நான் திரும்பி வந்துட்டேன். சிங்கப்பூர்ல வாங்கின சாக்கலேட் எல்லாம் சொந்தக்கரங்களுக்கு ஒரு வழியா பிரிச்சி கொடுத்தாச்சு. இல்லன்னா நம்ம சொந்தக்கார ஆளுங்க அத சாமி குத்தம் ஆக்கிடுவாங்களே. ஒரு வாரமா பதிவு எழுதாம,படிக்காம ஒரே குஷ்டமாயி போச்சு. நம்ம நண்பர்கள் போன் மேல போன் பண்ணி என் எழுதல அப்டின்னு கேக்க ஆரமிச்சிட்டாங்க(ஆமா ஆமா பிபிசி நியூஸ் ல சொன்னாங்க)
ரெண்டு நாளைக்கு முன்னால நண்பனின் திருமணத்துக்காக மணப்பாறை வரைக்கும் போனேன். சென்னைல இருந்து திருச்சி போய் மணப்பறை பஸ் க்காக வெயிட் பண்ணினேன். பழனி வழி மணப்பாறை அப்டின்னு ஒரு பஸ் வந்தது. சரின்னு ஏறி உக்கார்ந்தேன். பத்து நிமிஷம் கழித்து கண்டக்டர் வந்து எங்க போகணும்னு கேட்டார்.
மணப்பாறை அப்படின்னு சொன்னதும் ஏதோ கொலைகாரன பாக்குற மாதிரி பாத்துட்டு பழனி போறவங்களுக்கே இங்க இடமில்ல, இவரு மணப்பறை போறாராம் அப்டின்னு சொல்லி திட்டி கீழ இறங்கு(ஒரு மரியாதை கூட இல்ல) அப்டின்னுட்டார். நானும் கோபமா அப்ப ஏன் பஸ்ல வழி மணப்பாறைன்னு போட்டுருக்கீங்கன்னு கேட்டேன். உடனே அந்த ஆளு(கண்டக்டர்) திட்ட ஆமிச்சிட்டார். நாமதான் கொஞ்சம் கோவக்காரன் ஆச்சே(டேய் சிரிப்பு உனக்கு சூடு சொரணை எல்லாம் இருக்குதா).
உடனே அந்த பஸ்ல இருந்து இறங்கிட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எந்த பஸ்லையும் என்னை ஏத்தல(பாவம் அவங்களுக்கு நான் ஒரு பிரபல பதிவர்ன்னு தெரியாது. அதான் மன்னிச்சு விட்டுட்டேன்). கடைசியா மணப்பாறைன்னு போர்டு போட்டு ஒரு பஸ் வந்தது. அதுல ஏறி மணப்பாறை போய் சேர்ந்தேன்.
இங்க மட்டும் இல்லைங்க நிறைய பஸ்ல இடைல உள்ள ஸ்டாப்க்கு ஆள் ஏத்த மாட்டேங்குறாங்க. அப்டின்னா நாம பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போற ஊர்லதான் குடி இருக்கனுமா? இடைப்பட்ட ஊர்ல பிறந்தவங்க எல்லாம் பாவிகளா? அப்புறம் என்ன மயி....க்க்கு பஸ்ல வழி மணப்பாறைன்னு போட்டுருக்கீங்க?
அப்புறம் இந்த கேண்டீன். போன வாரம் சாலை ஓர கேண்டீன்ல உள்ள கட்டண கழிப்பிடத்துக்கு போகாம ரோட்டேரமா ஒதுங்கின ஒருத்தரை கட்டையால அடிச்சி காய படுத்தி இருக்காங்க. அவங்க கிட்ட இப்ப ரொம்ப பயமா இருக்கு.
1 ) நீங்க சாப்பாடு கேட்டா சிக்கன் குழம்பு ப்ரீ ன்னு கொடுப்பாங்க. சாப்டதும் குழம்புக்கு தனி காசு பில் வரும். ஏன்னு கேட்டா கெட்டவார்த்தைல திட்டு.இல்லன்னா அடி.
2 ) சாப்பாடு படு கேவலமா இருக்கும். காசும் அநியாய விலை. கேண்டீனுக்குள்ள பயங்கர குப்பை. அங்க உக்காந்து சாப்பிட்டா வாமிட் நிச்சியம்.
3 ) புதுப் பட டீவீடிக்கள் பப்ளிக்கா விக்கிறாங்க. ஆனா எந்த போலிசும் இத கேக்குறதில்ல. சினிமா காரங்க வசதியா கார், பிளைட் ல போறதால இத பத்தி தெரிய வாய்ப்பில்ல.
தெரிஞ்சாலும் இவங்கள ஒன்னும் கிழிக்க முடியாது.
4 ) அப்புறம் கழிப்பிடம். இதுக்குள்ள போயிட்டு வெற்றிகரமா வந்துட்டா பாராட்டு விழா எடுக்கலாம்.
என்னோட பயம் என்னனா இனிமே பஸ்ல போனா அந்த கேண்டீன்ல கட்டாயம் சாப்புடணும்னு கேண்டீன்காரங்க டார்ச்சர் பண்ணுவாங்களோ? முதல்ல எல்லாம் ரோடு நல்லா இருக்காது. விபத்துக்கு பயந்தோம். இப்ப ரோடு நல்லா இருக்கு. விபத்துகளும் குறைஞ்சிடுச்சு. ஆனா இப்ப கேண்டீன்காரங்களுக்கு பயப்பட வேண்டியதிருக்கு.
அப்டின்னா பஸ் பயணிகள் பயத்தோடதான் வாழனுமா? அரசாங்கம் இந்த கேண்டீன்காரங்களை எதுவும் செய்யாதா? இத கேக்க யாருமே இல்லியா?
12 கருத்துகள்:
//இத கேக்க யாருமே இல்லியா?//
ஏன் இல்லை. நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் ஓட்டுப் போட்டு 2011ல என்னை முதல்வராக்கிருங்க. அதுக்கப்புறம் இந்தக் கேண்டீன்காரங்கக் கிட்ட எனக்கான கட்டிங்கை எப்பிடி கேக்குறேன்னு நீங்க பாக்கத்தான போறீங்க.
இப்ப ரோடு நல்லா இருக்கு. விபத்துகளும் குறைஞ்சிடுச்சு. ஆனா இப்ப கேண்டீன்காரங்களுக்கு பயப்பட வேண்டியதிருக்கு.
..... ஒரு பிரபல பதிவருக்கே இந்த நிலைமையா? பொறுத்தது போதும் - பொங்கி எழுங்கள், பதிவர்களே!!!
ha,ha,ha,ha,ha...
தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.
நான்கூட சென்ற வாரத்தில் மணப்பாறை வந்திருந்தேன். முறுக்குகள் நிறைய வாங்கினேன்.
நீங்க இப்பதான் சொல்றீங்க, இதுக்குதான் அடிக்கடி ஊருக்கு போகனுன்றது,
நாங்கல்லாம் பஸ்சுல ஏறுனா ஒரு கட்டிங்க வுட்டுட்டு தூங்கிருவோம்,
ஒன்னுக்கு வந்துச்சுன்னா அலப்பறை பண்ணியே பஸ்ஸ நிப்பாட்ட சொல்லி ஓரத்துகா ரிலீஸ் பண்ணுவோம்,
அப்புறம் அந்த ஓட்டல் மினிஸ்டரோட அல்லக்கைகள் வச்சிருக்கும்
எப்படி நண்பா அரசாங்கம் கேட்கும் கேண்டீன் வைத்து நடத்துவதே ஆளும் கட்சித் தானே.
ஒன்னு செய்யலாம் அரசாங்கம் விஜயகாந்த்கிட்டே சொல்லலாம்(!).
//ஏன் இல்லை. நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் ஓட்டுப் போட்டு 2011ல என்னை முதல்வராக்கிருங்க. அதுக்கப்புறம் இந்தக் கேண்டீன்காரங்கக் கிட்ட எனக்கான கட்டிங்கை எப்பிடி கேக்குறேன்னு நீங்க பாக்கத்தான போறீங்க.//
முகிலன் நீங்களுமா? நாடு தாங்காது..
@ சித்ரா நீங்களாவது சப்போர்ட்டுக்கு இருக்கீங்களே, தேங்க்ஸ்
@ கிங் விஸ்வா - மாமா பிஸ்கோத்து சாரி முறுக்கு,
//நாங்கல்லாம் பஸ்சுல ஏறுனா ஒரு கட்டிங்க வுட்டுட்டு தூங்கிருவோம், //
செந்தில் அண்ணா புதுசா ஏதாச்சும் சொல்லுங்க.
//ஆனா இப்ப கேண்டீன்காரங்களுக்கு பயப்பட வேண்டியதிருக்கு. //
தன் கையே தனக்குதவி. ச்சே தப்பா நினைக்காதிங்க, கைல ஒரு பிஸ்கெட் பாக்கெட் எடுத்துட்டுப் போய்டுவேன்னு சொல்ல வந்தேன்
//இடைப்பட்ட ஊர்ல பிறந்தவங்க எல்லாம் பாவிகளா?//
உங்களுக்காவது பரவாயில்லை. “வழி: மணப்பாறை”ன்னு போட்டுக்கற அளவுக்கு கொஞ்சம் பெரிய ஊர். என் ஊரு வல்லம்படுகை. பஸ் நிறுத்தவே யோசிப்பாங்க. ஆனா, நம்ம ஊரு கொஞ்சம் டெரரான ஊரு. அதனால நாமளும் ஒரு டெரர் லுக் கொடுத்துக்கிட்டே கண்டக்டர் கிட்டே “வல்லம்படுகை”ன்னு சொன்னா ஒழுங்கா நிறுத்திடுவாரு.
//தன் கையே தனக்குதவி. ச்சே தப்பா நினைக்காதிங்க, கைல ஒரு பிஸ்கெட் பாக்கெட் எடுத்துட்டுப் போய்டுவேன்னு சொல்ல வந்தேன்//
தப்பா நினைக்கல....
பிரதர், இப்பத்தான் உங்கப் பதிவைப் படிச்சேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரேவிதமான அனுபவம். ரத்தம் கொதிக்குது. கண்கள் சிவக்குது. நரம்பு புடைக்குது. வாங்க நம்ம பதிவர்கள் எல்லாரையும் ஒன்னு திரட்டி, ஒன்னு திரட்டி... (சரி விடுங்க பாஸ். சண்டைன்ன சட்டைக் கிழியத்தான செய்யும்)
விடுங்க ஜானகிராமன் பாத்துக்கலாம்
கருத்துரையிடுக