புதன், ஏப்ரல் 28

27 ம் எண்ணின் பெருமைகள்

27 ம் நம்பருக்கு நிறைய பெருமைகள் உண்டு. அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

1 ) எல்லா தமிழ் மாதத்திலும் இங்கிலீஷ் மாதத்திலும் 27 ம் தேதி இருக்கும்(வேணும்னா காலண்டர்ல செக் பண்ணி பாருங்க. பிப்ரவரி மாசத்துல கூட).

2 ) 26 க்கு அப்புறமும் 28 க்கு முன்னாடியும் கட்டாயம் 27 தான் வரும்.

3 ) இப்ப 27 ம் நம்பர் இல்லைன்னு வச்சுகோங்க. நீங்க விறுவிறுப்பா படிக்கிற கதை புத்தகத்துல 27 வது பக்கத்துல என்ன சஸ்பென்ஸ் இருக்குன்னு உங்களுக்கு தெரியாமலே போயிடும்.

4 ) ரஜினிகாந்த்,விஜயகாந்த், விஜய், அஜித், அர்ஜுன், சத்யராஜ் போன்ற பிரபல நடிகர்கள் 27 வது படம் நடிச்சதுக்கு அப்புறம்தான் 28 வது படம் நடிச்சாங்க.

5 ) அப்துல் கலாம், கலைஞர்,புரட்சிதலைவி, வைகோ போன்ற பிரபல தலைவர்கள் அவர்களுடைய 27 வது வயதை கடந்துதான் வந்தார்கள்.

6 ) கேபிள் சங்கர், பிரபாகர், கேஆர்பிசெந்தில், பட்டாபட்டி போன்ற பிரபல பதிவர்கள் தங்களது 27 பதிப்புகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

7) ஒரு நகரத்துல குறைஞ்சது 27 பேராவது இருப்பாங்க.

சரி சரி மொக்கை போதும், ஏன் 27 க்கு இவ்ளோ பில்ட்-அப் அப்டின்னு யோசிக்கிறீங்களா?
.
.
.
.
.
.
இது என்னோட 27 வது பதிவு.


அதான். ஹீ ஹீ.......

சரி வந்ததுக்கு உருப்படியா ஒன்னு சொல்றேன் கேளுங்க...

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....
.
.

10 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

மொக்கைராசு ஆரம்பிச்சுட்டியா ஒன் ஆட்டத்த. ஆடு ஆரு நல்லா அடிச்சு ஆடு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ்
அடப்பாவி போஸ்ட் Puplish பண்றதுக்குள்ள சுட சுட கமாண்டா? சரி ஒட்டு போட்டுட்டு போப்பா..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

டீ இன்னும் வரல ....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

தாளமுடியலப்பா இந்த கொசுத்தொல்ல

SShathiesh-சதீஷ். சொன்னது…

இந்த கொசுவை நசுக்குங்கடா. தல அப்பிடியே நான் எல்லா எங்களுக்கும் சொல்லட்டுமா? வாழ்த்துக்கள் பதிவிற்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ செந்தில் பிரதர் டீ உடனே அனுப்புறேன்

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)
@ SShathiesh-சதீஷ்.

இருபத்தி ஏழுக்கே இப்படியா இன்னும் இருக்கு பாஸ்...

வெங்கட் சொன்னது…

Brother., side pls.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks venkat

அனு சொன்னது…

26க்கு மேல alphabetsக்கு இடம் இல்ல..
27 அடி வரைக்கும் யாரும் வளர்ந்ததில்ல..
ஒரு நாள்ல 24 மணி நேரத்துக்கு மேல கிடையாது
என்ன தான் try பண்ணினாலும் 26 மார்க்-க்கு மேல நீங்க வாங்கினது கிடையாது..

அப்படிப்பட்ட 27-ஐ எட்டிப் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு முதியோர் களிவள இதெல்லாம் சொல்லி தர்றாங்களா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது