சனி, மே 1

சினிமா புதிர்கள் - 2

1. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் எது?


2. விஜயகாந்த் கமலஹாசனுடன் நடித்த படம் எது?

3. அர்ஜுன், நளினி, எஸ்.எஸ்.சந்திரன் நடித்த படம். நட்புக்காக விஜயகாந்த் நடித்த படம்.

4. சிவாஜி, பாண்டியராஜன் நடித்த படம்.

5. விசு, அருண்பாண்டியன், S.Ve.சேகர் நடித்த படம்.(விசுவுக்கு துப்பறியும் வேடம்)

6. குறும்புக்காரன் படத்தின் கதாநாயகன் யார்?

7. விசுவும் விஜயகாந்தும் இணைந்த திரைப்படம்.

8. விஜயசாந்தி,ராம்கி நடித்த படம்.

9. பார்த்திபன் பூஜை போட்டு நின்று போன படங்கள் சில.

10. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்(கரகாட்டக்காரன் இல்லை)

11. P.வாசுவின் பையன் ஷக்தி நடித்த சத்தியராஜ் படம்.

12. ரஜினியின் படத்தில் நட்புக்காக கமலஹாசன் வக்கீல் வேடத்தில் நடித்த படம்.

13. கவுண்டமணி நடித்த பாண்டியராஜன் படம்.

14. ராமராஜன் சுகன்யா நடித்த காவியம்.

15. விஜயகாந்த் நதியா நடித்த திரைப்படம்.


என்ன இன்னிக்கு விஜயகாந்த் கேள்வி அதிகம்னு பாக்குறீங்களா? கேப்டன் டிவி ஸ்பெசல் பா. விடைகள் செவ்வாய்க்கிழமை.

12 கருத்துகள்:

அனு சொன்னது…

நான் கமெண்ட்/பதில் போட முடியாத மாதிரியே போஸ்ட் போடுறீங்களே.. எனக்கு ஒரே அழுவாச்சி அழுவாச்சியா வருது.. இதுல எதாவது உள்நாட்டு சதி இருக்கா?? (வெங்கட், நான் உங்களை சொல்லலைங்க...)

வெங்கட் சொன்னது…

அதானே..!
நானும் பொறுத்து பொறுத்து
பார்க்கிறேன்..
ஒரு பதிவுல கூட உங்களை
கலாய்க்க முடியலையே..
இதென்ன கம்பனி கொள்கைக்கு
எதிரா இருக்குதே..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இது நல்லால்ல சொல்லிட்டேன் ....

தனவேல் சொன்னது…

நண்பா, நீ நாளுக்கு நாள் அறிவாளி ஆகிகிட்டே போற, இது உடம்புக்கு நல்லது அல்ல.
ரொம்ப யோசிக்கிறே. சரி என் பங்குக்கு கேள்விகளுக்கு பதில் சொல்றேன்.
அவை:
1 நல்லவன் மற்றும் தர்ம தேவதை
2 மனக்கணக்கு
3 எங்கள் குரல்
4 தாய்க்கு ஒரு தாலாட்டு
5 சிதம்பர ரகசியம்
6 முரளி
7 டௌரி கல்யாணம்
8 தடயம்
9 சோத்துக்கட்சி
10 எங்க ஊரு பாட்டுக்காரன்
12 தில்லு முள்ளு
13 கன்னி ராசி
14 கோபுர தீபம்
15 பூ மழை பொழிகிறது

நான் சொன்னது சரியாய் இருக்கும்னு நம்புகிறேன்

KVR சொன்னது…

கொலவெறியோடவே கேள்விக் கேக்குற மாதிரி இருக்கே!!! முயற்சி செய்வோம்

1. தர்ம தேவதை
2. மனக்கணக்கு
3. யார்?
4. முத்துக்கள் மூன்று (அம்பிகாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!)
5. சிதம்பர ரகசியம்
6. முரளி (இதிலெல்லாம் நடிச்ச சுமா அப்பாலிக்கா இந்திக்குப் போய் ம்ம்ம்ம்ம்)
7. டௌரி கல்யாணம் (இது தவிர வேற ஒரு படமும் இணைந்து நடிச்சிருக்காங்களோ?)
8. தடயம்
9. அவர் எடுத்ததை விட நின்று போன படங்கள் தான் அதிகம். லிஸ்ட் யோசிச்சுச் சொல்றேன்
10. எங்க ஊரு பாட்டுக்காரன் (டவுசரை மறக்க முடியுமா?)
11. நடிகன்
12. தில்லுமுல்லு
13. கன்னிராசி
14. சாய்ஸ்ல விட்டுட்டேன்
15. பூ மழை பொழியுது (சுரேஷுக்கு ஜோடி?)

KVR சொன்னது…

//9 சோத்துக்கட்சி//

தனவேல் - இந்தப் படத்தை அவர் பிறகு வேற பேர்ல வெளியிட்டார். புதுமைப்பித்தன்னு நினைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெங்கட்
கொள்கை, கொள்கை அப்டின்கிரிங்களே அப்டின்னா என்ன?

@அனு
அடுத்த தடவை உங்களுக்கு புடிச்ச மாதிரி எழுதிடுவோம்.

@தனவேல் & KVR
வெயிட் பார் ரிசல்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கேஆர்பிசெந்தில் என் இப்படி

KVR சொன்னது…

9. காங்கேயம் காளை (இந்தப் படத்திற்கு ரவளியை சீமைப்பசு என்று அறிமுகம் செய்தார்), கருப்பண்ணசாமி

(சோத்துக்கட்சி புதுமைப்பித்தன் என்ற பேரில் மாற்றி எடுக்கப்படலைன்னா சோத்துக்கட்சியும் இந்த வரிசையிலே சேர்த்துக்கலாம்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் எது?
- நல்லவன் மற்றும் தர்ம தேவதை
2. விஜயகாந்த் கமலஹாசனுடன் நடித்த படம் எது?
- மனக்கணக்கு
3. அர்ஜுன், நளினி, எஸ்.எஸ்.சந்திரன் நடித்த படம். நட்புக்காக விஜயகாந்த் நடித்த படம்.
- எங்கள் குரல்
4. சிவாஜி, பாண்டியராஜன் நடித்த படம்.
- தாய்க்கு ஒரு தாலாட்டு, முத்துக்கள் மூன்று
5. விசு, அருண்பாண்டியன், S.Ve.சேகர் நடித்த படம்.(விசுவுக்கு துப்பறியும் வேடம்)
- சிதம்பர ரகசியம்
6. குறும்புக்காரன் படத்தின் கதாநாயகன் யார்?
- முரளி
7. விசுவும் விஜயகாந்தும் இணைந்த திரைப்படம்.
- டௌரி கல்யாணம்
8. விஜயசாந்தி,ராம்கி நடித்த படம்.
- தடயம்
9. பார்த்திபன் பூஜை போட்டு நின்று போன படங்கள் சில.
- சோத்துக்கட்சி, காங்கேயம் காளை, கருப்பண்ண சாமி, ஏலேலோ
10. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்(கரகாட்டக்காரன் இல்லை)
- எங்க ஊரு பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊருவந்து
11. P.வாசுவின் பையன் ஷக்தி நடித்த சத்தியராஜ் படம்.
- ரிக்ஸா மாமா
12. ரஜினியின் படத்தில் நட்புக்காக கமலஹாசன் வக்கீல் வேடத்தில் நடித்த படம்.
- தில்லு முல்லு
13. கவுண்டமணி நடித்த பாண்டியராஜன் படம்.
- கன்னி ராசி
14. ராமராஜன் சுகன்யா நடித்த காவியம்.
- கோபுர தீபம்
15. விஜயகாந்த் நதியா நடித்த திரைப்படம்.
- பூமழை பொழிகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி தனவேல் & KVR.

தனவேல் -14, KVR - 13

இருவருக்கும் மிக்க நன்றி.

பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…

//10. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்(கரகாட்டக்காரன் இல்லை)
- எங்க ஊரு பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊருவந்து//

வில்லுப்பாட்டுக்காரன், சென்பகமே சென்பகமே போன்ற படங்களை விட்டுட்டீங்களே?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது