என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

சனி, ஜூன் 19

பிறந்தநாள் வாழ்த்துக்கள் FarmVille

இன்னிக்கு (June-20) Farmville-க்கு முதலாவது பிறந்தநாள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் FarmVille.
வாழ்த்துக்கள் FarmVille Team!!


இப்ப நான் பழைய ஆபீஸ்ல இருந்திருந்தா நிறைய கிப்ட்டும் பார்ம் கேஷும் கிடைத்திருக்கும். வடை போச்சே. சரி இப்ப கடைசி லெவல் 70 ல இருந்து 90ரா மாறிடிச்சு. கலக்குங்க மக்கா.

முதல்ல கேம் அறிமுகமான புதிதில் அனிமல்ஸ் சும்மாதான் இருக்கும். அது நடக்காது. அதை ஹார்வெஸ்ட் பண்ணி சாக்கலேட் மில்க், முட்டை எல்லாம் எடுக்க முடியாது. நாங்க அனுப்பின feedback வச்சுதான் அந்த animals moving option கொண்டு வந்தாங்க. ஒவ்வொரு மாசமும் Incentive அப்படின்னு சொல்லிட்டு 50 இல்லைனா 100 Farmcash ப்ரீயா கிடைக்கும்.

அப்ப neighbours visit பண்ணினா 5XP தான் கிடைக்கும். அங்க போய் உரம் போடவோ கமெண்ட் போடவோ முடியாது. Farm Expansion கூட கிடையாது. கேம் ஆரமித்த புதிதில் என்ன என்ன item இருந்ததுன்னு தெரியணும்னா என்னோட Farm-ல் போய் பாருங்க. நான் நிறைய பொருள்களை அப்படியே வச்சிருக்கேன். அப்புறம் பணம் (coins) இல்லன்னா எல்லாரையும் gift அனுப்ப சொல்லி(முக்கியமா குதிரை. அப்ப அதான் நல்ல விலைக்கு போச்சு) அதை வித்து காசு சேர்ப்போம்.

அப்புறம் நீங்க ஈசியா லெவல் increase பண்ணனும்னா ரிப்பன் earn பண்ணுங்க. உங்க     Farm-ல மார்க்கெட்க்கு மேல ரிப்பன் option இருக்கும். அதுல என்ன என்ன ரிப்பன் கொடுத்துருக்காங்களோ அதை earn பண்ணினாலே போதும். ஈசியா லெவல் கூடலாம். அப்புறம் எல்லா விதைகளுக்கும் mastery earn பண்ணுங்க. அதை வச்சும் லெவல் கூடலாம்.

இந்த FarmVille பிறந்தநாள் அன்னிக்கு ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படுறேன். எங்க office-ல உள்ள 200 பேருல முதல்ல 70 Level Complete பண்ணி முதல்ல கேமை முடித்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்(பயபுள்ள எதுக்கெல்லாம் பெருமை பாரு)

வாழ்க FarmVille, வளர்க விதைகள்(உங்க farm-ல), நாசமாப் போக உங்க டைம்

21 கருத்துகள்:

Chitra சொன்னது…

உங்கள் ஆபீஸ்ல அதிகமா "வேலை" பாக்குற ஆளு நீங்கதான்னு தெரியுது.... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்கள் ஆபீஸ்ல அதிகமா "வேலை" பாக்குற ஆளு நீங்கதான்னு தெரியுது.... :-)//

ஆமாங்க கடமைன்னு வந்துட்டா நாங்க எருமையா கூட மாறத் தயார்

King Viswa சொன்னது…

தயவு செய்து தமிழில், புரியும்படியாக பதிவிடவும்.

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தயவு செய்து தமிழில், புரியும்படியாக பதிவிடவும்//

ஓகே நம்ம ரெண்டு பெரும் செம்மொழி மாநாட்டுக்கு போறோம். ஓகே வா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தயவு செய்து தமிழில், புரியும்படியாக பதிவிடவும்//

ஓகே நம்ம ரெண்டு பெரும் செம்மொழி மாநாட்டுக்கு போறோம். ஓகே வா

King Viswa சொன்னது…

//ஓகே நம்ம ரெண்டு பெரும் செம்மொழி மாநாட்டுக்கு போறோம். ஓகே வா//

அன்பா ரெண்டு அடி அடிங்க, வாங்கிக்குறேன்.
செத்து செத்து விளையாடும் விளையாட்டுக்கு கூட நான் ரெடி. ஆனா, இந்த விளையாட்டுக்கு நான் வரல.

அருண் பிரசாத் சொன்னது…

ரமெஷ், ஒரே நாளுல Level 70 இருந்து 77 போயிடிங்கபோல, வாழ்த்துக்கள்.

ஒரு doubt, Maximum Farm expansion எவ்வளவு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஒரு doubt, Maximum Farm expansion எவ்வளவு?

24X24

//இந்த விளையாட்டுக்கு நான் வரல.//

hi hi

அனு சொன்னது…

ரெண்டு நாளா..,
எங்க வீடு ரொம்ப சுத்தமா இருக்குது..
துணி எல்லாம் neatஆ துவைச்சு அயர்ன் பண்ணப்பட்டிருக்கு..
பாத்திரம் எல்லாம் cleanஆ இருக்கு..
என் வீட்டுகாரருக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது..
ஏன்னு யோசிக்குறீங்களா??

எங்க ஊருல பெய்த தொடர்மழை காரணமாக ரெண்டு நாளா no internet..ஸோ, no farmville..

பி.கு: 90 லெவல் ஆக்குனது எனக்கு சுத்தமா பிடிக்கல.. 70 தானே.. ஒரு மாசத்தில முடிச்சுருலாம்னு சந்தோஷமா இருந்தேன்.. இப்போ... :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எங்க ஊருல பெய்த தொடர்மழை காரணமாக ரெண்டு நாளா no internet..ஸோ, no farmville..//

உங்க வீட்டுக்காரரு வருண பகவானுக்கு கோயில் கட்டி கும்பிடுவாரே? எனக்கும் 90level பிடிக்கலை. எப்படி விளையாடுறது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரமேஷ் நீங்க உண்மையிலயே ரொம்ப நல்லவன் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாவம் உங்க பாஸு! (அவரும் இதுதான் பண்ணிக்கிட்டு இருக்காரா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி . எங்க வேலையே இந்த கேம் சப்போர்ட் தான

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பார்ரா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரமேஷ் ஆன்லைன்ல வாய்யா, நானும் ஜெய்யும் சாட் பன்ணிக்கிடு இருக்கோம்!

அனு சொன்னது…

//உங்க வீட்டுக்காரரு வருண பகவானுக்கு கோயில் கட்டி கும்பிடுவாரே? //

அப்படி எல்லாம் இல்ல.. இருபத்தி நாலு மணி நேரமும் என் நச்சரிப்பை தாங்கி ஆகனுமில்ல.. அதுல ஒரு ரெண்டு மணி நேரத்த FV occupy பண்ணியிருந்தது.. இப்போ அது கட்.. ஹிஹி...

செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்
எதுக்குங்க நீங்க
ஆபீஸ்க்கேல்லாம் போய்கிட்டு
ஓ டீ போட்டுட்டு வீட்லே இருந்துடுங்க....

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ஒத்துக்கிறேன் ச‌த்திய‌மா நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் தான் (அப்புற‌ம் பாஸ் நீங்க‌ கோவில்ப‌ட்டியா?த‌க‌வ‌ல் உப‌ய‌ம் த‌லைவ‌ர் ப‌ட்டாப‌ட்டி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமேஷ் ஆன்லைன்ல வாய்யா, நானும் ஜெய்யும் சாட் பன்ணிக்கிடு இருக்கோம்!///
ஐயோ மிஸ் பண்ணிட்டனே. இன்னிக்கு பேசலாம்

//அதுல ஒரு ரெண்டு மணி நேரத்த FV occupy பண்ணியிருந்தது.. இப்போ அது கட்.. ஹிஹி...//

அந்த நேரத்துலதான் நாங்க மாட்டுறமா?

//ரமேஷ் எதுக்குங்க நீங்க ஆபீஸ்க்கேல்லாம் போய்கிட்டு ஓ டீ போட்டுட்டு வீட்லே இருந்துடுங்க....//
வீட்டுல கேம் மட்டும்தான் வேலை செய்யும். கேம் சப்போர்ட் டூல் வொர்க் ஆவாது!! அதான்

@ நன்றி. க‌ரிச‌ல்கார‌ன். ஆமாம் நான் கோவில்பட்டிதான். நீங்க எங்க?

Pepe444 சொன்னது…

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

இதுதான் கூப்பிட்டு வச்சு கோதருவதோ .

எனக்கு ஏதாவது ஆச்சுனா நீங்கதான் பொறுப்பு ஆமா !