Horoscope

திங்கள், ஏப்ரல் 26

பதிவர்களின் டைரி - 2

6 ) பிரியமுடன் வசந்த்(http://priyamudanvasanth.blogspot.com/)


நம்ம சினிமாகாரங்க எல்லாம் வித்தியாசமான கதை வித்தியாசமான கேரக்டர் அப்டின்னு சொல்றாங்களே. அவங்கெல்லாம் வித்தியாசம்னா என்னனு இவர்கிட்டதான் கேட்கணும். இவர் என்ன எழுதுவார் எப்படி எழுதுவார் அப்டின்னு யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா பதிவுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நம்மால் யோசிக்கவே முடியாத விசயங்களை எழுதுவதில் கெட்டிக்காரர்.


7 ) குமரன் குடில் (http://www.saravanakumaran.com/)

இவரும் நகைச்சுவையாக எழுதகூடியவர்தான். கார்டூன், சினிமா விமர்சனம், photography , என எல்லா துறைகளிலும் கலந்து கட்டி அடிப்பவர்.



8 ) மங்குனி அமைச்சர்(http://manguniamaicher.blogspot.com/)

பொம்பளை 1: எங்க வீட்டுக்காரர் ஏதாவது டாபிக் கொடுத்தா ஒன் அவர் பேசுவாரு.

பொம்பளை 2: எங்க வீட்டுக்காரர் டாபிக்கே இல்லாம ரெண்டு மணிநேரம் பேசுவாரு..

மங்குனி அமைச்சரும் அப்படித்தான். டாபிக்கே இல்லாமல் பதிவு எழுதுவதில் அதுவும் நகைச்சுவையாக எழுதுவதில் வித்தகர். எந்த பதிவு வேணும்னாலும் படித்து பாருங்கள். ஒண்ணுமே இருக்காது. ஆனால் சிரிப்பு நிச்சியம்.



9 ) பட்டாப்பெட்டி(http://pattapatti.blogspot.com/)

கொஞ்சம் கோபக்காரர். இவரது பதிவுகளில் கோபம் இருக்கும். நாட்டு நடப்புகளை கோபமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் கெட்டிக்காரர். சிரிக்க சிந்திக்க இங்கு வாருங்கள்.



10 ) வால்பையன்(http://valpaiyan.blogspot.com/)

இவரது பதிவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும். இங்கும் ஒரு தடவை வந்து பாருங்களேன். இவரது பெயரில் சில போலிகள் நடமாடுகிறார்கள். கவனமாக இருங்கள். போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.



இன்னும் வரும்...

11 கருத்துகள்:

ஜானகிராமன் சொன்னது…

ரமேஷ், பயனுள்ள பதிவுகள். இதுவரை நீங்கள் சொன்ன 10 வலைப்பூக்களில் 2 பேர்தான் எனக்கு முன்பே தெரியும். தொடர்ந்து பதிவிடுங்கள். கூடிய சீக்கிரம் புத்தகமாக வெளியிடும் தகுதி உடையது.

Unknown சொன்னது…

இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜானகிராமன்.நா

நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

@ கே.ஆர்.பி.செந்தில்

கண்டிப்பாக

செ.பொ. கோபிநாத் சொன்னது…

பயனுள்ள பதிவு சகா.... பல புதிய வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@செ.பொ. கோபிநாத்

நன்றி. இன்னும் நிறைய வரும்.

வால்பையன் சொன்னது…

அது என்னமோ தெரியல, என் பெயரில் இருப்பவர்களெல்லாம் என் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களாகவே இருக்கிறார்கள், அதுனால் தான் என்னவோ அந்த நண்பர்கள் போலி பெயர் வாங்கி விட்டார்கள்!

இருந்துட்டு போறாங்க விடுங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன்(வால்பையன்) மறைவதில்லை

வால்பையன் சொன்னது…

//ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன்(வால்பையன்) மறைவதில்லை //

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ரணகளம் பண்றாங்களே!

சரவணகுமரன் சொன்னது…

நன்றி ரமேஷ்... இன்னைக்கு தான் பார்த்தேன். :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அடப்பாவி.. என்னையப் பற்றி எழுதிட்டு..என்கிட்ட சொல்லாம விட்டுட்டையே ராசா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அட பட்டாப்பட்டி இத சொல்லலாம்னு வந்தா பட்டாப்பட்டி நாடாவை பின்தொடர்வோர்ந்னு ஒரு பெரிய வரிசையே இருந்தது. அதான் திரும்பிட்டேன்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது