Horoscope

செவ்வாய், மே 18

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் - 2

ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
பையன்: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
பையன்: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================

19 கருத்துகள்:

Chitra சொன்னது…

very funny!!! சிரிப்பு போலீஸ் - சிரிப்பு ஞானி ஆயிட்டார்....... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் சித்ரா

க ரா சொன்னது…

சூப்பர் தத்துவங்கள் நண்பா :-)

Dharma சொன்னது…

எல்லாம் சூப்ப‌ர் ர‌மேஷ்..

Unknown சொன்னது…

மூர்த்தியின் தத்துவம் என்றவுடன் நான் வேறு மாதிரி எதிர்பார்த்தேன்,
அவை அசைவம், இவை சைவம் ...

settaikkaran சொன்னது…

தம்ம்ப்ப்ரீ! தத்துவமெல்லாம் சூப்பரா எழுதியிருக்கீங்க தம்ம்ப்ப்ரீ!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ராம்ஸ்
@ நன்றி தர்மா
@ கே.ஆர்.பி.செந்தில் அண்ணே என் இப்படி நான் ரொம்ப ரொம்ப நல்லவன்
@ சேட்டைக்காரன் நன்றி தம்ம்ப்ப்ரீ

S Maharajan சொன்னது…

சூப்ப‌ர்

malar சொன்னது…

நல்ல தத்துவங்கள்....இந்த காலத்துக்கு இது தான் பொருத்தம்...


ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

எல் கே சொன்னது…

arumai

goma சொன்னது…

அருமையான தத்துவங்கள்.
சிரித்துவஙக்ள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றிகள்
S Maharajan
மலர் ஹி ஹி
LK
கோமா

எம் அப்துல் காதர் சொன்னது…

வடநாட்டு ஜோக் அருமை. தத்துவத்தை கண்டு பிடிச்சது யாருங்க.

Shankar சொன்னது…

Hi,
I am a first time visitor.Good jokes.
Keep it up.
Shankar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ எம் அப்துல் காதர் நாமமே வெண்ணிறாடை மூர்த்தி தான்
@ ஷங்கர் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

வெ.ஆ.முவின் தத்துவங்கள் அனைத்துமே அருமை - வி.வி.சி

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரொம்ப நன்றி சீனா சார்

தாராபுரத்தான் சொன்னது…

சிரிச்சே ஆகணும்..

Jayadev Das சொன்னது…

நல்லா இருக்கு. காசில்லாதவன் போனால், மருத்துவர் சீக்கிரமே குணப்படுத்தி அனுப்பி விடுவார், இது தமாஷ் அல்ல நிஜம். பணக்காரன் போனால் அவனிடமிருந்து முடிந்தவரை கறந்த பின்தான் விடுவான்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது