ரெண்டு நாளைக்கு முன்னாடி சிங்கப்பூர்ல இருக்குற அக்கா பையனுக்கு(பிறந்து முப்பது நாள்தான் ஆகுது) காய்ச்சல். உடம்பு அனலா கொதிக்குது. சரின்னு விழுந்தடிச்சு வீட்டுக்கு கீழ உள்ள கிளினிக்ல போய் காட்டுனா 39 டிகிரி இருக்கு. அந்த டாக்டர் மருந்து கொடுத்துட்டு NUH கூட்டிட்டுபோயிடுங்கனு சொல்லிட்டார். NUH பெரிய அரசு மருத்துவமனை. எல்லா வசதிகளும் உண்டு.
அங்க நார்மல் வார்ட்ல டாக்டரைப் பாக்கனும்னா அப்பாயின்மென்ட் வாங்கணும். அவசரமா பாக்கனும்னா எமெர்ஜென்சி வார்டுக்குதான் போகணும். பீசும் அதிகம். சரின்னு நானும் அக்காவும் பத்து மணிக்கு டாக்ஸி பிடிச்சு (ஒன்பது மணிக்கு பீக் ஹவர்ஸ் டாக்ஸி கிடைக்காது) 10.20 க்கு NUH க்கு போய் சேர்ந்தோம். உடனே பதிவு பண்ணிவிட்டு எமெர்ஜென்சி வார்டில் உக்கார்ந்தோம்.
10.30 க்கு டாக்டர் ரூம்குள்ள போனேம்(அப்பாட உடனே கூப்பிட்டுடாங்க. எமெர்ஜென்சி வார்டுனா எமெர்ஜென்சி வார்டுதான்). செக் பண்ணி அதே 39 டிகிரி இருக்குன்னு சொல்லிட்டு, எதனால காய்ச்சல் வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணனும். வார்ட்ல அட்மிட் பண்ணிடுங்க அப்டின்னு சொல்லிட்டார்.(கவனிக்கணும் இங்க மருந்து கூட கொடுக்கல)
10.40 ஒரு நர்ஸ் வந்து "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. Bed ஒதுக்கி தரோம்" அப்படின்னு சொன்னாங்க.மணி 11. அதே நர்ஸ் திரும்பி வந்து "ப்ளீஸ் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. கிளியர் ஆய்கிட்டு இருக்கு" அப்படின்னு சொல்லிச்சு.
மணி 11.30. நர்ஸ் எங்களை பார்த்து ஒரு சிரிப்பு. மணி 12.00. "Bed இன்னும் ரெடி ஆகல. நீங்க போய் சாப்பிட்டு வந்துடுங்க" அப்டின்னு நர்ஸ் சொன்னாங்க. நானும் அக்காவும் போய் சாப்பிட்டு வந்தோம். மணி ஒண்ணு. மறுபடியும் அதே சிரிப்பு(இன்னும் ரெடி ஆகல. அதுக்குள்ளே ஏன் சாப்பிட்டு வந்து தொலைச்சே அப்டின்னு அர்த்தம்).
சரியா ரெண்டு மணிக்கு Bed கிடைச்சது. அதுக்கப்புறம்தான் அந்த குழந்தையை அட்மிட் பண்ணி டாக்டர்ஸ் வந்து செக் பண்ணி, டெஸ்ட் எல்லாம் எடுத்து மருந்து கொடுத்தாங்க. எமெர்ஜென்சி வார்டுக்கே மூன்றை மணி நேரம்னா நார்மல் வார்டுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.
போங்கடா நீங்களும் உங்க எமெர்ஜென்சி வார்டும்.............
கொறிக்க:
கொறிக்க:
ஒருமுறை காமராஜர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது விருதுநகரில் தனது தாயை பார்க்க சென்றார். அப்போது வீட்டினுள் தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டது. "என்னம்மா வீட்டுக்குள்ள தண்ணீர் சத்தம் கேக்குது" என்றார் காமராஜர். பொதுக் குழாய்ல போய் தண்ணி எடுக்க சிரமமா இருக்குன்னு முனிசிபாலிடியில் இருந்து போட்டாங்கப்பா என்றார் அவரது அம்மா.
இதைகேட்ட காமராஜர் "குடிநீர் இணைப்பு வேண்டுமெனில் முதலில் மனு போட வேண்டும். நான் விண்ணப்பம் கொடுக்கவே இல்லை. எல்லோரும் பொது குழாயில்தானே எடுக்கிறார்கள்" என்று கூறியபடியே முனிசிபாலிடி அலுவலர்களிடம் இணைப்பை துண்டிக்குமாறு கூறிவிட்டார். இப்போது யாராவது அந்த மாதிரி இருக்கிறார்களா? மச்சான் நீ கேளேன்.. மச்சான் நீ கேளேன்.. மச்சான் நீயாவது கேளேன்.
.
.
22 கருத்துகள்:
ரைட்டு :-)
உங்கள் அக்கா மகன், இப்பொழுது எப்படி இருக்கிறான்?
நலமா?
காமராஜர் மாதிரி எல்லாம் அரசியல் தலைவர்கள் வேண்டும் என்று, கலைஞர் டிவி , சன் டிவி காலத்துல பேராசைப் படக்கூடாது.
சிங்கப்பூரிலும் நம்ம ஊர் போல தானா... சேம் பிளட்... தாங்க்குயு
எமெர்ஜென்சியா.. அப்படீனா?..
நாங்களும் பட்டிருக்கோம்..கொடுமை சாமி....
சரி.. இப்ப குழந்தைக்கு எப்படியிருக்கு?...
நீங்கள் அருகில் இருக்கும் பாலிக்ளினிக் போயிருக்கவேண்டும், அங்கு உடனே கவனிப்பார்கள், கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்றால் அவர்களே இங்கு அல்லது வேறொரு மருத்துவமனைக்கு அனுப்புவார்கள் , பரிந்துரையுடன் வந்தால் உடனடி அட்மிட் , அங்கு இதுதான் நடைமுறை. அது சிங்கப்பூரின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று.
சிங்கப்பூர்லயுமா..?
என்ன கொடுமை சரவணன் இது..?
ஆச்சர்யமா இருக்கு.. சிங்கப்பூரிலா இப்படி?..
இங்கு தாய்லாந்தில் உடனே கவனிக்கப்படும்...
அதுவும் பிறந்த குடந்தை என்றால் உடனுக்குடனே..
காய்ச்சல் அதிகம் என தெரிந்தால் வெதுவெதுப்பான நீர்ல் துண்டை முக்கி எடுத்து பிழிந்து உடம்பின் சூட்டை தணிப்பார்கள்..
@ சித்ரா
பையன் இப்ப பரவாயில்லை. இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறான்.
//கலைஞர் டிவி , சன் டிவி காலத்துல பேராசைப் படக்கூடாது.//
அப்பா காமராஜர் ஆட்சி கொண்டுவருவோம் அப்டின்னு சொல்றாங்களே அப்டின்னா என்ன?
@ஜானகிராமன்
ஆமாம். ஆனால் வார்டுக்கு போயிட்டா நல்லா கவனிக்கிறாங்க. Drypper , பால் எல்லாமே நாமே கேட்ட brand கொடுக்குறாங்க.
@ பட்டாப்பட்டி
பையன் நல்லா இருக்கான். இன்னும் ரெண்டு நாளைக்கு அப்சர்வ் பண்ணனுமாம். அப்புறம்தான் discharge.
@கே.ஆர்.பி.செந்தில்
பதிவுலையே சொல்லிருக்கனே. வீட்டுக்கு கீழ உள்ள கிளினிக்ல பாத்துட்டுதான் அங்க போனோம். அவங்களும் லெட்டர் கொடுத்தாங்க. அப்டின்ன அவங்க லெட்டர் இல்லாட்டி ஒருநாள் ஆயிடுமா?
@வெங்கட்
என்ன பண்றது. யாராவது ரமணா இங்க வந்தா உண்டு. நம்ம ஊர்லயாவது ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் ப்ரீ. இங்க அரசு மருத்துவமனையில் கூட காசுதான்.
@புன்னகை தேசம்.
ஆமாம். கேட்டா Bed எதுவும் காலியா இல்லை. காலியானதும் தான் கிடைக்கும்ன்னு சொல்லிட்டாங்க. அதுலயும் B1,B2,C அப்டின்னு நிறைய கிளாஸ் இருக்கு..
@ நன்றி ராம்ஸ்
////அப்பா காமராஜர் ஆட்சி கொண்டுவருவோம் அப்டின்னு சொல்றாங்களே அப்டின்னா என்ன?////
.....அதுக்கு பேர்தான் அரசியல் வாக்குறுதி. வரும் (என்று சொல்வார்கள்) ஆனால், வராது. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா......
// இப்போது யாராவது அந்த மாதிரி இருக்கிறார்களா? //
பேராசை, பேராசை அப்படின்னு சொல்லுவாங்களே... அது இதுதானா?
குழந்தைக்கு இப்ப எப்படி இருக்கு? தேவலாமா?
@ராகவன்
பையன் நலம்.
பையனை விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
நண்பா அக்கா பையன் எப்படி இருக்கான் இப்ப.
காமராஜர் பத்தி ஞாபகப்படுத்தி ஏங்க வவுத்தெரிச்சல கெளப்புறீங்க?
@ராம்ஸ் பையன் நல்ல இருக்கான்.
@ விந்தைமனிதன் இருங்க பாஸ் புரட்சி கலைஞர் வருவார் (:)))
emergency in Singapore is nothing
My case they haven't given medicine for two days until lab results comes. This is KK hospital
Stupidity in Singapore
யாசவி கரெக்டா சொன்னீங்க..
இங்க மருத்துவமனைகளில் எப்பவுமே கூட்டம் அதிகம்
6 வருசமா இருக்கேன் ஒருமுறை கண்ணில் கயம்பட்டு சென்றேன்
எம்சி வங்க
கிட்டதட்ட 4 மணிநேரட்ய்துக்கு மேல ஆச்சு
அதுக்கு அலுவலகத்தில் வேலையே பார்திருக்கலாம் என் தோனிடுத்து
அதன் பின் செல்லவே இல்லை
@ பிரபு
எல்லோருக்கும் இப்படித்தானா?
:)
நம்ம ஊரில் டாக்டர் கழுத்தில் கத்தி வைச்சுடுவாங்க.
கருத்துரையிடுக