கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் என் நண்பர்களோட கோயம்பேடு ரோகினி தியேட்டருக்கு படம் பாக்க போனேன். சனிக்கிழமை இரவு ஈஸியாக டிக்கெட் கிடைத்தது. அப்பவே நினச்சேன் சனிக்கிழமை டிக்கெட் கிடைக்குதேன்னு படம் மொக்கையாத்தான் இருக்கும்னு. (ஆனா ரோகினில எப்பவும் டிக்கெட் கிடைக்கும், அது வேற விஷயம்)
படம் படு மொக்கையான படம். பாத்து தொலைச்சிட்டு வண்டில ரூமுக்கு திரும்பினோம். வர்ற வழில போலீஸ் பிடிச்சிட்டார். அவங்க ரெண்டு பேரு. நாங்க ஆறு பேரு மூணு வண்டில. அப்ப நடந்த உரையாடல்.
போலீஸ்: எங்க போயிட்டு வர்றீங்க?
நாங்க: படத்துக்கு சார்
போ: என்ன படம்?
நா: &&&&&&&&;(படம் பேர ஏன் சொல்லணும். இப்பதான் பதிவுலகுல பயங்கர சண்டை நடந்துகிட்டு இருக்கு. நாம வேற பிரபல பதிவர் ஆயிட்டமே. உடனே குத்தம் கண்டுபிடிக்க ஆரமிச்சிடுவாய்ங்க. பின்ன நம்ம குடும்பத்தையே வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரல. உங்களுக்கு பிடிச்ச மொக்கை படத்த நினைச்சுக்கோங்க)
போ: எந்த தியேட்டர்?
நா: ரோகினி
போ: டிக்கெட் காட்டு.
(நாங்க டிக்கெட் எடுத்து காட்டுனோம்)
போ: படம் எப்படி
நா: படு மொக்கை
போ: கதை சொல்லு
நா:( ங்கே ). மொக்கை படம் சார். அந்த கதைய கேட்டுட்டு
போ: பரவா இல்ல சொல்லு. நீ படத்துக்குதான் போயிட்டு வந்தியான்னு நான் தெரிஞ்சுக்கணும்.
நா: டிக்கெட் இருக்கே சார்
போ: ஏய் ரொம்ப பேசுற கதைய சொல்லு..
நா:(மனதுக்குள், சனியன் பூ வைச்சு போட்டு வைக்காம விடாது. சொல்லித் தொலைவோம்)
நாங்க ஒரு வரில கதை சொன்னோம்
போ: முழுசா சொல்லு
நா: (மனசுக்குள், உடனே படம் பார்த்ததும் சுட சுட விமர்சனம் சொல்ல நாங்க என்ன கேபிள் சங்கரா?).
பின்ன என்ன பண்றது. அந்த கொடுமையான படத்தோட கதைய முப்பது நிமிஷம் கஷ்டப்பட்டு அந்த போலீஸ்காரர் கிட்ட சொன்னோம். அதுல அவரோட கருத்து வேற. (முடியல நான் அழுதுடுவேன்)
இத விட அந்த போலீஸ் எங்களுக்கு பெரிய தண்டன கொடுக்கவே முடியாது. இந்த மாதிரி கொடுமையான தண்டனையை யாராவது அனுபவிச்சிருக்கீங்களா?
டிஸ்கி : பதிவின் படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க?
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
24 கருத்துகள்:
இது எப்ப நடந்துச்சு நண்பா.
கோயம்பேடு ரூமில் இருக்கும்போது நான்,வெங்கட்,முத்து , உமாமகேஷ் போனபோது நடந்தது....
/////பின்ன என்ன பண்றது. அந்த கொடுமையான படத்தோட கதைய முப்பது நிமிஷம் கஷ்டப்பட்டு அந்த போலீஸ்காரர் கிட்ட சொன்னோம். அதுல அவரோட கருத்து வேற. (முடியல நான் அழுதுடுவேன்)
//////
ஹா ஹா ஹா ஹா நகைச்சுவை ததும்ப எழுதிஇருக்கிறீர்கள் .பாவம் போலீஸ் மாமா
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
//பாவம் போலீஸ் மாமா//
நாந்தாங்க பாவம் மொக்கை படத்துக்கு விமர்சனம் சொல்லிருக்கனே
யோவ் நாங்களும் பாவம்யா...
நீ பேசாம் என் ப்ளாக் லிங்கை கொடுத்திருக்கணும். மனுஷன் அதுக்கப்புறம் தினத்தந்தி கூட படிக்க மாட்டாரு இல்லை..:)
கேபிள் சங்கர்
//யோவ் நாங்களும் பாவம்யா...//
யாருப்பா அது?
//நீ பேசாம் என் ப்ளாக் லிங்கை கொடுத்திருக்கணும். மனுஷன் அதுக்கப்புறம் தினத்தந்தி கூட படிக்க மாட்டாரு இல்லை//
இது எனக்கு தோணாம போச்சே. கேபிள்புராணம் தண்டனையா?
வர்ற வழில போலீஸ் பிடிச்சிட்டார். அவங்க ரெண்டு பேரு. நாங்க ஆறு பேரு மூணு வண்டில.
//
அப்ப பிரச்சனையே இல்லையே..ஹி..ஹி
அப்புறம், வேறேதும் படத்துக்கு போகவேயில்லையா? ரமேஷ்!!
உண்மையிலேயே கொஞ்சம் - பெரிய தண்டனை தாங்கோ!
கொஞ்சமா?? பெரியவா??
@பட்டா நீங்க என்ன சொல்ல வர்றீக?
@ வாசன் நாங்க அப்படி எல்லாம் உடனே திருந்திட மாட்டோம்
@ அண்ணாமலை ரொம்ப கஷ்டமுங்க
நீங்க சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லலையா? டெரர் ஆகியிருப்பாங்களே...
//நீங்க சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லலையா? டெரர் ஆகியிருப்பாங்களே...//
மாமூல்ல ஷேர் கேட்டுடாங்கன்னா?
ha ha
நல்லவேளை. போலிசோட விட்டீங்க.
இதை அந்தப் படத்தோட டைரக்டர் கேட்டிருந்தா என்ன ஆயிருக்கும்.
//இதை அந்தப் படத்தோட டைரக்டர் கேட்டிருந்தா என்ன ஆயிருக்கும். //
தூக்குல தொங்கிருப்பார்
ஒரு தடவை பார்த்தது பெரிய சாதனையா?. நாங்களெல்லாம் பல தவை படத்தோட ட்ரெய்லர பார்த்தவைங்க?.
Jeyakumar.G
Chennai-92
ஒரு தடவை பார்த்தது பெரிய சாதனையா?. நாங்களெல்லாம் பல தவை படத்தோட ட்ரெய்லர பார்த்தவைங்க?.
Jeyakumar.G
Chennai-92
//ஒரு தடவை பார்த்தது பெரிய சாதனையா?. நாங்களெல்லாம் பல தவை படத்தோட ட்ரெய்லர பார்த்தவைங்க?.
//
thairiyasaalithaan neenga
வர்ர படத்தில் 2,3தவிர மீதியெல்லாம் அப்படிதான் இருக்கு எவ்வளவு பண விரயம்,நேர விரயம்...
//வர்ர படத்தில் 2,3தவிர மீதியெல்லாம் அப்படிதான் இருக்கு எவ்வளவு பண விரயம்,நேர விரயம்... //
அது உண்மைதான்
//இத விட அந்த போலீஸ் எங்களுக்கு பெரிய தண்டன கொடுக்கவே முடியாது. இந்த மாதிரி கொடுமையான தண்டனையை யாராவது அனுபவிச்சிருக்கீங்களா?
//
அதே படத்தை இன்னொரு தடவை பாக்கனும்னு சொல்லியிருந்தா அது மிகப் பெரிய தண்டனையா இருந்திருக்காது?
//அதே படத்தை இன்னொரு தடவை பாக்கனும்னு சொல்லியிருந்தா அது மிகப் பெரிய தண்டனையா இருந்திருக்காது? //
என் இந்த கொலை வெறி
கருத்துரையிடுக