Horoscope

வெள்ளி, ஜூலை 10

பள்ளிகூட நகைசுவையான அனுபவம்

பள்ளிகூட அனுபவம்:
நான் அருப்புகோட்டை ஸ்கூல் விடுதில படிக்கும்போது நடந்த நகைசுவையான சம்பவம். (சிரிப்பு வரலைனா நான் பொருப்பில்லபா).
1) விடுதி மெஸ் ல யாரும் பேசக் கூடாது. நானும் என்னோட நண்பன் சாந்தா ராமும் பேசினத விடுதி வார்டன் பாத்துட்டாரு. சாப்பிட்டு வந்து எண்ணை பாருன்னு சொல்லிட்டு போய்ட்டார். நான் வந்து தட்ட கழுவிட்டு போய் அடி வாங்கிட்டேன். சாந்தா ராம் தட்ட கழுவாம கைய மட்டும் கழுவிட்டு வார்டன் கிட்ட வந்தான். வார்டன் உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். கைய நீட்டு டா னு சொல்லி அடி பின்னிட்டாரு.
பின்ன வந்து தட்ட கழுவிட்டு போகும் போது வார்டன் மறுபடியும் கூப்பிட்டு மெஸ் ல ஏண்டா பேசினேன்னு மறுபடியும் அடி பின்னிட்டாரு. அடிச்சா பிறகு உன் பேரு என்ன டா னு கேட்டார். சாந்தா ராம் சார். இப்பதானடா உன் பேர சொல்லி ஒருத்தன் அடி வாங்கிட்டு போறான் னு கேட்டார். அது நான்தான் சார் னு அவன் அழுதுகிட்டே சொல்ல எனக்கு அந்த வலிலையும் (நான் ஏற்கனவே அடி வாங்கிட்டேன்) சிரிச்சிட்டேன். இப்ப நினைச்சாலும் மறக்க முடியாது.
2) 9 படிக்கும் போது +2 பசங்கெல்லாம் தெரியாம போய் (வாட்ச் மேன் கிட்ட காசு கொடுத்துட்டு) படம் பார்த்துட்டு வருவாங்க. ஒரு நான் நானும் என் நண்பர்கள் குழந்தை வேலு மற்றும் குமாரும் +2 பசங்ககிட்ட கெஞ்சி கூட பத்துக்கு போய்ட்டோம். நாட்டாமை படம் அது.
நம்ம நேரம் குழந்தை வேலு பையன் அரை பரிச்சைல பெயில். நாதாரி பய மருந்த குடிச்சிட்டான். மறு நாள் வார்டன் விசாரிக்கும் போது படு பாவி எல்லாத்தையும் கக்கிட்டான்(மருந்த மட்டும் கக்குவான் னு பார்த்தா பயபுள்ள படத்துக்கு போனதையும் சேர்த்து கக்கிட்டான்) வார்டன் அன்னைக்கு நாட்டாமை யா மாறி தீர்ப்பு கொடுத்தாரு பாருங்க. 10 நாளைக்கு உக்கார முடியல. உக்கார்ற எடத்துல கட்டி(ஏன் தள்ளி உக்காரலைனு கேக்க கூடாது)

5 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா

Bala சொன்னது…

nic

Joe சொன்னது…

நல்ல நகைச்சுவையான சம்பவங்கள்.

எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்கள் நண்பரே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜோ ரொம்ப நன்றி. தொடர்ந்து ஆதரியுங்கள். எழுத்து பிழையை சரி செய்கிறேன்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

அருப்புக்கோட்டையா படிசது நான் படிச்சது மதுரை - ம்ம்ம்ம் - நல்லாருக்கு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது