அன்று:
காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் எண்ணை தேச்சு ஊற வச்சிடுவாங்க. ரெண்டு மணி நேரம் கழிச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டு புது துணி உடுத்துவோம். அம்மா சுட்ட பலகாரம் திருடி சாப்பிடுவோம். ஒன்பது மணிக்கு பொதிகைல சிறப்பு நிகழ்சிகள் ஆரம்பிச்சுடும்(கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் சன் டிவி மட்டும்தான். வேற டிவி இல்ல) பாக்க ஆரமிசிடுவோம். விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம்.
Program போகும்போது ஊர்ல எங்கயுமே வெடி சத்தம் கேட்காது. எல்லோரும் டிவி தான் பாப்பாங்க. விளம்பர இடைவேளிலதான் பட்டாசே வெடிப்போம். பின்ன மதியம் நண்பர்கள் வீட்டுக்கு போய் பலகாரம் சாப்பிடுவோம். சாயந்தரம் டிவி ல எதாச்சும் படம் பாத்துட்டு இரவு ரெண்டாவது ஆட்டத்துக்கு போக அம்மா கிட்ட சின்ன கெஞ்சல். அம்மா அப்பாகிட்ட permission வாங்கிடுவாங்க. தீபாவளி முடிஞ்சது.
இன்று:
12 AM: Happy Deepavali Machaan -- SMS
9 AM: Happay Deepavali அம்மா அப்பா தங்கை
10 AM: கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல வாங்கின ஸ்வீட்ஸ் கொஞ்சம் சாப்பிடனும்.
12 PM: சிக்கன் அல்லது மட்டன் சாப்பாடு
1PM: கொஞ்சநேரம் டிவி
2PM: மச்சான் புது படத்துக்கு டிக்கெட் கிடசிருக்குடா. சத்யம் வந்துடு. ஓகே டா.
6 PM: Project Manager: ஆபீஸ் ல வேல இருக்கு உடனே வாங்க. 10 நிமிஷம் வந்துடுறேன்.
9PM: அம்மா ஆபீஸ்ல லேட் ஆகும் நான் இங்கயே சாப்பிடுகிறேன்.
ஆமா பட்டாசு பட்டாசு னு ஒன்னு வெடிப்பமே எங்கப்பா அது?
1 கருத்து:
அன்பின் ரமேஷ்
தீபாவளி அன்னிக்கும் அலுவலகத்திற்கு அழைக்கும் மேலாளர் %%%. மட்த படி டைம் டேபிள் சூப்பர்
நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா
கருத்துரையிடுக