செவ்வாய், ஏப்ரல் 20

பாட்டி சுட்ட வடை


ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட்டிங் வடை ஆன் ஹெர் வடை சட்டி. அப்போ ஒரு பையன் வடை வேணும் கையில காசு இல்லை அப்டின்னு கேக்குறான். பாட்டி டென்சனாகி, நோ பேராண்டி, நோ கிரெடிட், if யு வான்ட் வடை, ப்ளீஸ் பே கேஷ் ஆர் யுசிங் யுவர் கிரெடிட் ஆர் டெபிட் கார்ட். உடனே அந்த பையன் அழுக ஆரம்பித்தான்.

உடனே பாட்டி "டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாத" னு பாட ஆரம்பிக்கிறாள். சரி பாட்டி ஐ வில் கம் வித் மை பாதர் கிரெடிட் கார்ட் னு சொல்லிட்டு போயிடுறான். இந்த சமயத்துல ஒரு காக்கா வந்து அந்த வடைய பாட்டிகிட்ட கேக்குது. பாட்டுயும் காசு இல்லாட்டி கிடையாதுன்னு சொல்லிடுறா.


காக்கா டென்சனாகி "தருவியா தரமாட்டியா தரலைனா உன் பேச்சு கா" னு பாடிகிட்டே வடையை ஆட்டையப் போட்டுட்டு போயிடுது. பாட்டி "வட போச்சேன்னு" கவலைல உக்காந்துட்டா.காக்கா மரத்துல உக்காந்துகிட்டு வடைய சாப்பிட போகும்போது நரி அங்க வந்தது. அது காக்காகிட்ட ஏய் காக்கா யு ஆர் வெரி ப்யுடிபுல். யுவர் வாய்ஸ் சோ நைஸ். "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" னு பாடுச்சு. காக்காவுக்கும் ஒரே குஷி.

உடனே நரி "காக்கா நீ எனக்காக ஒரு பட்டு பாடென்னு" சொல்லுச்சு. உடனே காக்கா வடையை வாய்ல வச்சுகிட்டே "சாரி நரி ஐ ஆம் பீலிங் கங்க்ரி. சோ ஆப்டர் ஈட்டிங் வடை, ஐ வில் சிங்". உடனே நரி நோ காக்கா, நான் சிங்கராஜா ஆபீஸ் ல அமைச்சர்(மங்குனி அமைச்சர் இல்ல) வேலைக்கு இண்டர்வியு க்கு போறேன். சீக்கிரம் பாடு.


உடனே காக்கா அந்த வடையை அதோட லவ்வர்கிட்ட கொடுத்துட்டு "ஏமாந்த சோணகிரி" அப்டின்னு பாட ஆரம்பிச்சதாம். நரி கோபமாகி "காக்கா யு ஆர் சீட்டிங்". நான் நேத்துதான் இந்த கதையை படிச்சேன். நீ பாடும்போது வடை கீழ விழும். நான் எடுத்துட்டு ஓடனும். அதுதான கதை.உடனே காக்கா சொல்லுச்சாம் "நல்லவேளை நான் நேத்துதான் இண்டர்நெட்ல இந்த கதையை படிச்சேன். இல்லைனா நானும் எங்க கொள்ளுதாத்தா மாதிரி ஏமாந்து போயிருப்பேன். தேங்க்ஸ் டு இன்டர்நெட் அப்படின்னு சொல்லுச்சாம்". நரியும் "வட போச்சேன்னு" போயிடுச்சு.


மாரல் ஆப் தி ஸ்டோரி: அப்டேட் மிக முக்கியம் அமைச்சரே....

8 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

இம். இம். நீ ஆட ஆரம்பிச்சுட்ட.இனி அடங்க மாட்ட அசத்து.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks raams, kalakkidalaam.....

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்

thanks

பெயரில்லா சொன்னது…

//உடனே காக்கா வடையை வாய்ல வச்சுகிட்டே "சாரி நரி ஐ ஆம் பீலிங் கங்க்ரி. சோ ஆப்டர் ஈட்டிங் வடை, ஐ வில் சிங்". //
வாயில வச்சுன்டா வடை கீழ விழுந்திடும். கால்ல வசசுன்டுனு எழுதணும்.

Vote to your new posts.Good Try

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனாமிகா துவாரகன்

//வாயில வச்சுன்டா வடை கீழ விழுந்திடும். கால்ல வசசுன்டுனு எழுதணும்.//
நாம வாயில சாப்பாடு வச்சுகிட்ட தொதபுதன்னு பேசுறதில்லையா! அப்படிதான் காக்காவும் பேசுச்சு.

அப்பாடா ஒருவழியா சமாளிச்சாச்சு!

Rajkumar சொன்னது…

very nice machee.................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks ramkumar

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது