செவ்வாய், மே 4

பதிவர்களின் டைரி - 4

16 ) தண்டோரா(http://www.thandora.in/)

கதை,கவிதை, சினிமா விமர்சனம், நாட்டு நடப்பு என எல்லாத்துறைகளிலும் கலந்து கட்டி அடிப்பவர் நம்ம மணிஜி. "சும்மா கொஞ்சம் மொக்கை" என்கிற போட்டோ கமெண்ட்ஸ் மிக அருமையாக இருக்கும்.

17) சைவகொத்துப்ரோட்டா(http://saivakothuparotta.blogspot.com/)

தினமும் சுவையான பரோட்டாக்கள் சுட முயற்சிப்பது இவரது தொழில். மனதில் பட்ட விசயங்களை அழகாகவும், புன்னகையுடனும் சொல்லுவதில் ஜித்தர் இவர். இந்தக்கடையில் ஒருதடவை பரோட்டா சாப்பிட்டு பாருங்களேன்.

18) ராகவன் நைஜிரியா(http://raghavannigeria.blogspot.com/)

 நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிசுட்டார். அனைத்து பதிவுகளும் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும்.


19) பழமைபேசி(http://maanbu.blogspot.com/,http://maniyinpakkam.blogspot.com/)

"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!" என்ற உன்னத கருத்தினை சொன்னவர். இவர் ஒரு தமிழ் காதலன். அருமையான தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் திறமைசாலி. கவிதைகள், கட்டுரைகள் அனைத்துமே மிக அழகிய தமிழில் இருக்கும்.

20) பலாபட்டறை(http://palaapattarai.blogspot.com/)

பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் என்கிற உயர்ந்த கருத்தினை சொன்னவர் இவர். "【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║" இதுதான் இவரது பெயர். இவரது பெயரை சரியாக சொல்பவர்களுக்கு நூறு சுறா DVD இலவசமாக அனுப்பப்படும். சிறந்த கதைகள் கட்டுரைகள் படிக்க இவரை அணுகவும்.

சிரிக்க:  

ஒரு வகுப்பில் அறிவியல் ஆசிரியர் "கற்பூரம் உடனே எரியும், கரித்துண்டு கொஞ்சம் நேரம் ஊத ஊதத்தான் எரியும், வாழைமட்டை எறியவே எரியாது" என்று கற்பூரத்தை நல்லா படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும், கரித்துண்டை சுமாராக படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும்,வாழைமட்டையை மோசமாக படிக்கிற மாணவர்களுக்கு உதாரணமாகவும் கூறினார். உடனே ஒரு மாணவன் எழுந்து "நெருப்பு சரி இல்லைனா ஒண்ணு கூட எரியாது சார்" என்றான் ஆசிரியரைக் குறிப்பிட்டு.

9 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அட நம்மளையும் இந்த விளையாட்டுல
சேத்து இருக்கீங்களே!!!
ரமேஷ், நீங்க சத்தியமா நல்லவரு :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

யோவ் சைவகொத்துபரோட்டா நான் சீரியஸா எழுதுனா உமக்கு விளையாட்டாப் போச்சா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

நன்றிங்க ரமேஷ்! :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

】™║▌│█│║││█║▌║ ithukku meaning enna boss?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

அத பார்கோடிங் மெசின்ல காமிச்சீங்கன்னா நானும் ரொம்ப நல்லவன் சத்தியமா அப்படீன்னு வரும்! (அட அது சும்மா ஒரு லுக்குக்காக போட்டதுங்கோவ்) :))

இராமசாமி கண்ணண் சொன்னது…

நண்பா கலக்கு.

Chitra சொன்னது…

கலக்கல் டைரி குறிப்பு. :-)

மணிஜீ...... சொன்னது…

நன்றி நண்பரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி சித்ரா.
@மணிஜி வருகைக்கு நன்றி...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது