வியாழன், மே 6

சுறா சில சுரீர் கேள்விகள்


இன்னிக்குதான் சுறா படம் பார்த்தேன்(விதி யாரை விட்டது?). எனக்கு சில சந்தேகங்கள் (அடப்பாவி படம் பார்த்து நீ உயிரோட இருப்பதே சந்தேகம்தான).

1. கூகிள்ல இருந்து சங்க இலக்கியம், அக நானூறு, புற நானூறு எல்லாத்திலையும் தேடித் பார்த்தேன். இதுவரைக்கும் சுறா அப்டின்னு எந்த மனுசனுக்கும் பேர் வைக்கலை. அப்டின்னா விஜய் மனுஷன் இல்லை அப்டிங்கிறீங்களா?(அப்ப கடவுளா?)

2. தண்ணில அடிச்சா நீச்சல். நீங்க தண்ணில இருந்து மேல பறக்குறீங்களே. இதுக்கு பேர் சூச்சலா?(சூச்சல். அப்பாடா புது வார்த்தை கண்டு பிடிச்சாச்சு..)

3. பேனா விக்கிறவன்ககிட்ட பேனா வாங்கிட்டா பொண்ணுங்க மடியும்னா, லவ் சொல்ல போகும்போது  பேனா விக்கிறவங்களை கூட கூட்டிட்டுப் போகனுமா?

4. பாமை (Bom )disconnect பண்ணுறதுக்கு அதிகம் படிக்க தேவை இல்லையா?(எல்லா வயரையும் புடுங்குரீங்களே. விஜயகாந்த் கூட கடைசிவரைக்கும் கருப்பு வயரா இல்லை சிவப்பு வயரா அப்டின்னு ரெண்டு நிமிஷம் யோசிச்சுதான் கட் பண்ணுவாரு. நீங்க ஏன் எல்லா வயரையும் கட் பண்ணினீங்க?)

5. நாயை காணோம்னு தற்கொலை பண்ணிக்க போற தமன்னா, விஜய் பாம்பே போயிட்டு வந்ததும் ஏன் ரொம்ப நாளா ஆளையே காணோம். எங்க போயிருந்தே அப்டின்னு கேக்குறாங்க. விஜயை காணோம்னு ஏன் தற்கொலை பண்ணிக்கலை. அப்படின்னா விஜய் என்ன நா.........விட கேவலமா?

6. வீடு கட்ட விடாம தொல்லை குடுக்குற வில்லன், அதுக்கப்புறம் வீடு கட்டி முடிச்சதுக்கப்புறம் தான் அதை இடிக்க யோசனை பண்றார். அத்தனை வீடுகளும் கட்டி முடிக்க ஆறு மாசமாவது ஆகும். அந்த ஆறு மாசமும் வில்லன் ...... புடுங்க போனாரா?

7. பாட்டெல்லாம் தெலுங்குல சுட்ட நீங்க ஏன் கதைய சுடல? அப்படி சுட்டாலாவது கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்திருக்கும்.

8. உங்க காவல்காரன் படம் எப்ப வரும்?(சும்மா கலாய்க்கத்தான். ஹி ஹி)

சிரிக்க:


காக்கா 1: அந்த அரசியல்வாதி வீட்டு ஆண்டனாவுல மட்டும் உக்காராத.
காக்கா 2:  ஏன்?
காக்கா 1:  அவர் காக்கா பிடிக்குறதுல கில்லாடியாம்...

21 கருத்துகள்:

Sukumar Swaminathan சொன்னது…

வாவ்.. லவ்லி...
ஆனால் பதில் கிடைக்காத கேள்விங்க தல...

Chitra சொன்னது…

:-)

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லாத்தான் கேட்ருக்க. ஆனா பதில் கிடைக்காதேப்பா !@

tamilan சொன்னது…

"அப்படின்னா விஜய் என்ன நா.........விட கேவலமா?"
----
காதலுக்கு மரியாதை,துள்ளாத மனமும் துள்ளும், சந்திரலேகா போல நல்ல படங்களை நடித்த விஜய்க்கு இப்ப என்ன நடந்தது. சும்மா சுறா, கறா என்டு.

Sakthi Doss சொன்னது…

thala fanaga irunthum sura paarkka ponein innum enmanasila neenga ketta kelvikku vidai theriyal thala....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சுறாவுக்கு வேட்டைக்காரன் பரவாயில்லை

காவல்காரனுக்கு சுறா பரவாயில்லை ...?

அனு சொன்னது…

பதிவுலகத்தில இருக்குற இவ்வளவு எச்சரிக்கைகளை மீறியுமா சுறா பாக்க போனீங்க? இருந்தாலும் உங்களுக்கு அசாத்திய தைரியம்ங்க...

//விஜயகாந்த் கூட கடைசிவரைக்கும் கருப்பு வயரா இல்லை சிவப்பு வயரா அப்டின்னு ரெண்டு நிமிஷம் யோசிச்சுதான் கட் பண்ணுவாரு. //
ஏன்னா, அவருக்கு அந்த அளவு யோசிக்கறதுக்காவது மூளை இருக்கு.. இவருக்கு??

//விஜயை காணோம்னு ஏன் தற்கொலை பண்ணிக்கலை. அப்படின்னா விஜய் என்ன நா.........விட கேவலமா?//

ஹிஹி.. கலக்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@சுகுமார் சுவாமிநாதன்
ப்ளீஸ் கூகிள் ல தேடியாவது பதில் சொல்லுங்க.

@ சித்ரா பதில் சொல்லாம இப்படி எஸ்கேப் ஆக கூடாது.

@ ராம்ஸ் பிட் அடிச்சாவது விடை சொல்லுப்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@தமிழன்
எப்ப அவங்க அப்பா எஸ்ஏசி விஜயை அரசியல்ல தள்ளனும்னு ஆசைப்பட்டரோ அப்பவே விஜய் ஊ ஊ தான்.

@ சக்தி தாஸ் -ரூம் போட்டு யோசிச்சு பதில் சொல்லுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கேஆர்பிசெந்தில்
விஜய் பேட்டி படிசீங்களா?
// என்னைப் பற்றி, என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட வைக்கிறார்கள்.

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான் மக்களுக்காகப் போராடுகிறேன். சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது//

கவுண்டமணி: இப்படியெல்லாம் பேச சொல்லி உனக்கு யாரடா சொல்லிக்கொடுத்தது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனு
நல்லவேளை வீட்டுலதான் பாத்தேன். ஒருவேளை விஜய்க்கு கலர் குறைபாடு இருக்குமோ?

பட்டாபட்டி.. சொன்னது…

கேள்வியெல்லாம் கேக்கப்படாது..

படம் பார்த்தா.. அனுபவிக்கனும்..ஆராயக்கூடாது..

ஹா..ஹா

வெங்கட் சொன்னது…

செம தில்லுதுரபா நீங்க..,

சன் டி.வி போட்டா
" சுறா " விளம்பரம் வருமேன்னு
பயந்துகிட்டு நாங்க Tv பார்க்கறதை
நிறுத்திட்டோம்..
நீங்க படமே பார்த்திட்டீங்க..!!

Deivasuganthi சொன்னது…

//பதிவுலகத்தில இருக்குற இவ்வளவு எச்சரிக்கைகளை மீறியுமா சுறா பாக்க போனீங்க? இருந்தாலும் உங்களுக்கு அசாத்திய தைரியம்ங்க...///

:-)

GD சொன்னது…

க‌வுண்ட‌ம‌னி:அது ஏன்டா அது மாதிரி கேள்விய‌ என் கிட்ட‌ கேட்ட‌?
(செந்தில் க‌ண்ண‌த்தில் ப‌ளார்)
.
.
க‌வுண்ட‌ம‌னி:அது ஏன்டா அது மாதிரி கேள்விய‌ என் கிட்ட‌ கேட்ட‌?
(செந்தில் க‌ண்ண‌த்தில் திரும்ப‌வும் ப‌ளார்)
....
க‌வுண்ட‌ம‌னி:அது ஏன்டா அது மாதிரி கேள்விய‌ என் கிட்ட‌ கேட்ட‌?
(செந்தில் க‌ண்ண‌த்தில் திரும்ப‌வும் ப‌ளார்)
மில்க்கிங்: அப்ப‌டி என்னாண்ண‌ கேட்டுட்டான்
க‌வுண்ட‌ம‌னி:சுறா ப‌ட‌த்துலேந்து கேள்வி கேக்குறான்
விஜ‌ய்: சைல‌ன்ஸ்...பேசிகிட்டு இருக்கோம்ல‌
ம‌க்க‌ள்: அதான் ப‌ட‌த்துல‌ பேசியே கொல்றியே.. திரும்ப‌வும் என்ன‌ பேச்சு..த‌ண்ணிய‌ குடி..
த‌ண்ணிய‌ குடி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பட்டாப்பட்டி
அதான் அனுபவிச்சாச்சே. இன்னும் என்ன?

@ வெங்கட்
உங்க கடியவே தாங்குறோம். இது என்ன? சும்மா உள்ளுலாயிக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி தெய்வசுகந்தி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ GD super

தனவேல் சொன்னது…

நண்பா, வாழ்த்துக்கள் சுறா பார்த்து நீ சுய நினைவோடு இருப்பதற்கு.
கே.ஆர்.பி. செந்தில், பரவாயில்லையே உங்க பதில்
//சுறாவுக்கு வேட்டைக்காரன் பரவாயில்லை
காவல்காரனுக்கு சுறா பரவாயில்லை ...?//
விஜய்க்கு உலக அளவிலிருந்து பல அவார்டுகள் வரலாம் தமிழ்நாட்டில்
மக்கள் தொகையை குறைப்பதற்காக.

Kolipaiyan சொன்னது…

.... நாய் என்று முழுசா சொல்ல வேண்டியது தானே அதிலென்ன .... !

கலக்கல்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Kolipaiyan
ஒரு மரியாதை.

@தனவேல்
அப்ப விஜய்க்கு முக்கோண வடிவில் எதிர்காலம் உண்டுன்னு சொல்லு...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது