திங்கள், ஜூன் 28

வீரத் திருமகன்

"அன்பு" "தளபதி"
"ஆசை" "நாயகன்"
"இனியவளே" விரும்பும் "ராஜகுமாரன்"
"ஈட்டி" என "பாயும் புலி"
"உண்மை" பேசும் "உத்தம ராசா"
"ஊரு விட்டு ஊரு வந்து(போய்)" "தமிழன்" பெருமையை நிலை நாட்டிய "சிங்கம்"
"எல்லைச்சாமி" ஆக "நட்பு" க்கு "பாலம்" கொடுக்கும் "தோஸ்த்"
"ஏழிசை கீதம்" பாடும் "காவியத்தலைவன்"
"ஐந்தாம்படை" போற்றும் "வீரத் திருமகன்"
"ஒருவன்" நீதான்
"ஓசை" களின்(நட்பு) "வீரன்" நீ
"ஒளவையார்" இருந்திருந்தால் உன்னைப் போற்றி பாடியிருப்பார்

இன்று பிறந்தநாள் காணும் "சூரியனின் தலைவாசல் அருண் பிரசாத்-க்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன் ரமேஷ், வெங்கட், அனு மற்றும் நம் கழக கண்மணிகள்.


பின் குறிப்பு(அருணுக்கு): அருண் நீங்க சொன்ன மாதிரி உங்களை புகழ்ந்தும், பிறந்தநாள் வாழ்த்து கூறியும் பதிவு போட்டாச்சு. நீங்க சொன்ன மாதிரி அமௌண்டை என் அக்கவுண்டில் போட்டு விடவும். அனு மற்றும் வெங்கட்டின் அக்கவுண்டில் பிராப்ளம் இருப்பதால் அவங்க அமௌன்டையும் என்னுடைய அக்கவுண்டில் போட்டு விடவும். நாங்கள் ஷேர் பண்ணிக்கிறோம்.

30 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வெங்கட் சொன்னது…

ஆஹா வடை போச்சே..!!

Its Ok.. All in the Game..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருண்..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வாழ்த்துக்கள் வருங்கால அரசியல்வாதி அல்லது ஹீரோ அருண் பிரசாத் அவர்களே..

பின் குறிப்பு : ரமேஷ் கொடுத்த காசுக்கு மேலே கூவுறீங்க.. என் பிறந்த நாள் இனி அடுத்த வருசம்தான் வருது..

Chitra சொன்னது…

Convey our birthday wishes to Arun! :-)

அருண் பிரசாத் சொன்னது…

ஏன்? ஏன் இப்படி? எதுவா இருந்தாலும் பேசிதீர்த்துக்கலாம்.

ஓகே, கொடுத்த காசுக்கு மேல் கூவியதால் ரமெஷூக்கு
1. குச்சி மிட்டாயும்
2. குருவி ரொட்டியும்

மொரீஷியஸ்-யிலிருந்து பார்சல்.

கழக கண்மணிகள் ரமெஷிடம் பெற்று “கொல்”ளவும்.

@ அனு, வெங்கட்

அமௌண்டை ரமெஷ் அக்கவுண்டுக்கு அனுப்பியாச்சு, சண்டை போடாம பிரிச்சிக்கோங்க.

@ ரமெஷ்

ஆளுக்கு 50 ஆயிரம் கொடுத்துடுங்க

வாழ்த்திய ரமெஷ், வெங்கட், கே ஆர் பி, Chitra - அனைவருக்கும் நன்றி

பட்டாபட்டி.. சொன்னது…

"ஒளவையார்" இருந்திருந்தால் உன்னைப் போற்றி பாடியிருப்பார்
//

அதனால் என்ன?..கவலையில்லை..நம் அதியமான் ரமேஸ் இருக்கும்வரை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட்,அனு மற்றும் நம்ம கழக கண்மணிகளே, அருண் நம்ம எல்லோரையும் விருந்துக்கு மொரிசியஸ் கூப்பிட்டுருக்கார். உங்க பாஸ்போர்ட் நம்பரை அவருக்கு அனுப்பினா டிக்கெட் மற்றும் விசாவை அனுப்புவதாக சொல்லிருக்கார். சீக்கிரம். ஆபர் ஸ்டாக் உள்ள வரை மட்டுமே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி வெங்கட்,செந்தில் அண்ணா,சித்ரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி வெங்கட்,செந்தில் அண்ணா,சித்ரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அமௌண்டை ரமெஷ் அக்கவுண்டுக்கு அனுப்பியாச்சு, சண்டை போடாம பிரிச்சிக்கோங்க.//
@ அருண் வெங்கட்டும் அணுவும் பெருந்தன்மையா அந்த அமௌன்ட் வேணாம்னு சொல்லிட்டாங்க.

//அதனால் என்ன?..கவலையில்லை..நம் அதியமான் ரமேஸ் இருக்கும்வரை..//
இயக்குனர் கே.எஸ்.அதியமான பட்டா?

Jey சொன்னது…

அருண் அவர்களுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

( தக்காளி இந்த டேமேஜரு ஒரு படத்த விடாம பாத்துருக்கு போல)

Jey சொன்னது…

//என்றும் அன்புடன் ரமேஷ், வெங்கட், அனு மற்றும் நம் கழக கண்மணிகள்.///

உங்க கட்சி கொடி , அப்புறம் கொள்(ல்)கைகள் என்னனு சொன்னா வந்து சேரலாமா, இல்ல ஓடலாமானு முடிவெடுக்க தோதா இருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்க கட்சி கொடி , அப்புறம் கொள்(ல்)கைகள் என்னனு சொன்னா வந்து சேரலாமா, இல்ல ஓடலாமானு முடிவெடுக்க தோதா இருக்கும்.//
@ jey அதுக்குதான் ஒரு குழு வச்சிருக்கோம். அவங்க யோசிச்சு சொல்லுவாங்க. அதுவரைக்கும் வெயிட் பண்ணாம நம்ம கட்சில சேர்ந்துடுங்க. என்ட்ரி பீஸ் ஆயிரம் ரூபாதான்.

அப்புறம் நாங்க காலேஜ விட தியேட்டர்லதான் அதிக நாள் இருந்திருப்போம்

Mythili சொன்னது…

Happy Birthday to you Mr.Arun..

சி. கருணாகரசு சொன்னது…

திரு, அருண் அவர்களுக்கு “வாழ்த்துக்கள்”

அனு சொன்னது…

அட.. நம்ம கட்சிகாரங்கள பத்தி பதிவு போட்டிருக்கீங்க... நான் கவனிக்கவே இல்லயே..

Happy Birthday அருண்..

பிறந்த நாளைக்கு உங்க எடைக்கு எடை தங்கம் அனுப்பி வைக்குறதா சொன்னீங்களே.. அது எங்க??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks சி. கருணாகரசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிறந்த நாளைக்கு உங்க எடைக்கு எடை தங்கம் அனுப்பி வைக்குறதா சொன்னீங்களே.. அது எங்க??//

யாரோட எடைக்கு எடைன்னு தெளிவா சொல்லுங்க அனு

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்திய Jey, Mythili, அனு, கருணாகரசு அனைவருக்கும் நன்றி

ரமெஷெ ஒரு சொக்கதங்கம் தான. தங்கத்தோட எடைக்கு எடை தங்கம் கேட்கலாமா?

( ரமெஷ், நீங்க கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன். இரண்டு பேருக்கும் கணக்கு சரியாப் போச்சு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமெஷ், நீங்க கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன். இரண்டு பேருக்கும் கணக்கு சரியாப் போச்சு//

என்ன ஒரு வில்லத்தனம். பிறந்தநாள் பேபி ன்னு மன்னிச்சு விடுறேன்

Software Engineer சொன்னது…

போலீஸ் சார், இது சுட்ட கவிதையா? சுடாத (சொந்த) கவிதையா? ஆனாலும் அவ்வைக்கு பிறகு நீங்கதான்.

Software Engineer சொன்னது…

மறந்திட்டேன்! வாழ்த்துக்கள் அருண்!

அருண் பிரசாத் சொன்னது…

யப்பா! நான் எழுதுன பதிவுக்கு 5 ஓட்டுக்கு மேல விழமாட்டேங்குது ஆனா என்னை பற்றி எழுதி 30 ஓட்டு வாங்கிட்டயா நீ. ஒரே புல்லரிக்குதுப்பா.

பிரேமா மகள் சொன்னது…

ரமேஷ்.. வர்ற 22-ம் தேதி எனக்கும் பிறந்த நாள்.....

இதே மாதிரி புகழ்ந்து எழுதினீங்கனா.. உங்களை வெயிட்டா கவனிப்பேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///இதே மாதிரி புகழ்ந்து எழுதினீங்கனா.. உங்களை வெயிட்டா கவனிப்பேன்..//

கண்டிப்பா பிரேமா மகள்,முதல்ல கொஞ்சம் அட்வான்ஸ் கொடுங்க

//யப்பா! நான் எழுதுன பதிவுக்கு 5 ஓட்டுக்கு மேல விழமாட்டேங்குது ஆனா என்னை பற்றி எழுதி 30 ஓட்டு வாங்கிட்டயா நீ. ஒரே புல்லரிக்குதுப்பா///

அருண் பிரசாத் எல்லாம் உங்க பேருக்கு கிடைச்ச மரியாதை

@ software Engineer சொந்த கவிதைங்க

அனு சொன்னது…

//ரமேஷ்.. வர்ற 22-ம் தேதி எனக்கும் பிறந்த நாள்.....

இதே மாதிரி புகழ்ந்து எழுதினீங்கனா.. உங்களை வெயிட்டா கவனிப்பேன்.. //

ஆஹா... இப்படி நேயர் விருப்பம் எல்லாம் இருக்குதா.. இது தெரியாம போச்சே.. இன்னைக்கு என் வீட்டுக்காரருக்கு பிறந்த நாள்.. அவரை புகழ்ந்து ஒரு போஸ்ட் போடுங்களேன்.. :)

இனி, நீர் "பிறந்த நாளில் வாழ்த்தும் புரவலர்" என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவீர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இனி, நீர் "பிறந்த நாளில் வாழ்த்தும் புரவலர்" என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவீர்.. //

@அனு நன்றி. போஸ்டிங் போடுறதுக்கு எவ்ளோ அமௌன்ட் கொடுப்பீங்க.

உங்க வீட்டுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனு சொன்னது…

//போஸ்டிங் போடுறதுக்கு எவ்ளோ அமௌன்ட் கொடுப்பீங்க.//

என்ன இப்படி காமெடி எல்லாம் பண்ணிக்கிட்டு..

தலைவி கிட்டயே தட்சணை கேட்ட முதல் ஆள் நீங்க தான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///தலைவி கிட்டயே தட்சணை கேட்ட முதல் ஆள் நீங்க தான்...//

தலைவி கிட்ட வாங்கின பெருமை எனக்குதான் கிடைக்கும்

ஜெய்லானி சொன்னது…

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது