புதன், ஏப்ரல் 21

மொக்கைகள்

ஒருநாள் ஆபீஸ்ல் நடந்த சம்பவம். அப்போது ஒரு தீவிரவாதியை அரெஸ்ட் பண்ணியிருந்தார்கள். அதே பெயரில் என்னுடன் ஒரு நண்பர் வேலை செய்கிறார். அந்த தீவிரவாதியை அரெஸ்ட் செய்ததும் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனை கலாய்த்து கொண்டிருந்தோம். அவன் எங்களை கவனிக்காமல் இண்டரெஸ்ட் ஆக வேலை செய்து கொண்டிருந்தான்.

டேய் நேத்து பாம் வைக்கத்தான் போன என்று கேட்டோம். வேலை செய்யும் மும்மரத்தில் அவன் சொன்னது "போங்கடா நான் நேத்து என்னோட டெய்லி டார்கெட் முடிச்சுட்டுதான் போனேன்" அப்படின்னு சொல்ல ஒரே சிரிப்புதான் போங்க.(என்னது சிரிப்பு வரலையா? நான் ஒன்னும் பண்ண முடியாது)

----------------------------------------------------------------------------------

ஒருநாள் பஸ்சில் ஏறி ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். பஸ்சில் சரியான கூட்டம். என்னுடைய ஸ்டாப் வந்ததும் ஒரு கூட்டம் பஸ்சில் ஏறி என்னை இறங்க விடவில்லை. அடுத்த ஸ்டாப்பிலும் இதே கதிதான். மூணாவது ஸ்டாப்பில் நான் கேட்டது "அய்யா நீங்க ஏறுறதுக்கு நிறைய பஸ் இருக்கு. ஆனா நான் இறங்குறதுக்கு இந்த ஒரு பஸ் தான் இருக்கு. ப்ளீஸ் இறங்க விடுங்க". (இன்னொருநாள் அவசரத்துல "மகளிர் மட்டும்" பஸ்சில் ஏறி அசடு வழிந்தது வேறு விஷயம். )

-------------------------------------------------------------------------------

ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியா வந்தார். நம்ம ஊரு ரோடை பார்த்துட்டு அவர் சொன்னார் "எங்க ஊர்ல மழையில நனியாம இருக்கவும், வெயில்ல காயாம இருக்கவும் பஸ் ஸ்டாப்-இல் இருந்து வீடு வரைக்கும் நிழல் குடை உண்டு. ஐயோ பாவம். நீங்கெல்லாம் எப்படி இங்க இருக்கீங்களோ". உடனே நம்ம ஆளு சொன்னான் "எங்க ஊர்ல நிழல் குடை இல்லை. ஆனாலும் மழையில நனையவும் மாட்டோம், வெயில்ல காயவும் மாட்டோம்."

வெளிநாட்டுக்காரர்: எப்படி எப்படி?


நம்ம ஆள் சிரிச்சுகிட்டே: ஆமாம் மழை இல்லாதப்ப மழையில நனையவும் மாட்டோம், வெயில் இல்லாதப்ப வெயில்ல காயவும் மாட்டோம்" அப்டின்னானாம். எப்பூடி!!!
--------------------------------------------------------------------------------

விஜய்க்கு பிடிச்ச படம் என்ன தெரியுமா "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்"

------------------------------------

தயாநிதி அழகிரி, பேரரசு மற்றும் இளைய தளபதி கூட்டணியில் புதிய திரைப்படம் "கோபாலபுரம்". இதில் இளைய தளபதி வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். ஆம் வலது காலில் ஆறு விரல் வைத்து நடிக்கிறார்.

5 கருத்துகள்:

அனு சொன்னது…

//"அய்யா நீங்க ஏறுறதுக்கு நிறைய பஸ் இருக்கு. ஆனா நான் இறங்குறதுக்கு இந்த ஒரு பஸ் தான் இருக்கு. ப்ளீஸ் இறங்க விடுங்க"//

டாப்புங்க...படிச்சுட்டு நல்லா சிரிச்சேன்.. வெங்கட் கூட சேர்ந்த effect நல்லாவே தெரியுது :) நடத்துங்க..நடத்துங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nanri anu

வெங்கட் சொன்னது…

// இன்னொருநாள் அவசரத்துல
"மகளிர் மட்டும்" பஸ்சில் ஏறி
அசடு வழிந்தது வேறு விஷயம்.//

அவசரத்துல..?
நம்பிட்டோம்., நம்பிட்டோம்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெங்கட்:

பொண்ண பார்த்தா மண்ணைப் பாக்கிற என்னைப் பார்த்து இப்படி சொல்லிடீங்களே. அவ்வ்வ்வவ்வ்வ்வவ். வேணும்னா என் Girl Friends ங்ககிட்ட கேட்டுபாருங்க என்னை பத்தி..

LK சொன்னது…

//
பொண்ண பார்த்தா மண்ணைப் பாக்கிற என்னைப் பார்த்து //
nambitom

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது