ஞாயிறு, ஜூன் 20

ராங்நம்பர்

நேத்து இரவு ரெண்டு மணி இருக்கும். நல்ல தூக்கம். அப்போ எனக்கு ஒரு போன் வந்தது.

எதிர் முனை: சார் நான் அயனாவரத்துல இருந்து ஆறுமுகம் பேசுறேன்

நான்: சொல்லுங்க ஆறுமுகம் என்ன விஷயம்

எதிர் முனை: போலீஸ் ஸ்டேசனா?

நான்: இல்லைங்க. நான் ரமேஷ் பேசுறேன்

எதிர் முனை: சார் போலீஸ் ஸ்டேஷன் அப்டின்னு சொல்லி இந்த நம்பர் தான் கிடைச்சது

நான்: யார் கொடுத்தா?

எதிர் முனை: நெட்ல போலீஸ்ன்னு போட்டு தேடினேன்

நான்:  (ஐயோ உணமையான போலிஸ தேடுனா நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக் தான் கிடைக்குதோ). என்ன வேணும்ங்க உங்களுக்கு? ரெண்டுமணிக்கு டார்ச்சேர் பண்றீங்க!!!

எதிர் முனை: சார் எங்க வீட்ல நாங்க ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நகை, பணம் எல்லாம் காணாம போயிடுச்சு. நீங்கதான்  கண்டு பிடிச்சு தரனும்
 
நான்: யோவ் நீ எதுக்குயா ஊருக்கு போன.  நான் ஒரிஜினல் போலீஸ் இல்லையா. நான் சிரிப்பு போலீஸ். பிரபல பதிவர்(நம்மலா சொல்லிக்கிட்டாத்தான் உண்டு)

எதிர் முனை:  என்னது சினிமா போலீசா? வால்டர் வெற்றிவேல், சாமி, சேதுபதி IPS எல்லாம் உங்க கூட வேலை பாக்கிறவங்களா சார்?

நான்: யோவ் அது சினிமா போலீஸ். நான் சிரிப்பு போலீஸ்.(சிரிப்பு போலீஸ் அப்படின்னா சிங்கம் படத்துல வர்ற விவேக் உங்க சொந்தக்காரனான்னு கேப்பானோ?)

எதிர் முனை: சார் நீங்கதானா அது. உங்களைதான் தேடிகிட்டு இருந்தேன்.

நான்: (என்னது என்னை தேடிகிட்டு இருந்தியா. ஒருவேளை என்னை கொலைவெறியோட தேடிகிட்டு இருக்குற பட்டாபட்டியோட ஆளா இருக்குமோ. எதுக்கும் கொஞ்சம் அலார்ட்டாவே இருப்போம். பாதுகாப்பு கேட்டு நம்ம சங்க தலைவி அனுவுக்கு கடிதம் எழுதனுமோ!!!). எதுக்குயா என்னை தேடுன.

எதிர் முனை: சார் வீட்டுக்கு வந்த திருடன் நகை, பணம் மட்டும் எடுத்துட்டு போகல. குருவி,வில்லு,வேட்டைக்காரன்,சுறா மாதிரி சிரிப்பு படங்களோட டீவீடி எல்லாம் எடுத்துட்டு போயிருக்கான். கட்டாயம் திருடனும் சிரிப்பு பிடிச்சவனாத்தான் இருக்கணும். நீங்கதான் சிரிப்பு போலீஸ் ஆச்சே. அந்த சிரிப்பு திருடன பிடிச்சு கொடுங்க சார்.

நான்: (சனியன் விட மாட்டான் போல). யோவ் திருடன் குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா மாதிரி சிரிப்பு படங்களோட டீவீடி எல்லாம் எடுத்துட்டு போயிருக்கான். எப்படியும் தற்கொலை பண்ணிக்குவான்.  நாளைக்கு காலைல தற்கொலை பண்ணிகிரவங்க லிஸ்ட் எடுத்து அதுல சர்ச் பண்ணினா உன் நகையை அமுக்கிடலாம். கவலை படாதே.

எதிர் முனை: சார், நீங்க எங்கயோ போயிட்டீங்க. நீங்க எவ்ளோ நல்லவங்க. உங்களை மாதிரி புத்திசாலிங்க இந்த உலகத்திலையே  இல்லை சார்.

நான்: உனக்கு தெரியுது. இந்த பதிவர்களுக்கு தெரிய மாட்டீங்குதே.  நீதான்  ஊருக்குள்ள போய் சொல்லணும். ரமேஷ் அண்ணன் ரொம்ப நல்லவரு. வல்லவரு. தங்கமானவருன்னு. கெட்டிக்காராறு பதிவு எழுதுறதுல அப்டின்னு.

எதிர் முனை: சரி சார். நான் வேணா tamilbloggerforum ல மெயில் அனுப்பிடவா.

நான்: வேணாம்ப்பா. அங்க மதார்,சாந்தி,ஜெயந்தி, அகல் விளக்கு, ஸ்ரீனிவாசா ராகவன் அப்டின்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க மேட்டரே இல்லைனாலும் ஒருவாரம் மொக்கை போடுவாங்க.

 நீ என்னைபத்தி சொன்னேன்னா அவங்க போதைக்கு  ஒரு மாசமோ, ஒரு வருசமோ என்னை ஊறுகாய் ஆக்கிடுவாங்க. என்னை ஆளை விடு. இப்ப அது வேற பிரச்சனைல ஓடிட்டு இருக்கு. பின்ன எல்லோரும் tamilbloggerforum ல இருந்து வெளில வந்துடுவாங்க.
பிறகு "தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்" அப்டின்னு பதிவை போட்டுட்டு சுடிதார் விக்க போயிடுவாங்க. இது தேவையா எனக்கு. அந்த பாவத்துக்கு நான் ஆளாக மாட்டண்டா சாமி.

எதிர் முனை: சார் அப்ப அந்த நகை பணம்

நான்: கம்பனி நஷ்டத்துல ஓடுது. ஒரு வேளை கிடைச்சா அதை கம்பனி வளர்ச்சி நிதிக்கு எடுத்துப்போம். அப்புறம் ஒரு அட்வான்சா ஒரு 50000 ரூபாய் கொண்டுவா.

எதிர் முனை: (போன் கட்)

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அந்த போனை பண்ணினது யாரு?

62 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பட்டபடியோட ஆளுன்னு சூசகமா சொல்றியா நீயு ..
எப்படியாவது உன்னோட அட்ரெஸ் தருவேன்னு போன் பண்ணா சிக்க மாட்டேன்றியே ..

இப்ப உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா ....

இப்படிக்கு,
பிராப்ள பதிவர் ....

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//அயனாவரத்துல இருந்து ஆறுமுகம்//
"அ"க்கு "ஆ"வா செம்மொழி பாதிப்பா?????????

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//நேத்து இரவு ரெண்டு மணி இருக்கும். நல்ல தூக்கம்//

ந‌ல்ல‌ தூக்க‌த்துல‌ எப்ப‌டி ரெண்டு ம‌ணின்னு தெரியும்??

ஜில்தண்ணி சொன்னது…

ரமேஷ் அண்ணே

நாளைக்கே கூட விஜய்க்கு பதிலா காமெடி ஹீரோவாக வாய்ப்பு பிரகாசமா இருக்கு

நடத்துங்க

LK சொன்னது…

kandippa auto confirm

ஜெயந்தி சொன்னது…

நீங்க மட்டும் மேட்டரோட மொக்கை போடுற மாதிரி நெனப்பு.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

வேற யாரு பட்டாபட்டியாத்தான் இருக்கும்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எப்படியாவது உன்னோட அட்ரெஸ் தருவேன்னு போன் பண்ணா சிக்க மாட்டேன்றியே ..இப்ப உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா ....
//
என்னோட அட்ரஸ் வேணும்னா பட்டாபட்டியை தொடர்புகொள்ளுங்கள்

//ந‌ல்ல‌ தூக்க‌த்துல‌ எப்ப‌டி ரெண்டு ம‌ணின்னு தெரியும்??//
போன் பண்ணினவன் சொன்னான்

/"அ"க்கு "ஆ"வா செம்மொழி பாதிப்பா?????????//
அட ஆமாங்க(இதுலயும் அ ஆ வா?)

//kandippa auto confirm//
மீட்டர் வச்சதா வக்காததா?

//நாளைக்கே கூட விஜய்க்கு பதிலா காமெடி ஹீரோவாக வாய்ப்பு பிரகாசமா இருக்கு//
நிஜம்மாவா சொல்றீங்க!!!

//நீங்க மட்டும் மேட்டரோட மொக்கை போடுற மாதிரி நெனப்பு.//

மொக்கை எனப்படுவது யாதெனில்....

//வேற யாரு பட்டாபட்டியாத்தான் இருக்கும்!!!//

இருக்கும்ங்க அந்தாளு என்னை கொலைவெறியோட தேடிட்டு இருக்கார்

அருண் பிரசாத் சொன்னது…

ரமேசு, விஜய் மேல செம காண்டு போல கிடைக்கிற கேப்புல எல்லாம் கலாய்கிறீங்க.

நடத்துங்க, நடத்துங்க

இராகவன் நைஜிரியா சொன்னது…

// நேத்து இரவு ரெண்டு மணி இருக்கும். நல்ல தூக்கம். //

ரெண்டு மணிக்கு நல்ல தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் ஒரு நல்ல மருத்தவரைப் பார்க்க வேண்டும்.

ஒரு பலத்த சந்தேகம்... தூக்கத்தில் நல்ல தூக்கம் / கெட்ட தூக்கம் என்ற பாகுபாடு இருக்கா என்ன?

இராகவன் நைஜிரியா சொன்னது…

// சொல்லுங்க ஆறுமுகம் என்ன விஷயம் //

நல்ல (!) தூக்கத்தில் கூட பேரைக் கேட்டு, பதிலில் அவர் பேரை சேர்த்த நீங்க ரொம்ப நல்லவருங்கோ..

இராகவன் நைஜிரியா சொன்னது…

// சார் நான் அயனாவரத்துல இருந்து ஆறுமுகம் பேசுறேன் //

அயனாவரம் ஆறுமுகம்... எதுகை மோனை கூட நல்லா வருதுங்க...

இராகவன் நைஜிரியா சொன்னது…

// நெட்ல போலீஸ்ன்னு போட்டு தேடினேன் //

பரவாயில்லையே.. சூப்பரா ஆயிட்டீங்க..

போலீஸ் என்று நெட்டில் போட்டாலே உங்க பேரு வருதா...

அண்ணே எங்கேயோ போயிட்டீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமேசு, விஜய் மேல செம காண்டு போல கிடைக்கிற கேப்புல எல்லாம் கலாய்கிறீங்க.//

அப்படியெல்லாம் இல்லைங்கோ. வசந்திகளை, ச்சீ வதந்திகளை நம்பாதீங்க

இராகவன் நைஜிரியா சொன்னது…

// கம்பனி நஷ்டத்துல ஓடுது. ஒரு வேளை கிடைச்சா அதை கம்பனி வளர்ச்சி நிதிக்கு எடுத்துப்போம். அப்புறம் ஒரு அட்வான்சா ஒரு 50000 ரூபாய் கொண்டுவா. //

சிரிப்பு போலிசா இருக்கும் போதே 50,000 கேட்கறீங்களே... நிஜ போலிசா இருந்தா... அம்மாடியோவ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு பலத்த சந்தேகம்... தூக்கத்தில் நல்ல தூக்கம் / கெட்ட தூக்கம் என்ற பாகுபாடு இருக்கா என்ன?/

ஆமாங்க தூக்கத்துல நமிதா,த்ரிஷா,தமன்னா வந்தா நல்ல தூக்கம். சூர்யா,விஜய்,விக்ரம் வந்தா கேட்ட தூக்கம்

இராகவன் நைஜிரியா சொன்னது…

// உனக்கு தெரியுது. இந்த பதிவர்களுக்கு தெரிய மாட்டீங்குதே. நீதான் ஊருக்குள்ள போய் சொல்லணும். ரமேஷ் அண்ணன் ரொம்ப நல்லவரு. வல்லவரு. தங்கமானவருன்னு. கெட்டிக்காராறு பதிவு எழுதுறதுல அப்டின்னு. //

இதுல சந்தேகம் வேறய... எங்களுக்கே தெரியுமே... வல்லவரு, நல்லவரு.. அப்படின்னு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அயனாவரம் ஆறுமுகம்... எதுகை மோனை கூட நல்லா வருதுங்க...//
//நல்ல (!) தூக்கத்தில் கூட பேரைக் கேட்டு, பதிலில் அவர் பேரை சேர்த்த நீங்க ரொம்ப நல்லவருங்கோ..//

என்னை ரொம்ப புகழாதீங்க

//போலீஸ் என்று நெட்டில் போட்டாலே உங்க பேரு வருதா...//

நான் தான் பிராப்ள சாரி பிரபல பதிவராச்சே. பின்ன இருக்காதா?

இராகவன் நைஜிரியா சொன்னது…

// வேணாம்ப்பா. அங்க மதார்,சாந்தி,ஜெயந்தி, அகல் விளக்கு, ஸ்ரீனிவாசா ராகவன் அப்டின்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க மேட்டரே இல்லைனாலும் ஒருவாரம் மொக்கை போடுவாங்க. //

அப்படி வாங்க வழிக்கு..

மொக்கை அடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டம் போட்டு செல்பவராவார்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// சரி சார். நான் வேணா tamilbloggerforum ல மெயில் அனுப்பிடவா. //

அப்ப இந்த அ.ஆ (அயனாவரம் ஆறுமுகம்) என்பவரும் ஒரு பதிவராகத்தான் இருக்க முடியும்..

பதிவர்கள்தான் இந்த ஃபோரமில் இணைந்து இருக்கின்றனர்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// நீ என்னைபத்தி சொன்னேன்னா அவங்க போதைக்கு ஒரு மாசமோ, ஒரு வருசமோ என்னை ஊறுகாய் ஆக்கிடுவாங்க. //

போதையே நீங்கதாங்க... ஊறுகாய் எல்லாம் வேற..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கை அடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டம் போட்டு செல்பவராவார்.//

இதை நான் செம்மொழி மாநாட்டுக்கு அனுபுறேன் நண்பரே. அப்புறம் தெரியும் உங்களுக்கு.

//இதுல சந்தேகம் வேறய... எங்களுக்கே தெரியுமே... வல்லவரு, நல்லவரு.. அப்படின்னு//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

//அப்ப இந்த அ.ஆ (அயனாவரம் ஆறுமுகம்) என்பவரும் ஒரு பதிவராகத்தான் இருக்க முடியும்..//

என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு. நீங்க பிறவிலையே இப்படியா. இல்லை திடீர்ன்னு இந்த ஞானம் வந்ததா?

இராகவன் நைஜிரியா சொன்னது…

// எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அந்த போனை பண்ணினது யாரு? //

யாருப்பா அது... உண்மையைச் சொல்லிடுங்க...

இராகவன் நைஜிரியா சொன்னது…

// சார் அப்ப அந்த நகை பணம் //

ஏவ்... ஒன்னுமில்ல ஏப்பம்..

இராகவன் நைஜிரியா சொன்னது…

மீ த 25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிரிப்பு போலிசா இருக்கும் போதே 50,000 கேட்கறீங்களே... நிஜ போலிசா இருந்தா... அம்மாடியோவ்..//
சொத்தையே(பல் சொத்தை இல்லைங்க) கேப்போம்

//போதையே நீங்கதாங்க... ஊறுகாய் எல்லாம் வேற..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//ஏவ்... ஒன்னுமில்ல ஏப்பம்..// //யாருப்பா அது... உண்மையைச் சொல்லிடுங்க...//

ஆமா ஆமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25 kku thanks

King Viswa சொன்னது…

ரெண்டு மணிக்கு போன் பண்ணக் கூடாதுன்னு தானே இந்த பதிவு? அப்போ இன்னிக்கு ராத்திரி ஒரு மூணு மணிக்கு போன் பண்ணலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரெண்டு மணிக்கு போன் பண்ணக் கூடாதுன்னு தானே இந்த பதிவு? அப்போ இன்னிக்கு ராத்திரி ஒரு மூணு மணிக்கு போன் பண்ணலாமா?//

நீங்கள் டயல் செய்த எண்ணிற்கு சொந்தக்காரர் புல் மப்பில் இருப்பதால் சிறிது மாதங்களுக்கு பிறகு தொடர்பு கொள்ளவும்

KVR சொன்னது…

சிரிப்புப் போலீஸ் - அடிச்சி ஆடுங்க :-)

ப.செல்வக்குமார் சொன்னது…

///நான்: யோவ் அது சினிமா போலீஸ். நான் சிரிப்பு போலீஸ்.(சிரிப்பு போலீஸ் அப்படின்னா சிங்கம் படத்துல வர்ற விவேக் உங்க சொந்தக்காரனான்னு கேப்பானோ?)///

siripppu police na vadivelunka... antha maruthamalai padathula solluvaankalla...

நாடோடி சொன்னது…

போலிஸ்கார்.. போலிஸ்கார்... நீங்க‌ சொன்ன‌ ஆட்ட‌த்தில் ஸ்டீப‌ன் ஸ்டீப‌னு ஒருத்த‌ன் சுத்தினானே அவ‌னை க‌ண்டு பிடிச்சீங்க‌ளா?....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி KVR

//siripppu police na vadivelunka... antha maruthamalai padathula solluvaankalla...//

தெரியும் ஆனா தெரியாது...

//போலிஸ்கார்.. போலிஸ்கார்... நீங்க‌ சொன்ன‌ ஆட்ட‌த்தில் ஸ்டீப‌ன் ஸ்டீப‌னு ஒருத்த‌ன் சுத்தினானே அவ‌னை க‌ண்டு பிடிச்சீங்க‌ளா?....//

அந்த திருட்டுபயலதான் நானும் தேடிட்டு இருக்கேன்

நாடோடி சொன்னது…

//அந்த திருட்டுபயலதான் நானும் தேடிட்டு இருக்கேன்///

அப்ப‌டியா போலிஸ்கார்.... க‌ண்டுபிடிச்ச‌து க‌ரெக்டா சொல்லிர‌ணும்...

இராமசாமி கண்ணண் சொன்னது…

கலக்கு நண்பா. பின்ற

பட்டாபட்டி.. சொன்னது…

யோவ்.வருங்கால தலைவனைப் பார்த்து இப்படி சொல்லீட்டியே.. உனக்கு மந்திரி சபையில இடம் இல்ல....ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

1 ரூபா போட்டு போன் பன்ணின நேரத்திஅல் ஷேர் ஆட்டோ ஏறி..போட்டு தள்ளிட்டு வந்திருக்கலாம்..

சே..வடை போச்சே...
ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

எதுக்கும் “சிந்தனைப் போலீஸ்”னு பேரை..வாஸ்துக்காக மாத்திப்பாருங்களேன்..ரமேஸ் அவர்களே...

Riyas சொன்னது…

சூப்பர்,,, கலக்கல்

அனு சொன்னது…

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அந்த போனை பண்ணினது யாரு?//

அது நிஜமா நான் இல்லைங்கோ..

// ஒருவேளை என்னை கொலைவெறியோட தேடிகிட்டு இருக்குற பட்டாபட்டியோட ஆளா இருக்குமோ. பாதுகாப்பு கேட்டு நம்ம சங்க தலைவி அனுவுக்கு கடிதம் எழுதனுமோ!!!//

என்னாது?? தப்பு பண்ணிட்டியே தம்பி.. என் பதவிக்கு ஆப்பு வைக்க நீங்க ரகசியமா ஐடியா பண்ணிட்டு இருக்குறத கேள்விப்பட்டதில இருந்து நானே உங்களை போட்டுத் தள்ள தான் ஆள் தேடிட்டு இருக்கேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னாது?? தப்பு பண்ணிட்டியே தம்பி.. என் பதவிக்கு ஆப்பு வைக்க நீங்க ரகசியமா ஐடியா பண்ணிட்டு இருக்குறத கேள்விப்பட்டதில இருந்து நானே உங்களை போட்டுத் தள்ள தான் ஆள் தேடிட்டு இருக்கேன்..//

என்ன வார்த்தை சொல்லிடீங்க தலைவி. இது என் அரசியல் எதிகாலத்தை பாதிக்காதா? வெள்ளிபில்லையார் மேல சத்தியமா..(தாமிரபரணி ஸ்டைல் ல படிக்கவும்)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

/////நான்: கம்பனி நஷ்டத்துல ஓடுது. ஒரு வேளை கிடைச்சா அதை கம்பனி வளர்ச்சி நிதிக்கு எடுத்துப்போம். அப்புறம் ஒரு அட்வான்சா ஒரு 50000 ரூபாய் கொண்டுவா./////


ஆட்டோ வரும் காத்திருங்கள் .

பிரேமா மகள் சொன்னது…

நீங்கதான் காசு குடுத்து அந்த ஆளை போன் பண்ண வைச்சிருப்பீங்க..

புன்னகை தேசம். சொன்னது…

பிளாகர் இராகவன் நைஜிரியா கூறியது...

// வேணாம்ப்பா. அங்க மதார்,சாந்தி,ஜெயந்தி, அகல் விளக்கு, ஸ்ரீனிவாசா ராகவன் அப்டின்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க மேட்டரே இல்லைனாலும் ஒருவாரம் மொக்கை போடுவாங்க. //

அப்படி வாங்க வழிக்கு..

மொக்கை அடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டம் போட்டு செல்பவராவார்.
------அதேய் அதேய்..

ஒழுங்கா மொக்கை போட்டுங்க இல்லாட்டி இனி கால்களோடு கைகளும் தொடரும்னு மொக்கை சங்கம் சார்பா மருவாதையா சொல்லிக்கிறோம்..

பெயரில்லா சொன்னது…

Nalla irukku... Ramesh....Best Wishes...

//நாளைக்கே கூட விஜய்க்கு பதிலா காமெடி ஹீரோவாக வாய்ப்பு பிரகாசமா இருக்கு//

Ethu Romba Poruthama Irukkum..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அந்த போனை பண்ணினது யாரு?//

ஹி..ஹி..!

வெங்கட் சொன்னது…

நல்லவேளை உங்களுக்கு
நம்ம அருண் மேல சந்தேகம் வரலை..

ஓ.. சாரி.., நான் ஏதாவது
உண்மைய உளறிட்டேனா..??!
Please அதை ரப்பர் போட்டு
அழிச்சிடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீங்கதான் காசு குடுத்து அந்த ஆளை போன் பண்ண வைச்சிருப்பீங்க..//

இப்ப தெரிஞ்சு போச்சுங்க. யார் போன் பண்ணினதுன்னு...

//ஒழுங்கா மொக்கை போட்டுங்க இல்லாட்டி இனி கால்களோடு கைகளும் தொடரும்னு மொக்கை சங்கம் சார்பா மருவாதையா சொல்லிக்கிறோம்..//

ஐயோ மன்னிச்சிடுங்க சாந்தி மேடம். எனக்கு பயமாகீது.....................

@ ரொம்ப நன்றி பெயரில்லா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்ப‌டியா போலிஸ்கார்.... க‌ண்டுபிடிச்ச‌து க‌ரெக்டா சொல்லிர‌ணும்...//

Definitly Definitly

@ நன்றி ராம்ஸ்

//1 ரூபா போட்டு போன் பன்ணின நேரத்திஅல் ஷேர் ஆட்டோ ஏறி..போட்டு தள்ளிட்டு வந்திருக்கலாம்..//

மீ தி ஈஸ்கப்பு...

//யோவ்.வருங்கால தலைவனைப் பார்த்து இப்படி சொல்லீட்டியே.. உனக்கு மந்திரி சபையில இடம் இல்ல....ஹி..ஹி//

ஏதோ பாத்து பண்ணுங்க பாஸ்.

//எதுக்கும் “சிந்தனைப் போலீஸ்”னு பேரை..வாஸ்துக்காக மாத்திப்பாருங்களேன்..ரமேஸ் அவர்களே...//

பாக்கலாம்

@Riyas நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ நன்றிங்க
@ பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியலையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நல்லவேளை உங்களுக்கு நம்ம அருண் மேல சந்தேகம் வரலை.. ஓ.. சாரி.., நான் ஏதாவது உண்மைய உளறிட்டேனா..??! Please அதை ரப்பர் போட்டு அழிச்சிடுங்க..//

அருண் இன்னுமா நீங்க வெங்கட்டை நம்புறீங்க. நாம அவரோட FarmVille-ல gift அனுப்பாம ஏமாத்திடுவோம். ஹிஹி

பட்டாபட்டி.. சொன்னது…

டிரிங்..டிரிங்..

பட்டாபட்டி.. சொன்னது…

ஹலோ..ஹலோ....என்னையா லைனே கிடைக்கமாட்டீங்குது...

பட்டாபட்டி.. சொன்னது…

ஹலோ..ஹலோ....என்னையா லைனே கிடைக்கமாட்டீங்குது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mobile switched off

MUTHU சொன்னது…

பாஸ் அந்த போன் பண்ணது யாருன்னு எனக்கு தெரியும்,உங்களுக்கு 50000 ரூபாய் வருது அதில் எனக்கு கொஞ்சம் குடுங்க சொல்லுறேன்

பட்டாபட்டி.. சொன்னது…

அப்பாடா. ஒண்ணு டெட்..( போனை சொன்னேன்..இதுக்கும் வெட்ட வராதீங்கப்பா.. நான் பாவம்)

Jey சொன்னது…

ஆருப்பா அது நட்ட நடு ராத்திரி 2 மணிக்கு நம்ம ரெமேஷுக்கு ஃபோன் போட்டு, படம்( பிட்டு படம் இல்லீங்கோ) பாக்குரத தொந்தரவு பன்னிகிட்டு, படவ ராஸ்கல், ஓடிப்போ, தல நீங்க பாருங்க ..சாரி தூங்குங்க தல.

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// அருண் இன்னுமா நீங்க வெங்கட்டை நம்புறீங்க.
நாம அவரோட FarmVille-ல gift அனுப்பாம
ஏமாத்திடுவோம். ஹிஹி //

நீங்க இன்னுமா உங்க சங்கத்தை
நம்பறீங்க.. உங்க சங்கத்தில இருந்து
தினமும் எனக்கு 3 Gift வருது..
முடிஞ்சா அது யார்., யார்னு
கண்டுபிடிச்சுக்கோங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாஸ் அந்த போன் பண்ணது யாருன்னு எனக்கு தெரியும்,உங்களுக்கு 50000 ரூபாய் வருது அதில் எனக்கு கொஞ்சம் குடுங்க சொல்லுறேன்//

முதல்ல அட்ரெஸ். அப்புறம் கமிசன்

//அப்பாடா. ஒண்ணு டெட்..( போனை சொன்னேன்..இதுக்கும் வெட்ட வராதீங்கப்பா.. நான் பாவம்)//
சரி சரி

//நீங்க இன்னுமா உங்க சங்கத்தை நம்பறீங்க.. உங்க சங்கத்தில இருந்து தினமும் எனக்கு 3 Gift வருது.. முடிஞ்சா அது யார்., யார்னு கண்டுபிடிச்சுக்கோங்க..//

எங்க சங்கத்துல உள்ளவங்க எல்லாம் வெள்ளந்திங்க. எல்லோரையும் நம்பும் குணம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…
அப்பாடா. ஒண்ணு டெட்..( போனை சொன்னேன்..இதுக்கும் வெட்ட வராதீங்கப்பா.. நான் பாவம்) //

அப்போ இன்னொண்ணு?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

/// எங்க சங்கத்துல உள்ளவங்க எல்லாம் வெள்ளந்திங்க. எல்லோரையும் நம்பும் குணம் //

என்னையா எங்கள வெள்ளேந்தி பச்சோந்தின்னு திட்டற அப்பறம் நான் எல்லா உண்மையும் சொல்லிடுவேன்...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது