வியாழன், ஏப்ரல் 29

கம்ப்யூட்டரும் பிரபலங்களும்

அடப்பாவிகளா. 27 ம் எண்ணின் பெருமைகள்னு ஒரு பதிவு போட்டா ஒரு 27 Comments ம் 27 ஓட்டும் வரும்னு பார்த்தா 10 தைக் கூட தாண்டல. உங்களை எல்லாம் நம்பி நான் கட்சி(ப்ளாக்) ஆரம்பிச்சு ஓட்டு வாங்கி க்கும்...அட போங்கப்பா..

கம்ப்யூட்டருக்கும் நம்ம பிரபலங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்ன தெரியுமா?

1 ) Copy & Paste - இளைய தளபதி விஜய்(முந்தைய படத்தை அப்படியே காப்பி பண்ணி அடுத்த படத்தில் நடிப்பதால்)

2 ) Copy , Edit & Paste - ஜெயம் ராஜா(தெலுங்கு படத்தை காப்பி பண்ணி கொஞ்சம் எடிட் பண்ணி தமிழில் கொடுப்பதால்)

3 ) Motherboard - செல்வராகவன்(motherboard circuit மாதிரி சிக்கலான கதை அமைப்பு உள்ளதால்)

4) System Slow - இயக்குனர் பாலா(எதுவும் சொல்ல தேவையில்லை)

5 ) Hacker - இயக்குனர் ஷக்தி சிதம்பரம் (நல்ல படங்களின் காட்சியை சுட்டு படம் எடுப்பதால்)

6 ) RAM(Temporary memory) - விஜயகாந்த் (கூட்டணி வேண்டாம், கூட்டணி வேணும் மாறி மாறி நினைப்பதால்)

7 ) MS-Paint - இயக்குனர் சிம்பு தேவன் (படம் வரைந்து ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதால்)

8 ) DOS - இயக்குனர் ராம.ராராயணன்(எத்தனை புதுமைகள் வந்தாலும் பழையமாதிரியே படம் எடுப்பதால்)

9 ) 286 computer - ராவணா படம்(286 computer பூட் ஆக எடுக்கும் நேரம் போல இந்த படத்தோட ஷூட்டிங் போய்கிட்டு இருக்கு)

10 ) Power Saving mode - மணிரத்னம் (இருட்டிலையே படம் எடுப்பதால்)
 
இன்னும் வரும்...
.
.

10 கருத்துகள்:

நீச்சல்காரன் சொன்னது…

நல்லயிருக்கு நண்பரே,
உங்க கட்சிக்கு ஆதரவு தாரேன். கட்சிக்கு ஓட்டவிட கொள்கைபிடிப்பா தொடருங்கள்

வெங்கட் சொன்னது…

என் கம்பியூட்டர்ல வைரஸ்
புகுந்துகிச்சி தல..

Norton Antivirus-க்கு கூட மசியல..
சரின்னு உங்க Blog Open
பண்ணினேன்..
எல்லா Virus-ம் பயந்து
எங்க ஊரை விட்டே ஓடிபோச்சி..

பெரிய ஆளுதான் நீங்க..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நீச்சல்காரன்
கட்சி கொள்கைகளை வீட்டுக்கு அனுப்புறேன். படிச்சு பாருங்க.

@வெங்கட்
நாங்கெல்லாம் பெரிய கம்ப்யூட்டர் டாக்டர். டாக்டர்னா வைரஸ் எல்லாத்தையும் கிளியர் பண்ணணும்ல. பின்ன டாக்டரா இருந்து என்ன பிரயோஜனம்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கட்சியா ? நீங்களுமா ?
அப்புறம் என்னால ஒரு ஓட்டுக்கு மேல போட முடியல.
தமிளிஷ் கள்ள ஓட்டுகளை அனுமதிக்க மறுக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விடுங்க செந்தில் நல்ல ஓட்டே வரமாட்டேங்குது இதுல கள்ள ஓட்டு வேறயா?

பட்டாபட்டி.. சொன்னது…

ஹா..ஹா.. பட்டாபட்டி குத்துனாம் பாருங்க ஓட்டை.. ( நல்ல ஓட்டுதான் சார்.. )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அட பட்டாபட்டி, ஓட்டுபோட வரும்போது யாரும் டவுசர உருவிடலையே..

அனு சொன்னது…

//27 ம் எண்ணின் பெருமைகள்னு ஒரு பதிவு போட்டா ஒரு 27 Comments ம் 27 ஓட்டும் வரும்னு பார்த்தா//

ஹிஹி...

உங்களுக்கு கிரிக்கெட் ஞானம் இருக்கும் அளவுக்கு தான் என் சினிமா ஞானமும்.. அதனால, நான் ஜூட் விட்டுட்றேன்..

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஐ லைக் எய்ட் அன் நயன்

எஸ்.கே சொன்னது…

I like this post very much. Good keep writing.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது