வெள்ளி, ஏப்ரல் 23

ஒரு கோப்பை தேநீர்

தற்போது சிங்கையில் ஏப்பிரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாக கொண்டாடுகின்றனர். நமது பிரபல பதிவர் KRP செந்தில்(http://krpsenthil.blogspot.com) அவர்களின் அழைப்பை ஏற்று நானும் சென்றிருந்தேன். செந்தில் அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர், நகைசுவை உணர்வு மிக்கவர். அவரிடம் பேசும்போது நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்(இது நானா சொல்றது. அவர் ஒன்னும் காசு கொடுத்து சொல்ல சொல்லலை).


பதிவர் KRP செந்திலுடன் நான்

லிட்டில் இந்தியாவில் உள்ள நூலகத்தில் ஆறு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய "ஒரு கோப்பை தேநீர்" என்ற கருத்தரங்கு மழையின் காரணமாக ஏழு மணிக்குதான் ஆரம்பித்தது. நானும் செந்திலும் ஆறு மணிக்கு நூலகத்தை அடைந்தோம். அங்கு எங்களை மாலை சிற்றுண்டி அன்புடன் வரவேற்றது(அப்பாடா காசு செலவழிச்சு வந்தத சாப்பாட்டுல கழிச்சுடனும்) . கேசரி, வடை, கிச்சடி மற்றும் ஒரு கோப்பை தேநீருடன் எங்கள் மாலை சிற்றுண்டி முடிந்தது.

கூட்டத்தில் ஒரு பகுதி

இந்த கருதரங்கிர்க்கு பிரபல எழுத்தாளர் உயர்திரு பிரபஞ்சன், இசை விமர்சகர் ஷாஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பிரபலங்களுக்கு பொன்னாடை போர்த்தும்போது தொகுப்பாளினி ரெஜினா(தமிழ் ஆசிரியையாம்) இப்படி சொன்னார் "உயர்திரு பிரபஞ்சன் அவர்களுக்கு உயர்திரு புருசோத்தமன் ஆடை அணிவிப்பார்". உடனே எனது பக்கத்திலிருந்த பெரியவர் "ஏம்மா அவர்தான் ஆடையோடதான வந்திருக்கார், நீங்க வேற ஏன் அணிவிக்கிறீங்க. அது பொன்னாடைம்மா" என்றதும் கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரெஜினா

பின் ஷாஜி அவர்கள் அவரது இசை விமர்சனம் பற்றியும், அதில் சந்தித்த பிரச்னைகள் பற்றியும் நகைசுவையாக கூறினார். அவர் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டாலும் அருமையான தமிழில் அழகாக பேசினார். ஷாஜி அவர்களுக்கு ஒரு மலையாள படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஒரு மலையாளி. ஆனாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்ததால் அவருக்கு மலையாளம் தத்தக்கா புத்தக்காதான். மோகன்லாலுக்கு கதை சொல்லி ஓகே ஆகிவிட்டதாம்.


மோகன்லால் தயாரிப்பாளரை பார்க்க அனுப்பியிருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளரிடம் அரைகுறை மலையாளத்தில் கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது "சாரே இக்கதை internet ல் எடுத்தது சாரே, மோகன்லால் பரஞ்சது சாரே". ஷாஜிக்கு டென்சன். என்னடா இது நாம எழுதுன கதைய இந்த ஆளு Internet ல சுட்டது, மோகன்லால் சொன்னதுன்னு குழப்புறாரே. இதுக்குமேல விட்டா கதை கந்தல்ன்னு நினச்சு ஷாஜி "சாரி சார் அவருக்கு மலையாளம் சரியா பேச வராதுன்னு" சொல்லு மீதி கதையை அவரே சொன்னாராம்.


கதை சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும்போது இயக்குனர் கோபமாகி "நீ எப்படி எனக்கு மலையாளம் தெரியாதுன்னு சொல்லலாம். நீ யார். ஆச்சா, பூச்சா" அப்டின்னு ஒருமணி நேரம் இங்கிலிஷ்ல திட்டினாராம்.

இசை விமர்சகர் ஷாஜி

அடுத்து உயர்திரு பிரபஞ்சன் பேசினார். அவரும் பல வாழ்வின் சம்பவங்களை கதைகள் சொல்லி கலகலப்பூட்டினார். அவரது பேசினை எழுத வேண்டும் என்றால் அதற்க்கு தனி பதிவு வேண்டும். கடைசியாக அவரிடம் கேள்விகள் கேட்ட்கப்பட்டது.

"நீங்கள் ஒருபத்திரிக்கையில் வேலை செய்யும்போது அரைகுறை ஆடையில் உள்ள நடிகைய பத்தி எழுத சொன்னதற்கு வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். அது உங்கள் சுயமரியாதை. நாங்களும் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?"

அதற்க்கு பிரபஞ்சன் அவர்களின் பதில் "என்னை மாதிரி நீங்கள் வாழ்ந்தால் அடுத்த வேலைக்கு சோறு கிடைக்காது. அனைவரையும் அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். அதற்காக நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அனைவருக்கும் நல்ல குணங்களும் உண்டு, கெட்ட குணங்களும் உண்டு. நான் எனக்கென்று சில கொள்கைகளோடு வாழ்கிறேன். எனக்கு அடுத்தவேளை சோறு நிச்சயமில்லை. எனவே என் கதைகளை படியுங்கள். என்னை மாதிரி வாழ ஆசைப்படாதீர்கள்".

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்

சரியாக ஒன்பது மணிக்கு விழா இனிதே முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்சியை பார்க்க விரும்பும் சிங்கை நண்பர்கள் வரும் வாரம் வசந்தம் தொலைக்காட்சியில் வரும் ஜன்னல் நிகழ்சியை பாருங்கள்.

13 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா . நன்றி.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

(இது நானா சொல்றது. அவர் ஒன்னும் காசு கொடுத்து சொல்ல சொல்லலை).

ரமேஷ் ஒன்னும் உள்குத்து இல்லையே.

அப்புறம் நல்ல எழுத்து நடை, நிறைய விசயங்களை எழுதுங்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

//அதற்க்கு பிரபஞ்சன் அவர்களின் பதில் "என்னை மாதிரி நீங்கள் வாழ்ந்தால் அடுத்த வேலைக்கு சோறு கிடைக்காது. அனைவரையும் அரவணைத்துத்தான் செல்ல வேண்டும். அதற்காக நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அனைவருக்கும் நல்ல குணங்களும் உண்டு, கெட்ட குணங்களும் உண்டு. நான் எனக்கென்று சில கொள்கைகளோடு வாழ்கிறேன். எனக்கு அடுத்தவேளை சோறு நிச்சயமில்லை. எனவே என் கதைகளை படியுங்கள். என்னை மாதிரி வாழ ஆசைப்படாதீர்கள்".//

இதை சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.
:)

மயில்ராவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

shortfilmindia.com சொன்னது…

nice :)

cablesankar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ்
வழக்கம் போல தேங்க்ஸ். வேற என்ன சொல்றது உன்கிட்ட..

@ கே.ஆர்.பி.செந்தில்
நீங்கதான் நான் சொன்னதா சொல்லி எழுத வேண்டாம் என்று கேட்டுகிட்டீங்க. வாக்கு தவறமாட்டேன். அதான் நீங்க சொல்லலைன்னு எல்லோருக்கும் சொல்லிட்டேன். இப்ப ஓகே தான?

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
ஆமாம் நண்பா. அவருடை பேச்சில் உண்மையும் அதிகம், நகைச்சுவையும் அதிகம். அவரது கதைகள் நான் படித்ததில்லை. அவரது பேச்சை கேட்ட பிறகு படிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

@மயில்ராவணன்
நன்றி நண்பா!

@கேபிள் சங்கர்
வருகைக்கு ரொம்ப நன்றி அண்ணா.

மணிஜீ...... சொன்னது…

இந்த பஸ் கிளம்பறதுக்கு கண்டக்டர் சொல்வாரே..அதேதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மணிஜீ ரைட்டு ரொம்பத்தான் யோசிக்கிறீங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நண்பரே இந்தமாதிரி விருந்துக்கெல்லாம்
எனக்கும் அழைப்பு அனுப்ப்ங்கள்.
(சத்தியமா இட்லி வடை கேசரிக்காக அல்ல)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

"நீங்கதான் நான் சொன்னதா சொல்லி எழுத வேண்டாம் என்று கேட்டுகிட்டீங்க. வாக்கு தவறமாட்டேன். அதான் நீங்க சொல்லலைன்னு எல்லோருக்கும் சொல்லிட்டேன். இப்ப ஓகே தான?"


ரைட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@மணி கண்டிப்பா... கூப்பிட்டா போச்சு..

@ தேங்க்ஸ் செந்தில்

Thanavel சொன்னது…

I have been following your blog.
All are sweetness and interesting.
Keep it up

சாமக்கோடங்கி சொன்னது…

அருமையான பகிர்வு நண்பரே...!!

பிரபஞ்சன் கூறிய கருத்து என்னை சிந்தனைக்குள்ளாக்கி உள்ளது..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது