இப்போது பதிவுகள் படிப்பது தினமும் காபி குடிப்பது போல் ஆகிவிட்டது. ஆனால் நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளையே இருக்கிறோம். ஆம், நமக்கென்று ஒரு நண்பர்கள் வட்டம், நாம் அவருக்கு கமெண்ட் போடுவது அவர் நமக்கு கமெண்ட் போடுவது என முடித்துக்கொள்கிறோம்.
சில நல்ல பதிவர்களின் பதிவுகள்(சத்தியமா நான் இல்லை) படிக்க யாருமே இல்லாமல் கேட்பாரற்று போய் விடுகிறது. பிரபல பதிவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நிறைய ஓட்டுகள் விழுகிறது. தமிலிஷ் ல் முகப்பு பக்கங்களிலேயே அவர்களுடைய பதிவு வந்து விடுகிறது.
இங்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அனைத்து பதிவுகளையும் படிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ இல்லை. இதற்க்கு என்ன வழி. சங்கம் ஆரம்பித்தால் மட்டும் போதுமா? புதிய பதிவர்களுக்கு யார் ஆதரவு கொடுப்பது. மொத்தம் எத்தனை ப்ளாக்குகள் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல். சிலர் சினிமா பற்றியும், சிலர் அரசியல் பற்றியும், சிலர் கதைகளும் எழுதுகின்றனர். சிலருக்கு கதைகள் படிக்க பிடிக்கும். ஆனால் எத்தனை பதிவர்கள் கதை எழுதுகிறார் என்று அவருக்கு தெரியாது. சரி அவர் எப்படி கதை எழுதும் ப்ளாக்குகளை தேடி படிப்பது.
பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பேரை சந்திக்கிறோம், எத்தனை பேரின் ப்ளாக் முகவரி நமக்கு நியாபகம் இருக்கிறது?
ஏன், எப்படி, எதற்கு? ..
நான் பதிவர்களைப் பற்றியும், அவர்களின் blog Id, அவர்கள் எந்த விசயங்களை எழுதுகிறார்கள் என்பதை பற்றியும் தொகுத்து எழுதலாம் என இருக்கிறேன். இதற்க்கு உங்களுடைய சம்மதமும் வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிந்தால்தான் நான் மேலும் தொடர முடியும். உங்களுடைய பதில் என்ன?
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
7 கருத்துகள்:
ஓட்டு போட்டாச்சேய்...
அப்புறம் தலைவரே, உங்க ஆசையை இந்த ஃபோரமே நிறைவேத்துதே! நானே ஃபோரம் பார்த்துத் தான் வந்தேன்.
மேலும் பெரும்பாலான பதிவர்கள் ஒரே சப்ஜெக்டைப் பற்றி எழுதுவதில்லையே? கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொதுவானவை, அரசியல், நகைச்சுவை என்று கலந்து கட்டித்தான் எழுதுகிறார்கள். எனவே எழுத்தை வைத்து வகை பிரிப்பது சாத்தியமற்றதென்றே கருதுகின்றேன்.
ஒப்புதல்
நல்ல முயற்சி ரமேஷ். வாழ்த்துக்கள்
உதாரணத்துக்கு, நம்ம பா.ராஜாராம் அவர்கள் (கருவேல நிழல்கள்). போங்க, விருந்தோம்பலில் வீட்டையே மறந்துடுவீங்க.
இது புதிதாக வரும் பலருக்கும் தோன்றுவதுதான். நல்ல எழுத்துக்கள் கவனிக்கப் படாமல் போவதில்லை. தொடர்ந்து எழுதுங்க, திரட்டிகளில் இணையுங்கள், உங்கள் interest-டுக்கு தகுந்த மாதிரி எழுதும் blogகளில் பின்னூட்டம் இடுங்க. வோட்டு, பிரபலம் என்பதெல்லாம் ஒரு passing phase மட்டுமே. நல்ல தரமான எழுத்துக்கு விளம்பரமே தேவை இல்லை, என்பது என் தாழ்மையான கருத்து.
wish you all the best.:)
மிக அவசியமான முயற்சி.... கண்டிப்பாக முன்னெடுங்கள்.... வாழ்த்துக்கள்....
@விந்தைமனிதன்
நன்றி. எத்தனை பேருக்கு இந்த forum பற்றி தெரியும் என்று நினைகிறீர்கள்? நமது forum ல் உள்ள நண்பர்களின் எண்ணிக்கை 106 மட்டுமே. மொத்தமே 106 blog தான் இருக்கிறது என நினைக்கிறீர்களா? atleast ஒரு பதிவரின் அறிமுகமாவது கொடுக்கலாம் என நினைக்கிறன். அவ்வளவுதான்.
@நன்றி Dr.ருத்ரன்
@தேங்க்ஸ் ராம்ஸ்
@விதூஷ்
//நல்ல தரமான எழுத்துக்கு விளம்பரமே தேவை இல்லை, என்பது என் தாழ்மையான கருத்து//
நன்றி. Power soap, Rin, Lux சோப்புக்கு நீங்கள் சொன்ன மாதிரி விளம்பரம் தேவையில்லை. ஆனால் பொன்வண்டு, ஐடியல் மாதிரி சோப்புக்கு விளம்பரம் தேவைதான் எனன் நான் நினைக்கிறேன்.
@நன்றி கரிகாலன்
கருத்துரையிடுக