சனி, ஜூன் 5

பதிவர் சந்திப்பும் ஏமாற்றமும்

இன்னிக்கு சாயந்தரம் நண்பர் பேனா மூடி ஆனந்த் கிட்ட பதிவர் சந்திப்புக்கு போகலாமா என்று கேட்டேன். இல்ல, இப்ப ஏகப்பட்ட பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு வேணாமே என்றார் நண்பர். இல்லப்பா நான் இருக்கேன் நான் பாத்துக்கின்னு சொல்லி அவரை தைரியப்படுத்தி(க்கும் நானே என்னை தைரியப் படுத்துறதுக்கு  நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்) ஒரு வழியாக இருவரும் கிளம்பினோம்.

ஆனந்த் யாராவது எந்த கட்சின்னு கேட்டா எந்த கட்சில கூட்டம் அதிகமா இருக்கோ அந்த கட்சிய சொல்லிடுவோம்னு அவர்கிட்ட சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன்.

இருந்தாலும் நாம போறது பதிவர் சந்திப்புக்குதானே அதனால LIC க்கு போய் ஒரு பாலிசி எடுத்துப்போம்னு ரெண்டு பெரும் LIC போய் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்து விட்டு கிளம்பும்போது LIC ஏஜென்ட் என்னிடம் கேட்டார் "சார் நீங்க இப்ப எங்க போறீங்க".

பதிவர் சந்திப்புக்கு போறோம்னு சொன்னதும் சாரி சார் சாயந்தரம் பாலிசி போட்டுட்டு இரவே Claim பண்றதுக்கு வழி இல்லை தயவு செய்து பாலிசியை கேன்சல் பண்ணிட்டு போங்க அப்படின்னு சொல்லிட்டு பாலிசிய வேற கேன்சல் பண்ணிட்டாங்க.

சரி என்ன பண்றது விதி வலியதாச்சே, எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமான்னு கிளம்பி மெரீனா பீச்சுக்கு போனோம். ஆறு மணிக்கு நண்பர்கள் எல்லோரும் வந்துட்டாங்க. சரி இன்னைக்கு செம பிரச்சனை நடக்கும் எதுக்கும் ரத்தக் களரிக்கு ரெடியா இருடா கைப்புள்ளன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். எனக்குதான் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்புடுற மாதிரி ஆச்சே. விடுவமா நாங்க!!!

ரெண்டு மணி நேரம் பதிவர் சந்திப்பு நடந்தும் ஒரு கூச்சல் இல்லை, கூக்குரல் இல்லை, குழப்பம் இல்லை,சண்டை இல்லை. என்னடா இது பதிவர் சந்திப்புக்கு வந்துட்டு சட்டை கிழியாம போன எவனாவது மதிப்பானா? என்னய்யா இது?

உங்களை நம்பி வந்தா இப்படி ஏமாத்திபுட்டீங்களே!! இது நியாயமா நண்பர்களே. அமைதியா பதிவர் சந்திப்பு நடந்ததுன்னு சொன்னா அடுத்தவன் அசிங்கமா திட்ட மாட்டானா? நம்மளை எப்படி பிராப்ள சாரி பிரபல பதிவர்னு மதிப்பாங்க?

இனிமே என்னை அடுத்த சந்திப்புக்கு கூப்புடாதீங்க. செந்தில் அண்ணா நீங்க உடனே ஆத்திரப்பட்டு,கோபப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, காஞ்சிப்பட்டு,பனாரஸ்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிறாதிங்க. எதுனாச்சும் பேசி தீத்துக்கலாம்.

அப்புறம்தான் யோசிச்சேன் இதுக்கு என்ன காரணம்னு. காந்தி சிலைக்கு பக்கத்துல பதிவர் சந்திப்ப வச்சா இப்படித்தான் அகிம்சையா இருக்கும். அடுத்த தடவ இடத்த மாத்துங்கப்பா!!
.
.
டிஸ்கி: இது சிரிக்க மட்டும்தான்(சிரிப்பு வரலைன்னா நிர்வாகம் பொறுப்பேற்காது). நோ Bad Words ப்ளீஸ்....
...
.

32 கருத்துகள்:

LOSHAN சொன்னது…

நல்ல செய்தி சொன்னீங்க.. :)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

லொள்ளு திலகம் ஐயா நீர் ...

நியூ வாட்டர் குடிச்சா இப்படிதான் ஆகும் ..
ஆமா உங்க அட்ரெஸ் என்ன?...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமா உங்க அட்ரெஸ் என்ன?...//

வீட்டுக்கு வாங்க சொல்றேன். ஹி ஹி

@ //நல்ல செய்தி சொன்னீங்க.. :)//
நன்றி LOSHAN

கலாநேசன் சொன்னது…

//அப்புறம்தான் யோசிச்சேன் இதுக்கு என்ன காரணம்னு. காந்தி சிலைக்கு பக்கத்துல பதிவர் சந்திப்ப வச்சா இப்படித்தான் அகிம்சையா இருக்கும். அடுத்த தடவ இடத்த மாத்துங்கப்பா!!//

அப்போ அடுத்த சந்திப்பு எங்கே?
கண்ணகி சிலை பக்கதுலையா?

இராமசாமி கண்ணண் சொன்னது…

அடிச்சு ஆடு நண்பா. சிரிச்சு தாங்கல எனக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்போ அடுத்த சந்திப்பு எங்கே?கண்ணகி சிலை பக்கதுலையா?//
ஏன் பாஸ் சென்னையை ஏறிக்குரதுக்கா?

@ ராம்ஸ்
இன்னிக்குதான் உருப்படியா கமென்ட் போட்டுருக்க. கககபோ

ரோஸ்விக் சொன்னது…

இது சிரிப்பு போலீஸ்னு தெரியாமா... சண்டை போடாம பயந்து போய் இருந்திருப்பாங்க...
பேசுன மேட்டரை போடாம... இப்புடி காமெடி மட்டும் போட்டா நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது ராசா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பேசுன மேட்டரை போடாம... இப்புடி காமெடி மட்டும் போட்டா நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது ராசா...?//

கவலைப்படாதீங்க ரோஸ்விக் இன்னும் ஒருவாரத்துக்கு எல்லோரும் இததான் எழுதுவாங்க.. நாம் படிச்சு தெரிஞ்சுக்கலாம். (நானே பதிவ படிச்சுத்தான் என்ன பேசிநோம்ன்னு தெரிஞ்சுக்குவேன்)

ஜானகிராமன் சொன்னது…

பதிவர் சந்திப்புல கலந்துக்காதவகங்கல நைட்டு 11மணிக்கெல்லாம் பயமுறுத்தி டர்ரியல் ஆக்குவதில் அப்படி என்ன ஆசை சிரிப்பு? ஆமா நைட்டு 12.56க்கு கூட பின்னுட்டத்துக்கு பின்னுட்டம் போட்டுட்டு இருக்கீங்களே, உங்களோட சின்சியாரிட்டிக்கே நம்ம பதிவர் குரூப்பு பின்னாடி கட்சியா மாறினா கொ.ப.செ வா உங்களை போடலாம்ன்னு பரிந்துரை இப்பவே செய்யறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாங்க கடமைன்னு வந்த்துட்டா எருமையா மாறிடுவோம்..

//கொ.ப.செ வா உங்களை போடலாம்ன்னு பரிந்துரை இப்பவே செய்யறேன்.//

எந்த க்ரூப்புல?

அனு சொன்னது…

//ரெண்டு மணி நேரம் பதிவர் சந்திப்பு நடந்தும் ஒரு கூச்சல் இல்லை, கூக்குரல் இல்லை, குழப்பம் இல்லை,சண்டை இல்லை. என்னடா இது பதிவர் சந்திப்புக்கு வந்துட்டு சட்டை கிழியாம போன எவனாவது மதிப்பானா? என்னய்யா இது?//

ஏன் இந்த கொலைவெறி??
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு..

காவேரி கணேஷ் சொன்னது…

சென்னை பதிவர் சந்திப்பு –தொகுப்பு,புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com/2010/06/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏன் இந்த கொலைவெறி??
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு..//

என்ன பண்றது அனு நாமதான் பிராப்ள சாரி பிரபல் பதிவர் ஆச்சே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி காவேரி கணேஷ்

மதுரை சரவணன் சொன்னது…

nakaichchuvaiyaai ethaarththamaai pakirnthulleer. vaalththukkal.

பேநா மூடி சொன்னது…

ஒழுங்கா இருக்கும் கூட்டத்தில் ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட் ரமேஷ் ஒழிக!

பேநா மூடி சொன்னது…

ஒழுங்கா இருக்கும் கூட்டத்தில் ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட் ரமேஷ் ஒழிக!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒழுங்கா இருக்கும் கூட்டத்தில் ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட் ரமேஷ் ஒழிக!//

ஆனந்த் நீயும் கட்சி மாறிட்டியே!!

நன்றி மதுரை சரவணன்

தமிழ் உதயம் சொன்னது…

காந்தி சிலைக்கு பக்கத்துல பதிவர் சந்திப்ப வச்சா இப்படித்தான் அகிம்சையா இருக்கும்.

காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ தமிழ் உதயம் நன்றி

King Viswa சொன்னது…

அண்ணே, ரமேஷ் அண்ணே,

எப்படியாவது இந்த பதிவர் சந்திப்புல ஒரு கலவரத்த உண்டு பண்றேன் என்று நீங்க பெட் கட்டியது அம்பேலா? :)

பெட்டிலே தோத்ததுக்கு எப்போ டிரீட்?

KVR சொன்னது…

சூப்பர் :-))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கிங் விஸ்வா
இனிமே பெட் கட்டமாட்டேன். ட்ரீட் க்கு பதிலா அடுத்த சினிமா புதிர்கள்ள உங்களுக்கு பாஸ் மார்க் போட்டுடலாம்.

@ நன்றி KVR

King Viswa சொன்னது…

தானே பாஸ் மார்க் போட்ட தானைத் தலைவர் வாழ்க.

அ.சலீம் பாஷா சொன்னது…

கொஞ்ச நாளாவே சிரிக்க மறந்துப் போச்சு தலைவா? எப்படி சிரிக்கனும்னு கொஞ்சம் சொல்லிதாங்களேன் புண்ணியமாபோகும்!

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

நீ அடிச்சு ஆடு மாப்ள,,,

பிரேமா மகள் சொன்னது…

ஏன் பாஸ் இப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கொஞ்ச நாளாவே சிரிக்க மறந்துப் போச்சு தலைவா? எப்படி சிரிக்கனும்னு கொஞ்சம் சொல்லிதாங்களேன் புண்ணியமாபோகும்!//

விஜய் படம் பாருங்க. அப்பாடா வசந்த் இங்க இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏன் பாஸ் இப்படி?//
என்ன பண்றது பிரேமா மகள் ரத்த பூமில வாழ்ந்து பழகிடுச்சு..

//நீ அடிச்சு ஆடு மாப்ள,,,///

ரொம்ப நன்றி வசந்த்..

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

இப்படியெல்லாம் உப்புச் சப்பில்லாம நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் பதிவர் சந்திப்புக்கே போகலை!
பி கேர்புல்......நான் என்னையச் சொன்னேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பி கேர்புல்......நான் என்னையச் சொன்னேன். //

repeattuuuuuuuuuuuuuuu

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ அந்த காந்தி சிலைக்கு பக்கத்துல உனக்கும் ஒரு சிலை வெக்கிறோம்...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது