வெள்ளி, ஏப்ரல் 30

பதிவர்களின் டைரி - 3

11 ) நீச்சல்காரன்(http://neechalkaran.blogspot.com)

ஏதேனும் புதியதாக எழுதப்பிடிக்கும்,புதிய முயற்சிகள் வடிக்கப்பிடிக்கும். எழுத்துலக கடலில் நீந்தப்பழகும் சிறு நீச்சல்காரன். இவர் காமெடி குசும்பர். கவிதை குண்டர். இவரது பதிவுகளில் நகைச்சுவை கட்டுரைகள் அதிகம். அதோடு அருமையான கவிதை தொகுப்புகளும் அதிகம். இவரது நகைச்சுவைகள் கம்ப்யூட்டர் தொடர்பாக நிறைய இருக்கும். கம்ப்யூட்டர் ராசிபலன், சாப்ட்வேர் அரசன் 33-புலிகேசி போன்ற பதிவுகள் சிரிக்க சிரிக்க படிக்கலாம்.


12 ) பிரபாகர்(http://ennaththaiezhuthukiren.blogspot.com,http://abiprabhu.blogspot.com//)

நிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன். அவரது எண்ணங்களை, கோபங்களை பதிவு செய்யும் இளைஞன். அவர் சந்தித்த சிந்தித்த விசயங்களை எழுதுகிறார்.


13 ) ஜானகிராமன்.நா(http://podhujanam.wordpress.com/)


சும்மா... மாற்றம் வராதா என ஏங்கும் உங்களில் ஒருவன், உங்களைப்போல் ஒருவன் - சாதாரண பொதுஜனம். வாழ்க்கையின் சந்திப்புக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளகூடிய அன்பு நண்பன். "ஒரு பஸ் பயணம்" எனக்கு பிடித்த பதிவு.


14 ) KVR(http://kosappettai.blogspot.com/, http://nilaraja.blogspot.com/,http://kvraja.blogspot.com/)

"சொல்லிக்கிற மாதிரி ஒரு எழவும் இல்லடே". நம்ம ஒரு ப்ளாக் எழுதுறதுக்கே பத்துநாள் ரூம் போட்டு யோசிக்க வேண்டியதிருக்கு. இவங்க மூணு ப்ளாக், மூணும் வேற வேற கலர்ல எழுதுறாங்க. எப்படின்னு தெரியல. ஒரு வேலை பினாமியா இருக்குமோ. சென்னை தமிழ்ல பிச்சு உதறுவாங்க.

15 ) சித்ரா(http://konjamvettipechu.blogspot.com/)


பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் வெட்டிப் பேச்சுன்னு சொல்றாங்க. ஆனா பதிவுகளை பார்த்தா நிறையா வெட்டியா பேசுவாங்க போல. நிறைய விருதுகள் வாங்கிருக்காங்க(காசெல்லாம் கொடுக்கலைங்க). அவங்க சந்தித்த நிகழ்வுகளை புன்னகையோடு சொல்வதில் கெட்டிகாரங்க இவங்க.


...

10 கருத்துகள்:

LK சொன்னது…

நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

நீச்சல்காரன் சொன்னது…

நன்றி,
நகைச்சுவையாகவும், கவிதையாகவும் எழுத இனிமேல் முயலுகிறேன்.

ஜானகிராமன்.நா சொன்னது…

தல, பதிவர் லிஸ்ட்ல என்னையும் சேத்ததுக்கு ரொம்ப நன்றி. ஆமா, சிரிப்புப் போலிஸ் ஏன் இன்னும் இந்த லிஸ்ட்ல வரல? அவரு இன்னும் உங்களுக்கு கட்டிங் எதுவும் வெட்டலையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி LK
@ நீச்சல்காரா இனிமேதான் எழுதவே போறீங்களா. நான்தான் அவசரப்பட்டு சொல்லிட்டனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ஜானகிராமன் - சிரிப்பு போலீஸ் மாமுல் தரமாட்டேன்னு சொல்லிட்டார்ப்பா..

Chitra சொன்னது…

சிரிப்பு போலீஸ் வெளியிட்டு இருக்கும் லிஸ்ட்ல நானும் இருக்கேனே.......... நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்..... எல்லோரும் கேட்டுக்கோங்க...... நானும் ரவுடிதான்.

பிரபாகர் சொன்னது…

குறிப்பிட்டதற்கு நன்றி தம்பி!

நீங்கள் நிறைய எழுத வேண்டுகிறேன்!

பிரபாகர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@vaanka rowdi sorry Chithraa..

@ nanri Praphakar

ஜானகிராமன்.நா சொன்னது…

பாஸ், என்னோட வலைப்பூ முகவரியை பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரஸ்க்கு மாத்தியிருக்கேன். கொஞ்சம் நீங்களும் பதிவர் டைரியில் அப்டேட் செய்தால் உதவியாய் இருக்கும்.

http://podhujanam.wordpress.com/

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சிரிப்பு போலிசை லிஸ்ட்ல சேர்க்கலனா ஆட்டோ வரும் ஜாக்கிரதை.....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது