ஏன்டா சொல்லலை....

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது…

// பாவம் டெரர் பிளாக்கை படித்த வாசகன் //

Same side goal..
//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாய் நக்ஸ் சொன்னது…

அப்புறம் பார்சல் கட்ட எடுத்துவந்த பாத்திரங்களை பற்றி
எதுவுமே சொல்லலை...????

நீர் பார்சல் கட்டியதால்....கடைசி பந்தியில் அமர்ந்த
எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலை தெரியுமா...???

கொஞ்சம் இறக்கம் காட்டி இருக்க கூடாதா???//

யோவ் பந்திக்கு முந்து படைக்கு பிந்துன்னு சும்மாவா சொன்னாங்க? பாத்திரம் எடுத்துட்டு வந்து பார்சல் கட்ட மணி சார் உதவி செய்ததால்தான இந்த பதிவே :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ஓசில சாப்பிட்டதுக்காக சமைச்சவருக்கு நன்றி சொன்ன பரதேசி, அதுக்கு பில் செட்டில் பண்ண எனக்கு ஏன்டா சொல்லலை....

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...//

யோவ் காசு கொடுத்துதான் சாப்பிடணும்ன்னு எந்த பதிவுளையாவது சொன்னீங்களா. ஒரு பிரபல பதிவரை(என்னை சொன்னேன்) அவமான படுத்தியதற்க்காக டெரர் தீக்குளிப்பார்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//காலைல இருந்து ஆளைக் காணோம். கரெக்டா ஓசி சோத்துக்கு வந்துட்டேங்களே என என்னை அவமானபடுத்த முயன்று தோற்றுப்போன மெட்ராஸ் பவன் சிவகுமார் //

சூப்பர் மச்சி... :))

வெளங்காதவன்™ சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//காலைல இருந்து ஆளைக் காணோம். கரெக்டா ஓசி சோத்துக்கு வந்துட்டேங்களே என என்னை அவமானபடுத்த முயன்று தோற்றுப்போன மெட்ராஸ் பவன் சிவகுமார் //

சூப்பர் மச்சி... :))////

காறித்துப்புறது கூடத் தெரியாம சூப்பர்னு சொல்றானே!!!!

எலேய் பாண்டி!!! நீ நல்லவனா? கெட்டவனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//காலைல இருந்து ஆளைக் காணோம். கரெக்டா ஓசி சோத்துக்கு வந்துட்டேங்களே என என்னை அவமானபடுத்த முயன்று தோற்றுப்போன மெட்ராஸ் பவன் சிவகுமார் //

சூப்பர் மச்சி... :))//

என்னை காறித்துப்பினா உனக்கு சூப்பராதாம்லே இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெளங்காதவன்

அவரு நல்லவனுக்கு நல்லவன்

வெளங்காதவன்™ சொன்னது…

Template Comment போட்டுட்டு ஓடிட்டான் பாரு வோய்!!!

Yoga.S. சொன்னது…

ஆமாமா,உப்பிட்டவரை உயிருள்ள வரை நினைக்கணும்!உப்பிடாதவரை எப்புடி நினைப்பாங்க?ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. சொன்னது…

உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க.ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே?///ஓஹோ,பல்லு விளக்காமையே வந்துட்டாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன்™ கூறியது...

Template Comment போட்டுட்டு ஓடிட்டான் பாரு வோய்!!!//

உனக்கு இது போதும்லே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S. கூறியது...

உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க.ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே?///ஓஹோ,பல்லு விளக்காமையே வந்துட்டாரோ?//

ஆமா பசி வித் பிசி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மேற்கொண்ட படத்தில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள உடனே இங்கே
விஜயம் செய்யவும்.....!

வெளங்காதவன்™ சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

வெளங்காதவன்™ கூறியது...

Template Comment போட்டுட்டு ஓடிட்டான் பாரு வோய்!!!//

உனக்கு இது போதும்லே ////

உன்னச் சொல்லல வோய்!!!!

ஒட்டகத்தைச் சொன்னேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@பன்னி

ஏன் இந்த விளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. ///////

அழகான போட்டோ....? அதான் இல்ல போல.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெளங்காதவன் :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.////

ஏன் பேரை கருப்பு ஃபாண்ட்ல அடிச்சிட்டாங்களோ....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

///// இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. ///////

அழகான போட்டோ....? அதான் இல்ல போல.....! //

என் அழகுக்கென்ன குறைச்சல். நானே அழகில்லைன்னா டெரர் போட்டோ பார்த்தா என்ன சொல்லுவ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.////

ஏன் பேரை கருப்பு ஃபாண்ட்ல அடிச்சிட்டாங்களோ....? //

ஆமா பாபு கலர்ல இருக்குமே அந்த பாண்ட் தான?

வரலாற்று சுவடுகள் சொன்னது…

எம்.ஜி.ஆர் மாதிரி போடோவுல தகதகன்னு மின்னுரீங்களே தல! :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இதனால் இந்த பதிவு சோறு கொடுத்த வள்ளல்,அறுசுவை நாயகன் ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி பாராட்டி பதிவு எழுதியதால் ஒரு வேளை சாப்பாடு எனக்கு பார்சல் அனுப்பும்படி கேட்டுக்கொண்டு முடிக்கப்படுகிறது. ////

இத படிக்கிறவங்க எல்லாரும் ஆளுக்கொரு பார்சல் அனுப்பனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வரலாற்று சுவடுகள் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

எம்.ஜி.ஆர் மாதிரி போடோவுல தகதகன்னு மின்னுரீங்களே தல! :)//

ஓகே மணி அண்ணன் கிட்ட வாங்கிட்டு வந்த பார்சல்ல உங்களுக்கும் பங்கு தரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////இதனால் இந்த பதிவு சோறு கொடுத்த வள்ளல்,அறுசுவை நாயகன் ஆயிரத்தில் ஒருவன் மணிக்கு நன்றி சொல்லி பாராட்டி பதிவு எழுதியதால் ஒரு வேளை சாப்பாடு எனக்கு பார்சல் அனுப்பும்படி கேட்டுக்கொண்டு முடிக்கப்படுகிறது. ////

இத படிக்கிறவங்க எல்லாரும் ஆளுக்கொரு பார்சல் அனுப்பனுமா?//

அனுப்பினால் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டிஸ்கி 1: உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று.//////

அன்லிமிட்டட் மீல்சே அஞ்சு சாப்புடுறவன் நீய்யி, நீயெல்லாம் சாப்புட்டு போனா என்ன, வெறும் வயித்துல போனா என்ன.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இனிமேலாவது இலை ஓரத்துல உப்பு வைங்க. உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க. ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே :)//////

இல்ல, உப்புமாவாவது போடுங்க.....!

Yoga.S. சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
மேற்கொண்ட படத்தில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள உடனே இங்கே
விஜயம் செய்யவும்.....!/////இதை வச்சே(பதிவு)தேத்தியாச்சா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// டிஸ்கி 3: பதிவுலகுக்கு பேமசானது வடை. முதல் கமெண்ட்டை வடை எனவே குறிப்பிடுவோம். அப்படிப்பட்ட உணவு வஸ்துவை பதிவர் சந்திப்பில் போடாமல் விட்டதற்காக மணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் //////

செல்வாவும் பதிவர் சந்திப்புக்கு வர்ரான்னு யாரோ சொல்லிட்டாங்களாம்...... அதான் வடைய கேன்சல் பண்ணிட்டாங்க......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////டிஸ்கி 1: உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று.//////

அன்லிமிட்டட் மீல்சே அஞ்சு சாப்புடுறவன் நீய்யி, நீயெல்லாம் சாப்புட்டு போனா என்ன, வெறும் வயித்துல போனா என்ன.....? //

After marriage Im diet.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////இனிமேலாவது இலை ஓரத்துல உப்பு வைங்க. உப்பு இல்லைன்னா அட்லீஸ்ட் டூத்பேஸ்ட்டையாவது வைங்க. ஏன்னா அதுலதான் உப்பு இருக்கே :)//////

இல்ல, உப்புமாவாவது போடுங்க.....! //

உப்புமா உப்புமா? உப்பாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

///// டிஸ்கி 3: பதிவுலகுக்கு பேமசானது வடை. முதல் கமெண்ட்டை வடை எனவே குறிப்பிடுவோம். அப்படிப்பட்ட உணவு வஸ்துவை பதிவர் சந்திப்பில் போடாமல் விட்டதற்காக மணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் //////

செல்வாவும் பதிவர் சந்திப்புக்கு வர்ரான்னு யாரோ சொல்லிட்டாங்களாம்...... அதான் வடைய கேன்சல் பண்ணிட்டாங்க......! //

இருந்தாலும் இருக்கும் :)

வைகை சொன்னது…

இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் முக்கியமான உண்மையை மறைத்துவிட்டனர்.///

எத? நீ நைட் சாப்பாடும் சாப்ட்டுதான் போவேன்னு அடம் பிடிச்சதானே? :-)

வைகை சொன்னது…

இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.//

இதுக்கு திட்டமிட்டே பாபு கலர் செய்யப்பட்டது, திட்டமிட்டே டெரர் கலர் செய்யப்பட்டதுன்னு சொல்லலாம்ல? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

இந்த பதிவரின் பெயர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.//

இதுக்கு திட்டமிட்டே பாபு கலர் செய்யப்பட்டது, திட்டமிட்டே டெரர் கலர் செய்யப்பட்டதுன்னு சொல்லலாம்ல? :-)//

பார்டா அண்ணன் சிகப்பு சட்டை போட்ருக்கார் :)

வைகை சொன்னது…

அந்த பதிவர் உங்களுக்கு நல்லதுதானையா பண்ணினார். அவரை மறைப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக இல்லை//

அவரு ஒல்லியா இருந்ததால மறைக்கிறது கஷ்டமா இல்லையாம் :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் முக்கியமான உண்மையை மறைத்துவிட்டனர்.///

எத? நீ நைட் சாப்பாடும் சாப்ட்டுதான் போவேன்னு அடம் பிடிச்சதானே? :-)//

லூசாப்பா நீ. அதுக்குத்தான் பார்சல் கட்டிட்டனே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நாய் நக்ஸ் கூறியது...
அப்புறம் பார்சல் கட்ட எடுத்துவந்த பாத்திரங்களை பற்றி
எதுவுமே சொல்லலை...????

நீர் பார்சல் கட்டியதால்....கடைசி பந்தியில் அமர்ந்த
எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலை தெரியுமா...???

கொஞ்சம் இறக்கம் காட்டி இருக்க கூடாதா???//////

அப்படின்னா தரைல உக்காந்துதான் சாப்பிடனும்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

அந்த பதிவர் உங்களுக்கு நல்லதுதானையா பண்ணினார். அவரை மறைப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக இல்லை//

அவரு ஒல்லியா இருந்ததால மறைக்கிறது கஷ்டமா இல்லையாம் :-)//

அப்ப பாபு மாதிரி இருந்தா ரொம்ப குஷ்டமோ?

வைகை சொன்னது…

பாவம் அவர். இப்படி புலம்ப விட்டுடீங்களே. இந்த பாவம் சும்மா விடுமா?///

ஏன்? கைல அஞ்சு பத்து கொடுத்துதான் விடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@பன்னி

ஏன் இந்த விளம்பரம்?//////

இந்த வெளம்பரம் உனக்குத்தான்.....!

வைகை சொன்னது…

/////நாய் நக்ஸ் கூறியது...
அப்புறம் பார்சல் கட்ட எடுத்துவந்த பாத்திரங்களை பற்றி
எதுவுமே சொல்லலை...????

நீர் பார்சல் கட்டியதால்....கடைசி பந்தியில் அமர்ந்த
எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலை தெரியுமா...???

கொஞ்சம் இறக்கம் காட்டி இருக்க கூடாதா???//////

காமிச்சானே... பெல்ட்ட லூஸ் பண்ணி பேன்ட்ட கொஞ்சம் இறக்கி காமிச்சிருப்பானே? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

///// இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. ///////

அழகான போட்டோ....? அதான் இல்ல போல.....! //

என் அழகுக்கென்ன குறைச்சல். நானே அழகில்லைன்னா டெரர் போட்டோ பார்த்தா என்ன சொல்லுவ?////////

நான் அவ்வளவு தைரியசாலி இல்லை.....!

வைகை சொன்னது…

உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//////

இவனை சாப்பிட கூப்பிடனும் சொல்லி அவங்ககிட்ட முன்னாடியே டீலிங் பேசிட்டுதானே அங்க போனான்........!

வைகை சொன்னது…

உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லுவாங்க////

அய்யய்யோ..எங்க ஊர் மளிகை கடைகாரர் பேரு மறந்துபோச்சே? :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

///// இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. ///////

அழகான போட்டோ....? அதான் இல்ல போல.....! //

என் அழகுக்கென்ன குறைச்சல். நானே அழகில்லைன்னா டெரர் போட்டோ பார்த்தா என்ன சொல்லுவ?////////

நான் அவ்வளவு தைரியசாலி இல்லை.....!
//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////வைகை கூறியது...
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//////

இவனை சாப்பிட கூப்பிடனும் சொல்லி அவங்ககிட்ட முன்னாடியே டீலிங் பேசிட்டுதானே அங்க போனான்........!//

எப்படித்தான் கண்டுபிடிக்கிராங்க்களோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

பாவம் அவர். இப்படி புலம்ப விட்டுடீங்களே. இந்த பாவம் சும்மா விடுமா?///

ஏன்? கைல அஞ்சு பத்து கொடுத்துதான் விடுமா?//

நீ ஒரு அறிவு கழுதை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////நாய் நக்ஸ் கூறியது...
அப்புறம் பார்சல் கட்ட எடுத்துவந்த பாத்திரங்களை பற்றி
எதுவுமே சொல்லலை...????

நீர் பார்சல் கட்டியதால்....கடைசி பந்தியில் அமர்ந்த
எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலை தெரியுமா...???

கொஞ்சம் இறக்கம் காட்டி இருக்க கூடாதா???//////

காமிச்சானே... பெல்ட்ட லூஸ் பண்ணி பேன்ட்ட கொஞ்சம் இறக்கி காமிச்சிருப்பானே? :-)//

Im very decent

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////வைகை கூறியது...
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//////

இவனை சாப்பிட கூப்பிடனும் சொல்லி அவங்ககிட்ட முன்னாடியே டீலிங் பேசிட்டுதானே அங்க போனான்........!///

இதுக்கு மட்டும் வெக்கபடாம கால்ல விழுந்துர்றான்யா? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//

secret is secret of my energy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லுவாங்க////

அய்யய்யோ..எங்க ஊர் மளிகை கடைகாரர் பேரு மறந்துபோச்சே? :-))//

அண்ணாச்சிதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////வைகை கூறியது...
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//////

இவனை சாப்பிட கூப்பிடனும் சொல்லி அவங்ககிட்ட முன்னாடியே டீலிங் பேசிட்டுதானே அங்க போனான்........!///

இதுக்கு மட்டும் வெக்கபடாம கால்ல விழுந்துர்றான்யா? :-)//

பந்திக்கு முந்துன்னு அவ்வையாரே ஆத்திசூடில சொல்லிருக்காங்களே

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////வைகை கூறியது...
உண்மைலயே மதியம் நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன். ஆனால் சிபி,ஷங்கர் ஜி,காணாமல் போன கனவுகள் ராஜி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் மணியின் அன்பு கட்டளையால்தான் நான் மறுபடியும் அங்கே சாப்பிட வேண்டிதாயிற்று///

இல்லைனா மட்டும்? படுவா போனதே அதுக்குதானே? :-)//////

இவனை சாப்பிட கூப்பிடனும் சொல்லி அவங்ககிட்ட முன்னாடியே டீலிங் பேசிட்டுதானே அங்க போனான்........!//

எப்படித்தான் கண்டுபிடிக்கிராங்க்களோ///

இதை கண்டுபிடிக்கக் சிபிஐ யா வரணும்? காஞ்சு கிடக்க மூஞ்சியா பார்த்தாலே தெரியுமே? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதை கண்டுபிடிக்கக் சிபிஐ யா வரணும்? காஞ்சு கிடக்க மூஞ்சியா பார்த்தாலே தெரியுமே? :-)//

சிபி எதுக்கு வரணும். இங்க வர்ற நேரத்துல அவரு மூணு பதிவு போட்டிர மாட்டார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இதை கண்டுபிடிக்கக் சிபிஐ யா வரணும்? காஞ்சு கிடக்க மூஞ்சியா பார்த்தாலே தெரியுமே? :-)//

சிபி எதுக்கு வரணும். இங்க வர்ற நேரத்துல அவரு மூணு பதிவு போட்டிர மாட்டார்?///////

என்னது மூணா...? அவரு இன்னேரம் 30 எழுதி வெச்சிருப்பாரே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவர் சந்திப்பு-மறைக்கப்பட்ட உண்மைகள்":

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இதை கண்டுபிடிக்கக் சிபிஐ யா வரணும்? காஞ்சு கிடக்க மூஞ்சியா பார்த்தாலே தெரியுமே? :-)//

சிபி எதுக்கு வரணும். இங்க வர்ற நேரத்துல அவரு மூணு பதிவு போட்டிர மாட்டார்?///////

என்னது மூணா...? அவரு இன்னேரம் 30 எழுதி வெச்சிருப்பாரே? //

michcham?

இந்திரா சொன்னது…

//இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. //

கேமராக் கோளாறா இருக்குமோ..
என்ன இருந்தாலும் இதற்கு கண்டனத்தை தெரிவிச்சே ஆகணும்.

MGR சொன்னது…

So ennikku sappittalum udambil ottathu

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) சொன்னது…

//இதுவரை வந்த ஒரு பதிவில் கூட என்னுடைய அழகான போட்டோ இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் முக்கியமான உண்மையை மறைத்துவிட்டனர். //

பதிவர் சந்திப்புக்கு வந்தது நீ இல்ல நாந்தான்னு யாருக்கும் சொல்ல வேணாம்னு நான் எல்லார்கிட்டேயும் சொல்லி வச்சிருந்தேன். அதுதான் மறைச்சிருக்காங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சிரிப்பு போலிஸ் சி.ஐ.டி போலிஸாமாறிவிட்டார்.
நன்பேண்டா...........

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//இரவு வானம் கூறியது...
மணி அவருக்கு பாராட்டுக்கள் சோறு போட்ட தெய்வம் சார் நீங்க//

மிக்க நன்றி! தெய்வம்னு சொல்லி என்னைய மூலையிலே உட்கார வச்சிடாதீங்க நானும் உங்களில் ஒருவன் த்னான்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அடுத்தவாரம் மிஸ்டர் சிரிப்பு போளிச்க்கு சிறப்பு விருந்து எனது இல்லத்தில்...

s suresh சொன்னது…

அன்னதானமிட்ட ஆயிரத்தில் ஒருவனை பாரட்டிய தங்களின் பெரிய மனதிற்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

சேட்டைக்காரன் சொன்னது…

விழாக்குழுவினரின் விருந்தோம்பலுக்கு மகுடம் சூட்டியது போல அமைந்திருந்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ மணி அவர்களின் அறுசுவை விருந்து. அவரை நேரில் சந்தித்து, அளவளாவி, விருந்து தந்த அளப்பரிய மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து, உளமாற நன்றி கூறி விட்டுத்தான் வந்தேன். இன்னும் சுவை உள்ளத்தில் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அடுத்தவாரம் மிஸ்டர் சிரிப்பு போளிச்க்கு சிறப்பு விருந்து எனது இல்லத்தில்...
///

போஸ்ட் போட்ட காரணம் வேலை செய்யுது டோய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சேட்டைக்காரன் சொன்னது…

விழாக்குழுவினரின் விருந்தோம்பலுக்கு மகுடம் சூட்டியது போல அமைந்திருந்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ மணி அவர்களின் அறுசுவை விருந்து. அவரை நேரில் சந்தித்து, அளவளாவி, விருந்து தந்த அளப்பரிய மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து, உளமாற நன்றி கூறி விட்டுத்தான் வந்தேன். இன்னும் சுவை உள்ளத்தில் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி! :-)
//

thanks

பெயரில்லா சொன்னது…

super

அமுதா கிருஷ்ணா சொன்னது…

78 ஆவது வடை எனக்கே..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது